Advertisements

முபீன் MSK – கண்ணாமூச்சி ஆட்டம் – 19

 19.கண்ணாமூச்சி

 

கதவினை தட்டி கொண்டு உள்ளே வந்தவர் அவர்களை பார்க்க இருவரும் அவசரமாக தள்ளி அமர்ந்து “வாம்மா ரா….. விஷ்வா அண்ணா இவங்க என்  அம்மா, அம்மா இந்த அண்ணா தான் விஷ்வா “
“ஹலோ ஆண்ட்டி” ஏதும் கூறாமல் இருவரையும் பார்த்தவர்…ராகுலிடம்
“ஆண்ட்டி சொன்னாங்க ரெண்டு பேரும் எப்ப பாரு சண்ட போடுவிங்கன்னு, என்ன சண்டன்னு இப்போ தானே தெரியுது, அப்பறம் ரொம்ப நன்றி தம்பி சரியான time ல பாத்து இங்க சேத்தத்துக்கு பில் அமோண்ட் எவ்வளவுனு சொல்லுப்பா நாங்க குடுத்துறோம்”
“அதலாம் வேணா ஆண்ட்டி நா பாத்துக்குரன் , நீங்க என்ன சாப்ட்ரிங்க”
அவர் வைஷுவை பார்க்க
“என்ன வானரம் சைலண்டா இருக்கு” ராகுல் சிரிக்க
“அம்மா…..”
“உனக்காக நா எல்லாத்தையும் கொண்டு வந்தா நீ ஏற்கனவே முடிச்சுட்ட போல, சரி நீ போய் இந்த ட்ரெஸ் மாத்திட்டு வா கிளம்பலாம் ” அவள் குளியலறையை பார்த்து ராகுலை பார்க்க லேசாக கைகளை தூக்கியவளை
“கொன்றுவேன்” என்று சைகையால் சொல்லவும் வேண்டா வெறுப்புடன் நடந்து சென்றால்…

இவை அனைத்தையும் ஓர கண்ணால் பார்த்துக்கொண்டிருந்தவர் ஏதும் பேசாமல் இருக்க
“என்ன எதும் சொல்லாம இருக்காங்க ஒரு வேள டைரக்டா வைஷு அப்பாட்ட போட்டு விட பிளான் பன்ராங்களோ இருக்கலாம்  , விஷ்வா இந்த தீபாவளி நமக்கு தான் இருக்கும் போலயே”
என்று மனதினுள் ராகுல் நினைத்து கொண்டிருக்க
“நீ இவ்ளோ யோசிக்குற அளவுக்குலாம் நா வில்லி கிடையாது தம்பி” அவன் நினைத்ததை கூறியதும் ஆச்சர்யமாய் பார்க்க ….
“நம்ப கொஞ்சம் வெளில போய் பேசலாமா”
“சரி ஆண்ட்டி , கேன்டீன் போய்ட்டு வரலாம்”
“ஆமா ஆமா வாங்க கேன்டீன் போலாம்” கூறிக்கொண்டே வைஷு வர அவளை முறைக்க
“அம்மா எனக்கு தல வலியா இருக்கு நீங்க போய்ட்டு வாங்க நா ரெஸ்ட் எடுகுரன்”
அவள் அப்படியே மாற்றி கூறியதை கேட்டதும் அவரே சிரித்து விட்டு இருவரும் கேன்டீன் சென்றனர். இரண்டு டீ வாங்கிவிட்டு அங்குள்ள பெஞ்சில் அமர்ந்து ஏதும் பேசாமல் அமைதியாக இருந்தனர்.

“வைஷு சின்ன பொண்ணு ராகுல்”
ராகுல் என்றதும் சட்டென்று திரும்பி பார்க்க
“ஏன் ஷாக் அவ தான் புக்ல பெட்ல ரூம்ல லாம் கிறுக்கி வச்சிருகாலே, இது வெறும் இந்த வயசில வர அட்டராக்சன் அவளுக்கு ஏற்கனவே அவர் தங்கச்சி பையனுக்கு பேசியாச்சு , தேவ இல்லாம இனி அவல பாக்குற பேசுற வேலைலாம் வேணாம்பா, எனக்கு எந்த பிரச்சினையும் இல்ல என் பொண்ணுக்கு பிடிச்சா எனக்கும் ok தான் பட் நா முடிவு எடுக்க முடியதுல” சரசரவென  கூறிவிட்டு அவர் சென்றுவிட்டார். இது அவன் நினைத்த பேச்சு என்பதால் அதிர்ச்சி ஆகாமல் இருந்தான். ஆனால் அவளை விட்டு விலக வேண்டும் என்று மட்டும் முடிவு செய்தான். தன்னால் முடியாது என்று தெரிந்தும் இந்த முடிவினை எடுத்தான்.

ராகுல் சென்று அவளை பார்க்க மஞ்சள் நிற சுடிதாரில் வண்ணமயமாய் தோன்றினாள்.
தன்னவன் ரசிக்கிறான் என்ற திருப்திலேயே அவனை பார்த்து கண் அடிக்க ராகுல் திரும்பி கொண்டு பேக்கிங் வேலையை தொடர்ந்தான். அவர்கள் காரில் ஏறி செல்ல போகும் போது வழியனுப்ப வந்தவன் பக்கத்திலே அவள் நின்று கொண்டாள். காருக்காக நின்ற நேரத்தில் அவள் அம்மா திரும்பும் போது அவனை கிள்ள ஆரம்பித்தாள். ராகுல் கண்டுகொள்ளாமல் இருக்க மேலும் கிள்ள இப்போது  கோவம் வர அவனும் கிள்ள இருவரும் அடித்து கொள்ள ஆரம்பித்தனர். அவள் அம்மா திரும்பும் போது அமைதியாக நின்றனர். மீண்டும் திரும்ப மறுரூபடியும் அடித்து கொண்டனர். இவர்கள் விளையாட்டை ரோட்டில் சென்ற அனைவரும் பார்த்து கொண்டு செல்ல அவள் அம்மாவோ போன் பேசி கொண்டு நின்ரிந்தார்.

கார் வந்ததும் “வா வைஷு ” என அழைக்க அவ்வளவு நேரம் இருந்த சந்தோசம் மறைந்து அவனை திரும்பி ஏக்கத்தோடு பார்க்க அவன் கண் அசைவில்
“போ நாளைக்கு பாதுக்கலாம்” அனுப்ப வைஷு அவன் கைகளை பிடித்துக்கொண்டே காரில் ஏற சிறிது கண் கலங்க ஆரம்பித்து விட்டாள்.  கார் மறையும் வரையில் நின்று பார்த்து கொண்டிருந்தவன் அவள் இதற்கே அழுகிறாள். அவள் அம்மா சொன்னதை எப்புடி செய்வது என்று தெரியாமல் தினரினான்.

அவள் சென்றதும் முதல் முதலில் ஒரு வெறுமையை உணர்ந்தான். அடுத்த வந்த விடுமுறை நாட்கள் வேகமாக ஓட பள்ளி திறந்து டியூஷன் செல்லும் நாளும் வந்தது.
ராகுல் எவ்ளோ முயற்சி செய்து முடியாமல் அவளை பார்க்க சென்றான். காதலை சொல்லும் வரையில் தான் பெண்களுக்கு போராட்டம் சொல்லிவிட்டால் அதன் பிறகு ஆண்களுக்கே போராட்டம்.

டியூஷன் வந்தவன் எல்லாரிடமும் சாதாரணமாக பேசிவிட்டு தன் இடத்தில் அமர்ந்தான். வைஷு எதிரில் அவனையே பார்க்க இவன் கண்ண்டுகொள்ளாமல் தன் வேலையை தொடர்ந்தான். அப்படியே விட்டுவிட்டால் அவள் வைஷு இல்லையே.
முதலில் அவனை கூப்பிடுவாள். திரும்ப வில்லை என்றால் அடுத்து பேனா வரும் அடுத்து அடுத்து பென்சில் ஸ்கேல் ரப்பர் என அவள் வைத்திருக்கும் அனைத்தும் அவன் மீது கிடக்கும். அவன் எதற்கும் அசையாமல் இருந்தால் இறுதி தன் பிரம்மாஸ்திரத்தை எடுப்பாள். (உலகத்துல இருக்குற எல்லா பொண்ணுகளும் யூஸ் பண்ற கடசி வெப்பன் அதானே 🙄🙄)
   சிறிது நேரம் ஏதும் வராமல் இருக்க திரும்பி பார்த்தால் அவள் கண்களில் இருந்து பாலாறும் காவிரியும் ஓடும்..

அதை பார்க்க முடியாமல் இவன் செல்ல இப்போது திரும்பி கொள்ளும் முறை அவளுடையது ராகுல் அவனிடம் இருக்கும் அவள் பொருள்களை எல்லாம் இப்படியே திருப்பி கொடுத்துவிடுவான். இவர்கள் சண்டை வழக்கம் போல் என ஆண்ட்டி ஏதும் கண்டுகொள்ளாமல் போய்விடுவார். ஆனால் இதை பார்த்து கொண்டிருக்கும் இரு கண்களோ எரிமலையாய் எரிந்து கொண்டிருக்கும்.
“போகும் போது அனைச்சிட்டு தானே போனோம் திரும்ப எப்புடி பத்திக்கிச்சு” என்று பானு உள்ளேயே குமுறி கொண்டே அங்கே நடப்பதை பார்த்து கொண்டிருப்பாள்.

சிறிது நேரம் கழித்து அவனுடைய கடைசி ஆயுதத்தை உபயோகிப்பான். அதுதான் 2 சிலேட் குச்சிகளை கொடுத்தால். ஈ ஈ ஈ என்று இளித்து கொண்டு வாங்கி கொள்வாள். அவனோ தலையில் அடித்து கொள்ளலாமா என்னும் அளவிற்க்கு அவளை பார்ப்பான். பின் அவளும் சமாதானம் ஆகி திரும்பி ஏதேதோ பேசி கொண்டிருப்பாள். அவன் அவளை கண்ணத்தில் கைவைத்து கொண்டு தாவி தாவி ஓடும் மீன்களையும் சிரித்தாள் கன்னத்தில் விழும் சிறு குழியையும் ரசித்து  கொண்டிருப்பான். டியூசன் முடிந்து வீட்டுக்கு போகும் போது எத்தனை சிலேட் குச்சிகளை கொடுத்தாலும் சீக்கிரம் விட மாட்டாள். சரி என்று அவள் கூடவே கிளம்பினாலும் சோக கீதங்களை ஆரம்பித்து விடுவாள்….

“அய்யோ ஆரம்பிச்சுட்டியா டெய்லி இதே வேலையா சும்மா எப்போ பாரு அழுத்துட்டே இருக்குறது. இதுக்காகவே தனியா தண்ணி ஏதும் குடிக்குரியா” அவள் கண்களை தொடைத்து கொண்டே கேட்க
“உனக்கு கொஞ்சம் கூட ஃபீலிங்க்ஸ் இல்லல என்ன ஜென்மமோ நானா இப்புடி கெஞ்சுறது உனக்கு கிண்டலா இருக்குல்ல”
“அப்புடி இல்லடி டெய்லி பாக்குறோம், நைட்டு தூங்கிட்டு eve பாக்க போறோம் அப்றம் ஏன் இவ்ளோ ஃபீல்”
“ஆன் நீ ஈஸியா சொல்ற எனக்குள்ள தெரியும் எவ்ளோ கஷ்டமா இருக்குனு, சரி எனக்கு ஒரு கிஸ் குடு”
“எது …போடி ஒழுங்கா வீட்டுக்கு “
“ஆமா ஆமா சார் எனக்குலாம் எப்புடி தருவிங்க அந்த பானு கேட்டா மட்டும் …” அவள் ஆரம்பிக்க …
“எம்மா போதும் நீ ஆரம்பிக்காத ” என்று கூறி அவள் கையை திருப்பி உள்ளங்கையில் தன் முத்திரிரையை பதித்தான்.
“என்னடா இது … இங்க இல்லேன்னா இங்க குடு” என்று கூறி கண்ணத்தையும் உதட்டையும் காட்ட
“அடியே உன் வயசுக்கு உன்ன லவ் பண்றனு சொன்னாலே என்னய ஓடவிட்டு அடிப்பாங்காடி இதுல இதுலாம் தெரிஞ்சா உரிச்சு உப்புகண்டம் போற்றுவனுக”
“நா வேணும்னா நீ நிறையா வாங்கணும் தம்பி , வைஷுனா சும்மாவா ஏரியா பியூட்டி”
இல்லாத காலரை தூக்கி விட சொன்னவளை பார்த்து சிரித்து தலையில் செல்லமாக ஒரு கொட்டு வைத்து அனுப்புவான்.

டியூஷன் இருந்து அவள் வீட்டிற்கு செல்லும் பாதையில் ஓரிரு வீடுகளே இருப்பதாலும் நடுவில் ஒரு பொட்ட காடு இருப்பதால் இவர்களின் கூத்து யாருக்கும் தெரிவதில்லை…ஒரு ஜோடி கண்களை தவிர….

Advertisements

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: