Tamil Madhura ஹஷாஸ்ரீயின் 'மீண்டும் வருவாயா' ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-17

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-17

17 – மீண்டும் வருவாயா?

சுந்தரம் “எனக்கு என்ன சொல்றதுன்னே தெரில வசந்த். நேத்ராவை நாங்க குறை சொல்லணும்னு நினைக்கல. ஆனா நடந்தது நடக்கறது எல்லாமே பாத்தா இவங்க சொல்றத நம்பாமலும் இருக்கமுடில. இனி யாரை சொல்லி என்ன லாபம். என்ன பண்ணாலும் எங்க பையன் எங்களுக்கு இல்லேனு ஆகிடுச்சே. இவளோ நடந்ததுக்கு அப்புறம் அந்த பொண்ணு இங்க இருக்கறதைவிட அவங்க வீட்ல இருக்கறதுதான் நல்லது..” என அவரும் கண்ணீருடன் கூற நேத்ராவிற்கு இருந்த அனைத்து ஆதரவும் சென்றுவிட்டது போல இருந்தது.

வசந்த் ஏதோ பேசபோக நேத்ரா “அண்ணா, ப்ளீஸ் வேண்டாம்.. அவங்களை கம்பெல் பண்ணாதீங்க. நான் போறேன்.” என

வசந்த் “நேத்ரா என்னமா பேசுற. இவங்க எல்லாரும் தான் இப்டி பேசுறாங்கன்னா நீ இந்த நிலைமைல அதுவும் ஜீவன் இல்லாதபோது..” என அவன் தழுதழுக்க

நேத்ரா “இல்லை அண்ணா, அவருக்கு எதுவும் ஆகிருக்காது. அவரு என்கிட்ட வருவேன்னு தான் சொல்லிட்டு போனாரு. கண்டிப்பா வருவாரு. எனக்கு நம்பிக்கை இருக்கு.” என அவள் இன்னும் நம்பிக்கையுடன் கூற

வசந்தா “அதான் நாங்களும் சொல்றோம். இந்த தடவை தான் அவன் உன்கிட்ட சொல்லிட்டு போனா. எப்போவுமே அவன் ஊருக்கு போகும்போது நீ இருக்கமாட்டா. புள்ளை வருத்தப்படுவா போலன்னு நாங்களும் உன்னை ஒண்ணுமே சொன்னதில்லை. ஆனா அவன் போகும்போது இந்தத்தடவை நீதான் இருந்த.. கடைசியா உன்ன தான் பாத்திட்டு போனான்.. இனி வரவே முடியாத இடத்துக்கு போய்ட்டானே..” என மீண்டும் கூற

நேத்ரா “இல்லை அத்தை அவருக்கு எதுவும் ஆகாது. வந்திடுவாரு.. அப்போ நான் இங்க வரேன். இப்போ நானே போய்ட்றேன்..” என வாசுகி “அப்போ அந்த தாலிய கழட்டி குடுத்திட்டு போ.” என்றதும்

நேத்ரா அதிர்ச்சியாக ராஜி “வாசுகி என்னமா பேசுற..இது ரொம்ப தப்பு மா. அந்த புள்ளை பாவம்..”

வாசுகி “எதுக்கா பாவம்.. இவளுக்கும் இந்த குடும்பத்துக்கும் இருக்கற ஒரே உறவு ஜீவன் தான் அவனே போய்ட்டான்.. அவன் கட்டுன தாலி மட்டும் இவளுக்கு எதுக்கு. இன்னும் எங்க குடும்பத்துல இருக்கற எத்தனை பேர் உயிரை வாங்கறதுக்கு. இதை நாங்க ஜாதகம் பாத்திட்டு வந்ததுமே வாங்கிருந்திருக்கணும்.. இவளுக்காக தானே பாத்தோம். புள்ளை மனசொடுஞ்சிடுவா.. சங்கடப்படுவான்னு சொல்லியே நான் வேண்டாம்னு சொன்னேன். ஆனா இன்னைக்கு நான் வளத்துன பையனே போனதுக்கு அப்புறம் இன்னும் எதுக்கு பாவம் பாக்கணும். இனிமேல் இந்த குடும்பத்துல இருக்கற புள்ளைங்களாவது நல்லா இருக்கட்டுமே…என்றவர் கண்ணீரை அடக்கிகொண்டு வேண்டாம். அவளை எதுவும் சொல்ல விரும்பல. தாலிய குடுத்திட்டு போகச்சொல்லுங்க.”

நேத்ரா இல்லை என்பது போல தலையசைக்க வாசுகி “அவளே குடுக்கறாளா இல்லை நாங்க எடுத்துக்கறதா?” என கேட்க “வேண்டாம் பெரிம்மா..ப்ளீஸ் விஜய்க்கு எதுவும் ஆகாது.. அக்கா, அண்ணி அத்தை ப்ளீஸ் சொல்லுங்க.. மாமா அண்ணா வேண்டாம்னு சொல்லுங்க.” என அவள் பின்னே நகர வசந்தா நேராக வந்து அவளின் தாலியை பறித்துவிட ஒரு நொடி என்ன நடந்தது என புரியாது அதிர்ச்சியில் நேத்ரா ஸ்தம்பிக்க தன்னை சுற்றி கண்ணீருடன் நின்ற வாசுகி, வசந்தா, சுதா, கீதா அனைவரையும் பார்த்தவள் தனக்கு திருமணம் முடிந்து தாலி பிரித்து கோர்க்க மஞ்சள் கயிறு நேத்ராவிடம் இருந்து தவற அதை தாங்கி பிடித்தவர்களும் இவர்கள்தானே என அன்றைய நாளை நினைத்தவள் ‘இது எப்போவுமே உன் கழுத்துல இருக்கணும். வேற பிரிச்சு நீ மாத்துனா கூட வேற கட்டிட்டு தான் எடுக்கணும்’. என கூறியவர்கள் இன்று அவர்களே தன் தாலியை நிரந்தரமாக எடுத்துவிட்டனரே என எண்ணியவளின் கண்களில் நீர் வழிய அப்டியே மயங்கி சரிந்தாள்.

 

அடுத்த அவளை அவசரமாக மருத்துவமனை எடுத்து செல்ல வசந்த் நேத்ராவின் பெற்றோர்க்கு தகவல் சொல்லிவிட அனைவரும் வந்தபின் மீண்டும் அவர்களுக்குள் வார்த்தை தடிக்க தன் மகன் இழந்த சோகத்தில் இவர்கள் குறை கூற, தன் மகளின் இந்த நிலைக்கு இவர்கள் தான் காரணம் என நேத்ராவின் குடும்பத்தினரும் “உங்க பையனும் நீங்களும் தான் அத்தனை தடவை வந்து கேட்டீங்களே இப்டி எங்க பொண்ணை கஷ்டப்படுத்தவா.. உங்களுக்கு உங்க பையன் இல்லேன்னா எங்கப்பொண்ணுக்கும் அவ புருஷன் இல்லனு தோணவேண்டாம். அவளை இவளோ பேச்சு பேசிடிங்களே.. பிரசவத்துக்கு கூட வாடினு கூப்டதுக்கு இல்லமா மாமா அத்தை பெரிம்மா எல்லாருக்கும் நான்தான் எல்லாமே செய்யணும். அவரும் ஊர்ல இருக்கற நேரத்துல நானும் இல்லாம இருந்தா சங்கடப்படுவாங்க.. நாங்க நல்லா பாத்துக்கலையாமா அதுனால தான் போறியான்னு கேட்டு பீல் பண்ணுவாங்க. எனக்கு இங்க என்னை கொறைச்சல் ..நீங்களே பாக்கிறிங்களே எவ்ளோ பாசமா பாத்துக்கறாங்க. எனக்கு இவங்க எல்லாரையும்குட்டிஸையும் பாக்காம ஒரு மாதிரி இருக்கும். நீங்க கோவிச்சுக்காம என்னை வந்து பாத்துட்டு போறிங்களா ப்ளீஸ்..டெலிவரி அப்போ அவரும் வந்துடுவார்.. நீங்களும் வந்துடுங்கன்னு சொன்னியேடி இப்போ இப்டி இருக்கியே..” என நேத்ராவின் அம்மா அழ அவளின் தந்தை பெரியப்பா அண்ணன் என அனைவரும் சண்டை போட இறுதியில் ஆண் குழந்தை பிறந்தது என நர்ஸ் கூற அனைவரும் அமைதியாக இருந்தது சில நொடிகளே…

வசந்தா கண்ணீரை துடைத்துவிட்டு தெரிந்த டாக்டர் என்பதால் நேரே உள்ளே சென்று “எங்க பேரனை நாங்க எடுத்துட்டு போறோம்” என்றதும் அவர் மறுக்க அரைமயக்கத்தில் இதை கேட்ட நேத்ரா ஏதோ கூற வர அதை கேட்கும் நிலையில் யாரும் அங்கே இல்லை. நேத்ராவிற்கு மீண்டும் வலி வர டாக்டர் அவளிடம் விரைந்து செல்ல வாசுகியும் வசந்தாவும் குழந்தையை எடுத்துக்கொண்டு வெளியே வந்து எங்க பையனால தானே உங்க பொண்ணு வாழ்க்கை போச்சுனு சொன்னிங்க. இதோ இருந்த கடைசி உறவு. அதையும் நாங்களே எடுத்திட்டு போயி வளத்திக்கறோம். உங்க பொண்ணுக்கு நீங்களே வேற நல்லா வாழ்க்கையா அமைச்சுக்குடுத்துகோங்க.” என கூறிவிட்டு சென்றனர்.

வசந்த் அவர்களை தடுக்க பார்க்க வசந்தா “டேய், இத்தனை வருஷம் இருந்து உனக்கு உன் பிரண்ட் முக்கியமா இல்லை அவங்களானு நீயே முடிவுபண்ணிக்கோ. அவங்க பேசுனதெல்லாம் கேட்டதானே.. இதுக்கு மேலையும் இங்க எந்த வேலையும் இல்லை. இனி நம்ம ஜீவன் இருந்த இடத்துல வெச்சு இவனை தான் வளத்த போறோம். வரதுனா இப்போவே வந்திடு. இல்லை அவங்களுக்கு சப்போர்ட் பண்றேன்னா நீயும் வீட்டுக்கு வராத..” என கூற வசந்த் வேறு வழியின்றி உடன் சென்றான்.

இவை அனைத்தும் நடந்த சில நிமிடங்களில் மீண்டும் நேத்ராவிற்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் அந்நேரம் அங்கே நேத்ராவின் குடும்பத்தினர் மட்டுமே இருந்தனர்.

 

மயக்கம் தெளிந்து நேத்ரா விஷயம் அறிந்தவளால் மௌனக்கண்ணீர் மட்டுமே வடிக்க முடிந்தது. வசந்த் கால் செய்தான் என கூறியதால் அவனிடம் மட்டும் பேசவேண்டுமென கூறினாள். வசந்த் “நேத்ரா, நீ தைரியமா இரு மா.. எல்லாரும் ஏதோ கவலை கோபத்துல இருக்காங்க.. நாங்க சீக்கிரம் பேசி இத சரி பண்றோம். இல்லை நான் இனி அவங்க மூஞ்சில கூட முழிக்கமாட்டேன்..எனக்கு கொஞ்சம் டைம் ..” என்றவனை முடிக்கவிடாமல் நேத்ரா “விட்ருங்க அண்ணா. இதுக்கு மேல நீங்க யாருகிட்டேயும் எதுவும் கெஞ்ச வேண்டாம். அவங்க இப்போ பண்ற விஷயம் தப்பு. ஆனா அவங்க யாரும் தப்பானவங்க இல்லை. அவங்க எல்லாருக்கும் விஜய் இப்போ இல்லேனு சொல்றத நம்பி இந்த மாதிரி நடந்துக்கிறாங்க. இல்லாட்டி அவங்க என்னை இதுவரைக்கும் ஒரு வார்த்தை சொல்லிருப்பாங்களா? அவங்க வலி சூழ்நிலை அந்த மாதிரி பேசுறாங்க. அதுனால இதுக்கு மேல அவங்க முன்னாடி வந்து நான் கஷ்டப்படுத்த விரும்பல. எனக்கு இப்போவும் நம்பிக்கை இருக்கு. விஜய்க்கு எதுவும் ஆகிருக்காது அண்ணா. எனக்காக ஒரே ஒரு ஹெல்ப் பண்ணுங்க. அவங்க குழந்தைய நல்லாத்தான் பாத்துப்பாங்க. இருந்தாலும் நீங்க அவங்ககூடவே இருங்க. என் பையன பாத்துக்கோங்க அண்ணா…ப்ளீஸ்” என்றவள் போனை வைத்துவிட்டாள். வசந்த் ராஜியிடம் சொல்லி புலம்பினான். அவருக்கும் மனவருத்தம் தான். மருத்துவமனையில் இருந்து வீடு வந்ததும் நேத்ராவின் வீட்டில் அனைவரும் கடும்கோபத்தில் இருக்க,  இறுதியில் அவளுக்கு வேறு மணம் செய்துவைக்க வேண்டும் என முடிவெடுக்க நேத்ரா பொறுமையாக சொல்லி பார்த்தாள். ஆனால் அனைவரும் விஜய் இறந்துவிட்டான் அதோடு அவன் குடும்ப நபர்கள் பேசியது நடந்த பிரச்னை என அனைத்தும் கூறி அவளை வேறு மணம் செய்துகொள்ள கட்டாயப்படுத்தினர். கணேஷ் “உனக்கு என்ன பிரச்சனை.. உன் குழந்தை தானே. அவளையும் சேத்து பாத்துக்கற பையன்னா ஓகே தானே. இப்போதைக்கு வேண்டாம். உன் பீலிங்ஸ நாங்க புரிஞ்சுக்கறோம். ஒரு ஆறு மாசம் கழிச்சு கல்யாணம் வெச்சுக்கலாம். பையன் என் பிரண்ட் சித்தார்த் வருவான்ல. அவன்தான்.. விஜய் உன் வாழ்க்கையில வராம இருந்திருந்தா உனக்கு சித்துவுக்கும் தான் மேரேஜ் பண்லாம்னு எல்லாருக்கும் ஐடியா இருந்தது. அவனுக்கு உன்னை ரொம்ப பிடிக்கும். நல்ல பையன் தான். நீ சூஸ் பண்ண வாழ்க்கை தான் இப்டி ஆகிடுச்சு. இப்போ நாங்க சூஸ் பண்ற வாழ்க்கையை நீ ஏத்துக்கிட்டு தான் ஆகணும். இல்லாட்டி சித்தி சித்தப்பா இரண்டுபேருக்கும் நீயே விஷத்தை குடுத்திடு. உன்னை இப்டி பாத்து பாத்து அவங்க பீல் பண்றதை விட ஒரேடியா போகட்டும்” என கத்த நேத்ரா பெரியர்வர்களை பார்க்க அவர்கள் தலை குனிந்த நிலையில் அமைதியுடன் இருக்க இறுதியில் அவளின் பெரியப்பா “அம்மாடி எங்களுக்கு உன் வாழ்க்கை சந்தோசம் தானேமா முக்கியம்.. ப்ளீஸ்டா அண்ணா சொல்றத கேளு. எங்க எல்லாருக்கும் கூட அதுதான் சரினு படுது.” என கூற நேத்ரா யாரிடமும் எதுவும் பேசாமல் அமைதியாக குழந்தையை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றுவிட்டாள்.

அனைவருக்கும் இவளின் அமைதி ஒரு நம்பிக்கை கொடுத்தாலும் ஏதோ அச்சுறுத்தலையும் கொடுத்தது. கணேஷ், “அப்பா, நீங்க எல்லாரும் போங்க. அவளை கொஞ்சம் தனியா விடலாம். இப்போதைக்கு அவ அமைதியா இருக்கிறதே நல்லது.”

“டேய், கணேஷ்..புள்ளை பாவம்டா. அவளை ரொம்ப போட்டு நம்மளும் இக்கட்டுல நிறுத்திறோம்னு தோணுது..”

“அம்மா, என்ன பேசுறீங்க நீங்க. அவளை இப்போ ஒத்துக்கவெக்கலேனா வேற எப்போவுமே முடியாது. கொஞ்ச நாள் போச்சுன்னா டைம் கேட்பா. நம்மகிட்ட பேசி கன்வின்ஸ் பண்ண பார்ப்பா.. குழந்தைக்காகனு சொல்லுவா. அப்டியே விட்டு அவளை இப்டி தனிமரமாக்கபோரிங்களா? அவ இப்போ இல்லை..எப்போ கேட்டாலும் வேண்டாம்னு தான் சொல்லுவா. அதுக்குன்னு அப்டியே விடமுடியுமா?அவளுக்கு புருஷன இழந்துட்டு வாழ்க்கை முடிஞ்சிடுச்சுனு ஓரமா உக்கார வயசாமா? அடிபட்டதும் உடனே மருந்து போடணும்மா.. ஆறப்போட்டா ரொம்ப பிரச்சனை.. அது அவ வாழ்க்கையவே மாத்திடும். யோசிச்சு பாருங்க..” என நேத்ராவின் தந்தை கண்ணீருடன் “கணேஷ் சொல்றது சரிதான் அண்ணி. அவளா மனசு மாறி வேற கல்யாணத்துக்கு எப்போவுமே ஒத்துக்கமாட்டா.. இப்போ அவ அழுது புலம்பி கஷ்டப்பட்டாலும் பரவால்லை. நாளைக்கு அவ வாழ்க்கை நல்லாயிருந்தா போதும்.” என அனைவரும் ஒரு மனதாக ஏற்றுக்கொண்டனர்.

 

அடுத்து வந்த இரு தினங்களில் நேத்ரா யாரிடமும் எதுவும் குறை கூறவில்லை. கல்யாணம் வேண்டாம் என கெஞ்சவில்லை. அழுகவோ கோபம்கொள்ளவோ எதுவுமின்றி சாதாரணமாகவே இருந்தாள். காலை மாலை நேரம் குழந்தையுடன் கோவிலுக்கு மட்டும் சென்றுவந்தாள். மற்றவர்களும் அப்பா அம்மா இறந்துவிடுவோம் என கூறியதால் வேறு வழியின்றி ஏற்றுக்கொண்டாள் என நினைத்து விட்டுவிட்டனர்.

மறுநாள் காலையில் அவளை காணவில்லை என அனைத்து இடங்களிலும் தேட இறுதியில் நேத்ரா, விஜயின் திருமண போட்டோவில் ஒரு லெட்டர் இருந்ததை பாரத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-19ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-19

19 – மீண்டும் வருவாயா? காலை வீட்டிற்கு வந்தவன் குளித்து தயாராகி வெளியே வந்து அவன் பைக்கை எடுத்தவன் கோவிலுக்கு வரசொல்லிவிட்டு சென்றான். அங்கே அனைத்தும் தயாராக இருக்க வாசுகியிடம் வந்தவன் “அத்தை, நீங்க தான் குழந்தைக்கு பேர் வெக்கணும்” என

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-35 (நிறைவுப் பகுதி)ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-35 (நிறைவுப் பகுதி)

35 – மீண்டும் வருவாயா?   பின்னர் அனைவரும் கேக் வெட்டி கொண்டாட நேத்ராவிற்கு ஒவ்வொருவரும் பரிசு தர ஜீவி “அம்மா..இந்தாங்க…” என ஒரு போட்டோ பிரேம் நீட்ட அதில் விஜய் நித்து ஜீவி ஜீவா நால்வரும் ஒன்றாக இருக்கும் பள்ளி

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-15ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-15

15 – மீண்டும் வருவாயா?   வீடு, குழந்தைகளை பார்த்துக்கொண்டு பேங்கிங் தேர்வுகளுக்கு படிக்கறேன்னு என கூற அனைவரும் ஒப்புக்கொண்டனர். குமார், வசந்த், சுரேஷ் என மூவரும் அண்ணன்களாக அவளை காத்தனர். சுதா, கீதா இருவரும் அவளை உடன் பிறவா சகோதரியாக