சமீராவின் ‘இளங்காத்து வீசுதே’ – 29

அத்தியாயம் 29

 

அன்றைய இரவுடைய இருளோடு இவர்களை அண்டிய இருளும் விலகி மறுநாள் பொழுது இனிய நாளை அனைவருக்கும் புலர்ந்தது.

 

சக்திப்ரியாவின் வீட்டில் மெல்ல துயில் கலைந்த சக்திஸ்ரீ தான் இருக்கும் இடம் என்னது என்று புரியாமல் மலங்க மலங்க விழித்தாள்.அவளுக்கு எதுவும் நினைவு இல்லை.ஹாஸ்டலில் இருந்து கிளம்பியது தான் கடைசியாய் நியாபகம் இருக்கிறது.அதன் பிறகு என்ன ஆனது..எங்கே வந்தோம்..இது என்ன இடம் என்று தெரியாமல் குழம்பி தவிக்க சரியாக அதே நேரம் உள்ளே வந்தாள் சக்தி.

 

“ஹே சக்தி..எழுந்துட்டியா..இப்ப எப்படி ஃபீல் பண்ற..வலி எதும் இல்லையே…”

 

என்று நன்றாக தெரிந்தவள் போல் பேசிய சக்திப்ரியாவை பயத்தோடு யாரென்பது போல் கேள்வியாய் பார்க்க,

 

“ஏன் அப்படி பார்க்கிற…பயப்படாத நான் ஏஞ்சலோட ஃப்ரெண்ட் தான்..இன்னும் கொஞ்ச நேரத்தில் அவள் வந்திடுவாள்…” 

என்று சொல்லவும் ஏஞ்சல் பெயரை கேட்டதும் சற்று ஆசுவாசம் அடைந்தவள்,

 

“நான்..நான் எப்படி இங்க வந்தேன்..ஏஞ்சல் என்னை கூட்டிட்டு வந்தாளா..?”

 

என்று மெல்ல கேட்க, “அது ஒரு பெரிரிரிரிய கதை..மெதுவா தெரிந்துக்கலாம்..முதலில் நீ ஃப்ரெஸ் ஆகிட்டு வா..இதான் ரெஸ்ட் ரூம்..”

 

என்று காட்ட அவளுக்கும் அது அவசியமாய் தேவைப்பட்டதால் வேறெதுவும் கேட்காமல் எழுந்து சென்றாள்.

 

அவள் மீண்டும் வெளியே வந்த போது கமல்கண்ணனும் அங்கே இருந்தார்.அவளை கண்டதும் புன்னகைத்தவர் அருகில் வந்து தான் எடுத்து வந்த துன்னுரை அவள் நெற்றியில் வைத்து விட்டு,

“உனக்கு ரொம்ப நல்ல மனசும்மா..மென்மையான குணவதி..உன் மனசுக்கு நீ ரொம்ப நல்ல வாழ்வ..!!”

என்று அருள்வாக்காய் சொன்னவர் தன் மருமகளிடம் இந்த பொண்ணை சாப்பிட வைம்மா’ என்று கூறி சென்றார்.

 

புரியாத மொழியில் பரீட்சை எழுத சொன்னது போல் பாவமாய் விழித்தபடி நின்றவளின் அருகில் வந்து டீ கொடுத்த சக்தி, ‘இதோ வந்திடுறேன்..’ என்று வெளியே செல்ல கட்டிலில் ஒரு ஓரத்தில் அமர்ந்தாள்.

 

அவளை மேலும் சோதிக்காமல் சரியாக அதே நேரம் சந்தியாவும் ஏஞ்சலும் வர அப்பொழுது தான் மூச்சே வந்தது.

 

முகம் மலர அவள் எழுந்து நிற்க அவள் கையில் இருந்த கப்பை வாங்கி கீழே வைத்துவிட்டு இருவரும் அவளை ரவுண்டு கட்டி வெளுத்தனர்.

 

“ஏய்..ஏய்..ஏண்டி..சொல்லிட்டாவது அடிங்க பக்கிங்களா..”

 

“ஆமா சொல்றாங்க..இவ்வளவு விஷயத்தை எங்களுட்டேந்து மறைச்சுட்டேல..ஆரியன் அண்ணன் ட்ட சொல்ல தெரியுது..எங்களுட்ட சொல்ல முடியாதா..?எருமை..குரங்கு..எப்படி பயந்து போயிட்டோம் தெரியுமா..”

 

என்று திட்டியபடி இன்னும் நாலு போட எதை சொல்கிறார்கள் என்று புரிந்து, “சாரிடி..”

என்று மன்னிப்பு வேண்டினாள்.இருந்தும் மனசு ஆருமட்டும் அவளை திட்டி தீர்த்த பின்பே அவளிடம் மற்ற விஷயங்களை பகிர்ந்துக்கொண்டனர்.

 

சிகிச்சை நல்லபடியாக முடிந்து இருக்க அவர் நினைவு திரும்பியபிறகு விஜய் நேராக சென்ற இடம் அக்னிமித்ராவின் சமாதி தான்.அவளுக்கு பிடித்த வெள்ளை ரோஜாபூங்கொத்துடன்..

 

மிதமான காற்று அவனை வருட அவள் புகைப்படத்தின் கீழ் பெயர் செதுக்கப்பட்ட கல்லறை முன் மண்டியிட்டவன் அதன் மேல் பூங்கொத்தை வைத்தான்.

கண்கள் ஏனோ கலங்குவது போல் தோன்ற படத்தில் அவள் முகத்தையே  விழியெடுக்காமல் பார்த்தான்.

 

“இன்னைக்கு உன்னோட எட்டாவது நினைவு நாள் மித்ரா..காலைல அம்மாவில் தொடங்கி கண்விழித்ததும் அப்பா வரை சொன்ன ஓரே விஷயம் என்ன தெரியுமா..என் மகளுக்கு திதி கொடுக்கணும்னு தான்..உனக்கு எங்க மேல ஏன் வெறுப்பு தெரியல..ஆனால் நீ எங்களுக்கு எப்பவுமே ஷ்பெஷல் தான் மித்ரா..ஏன் இப்போ கூட உன் மேல எனக்கு கோபப்பட வரல..நாமளும் மத்த அண்ணன் தங்கச்சி மாதிரி இருந்திருக்க கூடாதானு தான் தோனுது…” 

என்று வேதனையா விரக்தியா என்று பிரித்தறிய முடியாத ஓர் குரலில் பேசியவன் அதே நிலையிலே இருக்க தீடீரென தோன்றிய உள்ளூணர்வால் திரும்பி பார்க்க ஆம் மித்ரா தான்.

 

ஆனால் அவள் உருவம் இல்லாமல் மண் துகளால் ஆன கரிய உருவத்தில்..!! பார்த்த வினாடி பக்கென்று இருந்தாலும் அது மித்ரா என்று புரிந்து அவளை எதுவும் சொல்லாமல் அமைதியாய் நோக்கினான்.

 

“என்ன பண்ணினாலும் என்னையே சுத்தி சுத்தி வருவல..உன்னால எப்பவுமே என்னை எதிர்க்க முடியாது விஜய்..அதான் உன் பலவீனம்..என் பலம்…”

 

என்று அவள் சொன்னதுக்கும் அவனிடம் பதிலில்லை.அதனை எதிர்பாராது மேலும் அவளே பேசினாள்.

 

“நான் அந்த ஆளு விரட்டினதுல பயந்து போயிட்டேன் நினைச்சியா..இல்ல..இந்த மித்ராவை தடுக்கும் சக்தி எதுவும் இல்ல..அப்புறம் ஏன் போனேன்னு தெரியுமா..!!எனக்கு நான் நினைச்சது நடந்திடுச்சு..உன்னை உயிர்வதை செய்யணும்னு நினைச்சேன்..ஒவ்வொரு நிமிஷமும் செத்து செத்து பொழைக்கணும்னு நினைச்சேன் அப்படி உன்னை பார்த்துட்டேன்..எனக்கு அது போதும்..அழியாம அரிச்சுட்டு இருந்த அந்த குறை இப்போ நிறைவேறிடுச்சு..இனி எனக்கு இங்க வேலை இல்ல..போறேன்…”

என்று அவள் பேச பேச மெல்ல அவள் உருவம் காற்றில் கரைய இறுதி வாக்கியம் வெறும் அசரீரியாய் தான் ஒலித்தது. இருவர் இயல்பிலும் மாற்றம் துளியும் இல்லை.பிடிவாதமாய் ஆராவன்மம் கொள்வது அவள் பிறவு குணம் என்றால்  பிடிவாதமாய் அன்பு வைப்பது அவன் பிறவி குணம்!! இதில் மாற்றம் எதிர் பார்பவருக்கு ஏமாற்றமே மிஞ்சும்..!!!!

 

  •  
  •  
  •  

மருத்துவமனையில்…

 

அனைத்து சிகிச்சையும் முடிந்து இன்று தான் நார்மல் ரூமிற்கு சிவகுமாரை மாற்றி இருந்தனர்.

 

“டேய்..போதும்டா…உன் அப்பாக்கு உடம்பு சரியாகி போறதுக்குள்ள இங்க உள்ள எல்லாரையும் ஒருவழி ஆகிடுவ போல…பாரு எப்படா இவரு கிளம்புவாருன்னு பார்க்கிறானுங்க…”

 

என்று சாய்ந்தமர்ந்திருந்த சிவகுமார் மகனை கேலி செய்ய பதிலுக்கு போலியாய் முறைத்தான் விஜய்.

ஆம்.உண்மையிலே இது என்ன..அது என்ன என்று தோண்டி தோண்டி கேள்விக்கேட்டு ‘இனி டிஸ்சார்ஜ் செய்வது தான் பாக்கி என்று அனைத்தையும் கேட்டு தெளிவு படுத்திக்கொள்ளும் வரை 

ஒருவழியாக்கி விட்டான்.

 

“ஏன் பேச மாட்டீங்க..உங்களை நினைச்சு நானும் அம்மாவும் எவ்வளவு பயந்தோம்னு எங்களுக்கு தான் தெரியும்..இனி என்னோட தான் ரெண்டு பேரும் இருக்கணும் உங்களை அங்க விட்டுடு இருக்கலாம் முடியாது..அந்த ப்ராண்ச் எல்லாம் ஆள் போட்டுகலாம்..நீங்க ரெஸ்ட் எடுங்க..அது போதும்…”

 

என்று கட் அண்ட் ரைட்டாக பேசியவனை,

“சரிடா..சரி..நீ சொல்றதை நான் கேட்கறேன்..ஆனாலும் நீயும் நாங்க சொல்லுறா மாதிரி மேரேஜ் பண்ணிக்கோ..உனக்கு ஒரு பொண்ணு பாத்து கல்யாணம் பண்ணி வைக்கிறவரை எனக்கு நிம்மதி இருக்காது…”

என்று அவரும் பதிலுக்கு சொல்ல அதே சமயம் விஜய் அலைப்பேசியில் சக்தியின் அழைப்பு..!!

 

முகத்தில் புன்னகை விரிய அவர் கூறியதுக்கு பதில் சொல்லாது,

“உங்களுக்கு ஒரு சப்ரைஸ்..இருங்க..”

 

என்று உற்சாகமாய் கூறி வெளியே செல்ல கேள்வியாய் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர் சிவகுமாரும் கீதாவும்..

 

மீண்டும் அவன் வரும்போது உடன் வந்த ஒரு பெண்ணை கண்டு இருவருக்குமே ஆச்சரியம் தான்.ஏதோ சிரிப்புடன் பேசியபடி உள்ளே அழைத்துவர அவனை இவ்வளவு இலகுவாய் எந்த பெண்ணிடமும் பேசி அவர்கள் பார்த்தது இல்லை.அதனால் தான் அந்த ஆச்சரியம்!!

சர்வ லட்ஷணமாய் இருந்த சக்திப்ரியாவை பார்த்ததும் அவர்களுக்கு பிடித்து போனது.

 

இருவரும் ஆர்வமாய் மகன் என்ன சர்பரைஸ் சொல்ல போகிறான் என்று பார்க்க அவர்கள் எதிர்ப்பார்ப்பை பொய்யாகாமல்,

 

“நீங்க பொண்ணு தேடனும்னு கவலை பட்டீங்கல்ல..பாத்தீங்களா ப்பா..அடுத்த நிமிஷம் உங்க மருமகளை கூட்டிட்டு வந்துட்டேன்..ஹாப்பியா..”

 

என்று குறும்பாய் கூற இருவரும் வாய் பிளக்காத குறைத்தான்.சக்திப்ரியா சிவகுமார், கீதாவை பார்த்து தயக்கமாய் புன்னகைத்தபடி அவன் பின்னாடி நின்றவள்,

“உடனே சொல்லணுமா..ம்ஹூம்..எனக்கு கூச்சமா இருக்கு…” என்று அவனுக்கு மட்டும் கேட்கும்படி சொல்ல, “இதுவே லேட் தான் போடி…”

என்று அவனும் அதே குரலில்…

 

“அடப்பாவி…நீ லவ் எல்லாம் பண்ணுவியாடா..”

என்று வெளிப்படையான ஆச்சரியத்தோடு கீதா கேட்க,

“நான் அப்போவே சொன்னேன்ல உன் மகன் கேடி..யாரையோ மனசுல வைத்துக்கிட்டு தான் இந்த மாதிரி கல்யாணமே வேணானு சீன் போடுறான்னு..நீதான் நம்பல..” என்று பதிலுக்கு சிவகுமாரும் வாரவும், “அப்பா.!!ஏன் ப்பா..”

என்றான் லேசாய் எட்டி பார்த்த வெட்கத்தோடு..

 

“இங்க வாம்மா..” என்று கீதா அருகில் அழைத்து அவள் வைத்திருந்த பழங்களை டேபிளில் வைத்துவிட்டு அவளை பற்றி ஆர்வமாய் விசாரித்தார்.

 

“நான் ஒரு பொண்ணை விரும்புறேன்னு முன்னாலே சொல்றதுக்கு என்னடா…? படவா…!!எப்போவோ பேசி கல்யாணம் பண்ணி வைத்திருக்க மாட்டோமா..!நாங்க காதலுக்கு எதிரி எல்லாம் இல்ல..”

 

என்று அருகில் அமர்ந்த மகனின் தோளில் விளையாட்டை ஒரு அடிப்போட்டு சொல்ல சிரித்தவன்,

 

“அது எனக்கு தெரியாதா..?உங்க்ளுக்கு யாரும் பயப்படல..அவளுக்கும் விருப்பம்னு இப்போ தான் தெரியும்..”

என்று சொல்ல ‘அதானே பார்த்தேன்..நீ எதுக்கு தான் பயந்திருக்க..’ என்று அவர் சிரிக்க இந்த இரண்டு நாளாய் பயத்தின் விழும்பில் தான் செத்து செத்து பயந்த நிகழுகள் படம்போல் கண்முன் விரிய நொடியில் அதனை உதறி இவர்கள் பேச்சில் கலந்துக்கொண்டான்.

 

சற்று நேரத்திலே அவர்கள் குடும்பத்தோடு இயல்பாய் சக்திப்ரியா பொருந்திவிட அவளது இயல்பான துடுக்காய் கலகலவென பேசி அந்த மருத்துவமனை சூழலேயே மாற்றிவிட அத்தனை மகிழ்ச்சி..!!

அவள் அழகைவிட குணம் இருவருக்கும் மிகுந்த திருப்தி.டிஸ்சார்ஜ் ஆனதும் முதல் வேளையே இவர்கள் கல்யாணத்தை முடிவு செய்வது தான் என்று எண்ணிக் கொண்டார் சிவகுமார்.

 

இன்னும் கொஞ்ச நேரம் அவர்களோடு இருந்துவிட்டு பின் விடைப்பெற்று சக்திப்ரியா செல்ல அவளை அனுப்பி வைக்க உடன் வெளியே வந்தான் விஜய்.

 

“ஹப்பா..அத்த மாமா ரொம்ப ஸ்வீட் விஜய்…”

 

“பின்ன இருக்க மாட்டாங்க..என் அப்பா-அம்மா ஆச்சே..”

 

“ஆஹான்..நினைப்பு தான்..நீங்க ஸ்வீட் எல்லாம் இல்ல..சரியான உம்முனா மூஞ்சு..”

 

“ம்ம்ம்..இந்த உம்முனா மூஞ்சு தான் வேணும்னு நீங்க தவம் இருந்தீங்க மேடம்..நியாபகம் வைச்சுக்கோங்க..”

என்று அவன் சீண்ட குறும்பாய் உதட்டை வளைத்து,

 

“யார் தவம் இருந்தால்..!!ஏதோ ரொம்ப அழுது ஆர்பாட்டம் பண்ணீங்க..அதான் போயிட்டு போதுனு ஒத்துக்கிட்டேன்..”

என்று கையசைத்து பிகுவாய் சொல்ல அவள் காதை பற்றி திருவியவன்,

 

“எப்படி..எப்படி போயிட்டு போதுன்னா..”

என்று கிட்ட வர, 

 

“ஸ்ஸ்..விஜய் வலிக்குது..விடுங்க..” என்று அவன் வலிக்க பற்றவில்லை என்றாலும் அவள் துள்ள, “..எங்க சொல்லு..இப்போ சொல்லு..”

என்று தன் அருகே இழுக்க,

“வேணும் தான்…தவம் இருந்து கிடைத்த வரமேனு பாட்டு வேணும்னாலும் பாடுறேன்..போதுமா..விடுங்க விஜய்..இது பப்ளிக் ப்லேஸ் யாராவது வந்திட போறாங்க…”

சிவந்து விட்ட முகத்தோடு அவள் கோபமாய் சொல்ல நினைத்து சிணுங்களாய் சொல்ல சிரிப்புடம் கையை விடுவிக்க கனவில் மட்டுமே காதலை வளர்த்த அந்த காதலர்கள் நிஜத்திலும் அதன் சுவையை உணரத்தொடங்கினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: