ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-5


5 – மீண்டும் வருவாயா?

ஜீவன் “நித்து நீ எப்போ திரும்பி வருவ? ஒருவேளை நீ கூட இருந்து வளத்திருந்தா ஜீவா இப்போ இருக்கறமாதிரி தான் அம்மா அம்மானு இருந்திருப்பான்ல..நம்ம பையனுக்கு அம்மா ஏக்கம் வந்திடிச்சா? இல்ல ஜீவிதாவோட அம்மா அவளோ பாசமா இருக்கறதால கிளோஸ இருக்கானானு எனக்கு சொல்ல தெரில. என்ன தான் அவனை நான் பாத்து பாத்து வளத்தினாலும் எனக்கு ஒரு குறை இருந்திட்டே இருக்கு. அது நீ தான். நீ நம்ம பையன வளக்கணும்னு. உன்கிட்ட அவன் வளரணும் தைரியமா, நம்பிக்கையா, தெளிவான ஒரு முடிவு எடுக்கறவனா, ஜாலியானவனா, பாசமானவனா எல்லாமே குடுக்க உன்னால தான் முடியும்னு எனக்கு தோணுது. இதெல்லாம் எனக்கு திரும்ப நீதான் குடுக்கணும். இப்போ எல்லாம் நான் மனசளவுல ரொம்ப சோர்ந்து போயிடுறேன். ஆனா ஏதோ நீ என் பக்கத்துல இருக்கேங்கிற எண்ணம் இப்போ எல்லாம் அதிகமா வருது. அதனால தான் கொஞ்சம் நார்மலா இருக்கேன். நித்து மிஸ் யூ..” என நிலவை பார்த்து பேசிக்கொண்டிருக்க எதிர் பிளாக்கில் தெரிந்த பெண்ணின் உருவம். இவனுக்கு மீண்டும் இவனது நித்துவை நியாபகப்படுத்தியது. தலையை உசுப்பி கொண்டு உள்ளே சென்று உறங்க முயற்சி செய்தான்.

 

அவனது நித்துவோ தன் உறக்கத்தை தொலைத்து விட்டு இருளில் சஞ்சலத்தில் திளைத்தாள். ஏனோ இன்று அவனது எண்ணங்கள், நினைவுகள் அவளை தொடர்ந்துகொண்டே இருந்தது போல ஒரு உணர்வு. கழுத்தில் அவன் அணிவித்த செயினை இறுக பற்றியவள் “விஜய், நீங்க எங்க இருக்கீங்க? நீங்க சந்தோசமா எந்த குறையும் இல்லாம தான் இருக்கீங்களா? இல்லைனு என் மனசு சொல்லுது…ஏன் இன்னைக்கு எனக்கு இப்டி பதறுதோ தெரில. ஒருவேளை நான் திரும்ப சென்னை வந்துட்டதால அப்டி தோணுதா? நீங்க பக்கத்துல இருக்கறமாதிரி..ஆனா திரும்ப நான் உங்க வாழ்க்கைல வரது எந்த அளவுக்கு சரிவரும்னு தெரில. ப்ளீஸ் விஜய், எனக்கு உங்கள பாக்கணும்னு தோணுது ஆனா உங்க வாழ்க்கைல மறுபடியும் வரமாட்டேன். இத்தனை வருஷம் நான் இல்லாம தானே இருந்திங்க. இனிமேலும் அப்டியே இருந்திடுங்க. நான் உங்ககிட்ட வந்துட்டா அடுத்து என்னை போகவிடமாட்டீங்க எனக்கு தெரியும். ஆனா மறுபடியும் ஏதாவது உங்களுக்கோ நம்ம குழந்தைக்கோ பிரச்னைன்னா என்னால தாங்கிக்க முடியாது என்றவள் மாலை தன் தோழி வாணியிடம் பேசியதை எண்ணி பார்த்தாள்.

 

பார்க்கில் விளையாடிக்கொண்டிருந்த போது வந்த வாணியை கண்ட நிரு என்கிற நேத்ரா “ஹேய்.. வாணி வா வா. ட்ரைனிங் எல்லாம் எப்படி போச்சு. எப்படி இருக்க?”

வாணி “எல்லாமே நல்லபடியா போச்சு.. எங்க என்னோட குட்டி ராணி? ஜீவி..” என அழைக்க அவளை கண்டதும் சென்று மறைந்துகொண்டவளை சென்று வாணி கண்டுபுடிக்க அங்கே ஜீவி ஜீவா இருவரும் சிரித்துக்கொண்டே “நாங்க இங்க இருக்கோம்” என வெளியே வந்தனர்.

வாணியிடம் ஜீவா பற்றி கூறிவிட்டு ஜீவிதா சிறிது அவளுடன் விளையாடிவிட்டு குழந்தைகள் நகர்ந்ததும் வாணி நேத்ராவை பார்க்க அவளின் கவனமோ ஜீவாவிடமே இருந்தது. அவர்களை கவனித்துவிட்டு “நிரு, என்னாச்சு உனக்கு, நீ குழந்தைங்க எல்லார்கிட்டயும் பாசமா இருப்ப ஓகே. ஆனா ஜீவாகிட்ட ஒரு ஸ்பெஷல் இருக்கற மாதிரி வித்தியாசமா  தெரியுதே.” என

நிரு “ம்ம்.. அப்டியா என்ன வித்தியாசம்?”

வாணி “அது நீ ஜீவிதாவ பாக்கும்போது வர அக்கறை,பாசம், இது என் குழந்தைங்கிற எண்ணம் அந்த மாதிரி ஒரு அக்கறை கவனம் ஜீவா மேலையும் நீ காட்டுற மாதிரி இருக்கு. நான் வந்த இந்த ஒரு மணி நேரத்துல உன் கண்ணு ஜீவாகிட்ட தான் இருக்கு. அவனும் உன்கிட்ட ரொம்ப கிளோஸ இருக்கான். அதான் கேக்கறேன்”

நிரு “தெரில வாணி.. எனக்கு ஜீவாவ பாக்கும்போது ஜீவியோட அண்ணா ஞாபகம் வருது. அவனுக்கும் இதே வயசு தானே இருக்கும். அவன் என்கூட இருந்திருந்தா இப்டி என்கூட பாசமா இருந்திருப்பான்ல. இப்போ என் பையனுக்கு என் ஞாபகமாவது இருக்குமா?” என்றெண்ண அவளுக்கு கண்கள் பணித்தது.

வாணி அவளை சமாதானப்படுத்த எண்ண விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகள் அவளிடம் வந்தனர். நிரு தலை குனிந்து இருப்பதை கண்ட ஜீவா, ஜீவி விசாரிக்க அவள் மௌனமாக இருக்க ஜீவி “அம்மா, அண்ணா ஞாபகம் வந்திடிச்சாமா? என விசாரித்தாள்.” ஆமாம் என்று தலையசைக்க ஜீவா அவர்களிடம் யாரென்று கேட்க ஜீவி “எனக்கு முன்னாடி மம்மிக்கு ஒரு பாய் பேபி பொறந்துச்சாம். ஆனா அம்மா அவங்களை தொலைச்சிட்டாங்களாம். அம்மா நினச்சு நினச்சு அழுவாங்க.”

வாணி “அவனுக்கும் உன் வயசு தான் இருக்கும். அதான் அவளுக்கு ஞாபகம் வந்திடுச்சு. பொறந்ததுல இருந்து பாக்கவே இல்லையே. என் பையன் என்கிட்ட பாசமா இருப்பானானு கேட்டு அழுகுறா. நீ நிரு அம்மாகிட்ட அழவேண்டாம்னு சொல்றியா?” என கேட்க

ஜீவா “நிரு மா, அதான் நான் வந்துட்டேன்ல நீங்க ஏன் இன்னும் அழுகறிங்க?” என்றதும் நிரு சட்டென்று அவனை பார்க்க ஜீவா பொறுமையாக அவளது கண்ணீரை துடைத்துவிட்டு “வாணி ஆன்ட்டி சொன்னாங்க, என் வயசு தான் இருக்கும். என்னை பாத்து தான் உங்களுக்கு உங்க பையன் நியாபகம் வந்ததுன்னு. அதான் உங்க பையனுக்கு பதிலா பத்திரமா நான் உங்கள, ஜீவிய பாத்துக்கறேன். நீங்க பீல் பண்ணாதீங்க. எனக்கு கஷ்டமா இருக்கு.

நானும் அம்மாவ பாத்ததேயில்லை. ஆனா எனக்கு எங்க அம்மாவை ரொம்ப பிடிக்கும். அப்பா, அம்மாவை பத்தி நிறையா சொல்லிருக்காங்க. அதெல்லாம் நான் உங்ககிட்ட பாத்தமாதிரியே இருக்கும். எனக்கு அதனாலயே உங்கள ரொம்ப பிடிக்கும். உங்ககூட இருந்தா எனக்கு அம்மா ஞாபகமே வராது தெரியுமா? ஆனா உங்களுக்கு என் கூட இருந்தாலும் உங்களுக்கு உங்க பையன் ஞாபகம் வருதா? அவன் தான் வேணுமா?” என பாவமாக கேட்க

நிரு “இல்லைடா கண்ணா அப்டி இல்லை. நீயும் எனக்கு ஜீவி மாதிரி தான்.. உன்னையும் எனக்கு அந்தளவுக்கு பிடிச்சதால தான் அப்டி அவன் ஞாபகம் வந்திருச்சு. இனிமேல் நான் இப்டி அழமாட்டேன்…” என்றதும் ஜீவா “தேங்க் யூ மா.” என கட்டிக்கொண்டான். ஜீவியும் உடன் வந்து “நானு, நானு” என கட்டிக்கொண்டாள்.]

 

இதை எண்ணி பார்த்தவள் “ஆனா வாணிகிட்ட கூட நான் சொல்லல எனக்கு ஜீவா நம்ம குழந்தையை நியாபகப்படுத்தறத விட உங்கள எனக்கு அவன் அதிகம் ஞாபகப்படுத்திறான். நம்ம குழந்தையை பாத்துக்க நீங்க இருக்கீங்க, குடும்பத்துல அவளோ பேர் இருப்பாங்க. ஆனா உங்களை நினைச்சாதான் எனக்கு கவலையா இருக்கு.”

என்றெண்ணி கொண்டே இருக்க ஜீவி அழைக்கும் சத்தம் கேட்க உள்ளே சென்றவள் உறக்கத்தில் “மா, அப்பா பொம்மை வேணும்.” என்றாள். அதை எடுத்து கொடுத்ததும் அதையும் பிடித்துக்கொண்டு இவளையும் கட்டிக்கொண்டு உறங்கிவிட்டாள்.

இது விஜய் குழந்தைக்கு என வாங்கிய பொம்மை என நிரு அவளுக்கு குடுத்தது.. ஜீவிக்கு அதுதான் எப்போதும் தூங்கும் போது வேண்டும். கோபம், வருத்தம், என எது வந்தாலும் சில நேரம் நிருவிடம் சண்டை போட்டாலும் “இரு இரு அப்பாகிட்ட சொல்றேன்.. என அந்த பொம்மையை எடுத்து புகார் செய்வாள்.” ஜீவியை அவளது தந்தை பாசம் கிடைக்காமல் செய்துவிட்டேனோ என்ற கவலையும் குடிகொண்டது. அவளை நீங்க பாத்தா எவ்ளோ சந்தோசப்படுவீங்க. ஜீவிய உங்ககிட்ட சேக்கணும், நீங்க அவளை எப்படி எல்லாம் வளக்கணும்னு ஆசைப்பட்டீங்களோ அப்டி நான் அவளை வளக்கிறேன். ஆனா அத நீங்களும் கூட இருந்து பாக்கணும்னு எனக்கு ஆசையா இருக்கு. உங்ககிட்ட கிடைக்கற பாதுகாப்பை அவ ரொம்ப மிஸ் பண்ணுவால?”

கணவன் என்ன செய்கிறானோ என்ற கவலை, மகனை காணமுடியவில்லையே என்ற ஏக்கம், மகளை தந்தையிடம் இருந்து பிரித்து வைத்துவிட்டேனோ என்ற குற்ற உணர்ச்சி என அவள் மனப்போராட்டத்தில் இருக்க அவளது சிந்தையில் வலம் வந்த மூவரும் உறக்கத்தோடு உலவிக்கொண்டிருந்தனர்.

 

அவளின் மனப்போராட்டத்திற்கு விடிவு பிறக்குமா இதில் ஏதேனும் ஒரு பிரச்னையாவது மாறுமா என்ற கேள்விக்கு வரப்போகும் விடியலே பதில் சொல்லட்டும்.

Tags: ,

6 thoughts on “ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-5”

 1. deepa ganesh says:

  Eppa serthu vaikka poringa

  1. hasha sri says:

   Seekiramave sis.. next oru 5 episodes la🤗

 2. deepa ganesh says:

  Super and centiment novel I like very much

  1. hasha sri says:

   Thanks sis🤗

 3. super ud sis
  pawam pillagalai serthudungapaaaaaaaa

  1. hasha sri says:

   Sure sis🤗 seekiramave meet paniduvanga…
   Thanks sis

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.