Advertisements

சமீராவின் ‘இளங்காத்து வீசுதே’ – 30 (நிறைவுப் பகுதி)


அத்தியாயம் 30

 

“State level senior athletics championship”

 

என்று அந்த அரங்கம் எங்கும் பேனர்கள் கட்டப்பட்டு இருக்க தமிழகத்தின் பலவேறு மாவட்டங்களில் இருந்து மாணவ – மாணவிகள் அங்கே குவிந்து இருந்தனர்.

 

வண்ண வண்ண விளையாட்டு உடைகளில் ஆங்காங்கே மைத்தானத்தில் மாணவர்கள் பயிற்சி எடுத்துக் கொண்டு இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ள போடிகளுக்காக தீவரமாய் தங்களை தயார்ப்படுத்திக் கொண்டிருந்தனர்.அதனை காணும் அவர்களை ஊக்குவிக்கவும் பெற்றோர்கள் நண்பர்கள் பொதுமக்கள் அனைவரும் அரங்கத்தை நிறப்ப தொடங்கினர்.

 

பல்வேறு கல்லூரிகள் சந்திக்கும் நிகழ்வு என்பதால் சுவாரஸ்யமான பல காட்சிகள் நமக்கு தெரிந்தாலும் அவற்றை விடுத்து

நடக்கவிருக்கும் வெவ்வேறு தடகள போட்டிகளில் ஒன்றான விரைவோட்டப் போடியில் தனது மாவட்டத்தின் சார்பாக தேர்வாகி இருந்த நம் ஆரியனும் அவன் நண்பர்கள் பட்டாளமும் இருக்கும் திசையில் நாம் கூர்ந்து கவனிப்போம்..!!

 

கோச் சொல்லும் அறிவுரையை கவனமாய் கேட்டுக் கொண்டிருக்க அதே நேரம், 

“டேய் மாப்ளே..” “மச்சான்..” என்று குதூகலமாய் கேட்ட குரல்களில்,

 

“அதானே..என்னடா இன்னும் எவனையும் காணுமேன்னு பார்த்தேன்..தோ வந்துடானுங்கல்ல..இனி உன்னை பிடிக்க முடியாது..”

 

என்று அவர் கோபமின்றி திட்டவும் அவன் பதிலுக்கு இளிக்க அதற்குள் அவர்களை மொத்த பேரும் சூழ்ந்துக்கொண்டனர்.

 

“கோச்…பையனை ஃபுல் ட்ரைனிங் கொடுத்து வைத்திருக்கோம்..இன்னைக்கு தெறிக்க விடுவான் பாருங்க…”

 

“மாப்ளே..ஜெய்த்ததும் கண்ல ரெண்டு சொட்டு கண்ணீர் வைச்சுக்கிட்டு என் வெற்ற்க்கு எங்கள் தானை தலைவன் அஞ்ச நெஞ்சம் பசுபதி சர் தான் காரணம்னு வின்னிங் ஸ்பீச் கொடுக்கற..”

 

“ஆமா..அதுல சர் மனசு குளிர்ந்து போயி நம்ம எல்லாருக்கும் இன்னைக்கு நைட் ட்ரீட்

வைப்பார்..வைப்பீங்களா கோச்..”

 

“அதென்ன மச்சான் கேட்டுகிட்டு..சர் தங்கமான மனுஷன்..நமக்கு பிரியாணியே வாங்கி தருவார்..”

 

“டேய்…டேய் போதும்டா..வந்தோனே என் தலையே ஏன் உருட்டுறீங்க..முதல்ல நகருங்கடா..”

 

எனறு ஒரு அதட்டலோடு அங்கிருந்து செல்ல, “எஸ்கேப் ஆகிட்டார்..பரவாயில்லை அப்புறம் அவரை கவனிச்சுப்போம்..”

என்று விட்டு அடுத்து ஆரியன் பக்கம் திரும்பினர்.

 

அவனை வாழ்த்தி அனுப்புகிறேன் பேர்வழி எனறு விடாமல் வம்பு செய்துக்கொண்டிருக்க அப்பொழுது அவனை காண ஆர்வமாய் வந்த சக்தி அங்கே மொத்த கும்பலையும் கண்டு,

“அய்யையோ இவிங்களா..” என்று அதிர்ந்து சத்தம் இல்லாமல் தப்பிக்க முயல அத்ற்குள் ஆரியன் அவளை பார்த்து விட்டான்.

 

பார்த்ததும் அவன் முகம் மலர,

” ஹேய் சக்தி..” என்று அழைக்க அப்படியே நின்றிவிட்டாள்.

 

“ஹப்பாடி..தங்கச்சியை பார்த்தால் தான் உன் முகத்துல பல்ப் எரியுமாடா மச்சி…”

என்று அனித் கிண்டல் செய்ய அவன் மறுமொழி கூறும்முன்,

“இரு..இரு..நீ நினைக்கிறா மாதிரி எல்லாம் ஒன்னும் இல்லடா’ அதானே சொல்ல போற..”

என்று கேட்டதற்கு “ஹிஹி..ஆமா மாப்ளே..” எனறு அவன் வலிய அவனை காண்டாய் ஒரு ரியாக்‌ஷனோடு பார்த்தவர்கள்,

“ரொம்ப பழைய பிட்டு..அட்லீஸ்ட் டயலாக்கையாவது மாத்துடா..”

எனறுவிட்டு,

 

“டேய்…இவன் அடுத்து நம்மளை வெளிய அனுப்ப ஒரு கேவலமா ஒரு ரீஷன் சொல்லுறதுக்கு முன்னாடி நாமே டீசெண்ட் ஆ கிளம்பிடுவோம்..”

என்று அவன் சொல்ல சிரித்தவன்,

“நீ கற்புறம்டா என் செல்லமே..”

என்று அவனை புகழ அதுக்கும் ஒரு முறைப்பை மட்டுமே பதிலாய் கொடுத்துவிட்டு அவர்கள் வெளியேர அவர்களோடு இருந்த மனோஜூம்,

“அல் த பெஸ்ட்டா..” என்று தோளோடு ஒரு ஹக் கொடுத்துவிட்டு சென்றுவிட இறுதியில் அங்கே மிஞ்சியது சக்தியும் ஆரியனும் தான்.

 

“ஸ்டேடியம்லா வர முடியாதுன்னு சொன்ன..”

எனறு குறும்பாய் கேட்டபடி அவன் வார்ம் அப் செய்ய அவனை அலட்சியமாய் பார்த்தபடி,

 

“வரக்கூடாதுன்னு தான் நினைச்சேன்..பட் ரெண்டு நாளா ஒரு ஜீவன் வீடாது வாட்ஸ்ப்பில் ஸ்டெட்ஸாக போட்டு ‘அன்பு ஒன்று தான் அநாதை’நு  அந்த அறுந்த ரீலையே போட்டு ஃபீல் பண்ணுச்சு..அதான்..”

என்று அவனை சீண்ட அவன் முகம் சுருங்க,

 

“போ..அப்படி ஒன்னும் யாரும் நீ வரணும்னு பிடிவாதம் பிடிக்கல..”

என்றான் முகத்தை ஒன்றை முழத்துக்கு நீட்டி..

 

“அய்ய..என்ன சீனியர்..இதுக்கெல்லாம் முஞ்ச தூக்கி வைச்சுகுறீங்க..நான் வராமல போவேனா..”

எனறவள் அவன் கையை வலிய பற்றி குலுக்கி,

“பெஸ்ட் விஷஸ்..” என்று கூற அப்பவும் அவன் அவள்புறம் திரும்பாமல் பிகு செய்யவும்,

“வின் பண்ணிட்டு வாந்தால் உங்களுக்கு ஒரு ஸப்ரைஸ் இருக்கு..”

என்று அவள் சொல்ல அது வேலை செய்தது.

ஆர்வமாய் அவளை நோக்கியவன்,

 

“என்ன..என்ன ஸப்ரைஸ்..”

எனறு கேட்க குறும்பாய் புன்னகைத்து,

 

“ஜெய்ச்சுட்டு வாங்க சொல்றேன்..” என்றாள்.

 

“ஹே..என்னானு சொல்லு..”

 

“ம்ம்ம்..நீங்க ரொம்ப நாளா சொல்ல சொல்லி கேட்டுகிட்டு இருந்த விஷயம்..”

என்றதும் அவன் முகம் பிரகாசமானது.வேறென்ன அவன் காதலுக்கு சம்மதம் வேண்டி தான்.சக்திக்கும் விருப்பம் தான் எனினும் அவனை சுத்த விட்டு விளையாட இன்று தான் இந்த கண்ணாமூச்சு ஆட்டத்தை முடித்து வைக்க அம்மணிக்கு மனம் வந்தது.

 

“அதென்ன ஜெய்த்தால்..தோத்து போனால் சொல்ல மாட்டியா..”

என்று உரிமையாய் கேட்க,

“ஏன் ஆரம்பமே நெகெட்டிவா பேசுறீங்க..ஜெயித்துட்டு வாங்க சொல்றேன் அவ்வளவு தான்..”

என்றாள் அவளும் பிடிவாதமாய்..

 

“ரொம்ப பண்ற..இருக்கட்டும்..எனக்கும் ஒரு காலம் வரும் சக்தி..அப்போ கவனிச்சுகிறேன்..”

என்று கண்களை சுருக்கி கையை முறுக்கியபடி கூறியவனின் குரலில் குறும்பே பிரதானமாய் இருக்க,

“என்னை கவனிக்கிறது இருக்கட்டும்..முதல்ல கேம்ல கவனமா இருங்க..”

எனறு பதிலுக்கு வார  அதே சமயம் விரைவோட்டம் போட்டிக்கான அழைப்பு வந்தது.

 

இருவரும் சேர்ந்தே அங்கிருந்து கிளம்ப அவன் “சரி வரேன்..” என்று மைதானத்தை நோக்கி செல்ல இவள் பார்வையாளர்கள் அமரும் இடத்தில் சென்று தன் தோழிகளோடு அமர்ந்துக்கொண்டாள்.

 

தமிழத்தின் முக்கிய கல்லூரிகளில் ஒன்று கே.வி.எஸ் என்பதால் போட்டி நடத்து குழுவிடம் இருந்து விஜய் வரனிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்க அதனை ஏற்று விஜயும் அப்பொழுது தான் அவ்விடத்திற்கு வருகை புரிந்திருந்தான்.

 

அவனை வரவேற்று விருந்தினர்களுக்கான பகுதியில் அமரச் செய்தனர்.

 

அங்கே அவன் தொழில்முறையில் நல்ல நண்பரான ஒருவரும் இருக்க அவரை கண்டதும் புன்னகையுடம் தானே வழிய சென்று பேசினான்.

 

“ஹாப்பி மேரீட் லைஃப் விஜய்..சாரி..உங்க மேரெஜை ஒரு ஃபமிலி பங்ஷன் இருந்ததால் என்னால அட்டெண்ட் பண்ண முடியலை..மை ஹார்டி விஷஸ்..”

என்று அவர் கைக்குலுக்கி வாழ்த்த விரிந்த புன்னகையோடு, “இட்ஸ் ஓகே கிஷோர்…தேங்க்யூ..”

என்றான் நம் புதுமாப்பிளை..!!

ஆம்..! விஜய் வரதன் – சக்திப்ரியாவின் திருமணம் சென்ற வாரம் தான் ஊரே வியக்கும்படி கோலாகலமாய் நடந்து முடிந்திருந்தது.

 

ஏனோ தானோ எனறு சென்றுக் கொண்டிருந்த விஜயின் வரண்ட நாட்கள் வண்ணமயமாய் ஆனது போல் வாழ்க்கையை இரசித்து வாழ கற்று தந்தாள் அவனது காரிகை.

 

தனது ட்ராக்கில் வந்து நின்ற ஆரியன் சுற்றி ஒரு முறை பார்வையை சுழற்றி தன்னை சேர்ந்தவர்களிடம் புன்னகைத்தவன் அப்பொழுது தான் விஜயை கவனிக்க அவன் புன்னகை மேலும் விரிந்தது. அவனை பார்த்த விஜய் ‘ஆல் த் பெஸ்ட்’என்பதுப்போல் கட்டைவிரலை உயர்த்தி காட்ட தலையசைத்து அதை ஏற்றுக்கொண்டான்.

 

அங்கே இங்கே சுற்றி கடைசியில் பார்வை அவனது இலக்கில் நிலைக்க தன் முழு கவனத்தையும் அதில் மட்டுமே பதித்தான்.

காதுகள் கூர்மையாகி சமிஞைக்காக காத்திருக்க அவ்வொலி கேட்ட நொடி வில்லில் இருந்து புறப்பட்ட அம்பாய் காற்றை கிழிக்கும் வேகத்தோடு ஓடினான்.

 

அவன் காதுகளில், “ஆரியா..வாடா மச்சான்…வாடா மச்சான்..”  “கமான் ஆரியன்..” “ஆரியா..ஆரியா..ஆரியா..”

என்ற பல குரல்கள் அவன் காதுகளை சென்றடைய முழுவேக்கத்தோடு ஓடியவன் முடிவு எல்லைக்கான சிவப்பு ரிப்பனை முதலாமானவாக தழுவிச் சென்றான்.

 

அரங்கம் எங்கும் கைத்தட்டல்களும் விசில்களும் பறக்க நண்பர்கள் சக போடியாளர்கள் கைக்குலுக்கி வாழ்த்தினர்.

 

மற்ற போட்டிகளும் முடிந்த பின் பரிசு கொடுக்கும் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வருகைப்புரிந்திருந்த தமிழகத்தின் சிறந்த தடகள வீரரின் கையால் தங்கப்பதக்கம் அணிவிக்கப்பட்டது.

 

மெடலோடு வந்தவனை நண்பர்கள் பட்டாளம் தூக்கி சுற்றி ஆர்ப்பாட்டம் செய்ய  சிரிப்புடன் அவர்களில் சக்தியை தேடி கண்டுக்கொண்டவன் புருவத்தை ஏற்றி இறக்கி “எப்புடி..” என்பதுப்போல் பார்க்க பதிலுக்கு அவளோ திருஷ்டி முறிப்பதுப்போல் செய்தவள் பறக்கும் முத்தம் ஒன்றை கொடுக்க இதனை எதிர்பார்க்காத ஆரியனின் முகத்தில் ஆச்சரியம் கலந்த சிரிப்போடு கண்சிமிட்ட அந்த இளநெஞ்சங்களில் மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை..

 

                  😍முற்றும்😍

 

Advertisements

2 thoughts on “சமீராவின் ‘இளங்காத்து வீசுதே’ – 30 (நிறைவுப் பகுதி)”

  1. அமுதா சக்திவேல் says:

    சூப்பர் சிஸ்….கதையை விறுவிறுப்பா நகர்த்தி நிறைவா முடிச்சிட்டிங்க…பாராட்டுக்கள்

    1. Sameera Sano says:

      கதை முழுவதும் தங்கள் ஆதரவை கொடுத்தற்கு நன்றி சிஸ் 🥰

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: