Advertisements

முபீன் MSK – கண்ணாமூச்சி ஆட்டம் – 16

கண்ணாமூச்சி – 16

 

காலை பதினோரு மணி வெயில் தன் கதிர்களை வேகமாக பரப்பிக்கொண்டிருக்க
ஆடி மாதத்தில் அடிக்கும் காற்று அனைவர் காதுகளிகலும் ரீங்காரமிட்டு சென்றது.அந்த பெரிய இடத்தில் ஒரு மூலையில் ஒரு கூட்டம் “ரின்க்கா ரின்க்கா ரோசஸ்” சுத்திக்கொண்டிருக்க மறுபுறம் “கோ கோ ” விளையாட்டில் தீவிரமாக விளையாடி கொண்டிருந்தனர். அதன் அருகில் இருந்த மர இடுக்குனில் இருந்து வெளியே வந்தாள் வைஷு.

“ஹே வைஷு நில்லுடி ஐஸ்லாம் கீழ போது வேணுமா வேணாமா” கோபி கத்திகொண்டே வர கையில் வைத்திருந்த முழு சிலேட் குச்சியையும் வாயில் திணித்து கொண்டு அடுத்து ஐஸ் வேட்டையில் இறங்கினாள்
“மெதுவா தின்னு சனியனே அடச்சுட்டு செத்துர போர நாளைக்கு வேர சனிக்கிழமை ” எதையும் காதில் வாங்காமல் தன் கடமையை பார்த்து கொண்டிருந்தாள்.
“ஹே காபி” சொல்லிக்கொண்டே வந்தான் நம் ராகுல்
“சொல்லுங்க அண்ணா , ஐஸ் வேணுமா” அவன் வைஷுவை பார்க்க
“எனக்கு வேணாம் இதோ இந்த கருப்பட்டி கிட்ட குடு நல்லா தின்பா”
“டேய் வெள்ளபன்னி என்ன கருப்பட்டினு சொல்லாதனு சொலிருக்கன்ல”
“ஆமா இவ பெரிய ஐஸ்வர்யா ராய், கருப்பு கலர்ல வெள்ள புள்ளி வச்ச மாறி இருந்துட்டு பேச்ச பாரு போடி கருப்பட்டி”
“போடா தடிமாடு  இவரு மட்டும் அரவிந்த் சாமி சாக்கடைல விழுந்த வெள்ளபன்னி மாறி இருந்துட்டு என்னய சொல்றான்”
பள்ளி மணி அடிக்க
“உன்ன அப்பறம் பாத்துக்குரன் , இந்தா இது எல்லாத்தையும் காபி பன்னிரு காபி சரியா நாளைகி வந்து வாங்கிக்குற ,  கருப்பட்டி வரட்டா” அவனை வாய்க்குள்ளே சபித்தவள்

“ஏன்டி கோபி அவன் சொன்ன நீ செய்வியா அதுக்கு தான் அவன் உன்ன காபி காபினு கூப்டறான் உனக்கு வெக்கமா இல்ல ஐஞ்சாவது படிச்சா பெரிய ஆளா நாமளும் அடுத்த வருஷம் போவோம்”
“ஹே லூசு வாய மூடு அவங்க நம்மல விட வயசுல பெரியவங்க அதும் இல்லாம நமக்கும் மேல ஒரு ஆள் இருந்தா நமக்கு தானே சேப்டி”
“ஆமா நாலாவது படிக்குற நமக்கு என்ன சேப்டி , அவனும் அவன் மூஞ்சியும் பாத்தாலே புடிக்கல இனிமே என்ன கருப்பட்டினு சொல்லட்டும் நாளைக்கு வருவான்ல வரட்டும் “
“ஹே ஏதும் பண்ணி தொலச்சிராத நமக்கு தான் ஆப்பு ஹெவியா வரும்”
“அதலாம் நான் பாத்துக்குரன்” கூறி கொண்டே சார்ப்னாரில் உள்ள பிளேடினை எடுத்தாள்..
அடுத்த நாள்

“எங்கடி உன் அண்ணா வெள்ளபன்னி காணும் “
“வருவாங்க , நீ என்ன அதிசயமா கேக்குற “
“இதுக்கு தான் ” என்று பிளேடினை நீட்ட
“ஐயோ என்னடி இது “
“ம்ம் உங்க அண்ணனுக்கு கிப்ட்”
“வைஷு விளையாடத இதலாம் ஓவர்”
“ஹே என்னடி ஏதோ கொல பண்ற ரேஞ்சுக்கு பேசுற சும்மா பயமுறுத்த தான் “
“என்னவோ பன்னு என்ன மாட்டிவிற்றாத”
“பயந்தாகோலி கூடலாம் பிரண்ட்ஷிப் வச்சது என் தப்பு தான்டி, அதோ அங்க வரான் பாரு உங்க அண்ணா”
“அண்ணா எப்புடி இருக்கீங்க சாப்டிங்களா”
“என்னா கருப்பட்டி மரியாதலாம் பயங்கரமா இருக்கு என்ன விஷயம்”
“அதலாம் எப்பயும் இருக்குறது தான் “
இவள் அப்புடி இல்லையே என நினைத்தவன் தனக்கு ஏதோ செய்ய காத்திருக்கிறாள் என அறிந்து அருணை அடிக்க வைத்திருந்த  கலர் சாயத்தை எடுத்து கைகளில் மறைத்தான்
“ஏண்டி கருப்பி என்னையவா கவுக்க பாக்குற வா உன்ன இன்னிக்கு சிகப்பியா மாத்துரன் ” மனதினுள் நினைத்து கொண்டே நெருங்க அவளும் அவன் கையில் கீறுவதற்காக கொண்டு வந்திருந்ததை மறைத்துக்கொண்டு வர

“ஏ உன்ன கூப்டரங்க பாரு ” என்று கூறி அவள் திரும்ப இவன் சாயத்தை மேலே பூசினான் அது அவள் கண்ணில் பட கண்களை தேய்துகொண்டே அவனை தடுக்க கையை ஆட்ட அவள் கையில் இருந்த பிளேடு அவன் புருவத்தில் சேர்த்து கன்னத்திலும் ஒரு கோடு போட்டது அவன் வலியில் கத்த காரணம் தெரியாமல் முழித்து பார்க்க அவன் முகம் முழுவதும் இரத்ததுடன் தரையில் உருண்டு கொண்டிருந்தான். பின் அருகில் இருந்த ஆசிரியர் சத்தம் கேட்டு அவனை தூக்கி கொண்டு செல்ல அவனை பார்த்த படியே அசையாமல் இருந்தாள்.  ( அது பெரிய கத சொன்னா அது length ஆ போகும் அதான் கிளைமேக்ஸ் மட்டும் சொன்னன். எனக்கும் அவளுக்கும் அப்போல இருந்தே ஆகாது சோ கொஞ்சம் கற்பனை பண்ணி அட்ஜஸ்ட் பண்ணிகோங்க  .சாரி.)

“கருப்பட்டி நீயா ” என்று வாய்விட்டு சிரிக்க , அவன் கைகளில் கிள்ள
“யாருடா கருப்பட்டி இப்போ நீ தான் என்ன விட கலர் கம்மி”
“சரி அதுக்கும் லவ்வுக்கும் என்ன சம்பந்தம் நா அன்னிக்கே உங்க வீட்டுல போட்டுவிட்டு என் கண்ணு முன்னாடியே உன்னய ஓட விட்டு அடிச்சங்களே உங்க அம்மா ” என்று மறுபடியும் சிரிக்க இந்த முறை நன்றாக கிள்ளியவள்…
“ஆள பாரு சின்ன புள்ளைய மாட்டிவிட்டு அடிவாங்க வச்சிட்டு பெரும வேர “
“விடு விடு , அப்புடி பாத்தாலும் உனக்கு என்மேல கோவம் தானே வரணும் “
அவன் சட்டை பட்டனில் விரல் வைத்து சுற்றிக்கொண்டே
“அது நீ எப்பயும் சிரிச்சிட்டே இருப்பியா அப்போ கட்டு போட்டு கண்ணம்லாம் வீங்கி போய் வந்தியா அதான் அதும் இல்லாம அன்னைக்கு நீ நொம்ப அழுத்துட்டியா எனக்கே பாவமா போச்சு …இல்லன்னா ஒன்ன விட்டுருப்பனா நா வாங்குன அடிக்கு டபுள் ஆ உனக்கு குடுத்துருப்பன் தெரியும்ல… அப்பவே என் கிளாஸ் பொண்ணுங்கலாம் அந்த அண்ணா எவ்ளோ அழகா இருப்பாரு அவர போய் கட்டுபோட வச்சிட்டுன்னு சண்டைக்கு வர ஆரம்பிச்சுட்டாலுங்க ” அவள் சிரித்து கொண்டே கூற அவளையே சிறிது நேரம் பார்க்க வைஷு புருவத்தை உயர்த்தி என்னவென கேட்க

” என்னால நம்பவே முடில வைஷு நீதனா அதுன்னு, ஆமா கருப்பட்டி எப்புடி இவ்ளோ அழகா மாறுணாங்க ம்ம்ம் “
“நா அழகா இருக்கேனா…..” கேட்டு கொண்டே இமைகளை பழைய ஹீரோயின் போல படபடக்க அதில் சிரித்தவன் 

“எனக்கு கொஞ்சம் கூட நியாபகம் இல்ல பாரேன் பட் தோணும் எங்கயோ பழகுன மாறி இருக்கேனு..”
“ம்ம்ம் எப்புடி இருக்கும் , சார் தான் தெருக்கு ஒன்னு வீட்டுக்கு ஒண்ணுன்னு கூப்டுட்டு சுத்தினா எங்கள எப்படி நெனெப்பு வரும் , மாலதி மிஸ் நல்லருக்கா “
“உனக்கு எப்புடிடி தெரியும் “
“பொண்ணுங்க ok டீச்சர் லாம் எப்புடிடா கரட் பண்ற அது என் ஸ்கூல் தான் , நீங்க அன்னைக்கு பிக் அப் பண்ணப்போ பாத்தேன் , நா பாத்தே இவ்ளோ இருக்கு பாக்காம எத்தனையோ ” அவள் தோள் மேல் கை போட தள்ளிவிட்டாள். ராகுல் அவளை தள்ளி அந்த பெட்டில்  அவனும் படுத்தான் வைஷு ஏதும் கூறாமல் கைகளை கட்டிக்கொண்டு தள்ளி படுத்து வேறு திசையினை பார்த்தபடி இருந்தாள். 

அவள் முகத்தினை திருப்ப லேசாக கண் கலங்கி இருக்க , “பாத்தியா நா தான் சொன்னால நா அப்புடித்தானு “
“நீ சொன்னது சரி தான் நா நீ பாத்த முதல் பையன் நீதான் கடைசியும் நீயாதான் இருக்கணும், இது வரைக்கும் ok இனிம மத்த பொண்ணுங்க கிட்ட  ஏதும் இருக்க கூடாது புரிஞ்சுதா ” விரல் நீட்டி எச்சரிக்க அந்த விரலி்னை கடித்து
“நா எதுக்குடி நீ சொல்றத கேக்கேனும்”
“ஆஆன் நா ஒருத்தி இங்க இருக்குறப்ப நீ எல்லார் கிட்டயும் போவியா “
“உன் வயசுக்கு இதுலாம் ஓவர்டி”
“சார் இப்போவே இப்புடி இருக்கீங்க இன்னும் விட்டா சொல்லவா வேணும் ஒழுங்கா மூடிட்டு இருக்கணும் சரியா “
“முடியாதுனா என்ன பண்ணுவ”
“உனக்கு எண்ட ஏதும் தேவ இல்லன்னா எனக்கும் இது எதுவும் தேவ இல்ல” சொல்லி கொண்டே கட்டை பிரிக்க போனவள் அவள் கைகளை பிடித்தும் அடங்காமல் துல்லியவளை வேறு வழியில்லாமல் அவள் உதட்டில் தன் முதல் முத்திரையை பதித்தான்….

இரண்டு நிமிட போராட்டத்திற்கு பின் விட்டவன்  அவளை பார்க்க இன்னும் கண்களை இறுக்கி மூடிய நிலையிலே  இருந்தாள். சிரித்து கொண்டே அவள் காதினுள் ” இன்னொன்னு வேணுமா” என்று கேட்க கண் விழித்தவள் தலையணை எடுத்து அவனை அடிக்க ஆரம்பித்தாள். “டேய் யார கேட்டு கிஸ் பண்ண , ஏன் டா கிஸ் பண்ண எவ எவளயோ தொட்டுட்டு என்னையும் பண்ண பாக்குறியா  பொறுக்கி பொறுக்கி எப்புடிடா என் பர்மிஷன் இல்லாம  நீ கிஸ் பண்ணலாம்”
“இதோ இப்புடித்தான்”……..

Advertisements

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: