Tamil Madhura ஹஷாஸ்ரீயின் 'மீண்டும் வருவாயா' ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-18

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-18

18 – மீண்டும் வருவாயா?

அன்புள்ள உறவுகளுக்கு,

இந்த லெட்டர் அம்மா அப்பாக்கு மட்டுமில்ல.. ஏன்னா உங்க எல்லாருக்குமே தான் என் மேல பாசம் அதிகமாட்டாச்சே. எல்லாருக்குமே தான் நான் பதில் சொல்லியாகணும். என்னை எல்லாரும் என்னனு நினைச்சீங்கனு எனக்கு தெரில. எனக்கு வாழ்க்கை சந்தோசம் வேணும்னு சொல்றிங்களே.. அது எவனையோ ஒருத்தன கல்யாணம் பண்ணா கிடைக்காதுன்னு உங்களுக்கு ஏன் புரியல. என் வாழ்க்கை சந்தோசம் நிம்மதி எல்லாமே விஜய் தான்னு உங்களுக்கு தெரிலையா? நான் இன்னும் அவரு இறந்திட்டாருனு நீங்க சொல்றதையே ஏத்துக்கல. எந்த நம்பிக்கைல இன்னொரு கல்யாணத்துக்கு ஒத்துக்குவேன்னு நினைச்சீங்க. பையன் இல்லேனு கவலைல அவங்க ஏதோ பேசுறாங்கனு தான் அவங்களை நான் குறை சொல்லாம சண்டைபோடாம இருந்தேன். புள்ளை வாழ்க்கை இப்டி இருக்கேனு நீங்க எல்லாரும் பீல் பண்றிங்கனு தான் உங்ககிட்டேயும் நான் ஏதும் பொலம்பல, கேள்விகேக்கலை..நான் உங்க எல்லாரோட உணர்ச்சிகளையும் புரிஞ்சுகிட்டு உங்களை கஷ்டப்படுத்தாம இருக்கேன். ஆனா உங்க யாருக்குமே என் மனசு முக்கியமாபடலேல. செத்திடுவோம்னு என்னை எமோஷனல் பிளாக்மைல் பண்றீங்க? அத எனக்கு திரும்ப பண்ணத்தெரியதா என்ன?

அண்ணா, என் பீலிங்ஸ புரிஞ்சுகிட்டு ஆறு மாசம் கழிச்சு கல்யாணம் வெச்சுக்கலாம்னு இருக்கோம்னு சொல்றேல.. என் பீலிங்ஸ உங்களால சரியா புருஞ்சுக்கமுடியாட்டியும் எனக்கு பீலிங்ஸ் இருக்குங்கிற அளவுக்கு புரிஞ்சுக்கறிங்களே..ரொம்ப தேங்க்ஸ். ஆறு மாசம் இல்லை எத்தனை வருஷம் ஆனாலும் என் மனசு மாறாது. ஜாதகம் சரில்ல ராசி சரில்லனு சொல்லி சண்டைபோட்டு என்னை போகசொலிட்டு குழந்தையை வாங்கிட்டு போனது அவங்க. எங்க பொண்ண குறை சொல்லிட்டாங்கனு சண்டைபோட்டு உடனே அடுத்த கல்யாணத்தை பத்தி பேசுறது நீங்க எல்லாரும். இதுல நானும் விஜயும் எங்க குழந்தையும் என்ன தப்பு பண்ணோம்னு யோசிச்சீங்களா?

இப்போவும் சொல்றேன். என்ன நீங்க கல்யாணம் பண்ணி கொடுத்தது நம்பி அனுப்பிச்சது எல்லாமே விஜய்க்காக.. என்கிட்டேயும் அவரு திரும்ப வரேன்னு தான் சொல்லிட்டு போயிருக்காரு. ஆனா அது எல்லாம் சொல்லி புரியவெக்க நீங்க யாரும் எனக்கு டைமும் கொடுக்கல. சொன்னா புரிஞ்சுக்கற மனநிலைல நீங்களும் இல்லை. சோ நான் இங்கிருந்து போறேன். கண்டிப்பா சாகமாட்டேன். கோபம் வருத்தம்னு சொல்லி ஏதோ ஒரு காரணத்துல தப்பா முடிவெடுத்த உங்க எல்லாரையும் யோசிச்சு என் விஜய நான் மறந்துட்டு என்னை தண்டிச்சு அவருக்கு தண்டனை குடுக்கமாட்டேன்.

உங்க எல்லார்கிட்டயும் கடைசியா ஒரே ஒரு ஹெல்ப் கேக்கறேன். உங்ககிட்ட ப்ரோமிஸ் பண்ணமாதிரி என்னை அவரு ரொம்ப சந்தோசமா தான் பாத்துக்கிட்டாரு. இப்போவும் நான் இந்த முடிவ தைரியமா எடுக்கறேன். அவரு மேல முழு நம்பிக்கையோட இருக்கேன்னா அதுக்கு அவரு தான் காரணம்..எந்த காரணத்துக்காகவும் விஜய யாரும் குறை சொல்லக்கூடாது. இது என் மேல சத்தியம்… ஒருவேளை இதுக்குமேல அவர் என் வாழ்க்கைல வந்ததால தான் எனக்கு எல்லா பிரச்னையும்னு யாராவது சொன்னா அவங்க லைப்ல நான் இல்லேனு முடிவு பண்ணிக்கோங்க. திரும்பி வந்தாக்கூட அவங்க முகத்தில முழிக்கமாட்டேன்.

அன்புடன்,

நிர்பய நேத்ரா.

 

படித்து முடித்ததும் அனைவரும் அவசரப்பட்டுவிட்டோம் என்பது புரிந்தது. ஆனால் காலம் கடந்த ஞானோதயம்.அவர்களால் வருத்தம் கொள்ளவும் கடவுளிடம் வேண்டிக்கொள்ளவும் மட்டுமே முடிந்தது.

 

அடுத்த இரு நாட்களில் விஜய ஜீவிதன் வீட்டில் சோகத்தில் இருப்பினும் குழந்தையை பார்த்துக்கொள்ளவதில்  யாரும் எந்த குறையும் வைக்கவில்லை. வசந்த் விஜயின் வீட்டிற்கு வந்து உறங்கும் குழந்தையை பார்த்துவிட்டு அனைவரிடம் பேசிக்கொண்டிருக்க யாரோ வெளியே மணி அடிக்க வாசலில் நின்றவனை பார்த்த அனைவர்க்கும் மயக்கம் வராத குறை தான். காயங்களுடன் அங்கே உயிரோட நின்றது சாட்சாத் விஜய ஜீவிதனே.

 

உள்ளே வந்தவனை அனைவரும் “டேய் ஜீவன் என்னடா இது காயம். எங்கடா இருந்த? நல்லாயிருக்கியா? நியூஸ்ல என்னென்னமோ சொன்னாங்களே.. உனக்கு எதுவுமில்லையேபா? நாங்க விசாரிச்சோமே? உனக்கு பாம் ப்ளாஸ்ட்ல … ” என ஆளாளுக்கு அழுகையுடன் கேள்விகளை தொடுக்க அவனும் அனைவரையும் அமைதியாக இருக்க சொல்லி ஆசுவாசப்படுத்தினான்.

விஜய் “எனக்கு எதுவுமில்லை. நியூஸ்ல சொன்னது உண்மை தான். ஆனா எங்க டீமுக்கே நேத்து காலைல தான் தெரியும். ஒரு பெரிய மிஷன் பிளான் பண்ணோம். இரண்டு வண்டில 15 பேர் பக்கம் போனோம். ஸ்பாட்க்கு கொஞ்சம் முன்னாடியே வேற ஒரு பாதை இருந்ததை பாத்தோம்.. நாங்க ஒரு 5 பேரு இறங்கி அந்த பாதையிலையும் போலாம். ஒருவேளை இந்த வழில தப்பிக்க வந்தாலும் தடுக்க ஆள் வேணும்னு தான் அந்த பிளான திடிர்னு சொல்லி இறங்கி காட்டுக்குள்ள நடந்து போய்ட்டோம். நாங்க இறங்கி அஞ்சாவது நிமிசத்துல தான் பாம் ப்ளாஸ்ட் ஆனது. பக்கத்துல மரம் அப்டியே காடு இருந்ததால எல்லாம் தீ பத்திடிச்சு. இருந்தாலும் ஆரம்பிச்ச வேலைய பாதில விடக்கூடாதுனு நாங்க 5 பேரும் அந்த தீவிரவாத கும்பல் இருந்த இடத்துக்கு போய்ட்டோம். அந்த நடந்த பிரச்சனை அதோட அவனுங்களே எங்களுக்கு எவிடென்ஸ் கிடைக்க கூடாதுனு  அவங்க இடத்தை அழிக்க பாம் போட்டுட்டாங்க. ஆனா 2பேரை புடிச்சிட்டோம். விஷயம் தெரிஞ்சு பிளான் வெளிய போய்ட்டா தீவிரவாத காங்க்கு பின்னாடி இருக்கறவங்க அலெர்ட் ஆகிடுவாங்கனு தான்.. உண்மை தெரியவரைக்கும் நாங்க 5 பேர் உயிரோட இருந்த விஷயத்தையும் அவனுங்கள புடிச்ச விஷயத்தையும் சொல்லாம வெச்சிருக்கவேண்டியதா போச்சு. ஆனா அதுக்கு முன்னாடியே நியூஸ்ல எல்லாம் மொத்தமா நடந்த பாம் ப்ளாஸ்ட்ல யாரோட சடலமும் கிடைக்காததால போன நாங்க எல்லாருமே இறந்துட்டோம்னு சொல்லிட்டாங்க. ரொம்ப இது கான்பிடென்சியல இருந்ததால எங்க டீம் அண்ட் எங்க ஹையர் ஆஃபீஸர் தவிர யாருக்குமே நாங்க உயிரோட இருந்தது தெரியாது. அதுனால தான் நீங்க பொதுவா விசாரிச்சிருந்தாலும் நாங்க இறந்துட்டோம்னு தான் சொல்லிருப்பாங்க.” என்றான்.

வசந்த் “வலது கண்ணுல என்னடா.?”

“பாம் ப்ளாஸ்ட்ல கண்ணுல அந்த பொறி பட்ரிச்சு.. ஆபரேஷன் நடந்தது. சோ விஷன் கொஞ்சம் ப்ரோப்லேம்னு சொல்லிட்டாங்க. திரும்ப ஆர்மில மிஷன்ல போறது டவுட்னு சொல்லிருக்காங்க. ரொம்ப கேர்புள்ளா பாத்துக்கணும்னு சொல்லிருக்காங்க. ஒருவேளை இனி கண்ணாடி கண்டிப்பா போட்டா ஓரளவுக்கு ஓகே ஆகலாமோ என்னவோ..லேசர் பண்றது எல்லாம் சரிவராதுன்னு சொல்லிட்டாங்க…” என்றவன் பெருமூச்சுடன் “சரி…. இனி அங்க போகாட்டி என்ன.. நாட்டுக்குள்ள இருந்து பிரச்னையை பாத்துக்கவேண்டியதுதான். என அவன் வருத்தத்துடன் இருப்பினும் புன்னகை மாறாத முகத்தோடு கூறினான். ஆமா நித்து எங்க? ரொம்ப பயந்துட்டாளா? அவகிட்ட சொல்லேல்ல? இல்லை தெரிஞ்சு ரொம்ப பீல் பண்றளா?பாவம் நான் வருவேன்னு ரொம்ப எதிர்பார்த்திருப்பா. படுத்திருக்காளா?” என அவன் கேட்க அனைவரும் பேச மொழியற்று நின்றனர்.

உள்ளே குழந்தை அழு குரல் கேட்க விஜய் வேகமாக உள்ளே சென்று பார்த்தவன் தன் உதிரம் உதித்ததை கண்டு முகம் முழுக்க பூரிப்பில் இருக்க வசந்தா “குழந்தைய தூக்குடா..” என்றார்.

விஜயோ “இல்லமா..நித்துவ தான் முதல பாக்கணும். அவளுக்கு ரொம்ப வலிச்சிருக்கும்ல. அவ டெலிவரி டைம்ல நான் இருந்தா நல்லாயிருக்கும்னு கேட்டா…ம்ச்.. என்னால வரமுடியுமா போச்சு..” என வருத்தம் கொள்ள வாசுகி “சரிடா, முதல நீ குழந்தைய பாரு..” என நீட்ட

விஜய் புன்னகையுடன் “நோ வே அத்தை. என் நித்துவோட சேந்து தான் குழந்தையை தூக்கணும். நான் இன்னைக்கு இருக்கேன்னு அதுக்கு காரணமே அவளோட லவ் தான். அந்த பாம் ப்ளாஸ்ட் அன்னைக்கு எனக்கு வண்டில போகும்போது ஏதோ நித்து ஞாபகமாவே இருந்தது. திடிர்னு ஏதோ கனவு மாதிரி அவளை சுத்தி இரத்தமா அவ என்னை கூப்படறமாதிரி எல்லாம் தோணுச்சு. ஒரு நிமிஷம் ஆடிபோய்ட்டேன். அப்போதான் வண்டியை விட்டு இறங்கி முகம் கழுவலாம்னு இறங்கும்போது அந்த பக்கமா ஒரு வழி இருக்கறதையே பாத்தோம். அதை பாக்காம இருந்திருந்தா இந்நேரம் அந்த வண்டில நானும் இருந்திருப்பேன். மேல போயிருப்பேன்.” என்றவன் ஏதோ நினைவில் “ஆமா அவ குழந்தையை பாத்தாளா? என்னை பாக்காம குழந்தைய பாக்கமாட்டேனு சொல்லிருந்தா. அதுவும் எனக்கு இப்டி ஆனது தெரிஞ்சு பீல் பண்ணிட்டே எதுவும் பாக்காம விட்டுட்டாளா? மாடில படுத்திருக்காளா?” என மேலே சென்று வந்தவன் “மேலையும் இல்லை. என்னாச்சு அவளுக்கு. எங்க அவ. குழந்தை மட்டும் இங்க இருக்க அவ ? அம்மா அவளுக்கு ஒண்ணுமிலேல. அவ.. என் நித்து நல்லாயிருக்கால?” என அவன் கொஞ்சம் பதட்டத்துடன் கேட்க இல்லை என்பது போல தலையசைக்கவும் தான் அவனுக்கு உயிர் வந்தது போல இருந்தது. பெருமூச்சுடன் “தேங்க் காட்.. அவ இல்லேங்கிறத நினைச்சே பாக்கமுடில..ஒரு நிமிஷம் உயிரே போயிடிச்சு… சரி அப்போ அவ எங்க. ரொம்ப வீக்கா ஏதாவது இருக்கானு ஹாஸ்பிடல இருக்க சொல்லிட்டாங்களா?” என அவன் வினவ இதன் பின் மறைக்க எதுவுமில்லை என நடந்த அனைத்தும் அவனிடம்  கூறினர். அனைத்தையும் கேட்டவனுக்கு வார்த்தைகளற்று ஒரு நிமிடம் அப்டியே நின்றவன் மறுநிமிடம் பைக் சாவியை எடுத்துக்கொண்டு வெளியே சென்றான். யார் அழைத்தும் அவன் நிற்காமல் செல்ல பின்னோடு சென்ற வசந்த் அவனை தொடர்ந்தான். நேத்ராவின் அம்மா அப்பாவிடம் சென்றவன் அவர்களிடம் நடந்தவற்றை கூறி   நேத்ராவை பற்றி விசாரிக்க அவர்கள் அவள் எழுதிய கடிதத்தை காட்டினர். கணேஷ் கோபத்துடன் “சந்தோசமா, உங்ககிட்ட எங்க பொண்ண அனுப்பிச்சதுக்கு…” என முடிக்கும்முன் நேத்ராவின் தாயார் “கணேஷ், வேண்டாம்.. இதுல அவரு தப்பு எதுவுமில்லை. அவரை குறை சொல்ல என்னடா இருக்கு. நாம தான் நம்ம பொண்ணை விடாம தொரத்திட்டோமோ. அவ கடைசியா ஒண்ணே ஒன்னு கேக்றேன்னு எத நினச்சு எழுதினாலோ தெரில. ஆனா இதாவது அவ கேட்டத செஞ்சடலாம்.” என்றவர்

விஜயிடம் வந்து “மாப்பிளை இவளோ பிரச்சனை வந்தும் நேத்ரா உங்களை ஒரு வார்த்தை குறை சொல்லவிடல. அவளுக்கு நீங்கன்னா எவ்ளோ இஷ்டம்னு அதுல தெரிஞ்சது. அப்போ அவளை எந்தளவுக்கு பாத்திருந்துந்திருப்பிங்க.. இப்போ அவ எங்க இருந்தாலும் கண்டிப்பா நல்லபடியா தான் இருப்பா. ஏன்னா நீங்க திரும்பி வருவீங்கன்னு அவளோ நம்புனா. அந்த நம்பிக்கைலேயே அவ நல்லபடியா இருப்பா. அன்னைக்கு உங்க வீட்ல அவங்க சங்கடப்பட்டு பேசுனதால எங்களுக்கு மனசு கேட்காம ரொம்ப பேசிட்டோம். அவங்ககிட்ட வருத்தப்பட்டோம்னு சொல்லிடுங்க. ஆனா இனி நேத்ரா இல்லாம நாங்க உங்களையும் பாக்கவரல நீங்களும் வராதீங்க.. கோபத்துல சண்டைபோட்டதை மறக்க மனசு இருக்கற எங்களுக்கு எங்க பொண்ணு இப்போ கூட இல்லேங்கிறது மறக்க முடில. வர போகனு இருந்தா எப்போவது பிரச்சனை வரும். ஏதாவது பேசிடுவோம். ஒருவேளை அப்டி பேசி என் பொண்ணு கடைசில சொன்னமாதிரி வராமலே போய்ட்டா.. வேண்டாம்… தூரமா இருக்கறது தான் எல்லாருக்கும் நல்லது. புருஞ்சுப்பீங்கன்னு நினைக்கிறேன். பேரனை பத்திரமா பாத்துக்கோங்க.” என அவர் அழுகையுடன் கூறிவிட்டு சென்றுவிட அனைவரும் கண்ணீர் சிந்த விஜய் அவ்விடம் விட்டு வெளியே வந்தவன்.

ஊர் எல்லையில் இருக்கும் மண்டபத்திற்கு சென்றவன் அவளிடம் பேசிய அதே இடத்தில் தூணில் சாய்ந்து நின்றவன் வசந்த் அவனை ஆறுதல் செய்யவும் மனம் வராமல் அமைதியாக நிற்க விஜய் “லவ் யூ நித்து அண்ட் ஐ எம் சாரி..” என கூற அவன் கண்களில் நீர் வடிய வசந்த் “டேய் ஜீவன்..” என அழைக்க கண்ணீரை துடைத்துக்கொண்டு “வாடா போலாம்” என்றான். வசந்த் ஏதும் பேசாமல் வர நேரே வசந்த் வீட்டிற்கு வந்தவன் ராஜியிடம் பேசிவிட்டு வீட்டிற்கு அழைக்க அவர் “என்ன இருந்தாலும் நேத்ராவை ரொம்ப கஷ்டப்படுத்திட்டாங்க .. அவ இல்லாத அந்த வீட்டுக்கு இனி நான் வரமாட்டேன்..” என விஜய் மெல்லிய புன்னகையுடன் “சரிமா எனக்கு ஒரு உதவி பண்ணுங்க. எனக்கு பண்ணலாம்ல? இல்லை நானும் பாவப்பட்டவனா?” என கேட்க ராஜி “நீ சொல்லுயா.. உன்னை யாரு குறை சொல்லுவா.. எனக்கு உன்மேல எந்த கோபமும் இல்லை…இந்த நிலைமையில நீ வந்தும் ஒரு வாய் கூட சாப்பிடாம இப்டி அலைஞ்சுட்டு இருக்க.. உன்னையும் நேத்ராவையும் நினச்சா யாரு அதிர்ஷ்டசாலினே தெரில.. ஆனா ஏதோ போதாதா காலம். விடு சீக்கிரம் சரி ஆகிடும்..உனக்கு என்ன செய்யணும்னு சொல்லு நான் செய்றேன்..” என அவரிடம் பேசிவிட்டு தன் வீட்டிற்கு வந்தவன் “நாளைக்கு குழந்தைக்கு பேர் வெக்கணும். கோவில்ல.. காலைல எல்லாரும் ரெடியா இருங்க.” என்றான். வசந்தா, வாசுகி உட்பட குடும்பத்தில் அனைவர்க்கும் குழப்பம், பயம்.

வந்ததும் சென்றவன் எங்கே போனான், என்ன ஆனது, அவன் கேள்விகள் கேட்டால் என்ன பதில் கூறுவது  என யாரும் புரியாமல் இருக்க திரும்பி வந்ததும் அவன் குழந்தைக்கு பேர் வெக்கணும் என கூறியது யாரும் எதிர்பாரா ஒன்று. இருப்பினும் அவனிடம் யாரும் இந்நிலையில் எதிர்த்து கேள்வி கேட்கும் நிலையில் இல்லை. அதோட அவனின் இந்த மௌனநாடகம்  அவர்களை மேலும் அச்சுறுத்தியது. இதற்கு அவன் திட்டியே இருக்கலாம் என எண்ண வைத்தது.

விஷயத்தை கூறிவிட்டு அறைக்கு சென்றவன் சிறிது நேரத்தில் மீண்டும் வெளியே சென்றான். ஜீவன் திரும்பி வந்தது முதல் வசந்த் இவர்களை கண்ணிலையே எரிக்காத குறை தான். அப்டி ஒரு கோபம். அவனிடமும் யாரும் எதுவும் கேட்கமுடியாமல் அமைதியாக இருந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-21ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-21

21 – மீண்டும் வருவாயா?   வசந்த் “ஆனா ஏன்டா. அவங்க திரும்ப நேத்ரா வந்தாலும் ஏத்துக்கற மனநிலைல தானே இருந்தாங்க. அதுனால என்ன பிரச்சனை வரப்போகுது. ஏன் மறைக்க சொல்ற? அதோட இப்போ இந்த கல்யாணத்துக்கு என்ன அவசியம்?” ஜீவன்

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-26ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-26

26 – மீண்டும் வருவாயா?   தனியாக அமர்ந்திருந்த ஜீவி சுற்றி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள். பாட்டி, தாத்தா மாமா பெரியப்பா என அனைவரும் கூட்டமாக ஊர் பெரியவர்களோடு தூரத்தில் பேசிக்கொண்டிருக்க, மறுபுறம் மேளதாளத்திற்கு ஏற்றவாறு இளவட்டம் ஆடிக்கொண்டிருக்க அதை பார்த்துவிட்டு திரும்ப

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-25ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-25

25 – மீண்டும் வருவாயா?   “என்ன பிரச்சனை வரப்போகுது?” என வசந்த் பதற இதில் எல்லாம் பெரிதாக நம்பிக்கை இல்லாத விஜய் “டேய்.. அவரு ஏதோ சொல்லிட்டு இருக்காருன்னு நீயுமா.. ஐயா பாத்து போங்க.. நீ வாடா.” என நண்பனுடன்