சமீராவின் ‘இளங்காத்து வீசுதே’ – 28

அத்தியாயம் 28

 

நிர்மலான முகத்தோடு கட்டிலில் சக்திஸ்ரீ உறக்கமும் மயக்கமும் கலந்த நிலையில் படுத்திருக்க அவள் தலைமாட்டில் இருப்பக்கமும் சந்தயாவும் ஏஞ்சலினும் அமர்ந்திருக்க கால்மாட்டில் ஆரியன் ஒருபுறம் மனோஜ் மறுப்புறம் நின்றிருக்க சற்று தள்ளி ஒரு நாற்காலியில் விஜய் அமர்ந்திருக்க அறையின் வாசலில் நின்றிருந்தாள் சக்திப்ரியா.

 

அவ்வறையில் இத்தனை பேர் இருந்தும் ஊசி விழும் சத்தம் கேட்கும் அளவு மௌனமே நிறைந்திருந்தது.

 

சற்றுமுன் கமலகண்ணனின் பிடியில் இருந்து மயங்கி அவள் சரியவும் எல்லோரும் அதிர்ந்து ஓடி வந்து பிடிக்க “பயப்பட ஒன்றும் இல்லை.. “என்று கமலகண்ணன் சொல்லவும் தான் அனைவருக்கும் உயிரே வந்தது.சக்திஸ்ரீயின் பற்று இல்லாமல் நொடிக்கூட அக்னிமித்ராவால் நிலைக்க முடியாமல் காற்றில் கரைந்து மீண்டும் அடைப்பட நாளை அவளது எட்டாவது நினைவு நாள்ளோடு அவள் ஆன்மா முக்தி அடைந்துவிடும்..!!!

 

அதனை அறிந்தபின்னே அனைவர் மனமும் ஆசுவாசமடைந்தாலும் அந்த சம்பவத்தின் தாக்கதில் இருந்து இன்னும் அவர்கள் மீளவே இல்லை.

 

அதுவும் இளையவர்கள் விஜயை பார்ப்பதும் பின் குனிவதுமாய் இருக்க அவன் இருப்பதால் மற்றவர்கள் பம்முவதை உணர்ந்து சக்திப்ரியா,

 

“விஜய்.. “என்று அவனை அழைக்க ஏதோ சிந்தனையில் இருந்தவன், “ஆங்.. “என்று நிமிர அவள் வெளியே கைக்காட்டி செல்லவும் அவனும் எழுந்து சென்றான்.

 

அதன்பின் முதலில் அந்த அமைதியை களைத்தது சந்தியா தான்.

 

“ப்ரியா அக்கா சக்தியை இன்னைக்கு இங்கேயே ஸ்டே பண்ண சொல்றாங்களே..என்ன செய்வது..?”

 

என்று கேட்க, “அதான் நல்லது..அவளே மயக்கதில் இருக்கா எப்போ முழிப்பான்னு தெரியல..இன்னேரம் ஹாஸ்டல் கூட்டிட்டு போனால் அவங்களுக்கு பதில் சொல்லணும்..நாளைக்கு அவ தெளிவானதும் கூட்டிட்டு போகலாம்..”

 

என்று மனோஜ், நீங்க சொல்றதும் “சரிதான் அண்ணா..ரெஸ்ட் எடுக்கட்டும்..”என்றாள் ஏஞ்சலின்.

 

அதுவரை சக்திஸ்ரீயின் முகத்தையே பார்த்திருந்த ஆரியன் இவர்கள் பேச்சை கவனியாது, “தூங்கும் போது அப்படியே குழந்தை மாதிரி இருக்கால்ல..”என்று இரசித்து சொல்ல சட்டென்று மூவரும் அவனை ஒரேப்போல் பார்க்கவும் அசடு வழிந்தபடி,

 

“இல்ல..இப்படி குழந்தை மாதிரி உள்ள புள்ளைய அந்த பிசாசு வாட்டி எடுத்துருச்சே அதை நினைச்சு சொன்னேன்..”

 

என்று சொல்ல மற்ற இருவரும் ஆமோதித்தாலும் மனோஜ் அவனை ஆஹான் என்ற பாவனையில் பார்க்க அவனிடம் கண்களை சிமிட்டி உதட்டை ஒரு கோட்டில் நிறுத்தி வலிய புன்னகைத்தவன் பின் பேச்சை மாற்றினான்.

 

அங்கே வெளியே வந்த சக்திப்ரியா அவன் சோர்ந்து இருப்பதை கண்டு,

 

“விஜய்..இங்க பாருங்க..இப்போ என்ன பிரச்சனை உங்களுக்கு..”

 

என்று கேட்க அவனோ, “மித்ரா நினைச்சால் கஷ்டமா இருக்கு..அவ விஷயத்தில் எந்த இடத்தில் தவறினேன்..எதனால அவளுக்கு என்னை இவ்வளவு வெறுத்தாள் என்று புரியல..”

 

என்று வருத்தமாய் சொல்ல,

 

“என்ன காரணம் அவ வைச்சிருந்தாலும் அதுக்கு நீங்க பொறுப்பு ஆகமுடியாது விஜய்..ஏன்னா அதுவ் அவளாக கற்பனை செய்துகிட்டது..உங்க ஆழமான அன்பை அனுபவிக்க அவளுக்கு கொடுத்து வைக்கல அவ்வளவு தான்..”

 

என்று இதமாய் பேசினாள் சக்தி.ஆனாலும் அவன் முகம் தெளியாததை கண்டு,

 

“போதும் விஜய்..அவளை பற்றி இனி நீங்க நினைக்க         

கூடாது அவ்வளவு தான் சொல்லிட்டேன்..டாட்..”

 

என்று அவனை போலவே சொல்ல அவள் தொனியில் லேசாய் சிரித்தவன்,

 

“அப்போ உன்னை நினைக்கவா..” என்று பேச்சை மாற்றும் பொருட்டு சொல்ல நினைத்து தானே வாயை விட்டான் விஜய்.

 

அவன் கூறியதில் அவள் முகம் இறுக,

 

“நீங்க ஏன் என்னை பற்றி நினைக்கணும்..அப்படி ஒரு நினைப்பு இருந்திருந்தால் என்னை இத்தனை நாள் தள்ளி வைச்சிருப்பீங்களா..?”

 

என்று கோபமாய் பேசியவளிடம் மறுத்து ஏதோ கூற வந்தவனை தடுத்து,

 

“எதுவும் பேசாதீங்க..உங்களை நான் என்ன பண்ணினேன்னு என்னை அப்படியே அவாய்ட் பண்ணீங்க..உங்களுக்கு வேணும்னா நீங்களா வந்து பேசுவீங்க..லவ் சொல்லுவீங்க..அப்புறம் புடிக்கலனா நீங்களா விலகி போவீங்க..நான் எல்லாத்துக்கும் தலையாட்டணும்மா..என்னை என்ன நினைச்சிட்டு இருக்கீங்க..எனக்குனு மனசு இருக்காதா..?இப்ப கூட இந்த பிரச்சனை வரலேனா என்னை தேடி வந்திருக்க மாட்டீங்கல்ல..?”

 

இதுவரை இருந்த இதம் மறைந்து அனலாய் தகித்து ஆதங்கத்தில் படபடத்தவளை என்ன சொல்லி சமாதானம் செய்ய என்று தெரியாமல் விழித்தான் விஜய்.

 

“இல்லம்மா..நான் செஞ்சது..!”

 

என்று ஏதோ விளக்கம் சொல்ல விழைந்தவனை,

 

“நான் கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க..வந்திருப்பீங்களா..மாட்டீங்களா?”

 

என்று சூடாக கேட்க, ‘ஆஹா..அசல் பொண்டாட்டியாவே மாறிட்டாளே..இனி இந்த லவ்கீக வாழ்க்கை இப்படி தான் இருக்குமோ’ என்று உள்ளூர அபாய மணி அடித்தது.

 

கண்ணில் எதிர்பார்ப்போடு நிற்கிறாளே என்று ‘உன்னை தேடி வந்திருப்பேன்’ என பொய் சொல்ல மனம் இல்லை.எனவே மெல்ல இல்லை என்று தலையசைக்க அவள் முகம் சுணங்கி விட்டது.

 

“தட்ஸ் இட்..”என்று கோபமாய் கூறி அங்கிருந்து நகர்ந்தவளை கைப்பிடித்து நிறுத்தியவனை

முறைத்தவள்,

“கைய விடுங்க விஜய்.. எத்தனை நாள் நீங்க இப்போ வர மாட்டீங்களா..அப்போ வரமாட்டீங்களானு ஏங்கிட்டு இருந்தேன் தெரியுமா…?ஆனால் நீங்க அந்த எண்ணமே இல்லாம இருந்தீங்கல்ல..இனியும் அப்படியே இருந்துக்கோங்க..”

என்று ஆத்திரமாய் கத்தியவளை சுற்றும் முற்றும் பார்த்து,

“ஷ்ஷ்…கத்தாதடி…உங்க மாமா வந்திட போறாரு..அந்த பசங்க வேற இருக்காங்க…”

என்று பொறுமையாகவே சொல்ல, “யாரை பத்தியும் எனக்கு கவலை இல்ல..போங்க…” என்றாள் வெடுக்கென..

 

மூச்சை இழுத்து விட்டவன் அவள் மறுக்க மறுக்க அவள் இருக்கைகளோடும் தன் விரல்களால் பிணைத்துக்கொண்டு தன் முகத்திற்கு நேராய் அவளை நிறுத்தி,

“நான் தான் தப்பு..லூசு மாதிரி ஏதோ யோசிச்சு..என்னென்னமோ பண்ணிட்டேன்..அதுக்கு எத்தனை தடவை வேணும்னாலும் சாரி கேட்கறேன்..”

என்று சொல்ல அலைப்புறூம் விழிகளோடு இமைக்காமல் அவனை பார்த்த அவள் முகம் லேசாய் அழுகையில் சுருங்கி,

 

“அன்னைக்கு என்ன சொன்னீங்க.. ‘எனக்கு நீ தான்..நீ மட்டும் தான்னு..’ அப்புறம் எப்படி என்னை விட மனசு வந்துச்சு…”

என்று கேட்க அவளோடு பின்னி இருந்த கைகளை உயர்த்தி அவள் கன்னத்தை தாங்கியவன்,

“இப்பவும் நான் அதை தான் சொல்வேன்..நீ எனக்கு இல்லைனு ஆனாலும் உன்னை தவிர இன்னோர் பொண்ணு என் வாழ்க்கையில் இல்ல..”

என்று சொல்ல அப்பொழுது தான் தலைவி முகம் மெல்ல கோபம் தணிந்து புன்னகை அரும்பியது.

 

“ஆமா..இவரு பெரிய தியாகி..!!விட்டு கொடுத்துட்டு வேடிக்கை பார்ப்பார்…இப்படி எல்லாம் சொன்னால் ஆச்சா…?நான் கோபமா தான் இருக்கேன் மறந்துடாதீங்க…!”

 

என்று வீம்புக்கு சொல்ல அவளை இன்னும் அருகில் இழுத்து, “இருந்துக்கோ…ஆனால் இனியும் உன்னை பிரிந்து இருக்க முடியாது..என்கூடவே இருந்து எவ்வளவு சண்டை வேணும்னாலும் போட்டுக்கோ…”

என்று நெற்றியில் முட்ட அதரங்கள் மலர அவளும் சிரித்து விட்டாள்.

 

“இனிமேல் அக்னிமித்ராவால் அப்பாக்கு எந்த ஆபத்தும் இல்லேன்னு ஆனதும் தான் மூச்சே வருது சக்தி..எப்படியும் சர்ஜரி நல்லபடியா முடியும்னு எனக்கு நம்பிக்கை வந்திடுச்சு…ஸ்ஸ்..அம்மா வேற என்னை காணாமல் பதட்டமாய் இருப்பாங்க..நான் போகணும்..”

 

என்று விஜய் சொல்லி விலகியவன் பேச்சில் பழைய உறுதியும் தெளிவும் வந்திருந்தது.

 

“நானும் வரவா..?”

 

“இப்போ வேணாம்..அப்பா கண்விழிச்சதும் சொல்றேன்..வா…உன்னை அப்பா-அம்மாக்கு இன்ரோடியூஸ் பண்ணனும்..தெரிந்ததும் ரொம்ப ஹப்பி ஆகிடுவாங்க…”

 

என்றபடி மீண்டும் அவ்வறைக்கு செல்ல அதுவரை வாயாடிக் கொண்டிருந்தவர்கள் சட்டென்று அமைதியாகிவிட சக்திப்ரியாவிற்கு சிரிப்பு தான் வந்தது.

 

“ஆனாலும் இந்த பசங்கள ரொம்ப மிரட்டி வைத்திருப்பீங்க போல..உங்களை பார்த்தாளே பம்முறாங்க..”

என்று குறும்பாய் கேட்க, “யாரு இவனுங்களா..எல்லாம் சும்மா பாவலா காட்றானுங்க.. நான் வரக்கூடாதுன்னு சொல்லியும் வந்து நீக்கிறானுங்க..அத்தோட இந்த ஆரியன் என்னையே கேள்வி கேட்டவன் இவங்க பயப்படுறானுங்களா..”

என்று விஜய் பதிலளிக்க அவன் சாதாரணமாய் சொன்னாலும் ஆரியன் குற்றவுண்ர்வோடு,

 

“சாரி சர்..உண்மையை தெரிந்துக்காம இஷ்டத்துக்கு பேசிட்டேன்..நீங்க எப்பவுமே கரக்ட் தான் சர்..நான் தான் உங்களை ஆரம்பத்தில் இருந்தே புரிஞ்சுக்கல..”

என்று சொன்னவனை ஆதூரமாய் பார்த்த விஜய் உதட்டை சிறுக புன்னகையில் வளைத்து,

“அந்த தர்ஷனோட பிரச்சனைல உன்னை நான் பேசிட்டேன்..அதானே உனக்கு என்மேல ஆரம்பத்தில் இருந்து கோபம்..” என்று சரியாய் வேரை பிடிக்க அவன் திருதிருவென விழித்தான்.

 

“எனக்கு தெரியும் ஆரியன்..உன்மேல தப்பு இல்லேன்னு..பட் தர்ஷன்..அவனையும் தெரியும் அவன் அப்பாவை பற்றியும் தெரியும்..அந்த இடத்தில் உன் முன்னால அவனை திட்டி இருந்தாலோ இல்லை பனிஷ் பண்ணி இருந்தாலோ அந்த வெண்ஜென்ஸ்ல என்ன பண்ணுவான்னும் தெரியும்..உனக்கு நல்ல எதிர்காலம் இருக்குடா..ஐ க்னோ யுவர் டேலெண்ட்..பட் இந்த மாதிரி ப்ராப்ளம்ஸ் உனக்கு தொடரக்கூடாதுனு தான் அப்போ அப்படி பண்ணினேன்..தர்ஷனை வேறு விதமா ஹாண்டில் பண்ணி அவனை வார்ன் பண்ணேன்..”

என்று விளக்கமாய் சொல்ல அன்று அந்த சில நிமிடங்களில் எவ்வளவு தூரம் யோசித்து இருக்கிறார் என்று அவனுக்கு வியப்பாய் இருந்தது.

 

“சரி கிளம்புங்க…ஏற்கெனவே டைம் ஆச்சு…கேர்ள் எதுல வந்தீங்க..தனியாவா..??இந்த நைட் நேரத்தில் உங்களுக்கு எதுக்கு இந்த வேலை..வீட்டில் என்ன சொல்லிட்டு வந்தீங்க…”

 

என்று நொடியில் ஸ்ரிக்ட் ஆபிஸ்ராய் மாறி அவன் கேட்க பெக்க பெக்க என விழித்தபடி எழுந்து நின்றனர் 

சந்தியாவும் ஏஞ்சலினும்…

‘வீட்டில் இருந்து வந்தோம்னு நினைச்சு கேட்கிறார்…இதுல நான் ஹாஸ்டலுனு தெரிஞ்சால் அம்புட்டுதேன்..கடவுளே…’

என்று சந்தியா கவலைக்கொள்ள இம்முட்டு அலபறைகளுக்கும் சற்றும் அசையாமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் சக்தி.

அவளை ஒரு பார்வை பார்ப்பதும் விஜயை பார்ப்பதுமாய் நின்றார்களே அன்றி வாயே திறக்கவில்லை.

அவர்களை பார்க்க சக்திக்கே பாவமாய் இருக்க

 

“ஹலோ..காலேஜ் உள்ள தான் நீங்க இவங்களை கேள்வி கேட்கலாம்..இப்போ என் கெஸ்ட் இவங்க..அவங்களை கேள்வி எல்லாம் கேட்க படாது…”

என்று அவள் கண்சிமிட்டி சொல்லி அவன் வாயை அடைக்க நன்றியுடன் பார்த்தனர் மற்ற நால்வரும்..

 

அதன்பின் முதலில் இவர்கள் கிளம்பியதும் விஜயும் கமலகண்ணனிடம் மனமாற தன் நன்றிகளை கூறிக்கொண்டு அங்கிருந்து ஹாஸ்பிட்டலிற்கு விரைந்தான்.

2 Replies to “சமீராவின் ‘இளங்காத்து வீசுதே’ – 28”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: