Tamil Madhura ஹஷாஸ்ரீயின் 'மீண்டும் வருவாயா' ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-11

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-11

11 – மீண்டும் வருவாயா?

வாணி ” இந்த கல்யாணத்த நிருவும் ஏத்துக்குவான்னு எனக்கு தோணல. கூட இல்லேன்னாலும் அவ ஹஸ்பண்ட அவ்ளோ லவ் பண்ரா..நிரு நல்ல பொண்ணு. ரொம்ப ஸ்வீட். ரொம்ப தைரியமும் கூட. இன்னைக்கு நான் இங்க இருக்கேன்னா அதுக்கு அவ தான் காரணம். எனக்கு அப்பா இறந்துட்டாரு. அம்மா மட்டும் தான். என் முறைப்பையன் தான் என்னை கல்யாணம் பண்ணிக்கணும்னு ஊர்ல பெரிய பிரச்சனை. தண்ணி, பொண்ணுங்க சகவாசம்னு எல்லா கெட்ட பழக்கமும் இருக்கு.. எனக்கு அவனை சுத்தமா பிடிக்காது. ஆனா நான் வீட்டை விட்டு வெளில வரவே யோசிக்கற பொண்ணும்கூட.. இந்த பிரச்சனை எல்லாம் நினைச்சே அம்மாவும் இறந்துட்டாங்க. என் வாழ்க்கையே முடிஞ்சதுனு நினச்சேன். ஆனா நிரு தான் எனக்கு ரொம்ப சப்போர்ட். தைரியம் சொல்லி என்னை இங்க அனுபிச்சுவெச்சு வேலைக்கு சொல்லி ஒரு பாதுகாப்பான இடம் எல்லாமே எனக்கு அவளால கிடைச்சது. இப்போ இப்டி பாசமான குடும்பத்துல மருமகளா வர அளவுக்கு ஒரு வாழ்க்கை எல்லாமே.. இத எல்லாமே எனக்கு குடுத்த அவ வாழ்க்கை நல்லா இருக்கணும்னு தான் நான் தினமும் வேண்டிக்கிட்டு இருக்கேன்.”

ராஜீ “ஏன் மா, அவளுக்கு என்ன?”

வாணி “அவளுக்கு இரட்டை குழந்தைங்க மா. ஒரு பொண்ணு ஒரு பையன். ஜீவிதாக்கு கொஞ்ச நேரம் முன்னாடி ஒரு பையன் பொறந்திருக்கான். அவளோட பையன தொலைச்சிட்டேன்னு சொல்லுவா.. ரொம்ப பீல் பண்ணுவா…பையன் அவளுக்கு கிடைக்கணும்.. முழுசா என்ன பிரச்னைனு எனக்கும் தெரியாது..”

வசந்த் குழப்பமாக அவளிடம் “உனக்கே தெரியாதா? நீ அவளோட பெஸ்ட் பிரண்ட் தானே. எல்லாமே சொல்லுவாள்ல?”

வாணி “ம்ம்.. பெஸ்ட் பிரண்ட் தான். இந்த ஆறு வருசமா அவ வாழ்க்கைல நடந்த எல்லாமே எனக்கு தெரியும். ஆனா அதுக்கு முன்னாடி அவ வாழ்க்கைல நடந்த ஒரு விஷயம் கூட எனக்கு தெரியாது.. சொல்லவும்மாட்டா..”

வசந்த் “ஆறு வருசமா தானா? வாணி நீ அவளை பத்தி தெரிஞ்ச எல்லாமே சொல்லு.” என அவன் வினவ

வாணி “ஆமா. ஆறு வருஷம் முன்னாடி தான் கையில கைக்கொழந்தையோட அவ எங்க ஊருக்கு வந்தா.. என் அம்மா வேலை ஏதோ பாத்திட்டு மயங்கி விழபோயிருக்காங்க. பக்கத்துல பள்ளம் வேற. இவ தான் காப்பாத்திருக்கா. அப்போ இருந்து பழக்கம் எங்க அம்மாக்கும் இவளை பிடிச்சிருச்சு. எங்க வீடு ஒன்னு இருந்தது. சின்னது தான். நிருவ அங்கேயே தங்க சொல்லிட்டாங்க. அம்மாவுக்கு நிரு, ஜீவி பாப்பா தான் ரொம்ப இஷ்டம். எங்க அம்மாக்கு மட்டும் அவளை பத்தி எல்லாமே தெரிஞ்சிருக்கும் போல.. ஆனா எனக்கு சொன்னதில்லை. என் அம்மா இறக்கும்போது நிருகிட்ட பேசும்போது தான் அது புரிஞ்சது. “நிருகிட்ட என்னை பாத்துக்க சொன்னாங்க.. உன் மனசு படி எல்லாமே சீக்கிரம் சரி ஆகி உன் புருஷன் கூட சந்தோசமா வாழ்வமா.. அதான் என் பிரார்த்தனைனு சொல்லிட்டு இறந்துட்டாங்க. அப்புறமா அவ எனக்கு ஒரு அக்கா மாதிரி தான் எல்லாமே பாத்து பண்ணா.

ஆனா இத்தனை வருசத்துல அவ ஹஸ்பண்ட்டும் வந்ததேயில்லை. எனக்கே அது கொஞ்சம் சங்கடமா இருக்கும். என்னதான் வேலைன்னாலும் இப்டியான்னு தோணும்.. அம்மா இறக்கும்போது சொன்னது வேற  அத யோசிச்சு ஒருவேளை இவளுக்கு இவ புருஷனுக்கும் பிரச்சனைனு நினச்சு நானா ஒருதடவை  திட்டிட்டேன்.. ஆனா அவ என்னைக்குமே அவ புருஷனை விட்டுகுடுத்ததேயில்லை. ஒரு வார்த்தை சொல்லவிடமாட்டா.. என்னை அவர் அளவுக்கு யாராலையுமே காதலிக்க முடியாது, சந்தோசமா வெச்சுக்க முடியாது. அவருக்கு இப்போவும் நான் இருக்கற இடம் தெரியாது. அவரு மேல எந்த தப்புமே இல்லை.   அவர்கிட்ட சொல்லமுடியாத நிலைமை. அப்போ வெளில வந்துட்டேன். ஆனா இப்போ போறத பத்தி யோசிச்சா நிறையா கேள்விகள் எனக்குள்ள வருது. அதுக்கு எதுக்குமே எனக்கு பதில் இல்லை. அதான் இப்போ திரும்பி போகவும் முடிலேனு சொல்லுவா.. என்னதான் சொல்லு அவ ஹஸ்பண்ட் பத்தி பேசுனாலே அவ முகத்துல எப்போவுமே ஒரு சிரிப்பு வரும். அதுவும் ஜீவிகிட்ட அவரை பத்தி பெருமையா பேசும்போது அம்மாடி அவ கண்ண பாக்கணுமே. அது சொல்லும் அவ எவ்ளோ விரும்பறான்னு. அதுக்கப்புறம் அவரை திட்டி கூட இவளை கஷ்டப்படுத்த வேண்டாம்னு விட்டுட்டேன். ஆனா  ஒரு பொண்ண வெறும் அன்பால மட்டுமே இவளோ காலம் ஒரு குறை கூட சொல்லாம அவரோட நினைவுகளை நினச்சே சந்தோசமா வாழவெக்க அதுவும் நம்பிக்கையோட வாழவெக்க முடியும்னா அவளோட அவரு வாழ்ந்த காலத்துல அவளை எப்படி நேசிச்சிருப்பாருனு யோசிச்சு ஒரு கட்டத்துக்கு மேல அவரு மேல எனக்கும் ஒரு மதிப்பு வந்திடுச்சு.  அவ ஹஸ்பண்ட் திரும்பி வந்து சேந்தாலே போதும்னு இருக்கும்.” என அவள் ஒரு குறையுடன் கூற

வசந்த் ஏதோ குழப்பமாக உணர “நிர்மலாவோட ஹஸ்பண்ட்ட நீ பாத்திருக்கியா?”

இல்லை என்பது போல தலையாட்டிவிட்டு “இருங்க இருங்க… அது யாரு நிர்மலா.?” என்று மறுவினா எழுப்பினாள்.

வசந்த் முழித்துவிட்டு “யாரா. நிர்மலா தான் உன் பிரண்ட் நிரு. அதானே அவ பேரு?”

வாணி “இல்லை. அவ பேரு நிர்பய நேத்ரா.” என்றதும் தாயும் மகனும் ஒருவரை ஒருவர் அதிர்ச்சியாக பார்த்துக்கொள்ள வாணி தொடர்ந்து “அவளை நேத்ரான்னு கூப்பிட வேண்டாம்னு சொல்லுவா. சோ நிர்பயா இல்லை நிருன்னு கூப்பிடுவோம்.”

வசந்த் “அவ ஹஸ்பண்ட் நேம்?”

வாணி “விஜய்ன்னு சொல்லுவா. ஆனா முழு பேரு ஒரு தடவை சொல்லிருக்கா..ஜீவி” என அவள் யோசிக்க

வசந்த் “விஜய ஜீவிதன்?”

வாணி “ஆ.. அதுதான். அந்த நேம் தான். உங்களுக்கு எப்படி தெரியும்.” என வசந்த்தின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. ராஜீயும் புன்னகையுடன் “வசந்த் பாத்தியா.. கண்டிப்பா எல்லாமே நல்லபடியா நடக்கும்னு சொன்னேன்ல. எதுன்னாலும் சரி முழுநம்பிக்கை வெக்கணும். ஜீவன் என்ன தான் சொல்லு. அவனோட மனசு சொன்னது, அவனோட நம்பிக்கை பொய்யாகல பாரு..” என

வாணி விழிக்க வசந்த் “ஆமா மா. எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு என அவன் ராஜீயை கட்டிக்கொண்டு பின் வாணியையும் கட்டிக்கொண்டு விட அவளோ அதிரிச்சியில் இருக்க ராஜீ “டேய், இங்க நான் அம்மா இருக்கேன்டா.”

வசந்த் “அதனால என்னமா. சந்தோசத்தை வெளிப்படுத்த இப்டி சின்னதா ஒரு கட்டிப்புடி வைத்தியம் வேணும் தானேமா.” என்றான் குறும்புடன்.

வாணி வெட்கம் கொள்ள வசந்த் “உன் வேண்டுதலும் பழிச்சிடிச்சு. நாம இரண்டுபேரும் பேசுன ஆளுங்க கிடைச்சாச்சு. நித்ரா தான் நிரு. நாங்க எல்லாரும் அவளை இங்க நேத்ரானு தான் கூப்பிடுவோம். உனக்கு தெரிஞ்ச ஜீவன் தான் விஜய ஜீவிதன் நிருவோட ஹஸ்பண்ட்.” என்றான்.

இவளோ நாள் ஒரே இடத்துல இருந்தும்கூட பாக்க முடியாம போச்சே என வருத்தம் கொண்டாலும் இருவரும் உடனே இந்த விஷயத்தை அவங்ககிட்ட சொல்லணும் என புறப்பட்டனர். ஆனால் இந்நேரம் இருவருமே பள்ளிக்கு சென்றிருப்பர். அதனால் நேராக பள்ளிக்கு விரைந்தனர்.

 

பள்ளியில் குட்டிஸ்களின் நாடகம், பாட்டு, நடனம் என அனைத்தும் முடிந்துவிட விளையாட்டு போட்டி, படிப்பு என அனைத்தும் வரிசைப்படுத்தி பரிசளித்தனர். ஜீவியின் நாடகம் ஒன்று இருப்பதால் நேரமே வந்துவிட ஜீவி, நிரு ஓரிடத்தில் அமர்ந்தனர். பின்னால் வந்த ஜீவன், ஜீவா வேறு இடத்தில் அமர்ந்தனர். அங்கே தேடிப்பார்த்தும் கண்ணுக்கு தென்படவில்லை. நிரு மொபைல் சார்ஜ் இல்லாமல் உறங்கிவிட தொடர்புகொள்ளவே இயலாமல் ஜீவா தனியாக மேடை ஏறினான். ஜீவிதாவும் மேடை ஏற மற்ற குழந்தைகளும் பரிசு வாங்க, அங்கே இருந்த குழந்தைகளின் பெற்றோர்களை மேடைக்கு அழைத்தனர். அனைவரும் சேர்ந்து ஒரு புகைப்படம் எடுக்கலாமென அழைக்க இறுதியாக  மேடை ஏறிய ஜீவன் தனக்கு நேர் எதிரே மேடையில் வருபவளை கண்டு அப்டியே நின்றுவிட்டான்.

அவளும் இவனை பார்த்து முதலில் மகிழ்ச்சி, ஆர்வம் என கண்களில் தன் உணர்ச்சிகளை காட்டியவள் சட்டென புன்னகை உறைய அப்டியே சிலையாகிவிட்டாள். இருவருக்கும் தங்களின் முதல் சந்திப்பு நினைவு  வர செயலற்று நின்றனர்.

ஜீவா ஓடிவந்து “நிருமா வாங்க போட்டோ எடுக்கலாம் என அழைக்க ஜீவி “ஜீவிப்பா, வாங்க நாமளும் போலாம்.” என இழுத்துக்கொண்டு வந்து மேடையின் மையத்தில் நின்றனர். மற்ற பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளுடன் நிற்க, ஜீவன், நிரு, ஜீவி, ஜீவா நால்வரும் ஒன்றாக நின்றனர்.

 

சரியாக உள்ளே நுழைந்த வாணி, வசந்த் மேடையை பார்க்க அவர்கள் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றுவிட்டனர். வசந்த் “பாத்தியா, இத்தனை வருஷம் கழிச்சு மீட் பண்ணி பேமிலியா போஸ் குடுக்கறத..” என வாணியிடம் கிண்டல் செய்துகொண்டிருந்தான்.

ஆனால் உண்மையில் மகிழ்ச்சியில் இருக்க வேண்டிய இரு உள்ளமும் அதை வெளிப்படுத்தவில்லை. நிருவிற்கு மனதில் மகிழ்ச்சி இருப்பினும் அதை மீறிய பதட்டத்தில் இருந்தாள். ஜீவன் கோபத்தின் உச்சத்தில் இருந்தான்.

 

அவர்களின் முகம் கண்ட வசந்த் ஏதோ சரியில்லை என்றுணர்ந்தவன் சரி ஒன்றாக இருப்பதே மகிழ்ச்சி. பேசிக்கொள்ளலாம் என அமைதியாக நின்றான். அனைவரும் கீழே இறங்க ஜீவா நிருவின் கைப்பற்றிக்கொண்டே பேசிவர, ஜீவி ஜீவனின் கைப்பற்றி குதித்துகொண்டே வந்தாள். வசந்த், வாணி அவர்களிடம் வந்ததும் நிரு “அண்ணா, எப்படி இருக்கீங்க? அம்மா எப்படி இருக்காங்க.” என உண்மையான மகிழ்ச்சியில் கேட்டாள். வசந்த்தும் “நல்லாயிருக்கேன் நேத்திரா.. நீ இல்லாததான் இங்க குறை எனக்கு அம்மாக்கு எல்லாருக்குமே. நீ எப்படி இருக்க?”

நேத்ரா ஜீவனை பார்த்துவிட்டு புன்னகையுடன் “இப்போ சந்தோசமா இருக்கேன் அண்ணா.” என்றாள். அந்த செய்கையும் பொருளையும் உணர்ந்த வசந்த், வாணி புன்னகைக்க ஜீவன் அதை உணர்ந்தாலும் பெருமூச்சுடன் குழந்தைகளிடம் திரும்பி “குட்டிஸ்,  எல்லாரும் வீட்டுக்கு போலாமா? என கேட்டு வெளியே வர நிரு அமைதியாக ஆனால் புன்னகையுடன் பின்னால் சென்றாள். இத்தனை வருடம் கழித்து சந்தித்தும் இருவரும் இப்டி பேசிக்கொள்ளாமல் முகம் திருப்பிக்கொள்வதை எண்ணி மற்ற இருவருக்கும் தான் கவலையாக இருந்தது. காரின் அருகில் வந்ததும், வசந்த் “நான், வாணிய கூட்டிட்டு வந்து விட்டறேன்டா. நீ நேத்ரா, குழந்தைகளோட உன் வண்டில போ” என்றான்

நேத்ரா “ஆ..அண்ணா, பங்க்ஷன் முடிஞ்சு கூட்டிட்டு போக ஆட்டோ டிரைவர் முத்து அண்ணாவை வர சொல்லிருந்தேன். அவர் வெளில வெயிட் பண்ணுவாங்களே..” என அவள் முடிப்பதற்குள் ஜீவன் அவளை முறைத்துவிட்டு மொபைல் எடுத்து முத்துவுக்கு அழைத்து பள்ளிக்கு இன்று வரவேண்டாம் என விஷயத்தை கூறினான். மனதினுள் “என்னை தவிர மத்தவங்க எல்லாரையும் பத்தி கவலைப்படுவா.. விசாரிப்பா…” என திட்டிக்கொண்டே வண்டியில் ஏறினான்.

அதன் பின் நிரு எதுவும் கூறவில்லை. குழந்தைகள் பின்னே ஏறிக்கொள்ள அவளும் உடன் ஏற போக ஜீவன் திரும்பி பார்த்ததும் (முறைத்ததும்) அதை உணர்ந்தவள் அமைதியாக சென்று முன்னே அமர்ந்துகொண்டாள். வீட்டிற்கு வரும்வரை குழந்தைகளின் கேள்விகளுக்கு பதில் கூறி கொண்டும் அவர்களோடு பேசிக்கொண்டும் நிரு வர ஜீவன் இதில் எதிலும் கலந்துகொள்ளாமல் அமைதியாக வண்டியை செலுத்தினான். வண்டி விட்டு இறங்க சொன்னதும் ஜீவா “நான் மாட்டேன்.” என்றான்.

ஜீவன் விசாரிக்க “அப்புறம், நிரும்மா, ஜீவி இரண்டுபேரும் அவங்க வீட்டுக்கு போய்டுவாங்க. நான் இறங்கமாட்டேன். கொஞ்ச நேரம் இங்கேயே இருக்கலாம்ப்பா.” என்றான்.

ஜீவன் “அதெல்லாம் போகமாட்டாங்க. நம்மகூட தான் வராங்க. இரண்டுபேரும் இறங்கி வாங்க.” என

ஜீவா” நிஜமா?”

ஜீவி “அம்மா, உண்மையாவா? நாம ஜீவிப்பா கூட அவங்க வீட்டுக்கு தான் இப்போ போறோமா?” என

நிரு ஜீவனை பார்த்துவிட்டு ம்ம் என்றாள்.

இருவரும் துள்ளிக்குதித்து முன்னே ஓட  ஜீவனின் இந்த அமைதி நிருவின் மனதில் ஏதோ ஒரு பயமும் தொற்றிக்கொள்ள பின்னால் இருவரும் எதுவும் பேசாமல் நடந்தனர்.

 

வசந்த், வாணி இருவரும் சற்று நேரத்தில் வந்தவர்கள் குழந்தைகளிடம் பேசிவிட்டு “ஜீவன், அம்மா ஜீவி, ஜீவாவ பாக்கணும்னு சொன்னாங்க. கூட்டிட்டு போய்ட்டு ஈவ்னிங் கூட்டிட்டு வரேன்.” என

ஜீவா “ஆமாப்பா, ராஜீ பாட்டிவீட்டுக்கு போய்ட்டு வரோம். அங்க என் பிரண்ட்ஸ் எல்லாரும் பக்கத்துல இருக்காங்க.” என அவன் சரி என்றான்.

நிருவிடம் வந்த ஜீவி “அம்மா, நானு?” என பாவமாக முகத்தை வைத்துக்கொள்ள அவளும் புன்னகைத்துவிட்டு “சரி” என்றாள்.

வசந்த் வாணியிடம் “ஆ.. நீ அம்மாகிட்ட ஏதோ டவுட் கேக்கணும்னு சொன்னேல்ல.?” என

வாணி “நானா?” என வசந்த் முறைத்துவிட்டு “ஆமா நீதான். எங்க அம்மாவும் டீச்சர் தான்னு சொன்னதும் ஏதோ அவங்ககிட்ட டவுட் கேக்கணும்னு சொன்னியே.. நீயும் எங்களோடவே வாயேன்” என கண்ஜாடை காட்ட வாணியும் “ஆமாமா.. நிரு நானும் போய்ட்டு வந்துடறேன்.” என கிளம்ப கதவு வரை வந்த ஜீவன் “வசந்த், எங்களை தனியா விட்டுட்டு போகணும்னு நீ இவளோ ஸ்ட்ரைன் பண்ண வேண்டிய அவசியமே இல்லை. நானே நீ வந்ததும் அவங்கள கொஞ்சம் வெளில கூட்டிட்டு போன்னு சொல்லிருப்பேன்..” என்றதும்

வசந்த் அசடு வழிந்துவிட்டு “சரி.. நீ கொஞ்சம் கூச்சப்படுவேன்னு நினச்சேன். அதெல்லாம் உனக்கு எப்போதான் வரப்போகுதோ?…விடு விடு.. போடா போயி நேத்ராகிட்ட பேசு…இத்தனை வருஷம் கழிச்சு பேச வேண்டிய விஷயம் நிறையா இருக்கும்.”

ஜீவன் ஏதோ நினைத்தவன் “ம்ம்ம்.. பேசணும்.. கேட்டு புரிஞ்சுக்க வேண்டிய விஷயம் நிறையா இருக்கு.” என

வசந்த் “என்ன…?” என புரியாமல் வினவ

ஜீவன் “டேய், நான் சொல்ற வரைக்கும் நிரு தான் நித்ராங்கிற விஷயம் யாருக்கும் தெரியவேணாம்.”

“ஏன்?”

“நேத்து சொன்ன மாதிரி ஒரு நாள் முடிய இன்னும் கொஞ்ச நேரம் இருக்கு. அந்த நேரம் வரும் போது என் முடிவை நான் சொல்றேன் ….” வசந்த் அவனை கலவரமாக பார்க்க ஜீவன் புன்னகையுடன் ” இனி ஒண்ணாதான் இருக்கப்போறோம்..ஆனா எல்லாமே நான் சாய்ந்தரம் சொல்றேன். நீ கவலைபடமா போயிட்டு வாடா..” என அனுப்பிவைத்தான்.

 

வசந்த் வீட்டிற்கு வந்ததும், ஜீவன், ஜீவியை அழைத்துக்கொண்டு பக்கத்து வீட்டில் இருக்கும் இவனது நண்பர்களுடன் விளையாட சென்றுவிட்டான்.

வாணி “எனக்கு இங்க என்ன நடக்கிதுன்னே புரியாம கொழப்பமா இருக்கு. நிரு சொன்னது அண்ட் உங்க பிரண்ட் ஜீவன் சொன்னது எல்லாமே வெச்சு பாக்கும்போது இவங்க சந்திச்சாலே எல்லா பிரச்சனையும் தீந்துடும்னு நினச்சா, இங்க எல்லாமே மாறி இருக்கு. நிரு அவரை பாத்ததுல சந்தோஷப்பட்டாலும் ஒரு வார்த்தைகூட பேசமாட்டேங்கிறா. அதோட அங்கிருந்த கிளம்பவே குறியா இருக்கா. பதட்டமா இருக்கா.அவரு இவளோ கோபப்படுறாரு.. அப்பா சாமி கண்ணுலையே அடக்கிறாரு. ஆனா அவரும் பேசமாட்டேங்கிறாரு. பாத்தா இவங்க தான் சண்டை போட்ட மாதிரியும் இல்லை. மத்தவங்க பிரிச்சு வெச்ச மாதிரியும் இல்லை. என்ன தான் பிரச்சனை.. எப்படி இவங்க பிரிஞ்சாங்க”

 

வசந்த் 9 வருடம் முன்பு நடந்தவற்றை கூறினான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-32ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-32

32 – மீண்டும் வருவாயா?   இரண்டு நாள் முன்பு நேத்ராவிடம் அனைவரும் “நீ, ஜீவன் குழந்தைங்க எல்லாரும் இங்கேயே இருக்கலாம்ல மா?” நேத்ரா “ஆ..அது வேண்டாமே.. அப்போ அப்போ வர போக இருந்திட்டு பாத்துக்கலாம்.. ஒண்ணா வேண்டாம்னு தோணுது மாமா..”

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-28ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-28

28 – மீண்டும் வருவாயா? வீட்டிற்கு நேத்ரா விஜய் இருவரும் குழந்தைகளுடன் வந்ததும் ஆரத்தி எடுத்து வரவேற்று உள்ளே அழைத்து சென்றனர். அனைவரும் அவளிடம் விசாரிக்க என்ன வேணுமோ சொல்லு நாங்க செஞ்சு தரோம் நீ நல்லா ரெஸ்ட் எடுடா மா..

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-6ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-6

6 – மீண்டும் வருவாயா? அன்று அனைவரும் தத்தமது வேலைகளில் மூழ்கிவிட்டனர். நிருவிற்கு இன்னும் சிறுது வேலை இருக்க மாலை குழந்தைகளை அழைத்து வந்த பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என கோப்புகளை எடுத்துக்கொண்டே கிளம்பிவிட்டாள். நிருவை பார்த்ததும் ஜீவி, ஜீவா இருவரும் எப்போதும்