Tamil Madhura ஹஷாஸ்ரீயின் 'மீண்டும் வருவாயா' ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-19

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-19

19 – மீண்டும் வருவாயா?

காலை வீட்டிற்கு வந்தவன் குளித்து தயாராகி வெளியே வந்து அவன் பைக்கை எடுத்தவன் கோவிலுக்கு வரசொல்லிவிட்டு சென்றான்.

அங்கே அனைத்தும் தயாராக இருக்க வாசுகியிடம் வந்தவன் “அத்தை, நீங்க தான் குழந்தைக்கு பேர் வெக்கணும்” என அவருக்கு அளவில்லா மகிழ்ச்சி. இருப்பினும் வேண்டாம் என அவரே மறுக்க விஜய் “அத்தை என்னை வளத்து ஆளாக்குனது நீங்க… உங்க ஆசிர்வாதத்துல நான் நல்லாத்தானே இருக்கேன். என் பையனும் நல்லாத்தான் இருப்பான். அம்மா அப்பா எல்லாரும் இத சந்தோசமா தான் ஏத்துக்குவாங்க இல்லையாமா?” என வசந்தா “கண்டிப்பா.. அண்ணி அவன் விருப்பப்படியே நடக்கட்டும். நீங்க குழந்தைக்கு பேர் வெக்கிறதுல எங்களுக்கு சந்தோசம் தான்.” என வாசுகியிடம் பேர் சொன்னான். ஒரு நொடி தயங்கியவள் பின் குழந்தையின் காதில் கூறினாள். “ஜீவ நேத்ரன்” என பெயர் சூட்டினர்.

பேர் வைத்ததும் அனைவரையும் ராஜியின் வீட்டிற்கு அழைத்து சென்றவன் பேசிக்கொண்டிருக்க போனில் பிளாட் பற்றி பேசிக்கொண்டே வந்தான்.

சுந்தரம் “ஜீவன் யாருக்குபா.. எதோ பிளாட்ன்னு கேட்டுட்டு இருக்க?” என விசாரிக்க

ஜீவன் “எனக்குதான்பா. நான் என் குழந்தைய கூப்பிட்டு அங்க போறேன்.” என்றதும் அனைவரும் “என்ன பேசுற நீ? நீ எதுக்கு போகணும். தனியா குழந்தையை எப்படி பாதுக்குவ? என்ன பண்ணுவ? எங்க பேரனை நாங்க தரமாட்டோம்..” என கத்த துவங்க

ஜீவன் பொறுமையாக “நான் உங்ககிட்ட கேக்கல. சொல்றேன். என் குழந்தைய நான் என்கூட கூட்டிட்டு போறேன்னு சொல்றேன். உங்களை பொறுத்தவரைக்கும் தான் நான் செத்துட்டேனே?”

வசந்தா “ஜீவன்.. ஏன்டா ஏன் இப்டி எல்லாம் பேசுற.. நடந்த அதிர்ச்சில இருந்து இப்போதான் கொஞ்சம் வெளில வந்தோம். அதுக்குள்ள எங்களை விட்டுட்டு போறேன்னு சொல்றியே?”

“என்னமா இது? நான் என்ன இல்லாததையா சொல்லிட்டேன். ஒரு வாரத்துக்கு முன்னாடியே நான் செத்துபோய்ட்டேனு சொன்னதை நம்புனீங்க தானே. அததான்மா சொன்னேன். ஜஸ்ட் என்ன ஒரு அரைமணி நேரம் ட்ராவல் இந்த தூரத்துக்குள்ள தான் போறேன்னு சொல்லிட்டு போறதுக்கே இவளோ பீல் பண்றீங்க எல்லாரும். நித்துவை அவ பெத்த குழந்தையை பாக்கக்கூட விடாம கூட்டிட்டு வந்திட்டீங்களே.. அவளுக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கும்..இப்போ அவ எங்க போனானு கூட தெரில. அது எல்லாம் பாக்கும்போது இது ஒண்ணுமே இல்லைதானே..?”

வாசுகி “ஜீவன், நாங்க உனக்கு ஏதோ ஆகிடிச்சோனு தான் அப்டி பேசிட்டோம். இல்லாட்டி அவ மேல எங்களுக்கு தனியா எந்த கோவமும் இல்லையே. அது நீ யோசிக்கவே இல்லையா? ஆனா அவங்க வீட்ல என்னவெல்லாம் பேசுனாங்க தெரியுமா?”

ஜீவன் “எனக்கு எதோ ஆச்சுன்னு நீங்க பீல் பண்ணி கத்துனா அது சரி… அதே மாதிரி அவங்க பொண்ணுக்கு ஒரு பிரச்சனைனு அவங்க வீட்ல கத்துனா அது தப்பா? எப்படி அத்தை அந்த லாஜிக் எனக்கு புரியல. இத்தனைக்கும் என் விஷயம் ஒரு யூகம் தான் ஜோசியத்துல சொன்னாங்கனு.. ஆனா அவளை நீங்க எல்லாரும் தானே திட்டி சங்கடப்படுத்திருக்கிங்க. முடிஞ்சா கருவை கலைக்க சொல்லலாம்னு நினைச்சோம்னு எல்லாம் யோசிச்சிருக்கீங்க …இதை தெரிஞ்சும் வேற உங்களை எப்படி பேசுவாங்க…?”

கீதா “என்னடா நீ, ஏதோ நாங்க எல்லாரும் கொலை குத்தம் பண்ணமாதிரி இப்டி பேசுற? நாங்க குழந்தைய எடுத்துட்டு வந்தா திரும்ப அவ வரமாட்டாளா? அவளுக்கு பாசமிருந்திருந்தா வந்திருப்பால்ல? வீம்புக்குனு அப்டியே இருந்தா?” என கத்த

ஜீவன் விரக்தியுடன் புன்னகைத்துவிட்டு “அக்கா வீம்புக்கு வாக்குவாதம் பண்ணனும்னு பேசாம மனசார நீ யோசிச்சு சொல்லு அவளுக்கு பாசமில்லேனு அதுவும் அவ பெத்த குழந்தை மேல..” என கீதா ‘தங்கள் குழந்தைகளிடமே அவள் எவ்வளவு பாசமாக இருந்திருக்கிறாள் என்று அவளும் தான் பார்த்திருக்கிறாளே’ என  அமைதி காக்க

சுரேஷ், குமார் “கரெக்ட் தான் ஜீவன்.. அவளுக்கு எல்லார்கிட்டயும் தான் பாசமிருக்கு. அப்புறம் ஏன் அவ வரல. ஒருதடவை அவ வந்திருந்தா கூட நாங்க சண்டை போட்டு இருக்கவெச்சிருப்போம் இல்லை குழந்தைய அவ கூட அனுப்பிச்சி வெச்சிருப்போம்… இந்த ஒரு வாரமா இவங்க எல்லாரும் கேக்கற ஒரே கேள்வி அதுதான். அட்லீஸ்ட் ஒரு போன்.. அதுகூடவா அவளால முடியல. பெரியவங்க மேல இருக்கற கோவத்துல பெத்த குழந்தையை அவ விட்டுடால?” என

ஜீவன் “ஓ…அப்டியா… தேங்க்ஸ் அண்ணா… தேங்க்ஸ் மாமா… என் மனைவிக்கு இவளோ சப்போர்ட் பண்ணுவிங்கனு பாவம் அவளுக்கு தெரிஞ்சிருக்காது. ஆனா அவளை வீட்டை விட்டு அனுப்பும்போது நீங்க எல்லாரும் அங்க தான் இருந்திங்கல்ள … அப்போ அவளுக்கு சப்போர்ட் பண்ணனும்னு தோணலேல?”

இறுதியாக அப்பாவிடம் வந்தவன் “மத்தவங்க எமோஷனல யோசிச்சிருந்தா கூட நீங்க ஒருவார்த்தை சொல்லிருந்தா எல்லாரும் கேட்ருப்பாங்களேப்பா.. விட்டுட்டுட்டீங்களேப்பா.. உங்க எல்லாரையும் நம்பி தானே என் நித்துவை விட்டுட்டு போனேன். அவ்ளோ தடவை சொல்லிட்டு போனேனே. இப்போ எங்க அவ?” என கலக்கத்துடன் கேட்க யாரும் பதிலின்றி நிற்க ஜீவன் “அவ ஏன் வரலேன்னு கேட்டீங்கள.. அது நான் அவகிட்ட கேட்டுக்கிட்டது. என தங்களுக்குள் நடந்த உரையாடலை கூறினான். அவ சொன்னமாதிரி நீங்க போங்கனு சொன்னிங்க போய்ட்டா. அது எல்லாம் சரிதான். ஆனா நான் இன்னும் சாகாம நல்லாத்தானே இருக்கேன். நான் சாகலேன்னு அவ்ளோ நம்புனவ அப்புறம் ஏன் உங்க பேச்சை எல்லாம் கேட்டு என்னைவிட்டு இவளோ விலகி போனானு நினைச்சாதான் எனக்கு அவ்ளோ கோபம் வருது..” என இயலாமையில் கத்த அவனை யாரும் அடக்கமுடியாமல்

“இவளோ கோபம் இருக்கறவன் எங்களை அப்டியே விட்ருக்கவேண்டியதுதான்டா … எதுக்கு பேர் வெக்கமட்டும் கூட்டிட்டு வந்த?”

ஜீவன் “அது நித்ராக்காக தான். அவளோட ஆசை இது. என்றவன் வாசுகியிடம் சென்று ‘அவ சொல்லிருந்தா அத்தை. புருஷனை இழந்தவங்க, சேந்து வாழாதவங்கனு ஊர்ல ஒதுக்கி அவங்களை தனிமைபடுத்துற பாவத்தை தான் எல்லாரும் பண்ணிட்டுஇருக்காங்க..உலகம் குடுக்கிற இந்தமாதிரி பட்டத்துக்காக மட்டும் நாம வாழ முடியாது. அதை தாண்டி மனுசங்க ஆசீர்வாதம்னு நிறையா இருக்கு.. அவங்க மனசார வாழ்த்துனா எங்க இருந்தாலும் கண்டிப்பா நல்லபடியா இருப்பாங்க…என்னதான் உங்க எல்லாரையும் தன் பசங்களாவே நினச்சு உங்க அத்தை வளத்தினாலும் அவங்க மனசுல ஒரு குறை இருக்கும்ல. எதுக்கும் நாம முன்னாடி இருக்க முடில. நமக்கு ஒரு பையனோ பொண்ணோ  இருந்திருந்தா நாம தானே எல்லாமே பாத்திருப்போம்னு. அந்த குறையும் இனி அவங்களுக்கு இருக்கக்கூடாது. நம்ம குழந்தைக்கு உங்க அத்தைதான் பேர் வெக்கணும்..’னு சொல்லிருந்தா. அதோட வசந்த்கிட்ட அவளோ பிரச்சனைக்கு அப்புறமும் கூட அவங்க எல்லாரும் கண்டிப்பா என் பையனை பத்திரமா தான் பாத்துப்பாங்க. நீங்களும் அவங்க கூட இருங்க அண்ணானு சொல்லிருக்கா.. இப்போவும் உங்க எல்லாரையும் இவளோ நம்புறாளே..அதுதான் அவ பண்ண பாவம் போல. அதுக்கு தான் இப்டி அனுபவிக்கிறா..அவளுக்கு இப்போவும் உங்க எல்லாரோட பாசமும் அவ குழந்தைக்கு கிடைக்கும்னு நினைக்கிறா.. அவளோட ஆசைக்காக தான் அத்தை இதெல்லாமே… என கூற குற்ற உணர்வில் அவர்கள் கண்ணீர் விட

ஜீவன் “இதுக்குமேல நான் இதை சொல்லமாட்டேன். என் முடிவுல எந்த மாற்றமும் இல்லை. உங்களை உங்க பேரன்கிட்ட இருந்து பிரிச்சு நான் பாவம் பண்ணமாட்டேன். ஏற்கனவே ஏதோ பெருசா பாவம் பண்ணிட்டேன் போல. அதான் இப்படி தனியா இருக்கேன். சோ உங்களுக்கு எப்போ வேணாலும் வந்து உங்க பேரனை பாத்துட்டு போங்க. நானும் அப்போ அப்போ வீட்டுக்கு கூட்டிட்டு வரேன். சாயந்தரம் இல்லை நைட் திரும்ப கூட்டிட்டு போய்டுவேன்..ஆனா என் நித்ரா இல்லாத வீட்டுக்குள்ள நான் வரமாட்டேன். அதேமாதிரி என்னைக்கும் அவனை உங்ககூடவே வெச்சுக்கவும் நான் விடமாட்டேன்… ஒருதடவை உங்களை நம்பி விட்டு ஒருத்திய நான் தொலைச்சதே போதும். இனி என் வாழ்க்கைல அந்த தப்பை பண்ணமாட்டேன்.. அண்ட் உங்க வீட்லஇருந்து நான் சம்பாரிச்சு வாங்குன என் பைக், என் ட்ரெஸ் என் மனைவியோட திங்க்ஸ் எடுத்துட்டு வந்துட்டேன். அதைத்தவிர வேற எதுவும் எடுக்கல.  அவளை வெளில தள்ளுன மாதிரி அவ திங்ஸையும் நீங்களா தூக்கி வீசிற கூடாதில்லை.. ஏன்னா நான் வாங்கிக்குடுத்த எல்லாமே அவ ரொம்ப பத்திரமா பாத்துக்குவா. அவ திரும்ப வரும் போது அத நான் அவளுக்கு குடுக்கணும்..மிஸ் ஆச்சுன்னா அதுக்கு தேவையில்லாம செண்டிமெண்ட்டா ரொம்ப பீல் பண்ணுவா..பைத்தியம் அவ…” என்றவன் கண்ணீரை அடக்கிக்கொண்டு “வசந்த், நான் போயி அந்த பிளாட் பாத்திட்டு வரேன். வரவரைக்கும் என் குழந்தையை பாத்துக்கோ…” என கூறிவிட்டு சென்றுவிட்டான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-34ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-34

34 – மீண்டும் வருவாயா? விஜய் “ம்ம்.. அம்மாவும் பொண்ணும் எங்களை வெச்சு பிளான் போட்டிருக்கீங்க… பிராடுங்களா..” என அவன் மூக்கை பிடித்து வம்பிழுக்க நித்து சிரிப்புடன் “அப்பாவும், பையனும் சொன்ன பேச்ச கேட்கலேன்னா இப்படி தான்..” என கூறினாள். அவனும்

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-17ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-17

17 – மீண்டும் வருவாயா? சுந்தரம் “எனக்கு என்ன சொல்றதுன்னே தெரில வசந்த். நேத்ராவை நாங்க குறை சொல்லணும்னு நினைக்கல. ஆனா நடந்தது நடக்கறது எல்லாமே பாத்தா இவங்க சொல்றத நம்பாமலும் இருக்கமுடில. இனி யாரை சொல்லி என்ன லாபம். என்ன

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-9ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-9

9 – மீண்டும் வருவாயா?   அடுத்த வார இறுதியில் நிருவிற்கு பேங்க் வேலை இருக்க அதுவும் ட்ரைனிங் என வேறு ஊருக்கு செல்வதால், வாணிக்கும் பள்ளியில் வேலை இருக்க ஜீவி “நான் ஜீவா வீட்ல இருந்துக்கறேன்.” என கூறினாள். இவர்களும்