Tamil Madhura யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’ யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 2

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 2

பனி 2

 

காலேஜை வந்தடைந்தாள் கிருஷி. தனது ஸ்கூர்டியை பார்கிங்கில் நிறுத்தி, நேரடியாக பிரின்சியின் அறைக்குச் சென்றாள்.

 

“குட் மோர்னிங் சேர்” என்று புன்னகைக்க,

 

“குட் மோர்னிங் கிருஷி” என்றார்.

 

“சேர் என்னோட டைம் டேபள்” என்று வினவ,

 

“நேற்றே ரெடி பன்னிட்டேன் மா, இதோ பிடி நீ பெர்ஸ்ட் பீரியட் பர்ஸ்ட் இயர் ஸ்டுடன்டிற்கு தான், ஆல் த பெஸ்ட்” என்றார்

 

“தேங்கியூ சோ மச் சேர். ஐ வில் கிவ் மை பெஸ்ட் ” என்று நகர்ந்தாள்.

 

நேராக ஸ்டாப் ரூமிற்குள் சென்றாள். அங்கே அவள் படித்த பேராசிரியர்கள் இருக்க, அவர்களிடம் சென்று பேசி, அவர்களிடமும் ஆசியையும், வாழ்த்தையும் பெற்றாள். பெல் அடிக்க அனைவரும் தத்தமது வகுப்புகளுக்குச் சென்றனர். நேராக தனது வகுப்பிற்கு வந்தாள் கிருஷி.

 

சிரித்த முகத்துடன் உள்ளே நுழைந்தவளை அனைவரும் பார்த்துக் கொண்டிருந்தனர்.

 

“குட் மோர்னிங் ஸ்டுடன்ஸ். நான் கிருஷ்ணவேனி சிவபெருமாள்

உங்களோட பிசிக்ஸ் புரொப்” என்றாள்.

 

அனைவருக்கும் ஆச்சரியமே இத்தனை வருடங்களில் ஒரு இளம் வயதுப் பெண் பிசிக்ஸ் புரொப் ஆக வருவது. அதில் அனைவரும் அவளைப் பார்க்க,

 

” நான் ஸ்டிரிட் எல்லாம் கிடையாது. எனனை உங்களோட அக்காவா பாருங்க, நல்ல பீரியா பேசுங்க, தயங்காமல் என்ன டவுட் இருந்தாலும் கேளுங்க, பட் இரண்டு கன்டிஷன்” என்றாள்.

 

“என்ன மேம்?” என்று கேட்க,

 

“முதலாவது பாடம் சொல்லிக் கொடுக்கும் போது பாடத்துல மட்டும் தான் கவனம் இருக்கனும். இரண்டாவது கோலேஜில் மட்டும் தான் என்னை மேம்னு கூப்பிடனும், மற்றைய நேரம் என்னை அக்கான்னே பேசலாம்” என்று புன்னகைத்தாள்.

 

“ஒகே” என்று அவள் கேட்க,

 

அனைவரும் “டபுள் ஒகே” என்றனர்.

 

“சரி பாடத்தை ஆரம்பிக்கலாம்”, என்று பாடத்தை ஆரம்பித்தாள். அவள் பாடத்தை விளக்கும் விதம் அனைவருக்கும் நன்றாக புரிந்ததோடு, பிடித்தும் போனது. கிளாசில் உள்ள படிப்பில் கீழ் நிலையில் உள்ள மாணவனுக்கும் புரியும் வகையிலே அவளுடைய உதாரணங்களும் அமைந்தது. சில தியரிகளை அழகாக விளக்கி விட்டு, ஒரு கேள்வியை எழுதினாள்.

 

” என்னோட பாடத்துல எப்பவுமே இது நடக்கும். நான் கூப்பிடுறவங்க, இங்க வந்து இதற்கான விடையை எழுதனும். யாரும் பயப்படுதிங்க. யாருக்கும் திட்ட மாட்டேன். சரியா விடை எழுதுறவங்களுக்கு ஒரு ஒபர் இருக்கு.” என்றாள்.

 

“என்ன மேம்?” என்று அனைவரும் ஆவலாய் கேட்க,

 

“நான் கொடுக்கிற ஹோம் வேர்க் செய்ய தேவையில்லை, பிழையா செய்தவங்க, நான் கூப்பிடாதவங்க கட்டாயம் செய்து வரனும்” என்றாள்.

 

“புரியிது, என்னடா ஸ்கூல் பசங்களுக்கு மாதிரி இருக்குன்னு, எனக்கு எப்பவுமே நீங்க எல்லோரும் சின்ன பசங்க தான், நான் உங்க பிசிக்ஸ் புரொபா இருக்கிறது புடிச்சிருக்குன்னா கையை உயர்த்தி நான் சொல்றதை செய்வேன்னு சொல்லுங்க, புடிக்கல்லனா வேற புரொப்” என்று கூறி முடியும் முன்னே

 

“எங்களுக்கு ஒகே” என்று அனைவருமே கத்தினர்.

 

“ஒகே டன், இன்றைக்கு பெர்ஸ் டே. சொ நான் யாரையும் கூப்பிட மாட்டேன், யாரு முதல்ல வாரிங்க?” என்று கேட்க,

 

பெண்கள் பகுதியில் இருந்து ஒருவள் எழுந்து வந்து தன்னை அறிமுகப்படுத்தி விட்டு, அந்த கேள்விக்கான பதிலையும் எழுத ஆரம்பித்தாள். அது வரை கிருஷி, பெண்கள் பகுதியில் உள்ள ஓர் இடத்தில் அமர்ந்துக் கொண்டாள். அப்போது,

 

ஒரு ஆள் இவர்கள் வகுப்பறையினுள் நுழைய அவர்களின் பின்னே சில பொலிசாரும் அவனை துரத்திக் கொண்டு உள்ளே வந்தனர். ஓடி வந்தவன் கரும்பலகையில் விடை அளித்துக் கொண்டிருந்த, மாணவியின் கழுத்தில் கத்தியை வைத்து, அவனுக்கு வழிவிடும்படி பொலிஸாரிடம் மிரட்டினான். அந்த வகுப்பில் உள்ளவர்கள் அனைவரும் அதிர்ச்சியிலும், பயத்திலும் நின்று இருந்தனர்.

 

“சொன்னா கேளுங்க, எனக்கு வழி விடுங்க, இல்லை இவளோட கழுத்தை அறுத்துடுவேன்.” என்று மிரட்டினான் அவன்.

 

“டேய் சொன்னா கேளு, மரியாதையா அந்த பொண்ணை விட்ரு” என்று துரத்திய பொலிஸாரில் ஒருவர் கூற,

 

அதே நேரம் எங்கிருந்தோ வந்த புலட் ஒன்று கத்தியை வைத்திருந்தவனின் தலையைத் துளைச் சென்றது. அதில் மாணவர்கள் கத்தத் தொடங்கி விட்டனர்.

 

அப்போது உள்ளே நுழைந்தார் ACP விக்ரமன்.

 

“என்னாச்சு?” என்று தன் மிடுக்கான தோற்றத்துடன் வந்து கேட்க,

 

“சேர் யாரோ ஷூட் பன்னிட்டாங்க” என்றார் பொலிஸில் ஒருவர்.

 

“அது வரைக்கும் நீங்க எல்லாரும் எங்கே பார்த்துட்டு இருந்திங்க?” என்று கர்ஜிக்க அவ்விடமே நிசப்தமானது.

 

பின் அங்கிருந்த ஜன்னல் மூலமாக வெளியே பார்த்தவனுக்கு வெளியில் ஒருவரும் புலப்படவில்லை.

 

“சேர் DSP ஆதி வராரு” என்று ஒரு பொலிஸ் கூறும் போதே கம்பீர நடையுடன், நேர் பார்வையுடனும் உள்ளே நுழைந்தான் ஆதி.

 

அங்கு தேடி வந்தவனின் கண்களில் அப்பிணம் கிடக்க, விக்ரமனைப் பார்த்தான் ஆதி. அருகில் ஒரு பெண் பயத்தில் இருப்பதைக் கண்டவன் நடந்ததை யூகித்தான்.

 

“சொரி சேர் உயிரோட பிடிக்க முடியல்லை” என்றான் தலைக்கவிழ்ந்தபடி.

 

“போடியை ஹொஸ்பிடலுக்கு அனுப்புங்க” என்று ஆதி ஆணையிட,

 

பத்து நிமிடத்தில் அம்பியூலன்ஸ் வருகை தந்து அப்பிணத்தை எடுத்துச் சென்றது. விக்ரமன், ஆதியைத் தவிற வேறு ஒருவரும் அங்கு இருக்கவில்லை, மற்ற அனைத்து பொலிஸினரும் அடுத்தடுத்து செய்ய வேண்டிய வேலைகளைச் செய்ய சென்றுவிட்டனர்.

 

விக்ரமன்,”என்ன நடந்தது?” என்று கேட்க,

 

அனைவரும் கிருஷியைப் பார்க்க, தனக்கு வரவழைக்கப்பட்ட தைரியத்துடன் கூற ஆரம்பித்தாள். அவளை ஆதி பார்க்கவில்லை. அவளின் குரலைக் கேட்டவன்,

 

“ஸ்டூடன்ஸ் எதுவும் சொல்ல தேவையில்லை. உங்க புரொப்பைத் தவிற வேறு யாரும் உள்ள இருக்காமல் வெளியே போங்க” என்றான் கணீர் குரலில்.

 

கிருஷியைத் தவிற அனைவரும் வெளியே சென்று விட்டனர்.

 

ஆதி மறு புறம் திரும்பி மொபைலில் எதையோ தீவிரமாக பார்த்துக் கொண்டு இருந்ததால், அவளைப் பார்க்கவில்லை.

 

“விக்ரமன் கேட்குற கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லுங்க? வேற எதுவும் ஒரு வார்த்தை அதிகமா பேசக் கூடாது” என்றான் மொபைலில் கண்வைத்துக் கொண்டே.

 

விகரமன் அவளைப் பார்த்து விழிக்க,

“சேர் என்ன நடந்ததுன்னா?” என்று மீண்டும் கிருஷி கூற ஆரம்பிக்க,

 

“ஒரு தடவை சொன்னா புரியாதா ஸ்டூடன்ஸ் எல்லாரும் வெளிய போங்க” என்று உறுமினான் ஆதி திரும்பிப் பாராமல்.

 

“சேர்” என்று கடுப்பில் கூப்பிட,

 

“காது கேட்காதா?” என்று கோபத்தில் கேட்டுக் கொண்டே திரும்பி அவளைப் பார்த்தான்.

 

சில நிமிடங்கள் அவளை மேலிருந்து கீழே பார்த்தவன், “ஒரு தடவை சொன்னா புரியாதா? போய் உங்க புரொப்பை கூட்டிட்டு வாங்க” என்றான் அவள் கண்களைப் பார்த்து.

 

கண்களை மூடி தன் கோபத்தைக் கட்டுப்படுத்தியவள், “சேர் நான் தான்…” என்று அவன் கூறும் போது,

 

“குட்டி பேபி, போய் உன்னோட லெக்சரை கூட்டிட்டு வா மா, என் கிட்ட திட்டு வாங்காம” என்றான் ஆதி அமைதியான குரலில்

 

குட்டி பேபி என்று கூறியதில் தன் கோபத்தின் எல்லையைக் கடந்தவள்,

” யோவ் நான் தான் இந்த கிளாசோட லெக்சர்” என்றாள்.

 

விக்ரமன், “என்னது யோவா?” என்று கோபத்தில் கேட்க,

 

“டா போட்டு பேசாம இருக்கேன்னு சந்தோஷப்படுங்க” என்றாள் மு௧த்தை திருப்பிக் கொண்டு.

 

அவள் பேசுவதைப் பார்த்துக் கொண்டு இருந்த ஆதி, “மச்சான் இவ தான் இந்த கிளாசோட லெக்சராம் டா” என்று கூறி அவளைப் பார்த்து சிரித்தான்.

 

விகரமனுக்கு சிரிப்பு வந்தாலும், அவள் கோபத்தைக் கண்டு, “இவனுக்கு எந்த நேரத்துல விளையாடுறதுன்னு தெரியாமல் போச்சே, இந்த பொண்ணு வேற கத்தியால குத்தவா? கன்னால சூட் பன்னவான்னு பாக்குறா, இவன் சிரிக்கிறானே” என்று உள்ளே பேசினான்.

 

“டேய் உனக்கு இவளோ தான் மரியாதை, எனக்கு என்னடா குறை? நான் யேன்டா இந்த கிளாசோட லெக்சரா இருக்கக் கூடாது?” என்று இவள் எகிற

 

“இதோ பாரு குட்டி பேபி, நீ சின்னதா, கியூட்டா, சுடி டிரஸ் பன்னி இந்த கிளாஸ்ல படிக்கிற பொண்ணு போல இருக்க, அதுவும் ஐந்து அடி கூட இல்லை” என்று கூறி சிரித்தான்.

 

“இதோ பாரு, எதைப்பற்றி மட்டுன்னாலும் பேசு, என் ஹைட்டை பற்றி பேசின, நான் கடுப்பாயிடுவேன்” என்றாள் கிருஷி கடுமையாக.

 

“ஐயோ நான் பயந்துட்டேன் மா” என்று ஆதி நடிக்க,

 

“முருகா, இந்த இம்சை கிட்ட இருந்து என்னை காப்பாற்று” என்று சத்தமாகவே வேண்டினாள்.

 

அது முருகனுக்கு கேட்டதோ, அவ் இடத்திற்கு வருகை தந்தார் பிரின்சி அவசரமாக.

 

“சொரி சேர், கமிஷனர் கூட பேசிட்டு வந்ததால் லேட் ஆயிடுச்சு” என்று கூற,

 

“சரி விடுங்க சேர், ஐ ஏம் DSP ஆதிலக்ஷதேவன்” என்று தன்னை அறிமுகப்படுத்தி கைகுலுக்க,

 

“ACP விகரமன்” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான் விக்ரமன்.

 

“சேர் இவங்க, கிருஷ்ணவேனி பிசிக்ஸ் புரொப்” என்றார்.

 

அவள் அவனை முறைக்க, “ஒகே சேர் சொன்னாங்க” என்றான் கண்களில் சிரிப்பை வைத்துக் கொண்டே.

 

“பிரின்சி, அவளிடம் நடந்தது என்ன?” என்று கேட்க, அவரைப் பார்த்துக் கொண்டே அனைத்தையும் கூறி முடித்தாள்.

 

விக்ரமன், ஆதி இருவரும் அவள் கூறுவதை கூர்மையாக கவனித்தனர்.

 

“சேர், இறந்தது ஒரு ரௌடியா?” என்று விக்ரமனைப் பார்த்துக் கேட்க,

 

“இல்லை ஒரு மிகப் பெரிய டிரக் டீலர்” என்றான் ஆதி. கிருஷியோ முகத்தைப் திருப்பிக் கொண்டாள்.

 

ஆதி இதைப் பார்த்து உள்ளுக்குள் சிரித்து, விக்ரமன் வேறு சில கேள்விகளைக் கேட்க, அதற்கு அவள் பதில் கூறுவதைப் பார்த்தான்.

 

பின் அடுத்ததை இவர்கள் பார்த்துக் கொள்வதாகவும், கோலேஜில் வைத்தே கொலை நடந்ததால் அடிக்கடி விசாரணைக்காக வருவதாகவும் கூறிச் சென்றனர்.

 

“கடவுளே, இந்த இம்சையன திருப்பி பார்க்குறது போல எந்தவொரு சுடிவேஷனையும் உருவாக்கிறாத” என்று மெசேஜை அனுப்ப

 

அவரோ அதை கேட்க மாட்டேன் என்று டெலீட் செய்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 11யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 11

பனி 11   “நவி” என்று ஆதி கத்தினான். கீழே விழுந்த கிருஷி எழுந்து நின்ற ஐந்து நிமிடங்களில் ஆதி அங்கு பைகில் வந்து இறங்கியவன் பைக்கை ஸ்டேன்ட் வைத்து நிற்பாட்டாமல் கீழே கிடத்தி விட்டு அவள் அருகில் ஓடி வந்தான்.

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 37யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 37

பனி 37   சிவபெருமாள், “பகைக்காக, கௌரவத்திற்காகவும் தம்பியை கொன்ன எனக்கு அவன் பொண்ணு உயிர் பெரிசு இல்லை ஆதி” என்றார்.   ஆதியோ இதைக் கேட்டு சிலையாக நின்று இருந்தான்.   “என்ன தேவ் அதிர்ச்சியா இருக்கா?, உன் பொன்டாட்டி

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 18யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 18

பனி 18   “மாமா நான் வேணியை கல்யாணம் பன்னிக்குறேன்”என்றான் நேசன்.   “நேசன், நீயா? ஆனால் அவ இதை ஒத்துகுவாளான்னு தெரியாது” என்று பெருமாள் கூற   “மாமா இப்போ கேட்டால் யாரையும் கல்யாணம் பன்னமாட்டேன்னு உறுதியா சொல்லுவா. கொஞ்ச