Advertisements

முபீன் MSK – கண்ணாமூச்சி ஆட்டம் – 18

               18..கண்ணாமூச்சி 

 

கதவை தட்டும் ஓசை கேட்டு ராகுல் விழித்து வெளியே பார்க்க ரம்யா காஃபி கப்புடன் நின்றுரிந்தாள். உள்ளே குளியலறையில் கார்த்திக் குளித்து கொண்டிருந்தான். ரம்யா ஏதும் பேசாமல் கப்பினை வைத்து விட்டு சென்றால்..
“சாரிமா என்னால கண்ட்ரோல் பன்ன முடில அதான் “
“ஓ எட்டு வருசமா எப்புடி இருந்திங்களாம் , அண்ணி அவ்ளோ சொல்லியே கேட்கல நான் சொன்னா கேட்டுருவிங்களா “
தலை குனிந்து ஏதும் பேசாமல் இருக்க
“காஃபி குடிங்க தல வலி குறையும் “
“எனக்கு என்னைக்காச்சும் இப்புடி கொண்டு வந்து குடுத்துருக்கியாடி ” சொல்லி கொண்டே கார்த்தி வர அவன் முடிப்பதற்குள் அவன் தலையை உரசி கொண்டு பூச்சாடி செவுற்றில் மோதி உடைந்தது….

“குடிச்சுட்டு வர வேலலாம் வச்சிட்டு இருந்த அடுத்து உன் தலைக்கு தான் வரும் “
“அடியே நா பெட் காஃபி சொன்னேன்டி”
“அதானே பாத்தன்” சொல்லிவிட்டு உள்ளே  சென்றால் அதை பார்த்து சிரித்த ராகுலை பார்த்தவன்
“டேய் பாத்தியா இப்புடி தான் என் பொழப்பு ஓடிட்டு இருக்கு , பாத்தல்ல கை ஓடஞ்சும் எவ்ளோ கரட் ஆ எரியுறானு”
“நீ தானே மச்சி சொன்ன ரம்யா ரொம்ப அடக்கமான பொண்ணு எதித்து கூட பேச மாட்டா , அமைதியான பொண்ணுன்னு”
” டேய் கல்யாணத்துக்கு அப்புறம் தான்டா அவங்க ஒரிஜினல் பக்கமே தெரியுது. நீ சொன்ன மாறி தாண்டா இப்போ நா இருக்கேன் அவ ஆப்போசிட்டா இருக்கா போய் குளி என்ன கருமத்த குடிச்சியோ
சரியான நாத்தம்”
“சரி எப்புடி மச்சா ரம்யாவ தள்ளி விட்ட”
“அதுவா அவ கால உடைக்க தான் மச்சி பிளான் பட் மிஸ் ஆயிடுச்சு ” சொல்லிவிட்டு திரும்ப அங்கு ரம்யா ருத்ர தாண்டவமாய் பார்த்து கொண்டிருந்தாள்.
“என்ஜாய் மச்சா”  கார்த்தி காதில் சொல்லி விட்டு அவன் குளிக்க சென்றான்.
“ஓ சார் பிளான் போட்டுலாம் செய்ரிங்களா”
“இல்லம்மா சும்மா விளையாட்டுக்கு”
” சரி வாங்க நா கொஞ்சம் விளையாடுறன்”

ராகுல் திரும்பி வரும்போது கார்த்தி தலையில் துண்டுடன் கலைந்த முடியோடு  கன்னம் வீங்கிய நிலையில் அமர்ந்திருந்தான். “இப்போ சந்தோசமா, உன்னய கூப்ட்டு வந்ததுக்கு உன்னால என்ன செய்ய முடியுமோ அத செஞ்சிட்ட”
“அது இல்ல மச்சான்”
“ஒரு ஆணியும் வேணா மூடிட்டு கிளம்பு”
15  நிமிடத்தில் கிளம்பி வந்தவன் சாப்பிடும் போது ” மச்சா சாம்பார்ல உப்பு கம்மியா இருக்குல்ல” காரணம் புரிந்தவன்
“டேய் இன்னைக்கு கோட்டா வாங்கியாச்சு இனிம என்ன ஏமாத்த முடியாது ” ராகுல் காதில் ஓதி விட்டு
“நீ வேர சாம்பார் செமையா இருக்கு உப்பு எல்லாம் கரட்டா இருக்கு”  கூறியதும் ரம்யா முறைக்க ராகுல் அடக்க முடியாமல் சிரித்து கொண்டே ” ஆமா மச்சா நாலாம் உன்ன ஏதும் பண்ண முடியாது நீயே பண்ணிக்கிட்ட
சொல்லிவிட்டு கை கழுவ சென்றான். காரணம் தெரியாமல் கார்த்தி விழித்து ரம்யா பார்க்க முறைத்து கொண்டே வந்து
“சாம்பார் எப்புடி இருக்கு “
“செமையா இருக்கு பேபிமா”
“நா இன்னிக்கு சாம்பாரே வைக்கல”
“வைக்கல”
“இல்ல”
“அப்போ அது”
“அது சென்னா”
அவன் ராகுலை பார்க்க சூப்பர் சிம்பிள் காட்டி விட்டு அவன் ஓடிவிட்டான்.

காரில் வந்து அமர்ந்தவன்,,
“3 வருஷம் நிம்மதியா ஒரு நாளைக்கு ஒரு தடவ தான் வாங்கிட்டு இருந்தன், வந்த முதல் நாளே, 2 தடவ வாங்க வச்சிட்ட”
“ஏதோ என்னால முடிஞ்சது, சரி வா முறைக்காத நைட்டு சரக்கு வாங்கி தரேன்”
“எப்பா ராசா நீ எனக்கு டைவர்ஸ் வாங்கி தரமா இருக்க மாட்ட போலயே, உன் வீட்டுல விட்டதுக்கு அப்றம் நீ யாரோ நா யாரோ”
“என்ன மச்சான் உன்ன விட்டா எனக்கு யார் இருக்கா”  வராத கண்ணீரை துடைக்க
“இல்ல வேணாம் செட் ஆகல, அதான் நம்ப அடிமை அருண் இருக்கே அவன வச்சி time பாஸ் பண்ணிக்கோ” பேசிக்கொண்டே வீட்டிற்கு வர ராகுல் அம்மா  லட்சுமி அவனுக்கு ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து சென்றார்
கார்த்தி “ஏதோ நாட்ட காப்பத்துன மாறி தான் பில்டப் எம்மா ஓரமா நில்லுமா லக்ககேஜ் எடுக்கணும்”
“அவன் கெடக்குறான் நீ சொல்லுப்பா எப்புடி இருக்க நேர நேரத்துக்கு சாப்டரியா தூங்குறியா”
கார்த்தி ” ஆமா அவன் சாப்டு தூங்க தான் துபாய் போனா பாருங்க”
“ஏலேய் என்ன உனக்கு உன் பொண்டாட்டி இல்லன்னு வாய் நீழுதோ”
“ஆமா அவ பெரிய இவ அவள பாத்து நாங்க பயபுடுறோம் போங்கமா அவளலாம் ரைட்ல புடிச்சு லெப்ட்ல ஒரே அடி ஆள் குளோஸ்”
“ஓ அப்புடியா… “கூறிக்கொண்டே ரம்யா உள்ளே வர அம்மாவை பார்க்க அதே சூப்பர் சிம்பிளை காட்டினார்.
“அம்மாவும் புள்ளையும் இதுல மட்டும் ஒத்துமையா இருங்க”

“அவன விடு , நம்ம ஜோசியர பாத்தான்பா இன்னும் 6 மாசத்துல கல்யாணம் நடக்குலனா மூணு வருஷம் இழுத்துருமா. என் ராசால இதுல ஏதாச்சும் ஒரு பொண்ண பாருப்பா அம்மா பேசி முடிச்சுரன்” அவரை பார்க்க அவனுக்கே பாவமாக இருந்தது. அப்பா சென்ற பிறகு யார் துணை இல்லாமல் அவரே அவனை ஆளாக்கினார்.
“எனக்கு ஒன்னும் இல்லம்மா ஒனக்கு யார பிடிச்சுற்கோ அந்த பொன்னையே கல்யாணம் பண்ணிக்குரன்” அவன் வேறு சொல்வான் என்று எதிர்பார்க்க இப்புடி கூறியதும் சிரிப்பை வரவழைத்து
“ரொம்ப சந்தோசம்பா நீ போய் ரெஸ்ட் எடு சமச்சிட்டு ஒன்ன கூப்டரன்” அவன் சரி என்று சொல்லிவிட்டு அவன் அறைக்கு செல்ல லட்சுமி கார்த்தியிடம் சென்றார்.

அங்கே அவனை மாஃப்பை வைத்து அடித்த கொண்டிருந்தவளை நிறுத்த..
“தெய்வமே நீயா என்ன காப்பதுன”
“டேய் அந்த அருண் பயல போன் போட்டு வர சொல்லு மதியம் இங்க இருக்கணும்” சொல்லிவிட்டு ரம்யாவிடம் சைகையால் ஸ்டார்ட் என்று கூறிவிட்டு செல்ல
“நீயெல்லாம் தாயா பேயி , உன் மருமக இத விட மோசமா உன் புள்ளைய கொடும படுத்தல என் பேரு கார்த்தி இல்ல”

உள்ளே தன் அறைக்கு சென்றவன் கதவை மூடிக்கொண்டு அறை முழுவதும் பார்த்தான்
5 வருடமும் எந்த மாற்றமும் இல்லாமல் வைத்தது வைத்த படி இருந்தது. ஒரு முறை சண்டை வந்ததில் இருந்து லட்சுமி அவன் அறையை சுத்தம் செய்வதோடு சரி மத்தபடி எந்த மாற்றமும் பண்ணுவதில்லை. அதை நினைத்து சிரித்தவன். தன் கட்டிலில் போய் விழுந்தான். அருகில் பார்க்க  செவுற்றில் ராகுல் மீனு எழுதி அருகில் ஒரு குழந்தை படமும் இருக்க அதை தொட்டு பார்த்தான்.

“டேய் நீ எங்க தூங்குவ லெஃப்ட்ஆ ரைட்ஆ “
“ம்ம் லெஃப்ட் சைடு “
“நோ இனிம அது என் இடம் நீ ரைட் சைடு தான் தூங்கனும் சரியா “
“ஓ சரி எங்க நீ கொஞ்சம் படுத்து காட்டு”
வைஷு செய்துகாட்டியவள் செவுற்றில் பென்சிலை வைத்து ராகுல் மீனு என்று எழுதி “பாப்பாகு செண்டர்ல சரியா” வரைந்து கொண்டே கேட்க

“செல்லம் கொஞ்சம் இரு நானு படுத்து காட்டுறன்” அவள் சிறிது தள்ளி படுக்க அவன் அவளை ஒட்டி கொண்டு படுத்து
“எது இப்புடியா” கேட்டுக்கொண்டே மேலும் நெருக்க அவள் முடியாமல் அவன் புறம் திரும்பி அவன் மேலேயே வர காரணம் புரிந்தவள்
“நீ எதுக்கு பிளான் பண்றனு தெறி்து ஒழுங்கா தள்ளி போ”
“பாப்பான்னு எழுதுனா மட்டும் போதுமா”
“போதும் போதும் நீ தள்ளி படு “
“செல்லம்மா இன்னைக்கு செமையா இருக்க”
“நா எப்பயும் அப்புடி தான் நீ தள்ளு”
“இந்த சுடி உன்ன விட நல்லாருக்கு சோ”
“வாசல்ல இருக்குற செருப்பு கூட நல்லா இருக்குல்ல சோ.” அவன் மேலும் நெருங்க அவன்  இடுப்பில் நன்கு கிள்ள அலறிக்கொண்டு தள்ளி படுத்தான்.
“ராட்சஷி ஏன்டி இப்புடி கிள்ளுற”
“அது அதுக்கு time இருக்கு, மத்த பசங்க மாறி நீ இருந்தா உனக்கு பாவம் பாத்து எதுனா செய்யலாம், சார் தான்……..”
“புரியுது”
“புரியுதுல சோ கொஞ்ச நாளைக்கு கிஸ் ஒன்லி. வேர எதுனா எதிர்ப்பாத்து பக்கத்துல வந்த ” ராகுல் அவளை நெருங்கி நூல் இடைவெளியில் அவள் கண்களை பார்த்து
“வந்தா…..”  திடீரென அவன் வரவும் வைஷு கண்களை மூடி பேச வெறும் காற்று மட்டும் தான் வந்தது… மூடிய கண்களில் முத்தம் இட்டவன்
“பக்கத்துல வந்தாலே ஆப் ஆகிடுற நீ என்னய கண்ட்ரோல் பண்றியா செல்லம்”
“பொறுக்கி பொறுக்கி இவ்ளோ பக்கத்துல வராதனு எத்தன தடவ சொல்லிருக்கே தள்ளி போடா போ ” கூறினால் தவிர எதுவும் செய்யவில்லை..ராகுல் மேலும் நெருங்க
“டேய் வேணா போய்டு”
“………….”
“ப்ளீஸ்”
“ம்ம்ம் ம்ம்ஹும்….என்ன ரொம்ப காய போட்டால இப்போ நீயா வந்து மாடிக்கிட்ட”
அவன் நெருங்கி வர வர …அருகில் கையை துழாவ அங்கு இருந்த அவன் பாடி ஸ்ப்ரே எடுத்து அவன் மேல் அடித்தவள் அந்த இடத்தை விட்டு வந்தாள்..கதவிடம் சென்று
“வரட்டா யாருக்கிட்ட வைஷுடா….போ போ “
சொல்லிவிட்டு அவள் ஓடினாள்…..

Advertisements

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: