முபீன் MSK – கண்ணாமூச்சி ஆட்டம் – 20

                 20.கண்ணாமூச்சி

 

இவர்கள் இருவரும் இரவு கொஞ்சி கொள்வதை பார்த்த பானு வைஷுவை பார்க்கும் ஏரியாவில் உள்ள இளைஞர்களிடம் பற்ற வைத்தால். அதில் முக்கியமானவன் செல்வா. அந்த தெருவில் ரவுடி பொறுக்கி என பல பெயர்களால் அழைக்கபடுபவன். அவனுக்கும் வைஷுவின் மேல் ஒரு கண். சரியான ஆளிடம் போட்டு கொடுத்தால் பானு. அன்று இரவும் அது போலவே நடக்க பார்த்து கொண்டிருந்தவன் முத்தம் என்றும் கேட்டதும் கொதித்து போனான். ஏற்கனவே ராகுல் அந்த ஏரியாவில் சுற்றுவதும் , அவனின் டீமே அவர்களின் கிரிக்கெட் டீமின் எதிரி என்றும் அறிந்திருந்தான். மேற்கொண்டு இந்த விஷயமும் தெரிந்துவிட அவனுக்கு முடிவு கட்டுவது போல் யோசித்து கொண்டிருந்தவனை பார்த்த பானு..

“நீ என்ன ரொம்ப யோசிக்கிற அவன ரொம்பலாம் அடிச்சுராத சும்மா மிரட்டிட்டு மட்டும் விட்ரு. அவன் டெய்லி இங்க வரணும்”
அவன் கேள்வியாய் பார்க்க
“என்ன பாக்குற உனக்கு வைஷு எனக்கு அவன் என்ன டீலா நோ டீலா”
“ம்ம்ம் ஒத்துக்குரன், அவன் ஏற்கனவே எங்களுக்கு ரொம்ப தொள்ள குடுத்துருக்கான், வைஷு எனக்குன்னு சொல்றதால அவன மிரட்டிட்டு மட்டும் விடுறன்” என்று கூறிவிட்டு அவன் வீட்டிற்கு வழக்கம் போல் செல்லும் வழியில் தன் கூட்டாலிகளுடன் காத்திருந்தான்.

மணி ஒன்பது ஆகி இருக்க தன் பைக்கில் ராகுல் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது குறுக்கே வந்து நின்றான் செல்வம்.
அவனை கண்டவன் கூடவே அவன் நண்பர்களும் நிற்க பிரச்சனை என்று அறிந்தவன் பைக்கை விட்டு இறங்கி பாக்கெட்டில் கைவிட்டு தன் நண்பர்களுக்கு போனை வெளியே எடுகாமலேயே பட்டனை தட்டினான்.(நா அப்போ பட்டன் மொபைல் தான் வச்சிருந்தன் சொல்ல போனா 2010ல)
வெளியே காட்டிக்கொள்ளமல் சிரிப்புடன்

“என்ன செல்வம் இந்த பக்கம் , பாத்து ரொம்ப நாளாச்சு நமக்கு மேட்ச் அடுத்த மாசம் தானே வருது”
“ம்ம் பாத்து ரொம்ப நாலச்சுன்னு சொன்னில்ல அதான் பாத்துட்டு போலாம்னு வந்தன்”
“ஓ சரி சரி பாரு பாரு”
“இது மேட்ச் விஷயம் இல்ல விஷ்வா”
“என்ன செல்வா ஏதாச்சும் பிரச்சனையா”
“நல்ல வேல நீயா கேட்ட , ஆமாபா பிரச்சன தான் , நீ ஏதோ வைஷ்ணவிய லவ் பண்றதா கேள்வி பட்டன்” இதான் காரணமாக இருக்கும் என முன்னயே நினைத்தவன்
“அதான் நீயே சொல்றியே செல்வா கேள்வி தான் பட்டனு அப்புடிலாம் ஏதும் இல்லப்பா, அது சின்ன பொண்ணு அவங்க அப்பன் யாருன்னு உனக்கே தெரியும்ல தெரிஞ்சும் எப்புடி அதும் அந்த மூஞ்ச யாராச்சும் பாப்பாங்களா ” வேண்டுமென கூறியவன்

“ஓ அந்த மூஞ்சிய தானே நேத்து நீங்க கொஞ்சிட்டு இருந்திங்க” இதற்கு மேல் பேசி  பயனில்லை என்று தெரிந்ததும் தன் நண்பர்களை எதிர் பார்த்து கொண்டிருந்தான், மேலும் செல்வாவே பேச
“என்ன பேச்ச காணும் , ஆமா உனக்கு தான் மூஞ்ச புடிகலல வேர என்னப்பா பாத்து புடிச்சுரு…..” அவன் சொல்லி முடிப்பதற்குள் செல்வாவின் முகத்தில் ரத்தத்துடன் கீழே விழுந்தான் கையில் ராகுல் செங்கலுடன் நின்ரிருந்தான்..சட்டனே நடந்து விட அவன் கூடே இருந்தவர்கள் இருவர் செல்வத்தை தூக்க இருவர் ராகுளிடம் வந்தார்கள்…

இருவரும் முன்னேறி வர ராகுல் பின்னோக்கி இரண்டு அடி எடுத்து வைக்க ராகுலின் நண்பர்கள் பைக்கில் வந்து இறங்கினர். செல்வம் அழைத்து வந்தது. ஆறு பேர். ராகுலின் நண்பர்கள் வந்தவர்கள் பத்து பேர் இருக்க அவர்களை சுற்றி வளைத்தனர். சிறிது கை கலப்பு நடக்க அந்த இடமே சற்று கூச்சலும் சப்தமாகவே இருந்தது.  ஆறு பேரில் இரண்டு பேர் தப்பித்து ஓட பார்க்க ராகுலின் நண்பர்கள் நான்கு பேர் துரத்தி சென்றனர். மீதி இருந்தவர்கள் இங்கே அடித்து கொண்டிருக்க செல்வத்திடம் வந்த ராகுல் “ஆமாடா அவள தான் லவ் பண்றன் டெய்லி நைட்டு கொஞ்சுரன்  அவள தான் கல்யாணமும் பண்ணுவன் என்னடா பண்ணுவ” சொல்லி கொண்டே

” என் ஆள பத்தி என்கிட்டயே தப்பா பேசுற ம்ம் எத பாத்து புடிச்சுருக்குன்னு கேக்குற கேட்ட இந்த வாய” வாயில் இரண்டு குத்துவிட செல்வம் பாக்கெட்டில் வைத்திருந்த தன் பட்டன் கத்தியை எடுத்து ராகுல் கையில் போட்டான். நல்ல வேலையாக ராகுல் சுதாரித்து விலகியதால் காயம் அழுத்தி படாமல் சீவி கொண்டு சென்றது. இருந்தாலும் அது முழங்கையில் இருந்து மணிக்கட்டு வரை கீறி ரத்தம் வர அவசரமாக துடைத்தவனை செல்வம் வேகமாக தள்ளி விட்டு ஓடினான் ராகுல் கீழே விழ அங்கிருந்த  இருந்த கல் ராகுலின் தலையை பதம் பார்த்தது…

அனைவரும் ஓடிவிட முடித்துவிட்டு வந்த நண்பர்கள் ராகுலை பார்த்ததும் தூக்கி கொண்டு சென்றனர். அவனோ
“டேய் எனக்கு ஒன்னும் இல்லடா சொன்னா கேளுங்க நா நடந்தே வரேன்” அவனை இறக்கி விட தடுமாறி விழ போனவனை தூக்கியவர்கள் “ஒழுங்கா வா ” என்று கூறியதும் அமைதியாக வந்தான்.
மருத்தவனையில் சேர்த்து அவனுக்கு தலையில் கல் பலமாக பட்டதால் எட்டு தையல் போட்டனர். கையில் பெரியதாக ஒரு கட்டுடன் வெளியே வந்தவனை அனைவரும் பார்க்க …
“நீங்க நினைக்குற மாறி பெருசு இல்லடா இவங்க பெருசா கட்டு போட்டு விட்ருகாணுங்க, டேய் அப்பறம் தியாகு அண்ணாக்கு கால் பண்ணு பேசனும்”

தியாகு என்கிற தியாகராஜன் வைஷு இருக்கும் தெருவில் வளர்ந்து வரும் அரசியல்வாதி வர போகும் கவுன்சிலர் எலெக்சனில் அவன் தான் வெற்றி பெறுவான் என்பது உறுதி. அவனுக்கு ராகுலை சிறு வயதில் இருந்தே தெரியும். மேலும் கிரிக்கெட் தோரணமெண்ட் அனைத்திலும் தியாகுவே அழைப்பான் ராகுல். அதனால் அவன் முகம் சில ஏரியாகளில் பிரபலம். மேற்கொண்டு சில பல கட்சி வேலைகளுக்கும் ராகுலின் அப்பாவும் அவனும் உதவி செய்துள்ளமையால் ராகுல் எது கேட்டாலும் இல்லை என்று சொல்ல மாட்டான். போன் போட்டு கொடுத்ததும் விஷயத்தை கூறியவன். மாலை நேரில் வருவதாகவும் கூறினான். ஆனால் எக்கரணத்திலும் வைஷுவின் பெயர் வெளியே வரக்கூடாது என்று கூறிவிட்டான்.

பிரச்சனை அனைத்தும் இரு தரப்பினரும் பேசி முடித்தனர். வைஷுவின் பெயர் வெளியே தெரியக்கூடாது என்று ராகுல் கூறியதால் பிரச்சனையை வேறு மாறி பேசி முடித்தனர். செல்வாவும் பெண்ணிற்காக சண்டை போட்டு அடி வாங்கியதை வெளியே சொல்லாமல் அப்படியே மறைத்து விட்டான். அதற்கே இரண்டு நாள் பள்ளி விடுமுறை முடிய, திங்கள்கிழமை அவனை எதிர்பார்த்தவள் அவன் வராமல் போக சரி வேலையாக இருக்கும் என்று விட்டுவிட்டால். அதே போல் அடுத்தடுத்து வந்த நாட்களிலும் நடக்க ஒரு வாரம் அவன் வரவில்லை. தனக்கு அடிபட்டது தெரிந்தால் அவள் துடித்து போவாள் என்று தெரிந்தே அவன் வரவில்லை காரணமும் சொல்லி அனுப்பவில்லை.

ஆனால் வைஷு அந்த ஒரு வாரத்தில் நடந்ததை அவள் கீழ் வீட்டு அண்ணன் வினோதிடம் கேட்டு தெரிந்து கொண்டாள். கேட்டு முதலில் செல்வா மேல் கோபமுற்றவள் யார் தங்களை சொல்லிருக்க வேண்டும் என்ற நினைவை விட அவனை காண வேண்டும் என்பதிலேயே உறுதியாக இருந்தால். முயற்சி ஏதும் பலணிக்காமல் போக இரவில் தலையணையை நனைத்து கொண்டே தூங்கினால். இந்த விஷயத்தை எதிர்பாராத பானு எங்கே தன் பெயர் வந்துவிடுமோ என்று அவளும் தற்காலிமாக வெளியில் செல்வதை தவிர்த்தால். பின் பத்து நாட்கள் கழித்து ராகுல் வந்தான். இடது கையில் கட்டோடு வலது கை நான்கு விரலில் ரத்தகட்டு பேண்டோடு வந்தான். செல்வாவை முகத்தில் குத்தியபோது அவன் பல்லில் பட்டு ரத்த கட்டானது.

அன்று வழக்கத்திற்கு மாறாக பிள்ளைகள் கூட்டம் குறைவாக இருக்க உள்ளே ஆண்டியிடம் சென்றான். வைஷுவையும் காணவில்லை. ஆண்ட்டி அவனிடம் காரணம் கேட்டதற்கு பைக்கில் இருந்து விழுந்ததாக கூறினான் வீட்டிலும் அதே பொய் தான். சிறிது நல விசாரிப்பிற்கு பின் சென்றவனை. “மேல வேலலாம் முடிஞ்சுது மேல போயிருப்பா” என்று கூறியதும் மேலே சென்றான். அன்று அருணும் வராமல் போக வைஷுவும் வரவில்லை என்று நினைத்து கடுப்புடன் மேல் அறைக்கு சென்றான். உள்ளே அவன் வந்தவுடன் கதவுகளை மூடிக்கொண்டு வைஷு உள்ளே வந்தாள்.

மாடியில் காய்ந்த துணிகளை எடுக்க வந்தவள் அவன் வருவதை பார்த்தும் கீழே வர அவன் மேலே வருவது தெரிந்ததும் உள்ளே சென்று நின்று கொண்டாள்.
கதவு மூடும் சத்தத்தில் திரும்பியவன் திரும்பிய வேகத்தில் அவனை கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்தால். அவள் வேகத்தில் சற்று தடுமாறி ஒரடி நகர்ந்து செவுற்றில் சாய்ந்து நின்றான். அவள் இப்படி அழுவால் என்று தெரிந்தே மறைத்தவன் அவன் எவ்ளோ கூறியும் கேட்காமல்  அவன் மார்பில் சாய்ந்து சட்டையை நனைத்தாள்.  சிறிது நேரம் பேசாமல் இருந்தவன் பத்து நிமிடம் ஆகியும் விசும்பல் சத்தம் மட்டும் கேட்க

“உனக்கு சும்மாவே ஃபால்ஸ் பொத்துகிட்டு ஊத்தும் இப்போ காரணம் வேர இருக்கு நீச்சல் அடிச்சு தான் கீழே போனும் போலயே” என்று பேச்சை மாற்ற
அவன் நெஞ்சிலே கிள்ளியவள்… ஏதும் பேசாமல் அப்புடியே இருந்தால்
“போதும் விடு தள்ளி நில்லு” அவன் கூறியதும் இறுக்கி கொண்டு சிறிது நேரம் விட்டவள் , அவள் கண்களை துடைதான். அவள் ஏதும் பேசாமல் அவன் கைகளையே பார்த்து  கொண்டிருந்தாள் போன அழுகையை திரும்பவும் ஆரம்பிக்க
“எனக்கு ஒன்னும் இல்லடி அவனுக கட்ட பெருசா போட்டுருக்காணுக”  அவன் பேசி கொண்டே இருக்க வைஷு ஏதும் பேசாமல் அவனேயே பார்த்தால்
“ஏதாச்சும் பேசுடி நீ இப்புடி இருக்குறது தான் வலிக்குது” அவன் கூறியதும் கண்ணத்தில் மாறி மாறி அடித்தவள்
“வலிக்குதா வலிக்குதா , பத்து நிமிஷம் பேசலனு வலிக்குதுல பத்து நாளா பைத்தியகாரி மாரி சுத்திட்டு இருக்கன் எனக்கு எப்புடி வலிச்சிருக்கும் ம்ம் ” சொல்லிக்கொண்டே அடியை கூட்ட கூடவே அழவும் அப்போது தான் அவளை கவனித்தான்  மீன் கண்கள் இரண்டும் சிவந்து கண்ணுக்கு கீழே கருவளையம் விழுந்து சற்று இழைத்து போய் காணுவும் ராகுல் அவளை கட்டி கொண்டான்.

சிறிது நேரம் ஏதும் பேசவில்லை. அறை முழுவதும் நிசப்தம். சிறிது நேரத்திற்கு பின் விட்டவனை விடாமல் இருக்க
“போதும் விடு இன்னைக்கு ரொம்ப ஓவர் ஆச்சு போதும் விடுடி, எனக்கு வலிக்குது”
வலி என்றதும் சட்டன்று விட்டவள்
“எங்க வலிக்குது” அவள் கேட்கவும் கையை காட்டவும் கைகளில் முத்தமிட்டாள். ராகுல் இப்போது கண்ணத்தை காட்டி
“இங்கயும் வலிக்குது”
சிறு புன்னைகையுடன் இரண்டு கண்ணகளிலும் முத்தமிட கடைசியாக உதட்டை காட்ட, உதட்டிடம் நேராக வந்தவள் அவன் கண்கள் மூடி காத்திருக்க நறுக்கென்று கிள்ளி விட அலறி கொண்டே பார்த்தவன் “கொன்னுடுவன்” என்று வைஷு சைகையால் சொல்லவும் சிரித்து அமைதியாகி…இருவரும் சோபாவில் அமரந்தனர்…

“என்னாச்சு எப்புடி அடிபட்டது” அவள் தெரியாது போல் கேட்கவும் அவளுக்கு தெரியவில்ல என்ற நிம்மதியுடன் வைஷு மடியில் படுத்துகொண்டு..
“அது வந்து செல்லம் பைக்ல போய்ட்டு இருந்தனா நல்ல தூக்கம் வேர அப்புடியே போன பாரு குறுக்க நாய் வந்துருச்சு அதான் கீழே விழுந்துட்டன்” வைஷு எதுவும் பேசாமல் கூர்மையாக அவனை பார்த்துவிட்டு “கொஞ்சம் எந்திரி”
“ஏன் செல்லம்”
“எங்க எங்க அடி படல சொல்லு” அவன் வலது கையையும் காலையும் காட்ட சொன்னவுடன் அவன்  தொடையில் விடாமல் கிள்ள வலி தாங்கமல் அலரியவன் வாயை பொற்றி
“பொய் சொல்றியா பொய் சொல்றியா உண்மையா சொல்லு” அவன் அதையே கூற அடுத்த காலில் கிள்ள வலியில் அவனுக்கு கண்களில் நீரே வந்து விட விட்டால்.
“எனக்கு எல்லாம் தெரியும்” ராகுல் அவளையே பார்க்க
“என்ன பாக்குற எனக்கு எல்லாம் தெரியும்”
அவன் தலைகுனிந்து கொண்டான்.
“எல்லாம் என்னால தானே” என்று லேசாக விசும்ப ஆரம்பிக்க அவளை தோளோடு  அணைத்தவன்..
“அதலாம் ஒன்னு இல்ல விடு”

அவனை விடுத்து கண்களை துடைத்து கொண்டு குறும்பு குரலில்
“என்ன லவ் பண்றனு சொன்னிங்கலாம்”
அவனிடம் பதிலில்லை
“டெய்லி கொஞ்சுவேனு சொன்னிங்கலாம்”
இப்போதும் அமைதி
“என்ன தான் கல்யாணம் பண்ணிப்பானு வேர சொன்னியாமே, என்கிட்ட தவிர ஊர் புல்லா சொல்லுடா எண்ட மட்டும் வாய திறந்துராத” ராகுல் திரும்பி ஏதும் பேசாமல் வைஷு கண்ணத்தில் முத்தமிட்டு அமைதியாக இருக்க
“பெரிய ஹீரோ டயலாக்லாம் விடுறாரு, நீயே என்ன கல்யாணம் பண்ணலானாலும் நா உன் கழுத்துல தாலி கட்டி தூக்கிட்டு போயிருவன் புரியுதா ” அவன் கண்ணத்தை ஆட்டி கொண்டே சொல்ல ராகுல் பேசாமல் சிரித்து கொண்டே இருக்க , கடுப்பானவள்

“நா எவ்ளோ ரொமான்ஸா பேசுற, எந்த பொன்னாவது இப்புடி பேசியிருக்காலடா ம்ம் சொல்லு” என்று மெதுவாக கொட்ட அதற்கே அலரியவனை பார்க்க வைஷு கையில் ரத்தம்
“ஐயோ என்னடா ” என அவன் தலையை பார்க்க அதில் தையலில் இருந்து ரத்தம் வரவும் கண்களில் நீர் வர ஆர்ம்பிக்க
“அய்யோ ஒண்ணும் இல்லடி சும்மா மூணு தையல் அவ்ளோ தான்” இந்த முறை எவ்ளோ கூறியும் சமாதானம் அடையாமல் அவனை கட்டி கொண்டு அழ அன்று முழுவதும் அழுதே தீர்த்து அப்புடியே உறங்கியும் போனாள்….

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: