Tamil Madhura ஹஷாஸ்ரீயின் 'மீண்டும் வருவாயா' ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-16

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-16

16 – மீண்டும் வருவாயா?

இம்முறை அவளும் உடன் இருந்து வழியனுப்பி வைத்தாள். என்ன நினைத்தானோ முதன்முறையாக குடும்பத்தில் இருக்கும் அனைவரிடமும் தனித்தனியாக “நித்துவை பத்திரமா பாத்துக்கோங்க” என கூறிக்கொண்டே இருந்தான். அவர்கள் திட்டி அனுப்பாத குறை தான். அவன் மனமில்லாமல் செல்ல நாட்கள் நகர்ந்தது.

ஒரு நாள் தனிமையில் நித்ரா அவன் ஊருக்கு கிளம்பும் முந்தைய நாள் இருவரும் பேசியதை எண்ணிப்பார்த்தாள்.

விஜய் “நித்து…நித்து” என பின்னாடியே சுற்றினான்.

“ஏய் நித்ரா ..நில்லுடி ..கூப்பிடறேன்… நீ பாட்டுக்கு வேலையா செஞ்சிட்டு இருக்க..?”

“பின்ன? கூப்பிட்டா ஏதாவது சொல்லணும். சும்மா நித்து நித்துன்னு கத்திகிட்டே இருந்தா எனக்கு உம் கொட்டியே டையர்டு ஆகுது.”

“அதில்லை நித்து…எனக்கு இந்த தடவ உன்னை விட்டு போகவே மனசில்லை. நாளைக்கு கண்டிப்பா போகணுமா?”

“கண்டிப்பா போகணும் சார். ஏற்கனவே எல்லாமே எமெர்ஜென்சில லீவு..சோ போயிட்டு கரெக்ட்டா குழந்தை பொறக்கும் போது வந்துருங்க. சரியா இருக்கும்.”

அவன் முகம் வாட அவனிடம் வந்தவள் “விஜய் என்னாச்சு… ஏன் முகம் உம்முனு இருக்கு..இப்போதான் நீங்க என்னை முதல் தடவையா விட்டுட்டு போறீங்களா என்ன? நீங்க வரதுக்குள்ள நான் என்ன காணாமலா போகப்போறேன்?”

“ம்ச்ச்..” என்றவன் அவளை அணைத்து தோளில் சாய்ந்து கொண்டான்.

“எல்லாமே எனக்கு தெரியுது நித்து.. ஆனா ஏனோ முதல் தடவையா இப்டி இருக்கு…. ஏனோ சங்கடமா இருக்கு.. உனக்கு நான் சொல்றதே புரியலையா?…மிலிட்டரில இருந்துட்டு தெரியாம கல்யாணம் பண்ணிட்டேனோன்னு இருக்கு…உன்னையும் கஷ்டப்படுத்துறேனா?” என கேட்க, அவன் முதுகை தடவி கொடுத்தவள் “அதெல்லாம் ஒண்ணுமில்லை.. நீங்க சொல்றத பாத்தா ஆர்மில இருக்கறவனுக்கு எல்லாம் குடும்பமே இருக்கக்கூடாதுனு சட்டம் போடுவிங்க போல…எல்லாருக்கும் ஒரு சமயத்துல எமோஷனல், பீலிங்ஸ் அதிகமா வரத்தான் செய்யும். சார்க்கு அது இப்போ வந்திருக்கு. வேற எதுவுமில்லை..பத்திரமா போய்ட்டு சீக்கிரமா வாங்க..இங்க எல்லாரும் இருக்காங்கள்ள.. நான் இங்க நல்லாத்தான் இருக்கேன்..இப்போ போயி சாப்படறிங்களா?.” என கூறி அவனை அனுப்பி வைத்தாள்.

இரவு உறங்கியதும் நித்து அருகே இருந்த விஜயின் தலையை  கோதிவிட்டவள் “நீங்க சொல்றது எனக்கு புரியாம இல்லை. நான் எப்படி விஜய் சொல்லுவேன்… எனக்கு இந்த கொஞ்ச நாளாவே அப்டித்தான் இருக்கு.. உங்களை நான் ரொம்ப மிஸ் பண்றேன். எனக்கு இங்க எந்த குறையும் இல்லை. ஆனா ஏதோ பதட்டமா, வருத்தமா இருக்கு… சொல்லி யாரையும் சங்கடப்படுத்த வேண்டாம்னு விட்டுட்டேன். இப்போ நீங்களும் அப்டி சொன்னதும் எனக்கு இன்னும் கவலையா இருக்கு.” என அவன் கண்களை திறக்க “நீங்க தூங்கலையா?”

விஜய் “என் செல்ல பொண்டாட்டி இப்டி தூங்காம பீல் பண்ணும் போது எனக்கு மட்டும் எப்படி தூக்கம் வரும்..உன் முகமே சரிலேனு தோணுச்சு ”

அவள் கண்கள் பனிக்க “நித்ரா, இங்க பாரு.. நம்ம இரண்டுபேருக்கும் ஏன் இப்படி கஷ்டமா இருக்குனு தெரில. ஆனா என்ன ஆனாலும் நான் திரும்பி வந்திடுவேன். உனக்காக வரேன். என்னை நம்புற தானே?”

அவள் கண்ணீருடன் மேலும் கீழும் தலையாட்ட “நீ சமத்தா சந்தோசமா பத்திரமா இரு.. எப்போவுமே சிரிச்சிட்டே. எனக்கு அந்த நித்ராவ தான் ரொம்ப புடிக்கும். எதையும் போட்டு குழப்பிக்காம நம்ம குழந்தைக்கு பேர் எல்லாம் சூஸ் பண்ணு..” என

அவள் புன்னகையுடன் “பையன் பொறந்தா ஜீவா தான்…”

அவளை ஒரு மாதிரியாக பார்த்துவிட்டு “ஏன் டி அப்பனுக்கு பையனுக்கும் ஒரே பேரா?”

“ஏன் ஏன் ஏன்… அதான் உங்களுக்கு பெருசா வெச்சிருக்காங்களே..விஜய ஜீவித்தன்னு… ஜீவா ஜீவன்னு எப்படி வேணாலும் கூப்படலாம்ல… என் பையன நான் ஜீவாதான் கூப்பிடுவேன்.” என அவள் முரண்டுபுடிக்க

விஜய் சிரித்துவிட்டு “எனக்கென்னவோ நீ என் பேரை சொல்லி கூப்பிடறதுக்காகவே அவனுக்கு அப்டி பேர் வெக்கிறயோனு தோணுது? உண்மைய சொல்லு பிராடு…” என மிரட்ட

அவள் உதட்டை கடித்துக்கொண்டே “ஆமா..அதான் உண்மை.. எனக்கு எப்போவுமே உங்க பேரை சொல்லிட்டே இருக்கனும். உங்களை ஞாபகபடுத்துற எல்லா விஷயமும் சுத்தி இருந்திட்டே இருக்கணும். அதான்.” என கூற அவளை தோளோடு அணைத்துக்கொண்டான்.

“ஸ்வீட் டி செல்லம்.. சரி பொண்ணு பொறந்தா?”

“அவளுக்கும் உங்க நேம்ல இருந்து தான் பேர் வெப்பேன். விஜி, ஜீவி, விஜயான்னு எவ்ளவோ இருக்கே….சரி உங்களுக்கு எந்தமாதிரி பேர் வெக்கணும்.?”

விஜய் “எனக்கு நம்ம இரண்டுபேர் பேரையும் சேத்தி வெக்கணும்னு ஆசை.” என அவள் மேலே பார்த்து இரண்டுபேருமா? சரி யோசிக்கிறேன்..”

“பையன் பொண்ணு இரண்டுமே பொறந்தா இன்னும் சூப்பரா இருக்கும்ல? வீட்ல இரண்டுக்கும் ஈகுவல் வோட்ஸ்..”

“ஓய்.. என்னை பாத்தா எப்படி தெரியுது?”

“நல்ல புஜுடிக்கா தானேடி இருக்க.. ட்வின்க்ஸ தாங்குற அளவுக்கு ஹெல்த்தியா தான் இருப்பேன்னு தெரியுது.” என கூறி அவளிடம் இருந்து சில குத்துகளை வாங்கி இருவரும் சிரித்தது விளையாடியது என அனைத்தும் ஏனோ அவளுக்கு நேற்று நடந்தது போல இருந்தது.. ஆனால் 8 மாதங்கள் ஓடிவிட்டன. அவ்வப்போது விஜயிடம் இருந்து போன் கால் என நாட்கள் நகர நேத்ராவிற்கு வாசுகியும், வசந்தாவும் ஏனோ தன்னிடம் இருந்து விலகி இருப்பது போல தோன்ற, அவளே அப்டி எல்லாம் ஒன்னும் இருக்காது என கூறிக்கொண்டு விட்டுவிட்டாள். வளைகாப்பு முடிந்தும் இங்கே குழந்தைகள், வீட்டில் அனைவரும் நேத்ரா இங்கேயே இருக்கட்டுமே என ஆசைப்பட அவளும் இருந்துவிட்டாள்.

 

அன்று காலை இருந்தே நேத்ராவின் மனம் சஞ்சலத்துடன் இருக்க யாரிடமும் எதுவும் கூறாமல் வலம் வந்தாள். கடவுளை வணங்கிவிட்டு வந்தாள். அன்று விடுமுறை தினம் என்பதால் அனைவரும் நேரம் கழித்து எழுந்த அவரவர் வேலைகளில் மூழ்கிவிட வசந்த் அவரது அம்மா ராஜியும் வந்து சேர ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். திடீரென தலைப்பு செய்தியில் ராணுவத்தில் நடந்த பயங்கர தாக்குதல், வெடிகுண்டு விபத்தில் பலர் உயிரிழந்தனர் என கூற அனைவரும் செய்தியை கவனிக்க, அவர்களின் சடலங்கள் கிடைக்கவில்லை என இரத்தமும், சதையும் நிறைந்த கலவர பூமியை காட்டினர்.

அங்கே சென்ற வீரர்களின் பட்டியல் மற்றும் பயன்படுத்திய பொருட்களை கொண்டு இவர்கள் அனைவரும் விபத்தில் உயிரிழந்திருக்க கூடும் என நம்படுகிறது என பெயர் பட்டியலை வாசிக்க அதில் விஜய ஜீவிதன் பெயரும் வாசிக்கப்பட்டது.

வெளியே அனைவரின் அழுகுரல் கேட்க பூஜை அறையில் இருந்து வெளியே வந்தாள் நேத்ரா.

சுந்தராஜன் “வசந்தா, கொஞ்சம் இரும்மா.. அக்கா நீயாவது சொல்லு. வாயும் வயிறுமா அந்த புள்ளை இருக்கு. இந்த நேரம் இது தெரிய வந்தா…” என அவர் முடிப்பதற்குள்

வசந்தா “தெரியவந்தா என்ன? அதான் என் பையன கொன்னுட்டாளே..” என அழைத்துவங்கினார்.

ராஜி, வசந்த் இருவரும் “அம்மா என்ன பேசுறீங்க? நேத்ரா என்ன பண்ணுவா?”

வாசுகி “எல்லாமே இவ நேரம் சரில்லாதது தான் காரணம்…”

சுந்தராஜன் “அக்கா என்ன உளற?”

வசந்தா “அண்ணி ஒன்னும் உளறல.. இவளோ நாள் யாருக்குமே சொல்லாம இருந்தோம். இந்த தடவை என் பையன் ஊருக்கு போகும்போதே மனசு சரில்லம்மான்னு பொலம்பிட்டே போனான்.. மனசு சங்கடமா இருக்கேனு நானும் அண்ணியும் ஜீவனுக்கும், நேத்ராக்கும் போயி ஜாதகம் பாத்தோம். அதுல சொன்னாங்க. இவங்களுக்கு நெறையா பிரச்சனை வரும். ..உங்க பையனுக்கு பொண்ணு பொறந்திட்டா உங்க பையன் உயிருக்கே ஆபத்து இருக்கு. கண்டிப்பா அவங்க சில காலம் சேந்து வாழ முடியாதுனு சொல்லிட்டாங்க..அவன் கட்டுன தாலி உன் கழுத்துல இருக்கறவரைக்கும் பிரச்சனை ஓயாது…நேத்ராவை காட்டி  இவ நேரமும் இவளுக்கு பொறக்க போற புள்ளை நேரமும் தான் இப்டி பிறக்கறதுக்கு முன்னாடியே என் பையனோட உயிரை எடுத்திருச்சு.” என வசந்தா அழ

நேத்ரா அதிர்ச்சியில் உறைந்து நிற்க கீதா “இப்போ அழுது என்னமா ப்ரயோஜனம். இந்த மாதிரின்னு சொன்னதும் நாங்க அப்போவே சொன்னோமே.. வேணா டாக்டர்கிட்ட கேட்டுட்டு கலைச்சிடலாம்னு. நீதான் சொன்னா ஒரு வேளை பையனா இருந்தா பிரச்சனை இல்லேலனு. ஆனா இப்போ எல்லாமே கைமீறி போயிடிச்சே.” என அவளும் தம்பியை நினைத்து அழத்துவங்க நேத்ரா அனைவரையும் நம்பாத பார்வை பார்க்க சுமதி “நேத்ரா, நீ தப்பா புரிஞ்சுக்காத.. மத்தவங்க மனநிலைல இருந்து யோசிச்சுப்பாரு இன்னும் உலகத்தையே பாக்காத உன் குழந்தையை விடவே நீ யோசிக்கும்போதும் நம்ம கூட இருந்த வாழ்ந்த ஒருத்தனை இழக்க எப்படி அவங்களுக்கு மனசு வரும். அதுவுமில்லாம உனக்கு ஜீவன்க்கும் இந்த குழந்தை இல்லாட்டி வேற குழந்தை பெத்துக்கலாம். ஆனா நீயே சொல்லு அவன் இல்லாம நீ இருந்திடுவியா? அதனால தான் அப்டி நாங்க யோசிச்சோம். ஆனா இப்போ எல்லாமே முடிஞ்சிடுச்சே..” என அவளும் தன்னிலை விளக்கத்துடன் நடப்பை கூறி அழுக நேத்ராவுக்கு தலை சுற்றாத குறை தான். தன்னை சுற்றி என்ன நடந்து கொண்டிருந்தது என அறியாமல் குடும்பம் என கண்மூடித்தனமாக அனைவரையும் நம்பியது இதற்காகவா என இருந்தது.

வசந்த்க்கு இவை அனைத்தும் கேட்டு முதலில் கோபம் வர “சரி, அப்டினா அந்த மாதிரி ஜாதகத்தை நீங்க கல்யாணதுக்கு முன்னாடியே பாக்கறதுக்கு என்ன? இப்டி இவ வாழ்க்கையும் வீணாக்கி இப்போ இப்டி ஒரு பழி போட்டு இது எல்லாம் தேவையா?” என கத்த

வாசுகி “அது தான் நாங்க பண்ண மிகப்பெரிய தப்பு. பையனுக்கு பிடிச்சிருக்குனு சொன்னதும் யோசிக்காம உடனே சரினு சொல்லிட்டோம். இப்போ அதுக்குதான் நல்லா அனுபவிக்கிறோம். இனிமேல் இவ இங்க ஒரு நிமிஷம் கூட இருக்கக்கூடாது ” என

வசந்த் “அத்தை என்ன பேசுறீங்க. திடிர்னு இப்டி சொன்னா அவ என்ன பண்ணுவா. சுந்தரம், குமார், சுரேஷிடம் சென்று பேசினான். நீங்களாவது சொல்லுங்க. நேத்ரா ஏற்கனவே அதிர்ச்சில இருக்கா. இதுல அவ தப்பு என்ன இருக்கு.. நீங்க யோசிச்சு பாருங்க பா.. அவங்ககிட்ட சொல்லுங்க..” என

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-8ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-8

8 – மீண்டும் வருவாயா? ஜீவன் அவனுக்கு உணவு, மாத்திரை எடுத்துக்கொண்டு உள்ளே சென்று அவனை எழுப்பி சாப்பிட சொல்ல  ஜீவா உறக்கத்தில் இருந்து தெளியாமல் “வேண்டா நிரு மா, எனக்கு தூக்கமா வருது.” என கூற ஜீவன் “டேய் செல்லம்,

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-35 (நிறைவுப் பகுதி)ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-35 (நிறைவுப் பகுதி)

35 – மீண்டும் வருவாயா?   பின்னர் அனைவரும் கேக் வெட்டி கொண்டாட நேத்ராவிற்கு ஒவ்வொருவரும் பரிசு தர ஜீவி “அம்மா..இந்தாங்க…” என ஒரு போட்டோ பிரேம் நீட்ட அதில் விஜய் நித்து ஜீவி ஜீவா நால்வரும் ஒன்றாக இருக்கும் பள்ளி

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-13ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-13

13 – மீண்டும் வருவாயா?     சிவகாமி “அதோட உங்க குடும்பமோ பெரிய குடும்பம், நிறையா பேர் இருப்பாங்க. நீங்க கூட இருந்தாலாவது பரவால்லை. கல்யாணம் பண்ணி அவங்ககிட்ட விட்டுட்டு போறது, எப்படி ஒத்துவரும்னு தெரில..தப்பா எடுத்துக்காதீங்க தம்பி. இப்போ