Advertisements

முபீன் MSK – கண்ணாமூச்சி ஆட்டம் – 17

 கண்ணாமூச்சி – 17

 

ராகுல் கண் விழிக்கும் போது மணி 6 என்று காட்டியது. அவன் வைஷுவை பார்க்க அவள் ராகுலை கட்டிக்கொண்டு வலது புறமாக அவன் மார்பில் தூங்கி கொண்டிருந்தாள். அது தனி அறை என்பதாலும் இரவே அவன் நர்ஸிடம் தான் பார்த்து கொள்வதாகவும் கூறியதால் யாரும் வரவில்லை. அவளை பார்க்க பெட்டில் இடம் இருந்தும் அவனை ஓட்டுக்கொண்டே படுத்திருந்தாள். வேண்டுமென்றே அவளை தள்ளி போட திரும்பவும் நன்றாக கட்டி கொண்டாள். தலையில் இருந்தா கட்டில் சிறிது சரி செய்துவிட்டு அவள் முகத்தில் இருந்த முடியினை  காதோரம் தள்ளி விட்டு அவளையே பார்த்து கொண்டிருந்தான்.

எத்தனை காதலர்களுக்கு கிடைக்கும் இந்த வாய்ப்பு தன்னை முழுமையாக நேசிக்கும் ஒருத்தி காதல் சொன்ன முதல் நாளிலேயே முத்தம் இரவு முழுக்க சேர்ந்து தூங்கும் பாக்கியம். அவன் மனம் களிப்புற்றாலும் அவள் சிறிய பெண் என்ற எண்ணமே அவளை தள்ளி வைக்க எண்ணியது. சிறிது நேரம் கழித்து அவளை விலக்க அவள் விடாமல் இழுக்க

“செல்லம்மா time ஆச்சு உங்க அம்மா வந்துருவாங்க விடு நா கெளம்பனும்”
“அதெல்லாம் போக வேணா எங்க அம்மா வரட்டும் பாக்கட்டும் அப்புடியே எங்க வீட்டுல  தல தீபாவளி கொண்டாட்டிட்டு மதியம் உங்க வீட்டுக்கு விருந்துக்கு போலாம் இப்போ தூங்கு “
“ஆஹாங் வாடி விருந்து தானே வப்பாங்க வா , என்ன ஆனாலும் வாய் மட்டும் அடங்குதா”
“ப்ளீஸ் இன்னும் கொஞ்ச நேரம் “
“இதுவே ஓவர் ஏதோ அடி பட்டுருக்கேன்னு இருக்கேன் இல்லனா” கூற வந்தவன் அவளை பார்க்க கையில் பழ தட்டினை எடுத்து கொண்டு
“இல்லன்னா…… ” அவன் சுதாரித்து
“இல்லன்னா ஒன்னு இல்லையே… நீ தூங்கு நா போய் ப்ரெஷ் ஆயிட்டு வந்துரன்” சொல்லிவிட்டு சிட்டாக பறந்தான்.

“ச்ச எவ்ளோ சொன்னாலும் புத்தி வராது ஒரு பொண்ணு எவ்ளோ தான் இறங்கி போவா ஓவர் சீனு , இவனலாம் அலைய விட்டுருக்கணும் நம்பலா போய் சொன்னது தான் தப்பு, ஆனா ஊனா சின்ன பொண்ணு சின்ன பொண்ணுனு சொல்றது , ஏன் நாங்களாம் பெரிய பொண்ணா ஆக மாட்டமா ரொம்ப பன்ரான் ” அவனை பலவாறு மனதில் திட்டி தீர்த்தவள் அவன் வருவதை பார்த்ததும்  பேசாமல் இருந்தால்

“மீனு என்ன சாப்பிட வேணும் டீ யா காஃபி வேணுமா “
“டேய் நா ப்ரெஷ் கூட பண்ணல போய் அத வாங்கிட்டு வா அப்புறம் காஃபி ஸ்டாங்கா குட்டே பிஸ்கட் பெருசு ரெண்டு “
” ம்ம் ம்ம் என் நேரம் இதலாம்”சொல்லி கொண்டே போனவன் 20 நிமிடத்தில் வந்தான் ,
“ம்ம்ம் இந்தா போய்ட்டு ப்ரெஷ் பண்ணிட்டு வா “வைஷு அவனை பார்க்க
“என்ன…”
“கால் வலிக்குது நீயே தூக்கிட்டு போயேன்”
கைகளை குழந்தை போல நீட்ட வேண்டுமென்றே
“எதுக்கு தூக்கணும் நல்லா தானே இருக்க நடந்து போ “
“அப்போ வரும்போது மட்டும் தூக்கிட்டு வந்த”
“அது வேற இது வேற”
“இப்போ முடியுமா முடியாதா” வேறு வழியில்லாமல் தூக்க
“நல்ல பையன் இது மாறி தான் நா சொல்றதுலாம் கேக்கணும் சோ ஸ்வீட் “
“எனக்கு தேவ தான் , பள்ளு விளக்குரிங்களா இல்ல அதும் நா பண்ணி விடனுமா”
“நல்ல ஐடியா நீயே பண்ணி விடு ” அவன் முறைக்க
“கொஞ்சம் ஓவரா போரமோ சரி சரி நா பாதுக்குரன் நீ வெளியே போ கூப்டதும் வந்து தூக்கிட்டு போ சரியா “
“சரியான இம்சடி நீ எப்புடி தான் உங்க அம்மாலாம் சமாலிக்குரங்களோ”
“இனிம அதுலாம் உன் டெபார்ட்மெண்ட் சோ ஒழுங்கா ட்ரைனிங் எடுத்துக்கோ”
“அடியே வந்தனு வச்சிக்கோ அவ்ளோதான்”

வைஷு ராகுலை கூப்பிட அவனும் வந்து தூக்கி சென்றான். போகும் வழியில் அவன் கழுத்தில் கட்டி கொண்டாள். அவன் முடியை களைத்து கொண்டும் பின் சரி செய்தும் விளையாடினாள்
“கொஞ்ச நேரம் சும்மா இருக்கியாடி” அவன் சொல்ல சொல்ல வந்தவள் அவன் கண்ணத்தில் முத்தத்தினை கொடுத்தால்
“இப்போ ஏன்டி என்ன கிஸ் பண்ண என் பெர்மிஷன் இல்லாம ம்ம் “
“நீ தான் எண்ட கேக்கணும் நா கேக்க வேண்டிய அவசியம் இல்ல புரிஞ்சுதா”
அவனும் சிரித்து கொண்டே கட்டிலில் அமர வைத்து காஃபி ஊற்றி அவளுக்கு நீட்ட
“உனக்கு “
“எனக்கு காஃபி பிடிக்காது நீ குடி “
“இல்ல அப்போ எனக்கும் வேணா”
ஒரு பெருமூச்சை விட்டவன்
“குழந்தைகள கூட சமளிச்சுராளம் போலடி”
கூறி நொந்தவன் தனக்கும் ஊற்றி கொண்டு “இப்போ குடி இந்தா “
“நீ 1ஸ்ட் குடி “
இரண்டு வாய் குடிக்க அவன் கப்பை பிடுங்கி அதில் குடித்தால்
“என்னமோ புதுசா கல்யாணம் ஆனவங்க மாரில நீ பண்ணிட்டு இருக்க நீ “
“லவ் சொன்னாலே கல்யாணம் மாறி தானே எனக்கு முதல் கல்யாணம் அப்புடி தான் பண்ணுவன் சார்க்கு பழகிருக்கும்  50ஆ 60ஆ யாருக்கு தெரியும்”

சொல்லிக்கொண்டே குடிக்க உதட்டில் சூடு பட்டு கைகளினால் மூடிக்கொண்டு வேறு பக்கம் திரும்பி தண்ணீர் குடித்து திரும்பினாள் அவன் வைஷுவையே பார்க்க “டேய் என்ன சைட் அடிக்குரியா சரி அடிச்சுக்கோ ” அவள் வேலையை தொடர்ந்தால். குடித்த நீரின் திவலைகள் அவள் தொண்டையில் இருந்து கழுத்துக்கு செல்ல அவன் பார்வை அறிந்தவள் ஷாலினை எடுத்து போட்டு கொண்டாள்.
“சார் நா சின்ன பொண்ணு தெரியும்ல”
“இப்போ மட்டும் சின்ன பொண்ணா”
“ஓ.. உனக்கு இப்போ மட்டும் நா பெரிய பொண்ணா ம்ம் விவரம் தான் “
“இவ்ளோ பேசுதே இந்த வாய” அவளை நெருங்க
“அது அங்க தான் இருக்கும் நீ தள்ளி போ”
“என்ன தள்ளி போ நைட்டு தூங்கும் போது தெரியலயோ” அவன் கூறியதில் வெக்கமுற்று குனிந்து கொண்டாள்.

“என்னடி வெக்கமலாம் படுற” சிரிக்க
“மாடு ஒரு பொன்னுட்ட எப்புடி பேசனும்னு தெரில நைட்டு எவ்ளவோ நடக்கும் அதலாம் சொல்லி காட்டுவியா எரும” பேசி கொண்டிருந்தவள் திடீரென யோசிக்க
“டேய் என் ட்ரெஸ் யாரு சேன்ச் பண்ணா”
ராகுல் சிரித்து கொண்டே கீழே பார்க்க
“என்னடா சொல்லு யாரு பண்ணா”
“நான் தான் ” கூறிவிட்டு அவள் போல முகத்தை மூட அவள் சுருட்டி கொண்டு போர்வையை போற்றி கொண்டால்
“இதுக்கு மேல போத்திட்டு என்ன பிரயோஜனம் சொல்லு “
“இல்ல நீ பொய் சொல்ற நா நம்ப மாட்டான்”
“ஓ அப்புடியா… அது என்ன செல்லம் உனக்கு தோல் பட்டைல மேலயும் கீழேயும்
சேந்த மாறி மச்சம் இருக்கு , அப்பறம் இடுப்புல ” கூற வந்தவனை வாயை பொற்றி “பாத்துட்டனா சைலண்டா விட்டுரனும் அது என்ன சொல்லி காட்டுறது”

“நிஜமாவே நீ தான் மாத்துணியா”
“இப்புடி தெரிஞ்சா நானே பண்ணிருக்கலாம் போலயே , நர்ஸ கூப்பிட்டது தப்போ” சொல்லி முடிப்பதற்குள் தலையிலும் கையிலும் மாறி அடித்தும் கிள்ளியும் கொண்டிருக்க கதவு தட்டப்படும் ஓசை கேட்டு திரும்பினர். அங்கே அவர் அம்மா கைகளை கட்டிக்கொண்டு நின்றுரிந்தார்…..

Advertisements

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: