Tamil Madhura யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’ யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 1

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 1

பனி 1

 

நிலா நடு வானத்தில் வந்து தனது ஒளியை முடியுமானளவு அந்த ஊரிற்கு வழங்க, அந்த நிலாவின் வெளிச்சத்தில் அந்த ஆள் அரவமற்ற வீதியில் உயிர் பயத்தில் ஓடிக் கொண்டிருந்தான் ஒருவன். அவனைத் தொடர்ந்து பலர் கைகளில் அறுவாளுடனும், பெரிய கத்திகளுடனும் அவனைத் துரத்தினர். அவன் தன் முழுப்பலத்தையும் பிரயோகித்து ஓட அவனது வேகத்தைக் குறைப்பதற்காக அவன் வந்து நின்றது அந்த கறுப்பு நிற ஜீப்.

 

அதிலிருந்து இறங்கியவன், ” என்ன சிதம்பரம் உயிருக்கு பயந்து ஓடுறியா? இந்த உயிர் பயம் என் மேலே கம்பிளைன்ட் கொடுக்கும் போது எங்க போச்சு?” என்றான்.

 

“நீங்க அந்த பொண்ணு மேலே கையை வச்சது ரொம்ப தப்பு அதான் கம்பிளைன்ட் பன்னேன்” என்றான் சிதம்பரம்.

 

“உனக்கு திமிரு மட்டும் அடங்க இல்லை. அது எப்படி அடங்கும் அந்த ராஜேஸ்வரி வீட்டு டிரைவர் ஆச்சே, உன் திமிரும் அடங்காது, தைரியமும் குறையாது. அதற்காக உனக்கு ஏதாவது பரிசு கொடுத்தாகனுமே, டேய்…” என்று அவன் கத்த

 

அவன்னின் கையில் இன்னொருவன் ஒரு கத்தியை எடுத்துக் கொடுத்தான். சிதம்பரத்தை அவனது அடியாட்கள் பிடித்துக் கொண்டனர். “சொன்னா கேளுங்க, ரொம்ப பெரிய தப்பு பன்றிங்க, அம்மாவுக்கு தெரிஞ்சது உங்களை சும்மா விடமாட்டாங்க..” என்று கூறி முடியும் முன்னே ஐந்து முறை அவர் வயிற்றில் இறங்கியது அவன் கத்தி.

 

சிறிது நேரம் மூச்சு இழுத்துவிட்டவரின் மூச்சு தற்போது அடங்கியது. அதைப் பார்த்து சிரித்தவன், “உன் அம்மாவும், ஐயாவும் என்ன பன்றாங்கன்னு நானும் பார்க்குறேன்” என்று தனது ஜீப்பில் ஏறி பறந்தான் அவன்.

 

அந்த ரம்யமான காலைப் பொழுதிலே……..

 

அம்பாசமுத்திரத்தில் கம்பீரமாக நின்று இருந்தது அந்தப் பெரிய வீடு… அனைத்து வசதிகளையும் உடைய நவீன ரக வீடு. அந்த வீட்டின் முன் வந்து நின்றது ஒரு கார். அதில் இருந்து இறங்கியவர் காரின் கதவை அடைத்து விட்டு, உள்ளே வந்தார். அந்த காரின் கதவினை அடைத்ததில் இருந்தே அவரின் கோபத்தின் அளவைப் புரிந்துக் கொள்ளலாம். உள்ளே வந்தவர் அருகில் இருந்த  vase ஐ கீழே தூக்கி உடைக்க வீட்டில் உள்ள அனைவரும் பெண்கள், ஆண்கள், பிள்ளைகள், வேலை செய்பவர்கள் அனைவருமே அங்கே வந்தனர்.

 

“டேய் மகா, என்ன ஆச்சுடா? எதுக்கு இவளோ கோபப்படுற? முதலில் தண்ணீர் குடி, அம்பிகா போய் தண்ணீர் எடுத்துட்டு வா” என்றார் அந்த வீட்டின் இரண்டாவது மகன் சங்கரன் தன் மனைவியிடம்.

 

மகாலிங்கம் அமர, அவர் அருகில் அமர்ந்தார் சங்கரன். “இப்போ சொல்லு தம்பி என்னாச்சு?” என்று கேட்கும் போது, லிப்டில் இருந்து ஹாலிற்கு வந்தார் கம்பீரமாக அந்த வீடின் பெண் சிங்கம் ராஜேஸ்வரி. அவர் அங்கே வரும் போது, அமர்ந்து இருந்தவர்கள் மரியாதை நிமித்தம் எழுந்து நின்றனர்.

 

“உட்காருங்க” என்று கூற ஆண்கள் அமர அவரது மனைவிகள் அவர்கள் பக்கத்தில் நின்றனர்.

 

“இப்போ சொல்லுங்க சின்னத் தம்பி” என்று ராஜேஸ்வரி.

 

“அண்ணி, சிதம்பரத்தை கொன்னுட்டாங்க. அவனோட இறுதி சடங்குக்கு போனேன். அப்போ அவனோட ஐந்து வயசு பொண்ணு அப்பா திரும்ப வர மாட்டாரான்னு என் கிட்ட கேட்கும் என்னோட மனசுல ஏற்பட்ட வலி இன்னும் போக இல்லை அண்ணி. அவன் நமளுக்கு விசுவாசமா இருந்ததை தவிற வேறு என்ன பன்னான்? நம்ம ஊர் பொண்ணு கிட்ட தப்பா நடந்ததுக்காக அவன் கம்பிளைன் பன்னான். அவளோ தானே, அவனை கொல்கிற அளவுக்கு என்கிட்ட கொலை வெறி இருக்கு” என்றார் அதே கோபத்துடன்.

 

” இதை நேசன் தான் பன்னான்னு என்ன உறுதி?” என்று ராஜேஸ்வரி கேட்க,

 

“அவன் தான் அண்ணி வயிற்றில் ஐந்து தடவை குத்துவான். அது அவனோட அடையாளம்” என்றார் மகா.

 

“பெரிய தம்பி, சூர்யா எங்க?” என்று கேட்க,

 

“மச்சான் வெளியில போயிரு்காரு வந்துருவாரு அண்ணி” என்றார் சங்கரன்.

 

“பெரிய தம்பி தேவ்க்கு போன் போடுங்க, ஸ்பீகரை ஒன் பன்னுங்க” என்றார் ராஜேஸ்வரி.

 

“குட் மோர்னிங்  சித்தப்பா சொல்லுங்க, என்ன விஷயம்?” என்று தேவ் கேட்க, சிதம்பரத்தின் கொலையைப் பற்றி கூறினார்.

 

“ரொம்ப கஷ்டமா இருக்கு சித்தப்பா. அவங்க குடும்பத்தை நல்லா பார்த்துக்கோங்க சித்தப்பா. அவங்களோட இழப்பை நம்மளால் ஈடு செய்ய முடியாது தான். ஆனால் இப்போ எதையும் பன்னாதிங்க. கொஞ்சம் பொறுமையா இருங்க, நம்ம கிட்ட ஒரு நாள் வசமா அவன் மாட்டுவான். அப்போ தோலை உறிச்சிர வேண்டியது தான்” என்று தேவ் கூற,

 

“இன்னும் எத்தனை நாளைக்கு பொறுமையா இருக்கிறது தேவ், ஏற்கனவே ஒன்னுக்கு மூனு உசிரை பலி கொடுத்துட்டோம். அதில் உன் அப்பா என்னோட அண்ணன் வாசுதேவனும் ஒரு ஆள். இப்போ நாலாவதா சிதம்பரம். எனக்கு வருகிற ஆத்திரத்துக்கு அவனை துண்டு துண்டா வெட்டி போடனும் போல இருக்கு” என்று மகா கர்ஜிக்க அவ்விடமே நிசப்தமானது.

 

“தம்பி கொஞ்சம் பொறுமையா இருங்க” என்றார் ராஜேஸ்வரி.

 

“சித்தப்பா பழிவாங்குறதுக்கு கொலை தான் முடிவுன்னா இந்த உலகத்துல நான்,நீங்க யேன் இந்த இரண்டு ஊருமே இருந்து இருக்காது. சிங்கம்பெட்டி, அம்பாசமுத்திரம் இந்த இரண்டு ஊருமே எத்தனையோ வருஷத்துக்கு முன்னாடி அழிஞ்சு போய் இருக்கும். இந்த பகை பரம்பரை பரம்பரையா நம்ம இரண்டு வம்சத்துலையும் வருகிறது தான். அவங்களோட சதியை நாம நம்ம மதியால் தான் வெல்லனும், அடிதடியால் இல்லை” என்றான் தேவ்.

 

பாவம் அவன் அறியவில்லை அவன் கூறிய அனைத்தையும் மீறி தன்னவளைக் கொல்வதற்காக அறுவாளைக் கையில் ஏந்தும் நிலை ஏற்படும் என்று.

 

அவன் கூறியதே அனைவருக்கும் சரி என்றுபட்டது. அப்போதே ராஜேஸ்வரியின் தம்பியான சூர்யா உள் நுழைந்தார்.

 

“தேவ்” என்று அவர் பேச,

 

“சொல்லுங்க மாமா” என்றான் அவன்.

 

“என்னை பொறுத்த வரைக்கும் நாம இப்போ அமைதியா போறது நல்லது. நாமளும் இப்போ கத்தியை கையில் எடுத்தோம்னா வீதி முழுக்க இரத்தம் ஆறா ஓடும். நிம்மதி, அமைதி இரண்டுமே இருக்காது” என்று சூர்யா கூற,

 

மகா, சங்கரன் இருவரும் அதை ஏற்று அமைதியாகினர்.

 

“அம்மா நீங்க எல்லோரையும் பார்த்துக்கொங்க” என்றான் தேவ்.

 

“சரி பா நீயும் பத்திரமா இரு” என்று ராஜேஸ்வரி கூற,

 

“சரி மா எனக்கு இப்போ ஒரு முக்கியமான வேலை இருக்கு. நான் நைட்டுக்கு மத்தவங்க கூட பேசுறதுக்கு வீடியோ கோல் எடுக்குறேன் பாய்” என்று வைத்தான் தேவ்.

 

“அக்கா, நான் சொன்னதுல எந்த தப்பும் இல்லையே” என்று சூர்யா கேட்க,

 

“இல்லை டா”  என்றார் ராஜேஸ்வரி.

 

மகா, சங்கரன் இருவரும், “மச்சான் நீங்களும், தேவும் இருக்கும் போது நாங்க எப்பவுமே தப்பு பன்ன மாட்டோம்” என்றனர்.

 

மூவரையும் தனது வளர்ப்பு என்று பெருமையாய் பார்த்தார் ராஜேஸ்வரி.

 

“கோமதி மகாவுக்கு தைலம் தேச்சு விடுமா” என்று ராஜேஸ்வரி கூற,

 

“சரி அக்கா” என்று தனது கணவனை அழைத்துக் கொண்டு அறைக்கு உள்ளே சென்றார் கோமதி.

 

“தம்பி நீங்க இன்னைக்கு கம்பனிய பார்த்துட்டு வாங்க” என்று திருனல்வேலியில் உள்ள சமுத்திரா குரூப்ஸ் ஒப் கம்பனிக்கு சங்கரனை அனுப்பி வைத்தார் ராஜேஸ்வரி.

 

சென்னையில்………

 

“ஹலோ அம்மா, இன்றைக்கு நான் படிச்ச கோலேஜிலேயே முதன் முதலா படிச்சு கொடுக்கப் போறேன். ஏதாவது வாழ்த்து சொல்லேன் மா” என்று கத்தினாள் கிருஷி.

 

“போன்ல தானே பேசுற? எதுக்குடி கத்துற? இதே போல உன் ஸ்டுடன்ஸ்  கிட்டவும் கத்தாத, அடுத்த கிளாஸ் யாருமே உன் கிளாசுக்கு வர மாட்டாங்க” என்றார் அந்தத் தாய்.

 

“என்ன கிண்டலா? எனக்கு ஸ்டுடன்ஸ் கிட்ட எப்படி பிகேவ் பன்னும்னு எனக்கு தெரியும் கனாகா” என்றாள் நம் நாயகி கிருஷி.

 

“உனக்கு பேர் சொல்லி பேசாதன்னு எத்தனை தடவை சொல்லி இருக்கேன்?” என்று கனகா அதட்ட,

 

“போமா, அப்பா இருந்தா அவர் கிட்ட போனை கொடு” என்றாள்.

 

‘இந்த அப்பாவும், பொண்ணும் படும் பாடு இருக்கே, தாங்க முடியல்லை’ என்று முனுமுனுத்துக் கொண்டே கணவனைத் தேடிச் சென்றார் கனகா.

 

அவரோ ஏதோ சீரியசாக போனில் பேசிக் கொண்டிருக்க மனைவி வந்ததை உணர்ந்தவர், “நான் அப்பொறமா பேசுறேன்” என்று அழைப்பைத் துண்டித்தார்.

 

“என்ன மா?” என்று கேட்க,

 

“பொண்ணு லைன்ல இருக்கா” என்றார்.

 

“கொடு” என்று மொபைலை வாங்கி அவளுடன் பேச ஆரம்பித்தார்.

 

தன் தாயிடம் கூறியதையே தன் தந்தையிடம் கூற, “தங்கம் நீ நல்லா இருப்ப, எல்லோர் கூடவும் அன்பா இரு, எல்லாமே நல்லதாவே நடக்கும். அப்பா உன் கூட நைட்டுக்கு பேசுறேன், இன்னும் கொஞ்ச நேரத்துல அப்பாவுக்கு கட்சி மீடிங் ஒன்னு இருக்குடா. அதனால் நான் போக தயாராகனும் நீ உன் அம்மா கூட பேசு” என்று தன் மனைவியான கனகவள்ளியிடம் மொபைலை வழங்கினார் அந்தத் தொகுதி MLA சிவபெருமாள்.

 

“அம்மா, உன் புருஷன் இன்றைக்கும் கட்சி மீடிங்க்கிற்கு போறாரு.  இன்றைக்கு உன் தூக்கம் காலி தான். அவரு வரும் வரைக்கும் அவரோட தரும பத்தினி நீ முழிச்சிட்டு இருப்ப” என்று சிரித்தாள் கிருஷி.

 

“பாருடி ஒரு நாள் நீயும் உன் புருஷன் வரும் வரைக்கும் இப்படி தான் இருப்ப” என்று கூறும் போது,

 

“போமா எனக்கு டைமாச்சு நான் கிளம்புறேன்” என்று மொபைலை வைத்து கோலேஜை நோக்கிச் சென்றாள் கிருஷி.

 

இன்று தனக்கு மறக்க முடியாத நாளாக இருக்கும் என்று அறியாமல் ஆவலுடன் பயணித்தாள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 26யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 26

பனி 26   கிருஷி மெயில் அனுப்பி, தனக்குப் பதிலாக ஒரு மாதத்திற்கு வேறு ஒருவரை நியமிக்குமாறு வேண்டி இருந்தாள். அதற்காக அவர்களும் வேறு ஒருவரை நியமித்து இருந்தனர். திவி கோபத்தில் அவ் இடத்தை விட்டு வெளியேற நிலா அவள் பின்னாலேயே

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 35யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 35

பனி 35   ஒரு நாள் ஆதி கிருஷியின் ரிபோர்ட் எடுக்கச் சென்று இருந்தான். கிருஷி அறையில் அடைந்திருக்க முடியாமல் கீழே செல்ல வர மாடிப்படிகளில் இறங்கும் போது அவளுக்கு தலைவலி ஏற்பட்டது. அவள் ஒரு கையால் தலையைப் பிடித்து மறு

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 39 (நிறைவுப் பகுதி)யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 39 (நிறைவுப் பகுதி)

பனி 39   “நீங்க இரண்டு பேருமே எதிரிங்க தானே? எப்படி பார்ட்னர்ஸ் ஆனிங்க?” என்று ஆதி உறும அவர்கள் பதில் கூற ஆரம்பித்தனர்.   “நாங்க இந்த நிமஷம் கூட குடும்ப ரீதியா எதிரிகள் தான். இந்த தொழில் ரீதியா