Tamil Madhura ஹஷாஸ்ரீயின் 'மீண்டும் வருவாயா' ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-1

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-1

மீண்டும் வருவாயா?

குழந்தைகளின் வருகை சொந்தங்களை இணைக்கும் என்றபோதிலும், குழந்தைகளை காரணம் காட்டி உறவுகளால் பிரிக்கப்பட்ட இரு மனங்களின் மௌனப்போராட்டம் தான் இங்கே நிகழ்வது. நம் வாழ்வில் மனிதர்கள் பின்பற்றும் நம்பிக்கைக்கும், மனித உணர்ச்சிகளுக்கும் இடையே நிகழும் இந்த பயணத்தில் விதி யாருக்கு துணை நிற்கப்போகிறது? அந்த போராட்டத்தில் பிரிக்கப்பட்ட அந்த இரு உள்ளங்கள் மீண்டும்  வாழ்வில் இணையுமா என்பதே “மீண்டும் வருவாயா?” கதையின் கரு.

1 – மீண்டும் வருவாயா?

 

குயில்களின் ஓசையோடு குழந்தைகளின் குறுநகையும் சேர்ந்தொலிக்க அந்த காலை வேளையில் மழலைகளின் செயலும், குறும்பும் அவர்களின் கள்ளங்கபடமற்ற புன்னகையும் பார்ப்போரை நின்று ரசிக்க செய்யும் தருணம். இவர்களை பிரிப்பதா என்ற ஏக்கம் சூழ பெருமூச்சுடன் தன் 6 வயது மகள் ஜீவிதாவை அழைக்க சென்றாள் நிர்பய நேத்ரா.

நேத்ரா, “ஜீவி குட்டி… விளையாடினது போதும் டா.. வந்து உன்னோட திங்ஸ் எல்லாம் கரெக்டா இருக்கா பாத்துக்கோ. அப்புறம் ஊருக்கு போனதுக்கப்புறம் என் பொம்மையை காணோம். என் புக்க காணோம்னு சொல்லக்கூடாது.”

விளையாட்டை பாதியில் விட்டுவிட்டு வேகமாக வந்து சலிப்புடன் தன் தாயின் முன் நின்ற ஜீவி “நீங்க பேக் பண்ணுங்க மா… நான் என் பிரண்ட்ஸோட விளையாடிட்டு வரேனே…?” என சலிப்புடன் ஆரம்பித்து சட்டென்று பவ்யமாக கேட்க நேத்ராவிற்கு சிரிப்பு வந்தது.

மெலிதான புன்னகையுடன் குழந்தையின் முன் மண்டியிட்டு அவள் கன்னம் தொட்டு “அதில்லடா செல்லம். நாம சென்னை போகப்போறோம். இனிமேல் அங்க தான் இருக்கப்போறோம். திரும்ப வந்து எல்லாம் எடுத்துட்டு போகமுடியாது. அம்மா ஓரளவுக்கு எல்லாமே எடுத்து வெச்சுட்டேன். ஏதாவது உன் திங்ஸ், டாய்ஸ், கிப்ட்ஸ் மிஸ் ஆகியிருக்கான்னு பாத்து சொல்லிட்டா மம்மி பேக்கிங் முடிச்சிட்டு வண்டில லக்கேஜ் அனுப்பிச்சுவெச்சுடுவேன்ல. அதுக்கு தான் கூப்பிட்டேன்.” என நேத்ரா விளக்கம் கூற

ஜீவியும் தன் தாயின் கன்னம் தொட்டு “அதேதான் மம்மி நானும் சொல்றேன். இனி போனா இங்க மறுபடியும் வரமுடியாது. அதனால இன்னைக்கு தானே என் பிரண்ட்ஸோட நான் இருக்கமுடியும். ப்ளீஸ் நான் அங்க போறேன். அதோட என் ஸ்வீட் மம்மி மேல எனக்கு நிறையா நம்பிக்கை இருக்கு, நீங்க எடுத்து வெச்சா எல்லாமே கரெக்ட்டா தான் இருக்கும்மா” என கன்னத்தில் இதழ் பதித்து தன் தாயை செல்லம் கொஞ்சிவிட்டு மீண்டும் விளையாட ஓடிவிட்டாள்.

இது போன்ற குழந்தைகளின் பேச்சை ரசிக்கவேண்டியவளோ குழந்தையின் செயலையும் இறுதியாக கூறியதையும் கேட்டு கடந்த கால நினைவில் அலைமோதிக்கொண்டிருந்தாள்.

 

[“என்னங்க, திங்ஸ் எல்லாம் பேக் பண்ணிட்டேன். ஏதாவது மிஸ் ஆகிருக்கான்னு பாத்துக்கோங்க.”

“என் ஸ்வீட் டார்லிங் நீ எடுத்து வெட்ச்சாலே போதும்டா.. எல்லாமே பெர்பெக்ட்டா இருக்கும். ஐ டிரஸ்ட் யூ பேபி.” என்று கன்னத்தில் ஒரு முத்திரையை அழுத்தமாக பதித்தான்.]

 

திடீரென ஹார்ன் ஒலி கேட்க கனவுலகில் இருந்து வெளிவந்தவள் பின் வேகமாக அனைத்தையும் எடுத்துவைத்தாள்.

அதன் பின் வேலைகளும் துரிதமாக நடக்க அனைவரிடமும் சொல்லிக்கொண்டு, மாலையில் நேத்ராவும்,ஜீவிதாவும் சென்னை புறப்பட்டனர். விளையாடிய களைப்பா, புது இடத்தில் இருக்கப்போகும் மகிழ்ச்சியா என அறியாமல் எந்த சஞ்சலமும் இல்லாமல் உறக்கத்திலும் புன்னகையுடன் உறங்கும் மகள்.

மகளின் தலையை வருடிக்கொடுத்தவள் மனதில் கேள்வி எழுந்தது

 

(மனமோ, “சென்னை புது இடம் இல்லையே…பழக்கப்பட்ட இடம் தானே.” வினா எழுப்ப

நேத்ரா, “அது எனக்கு, என் பொண்ணுக்கு அது புதுசு தானே?”  என மனதிற்கு

பதில் அளித்தாள்.

“அதெப்படி, அவ பொறந்ததும் அங்க தானே. உண்மையா அவ இருந்திருக்க வேண்டிய இடமும் அதுதான்.”

“ஆனா இந்த 6 வருஷம் கழிச்சு ஏன் இப்டி ஒரு பாதையை கடவுள் தந்தாரோ தெரில. ஜீவி விபரம் தெரிஞ்சதுல இருந்தே இங்க தான் இருக்கா. ஆனா அவளுக்கும் சென்னை போகணும்னு ஏன் ஆசை?”

“நீ என்ன தான் தூரமா விலகி வந்தாலும் விதின்னு ஒன்னு இருக்கு. அதோட விளையாட்டுல யாரும் தப்பிக்க முடியாதே. நம்ம வாழ்க்கைல ஏன் எதுக்குனே தெரியாம சில விஷயங்கள் செய்ய உந்துதல் வரும். சிலர் அத ஏன்னு தெரிஞ்சுட்டு செய்வாங்க. சிலர் அத செஞ்சிட்டு அப்புறம் காரண காரியங்களை தெரிஞ்சுப்பாங்க. உன் பொண்ணு மாதிரி. அவளுக்கு சென்னை புடிக்கும். அங்க இருக்கணும்னு எப்போவுமே ஒரு ஆசை. ஆனா ஏன்னு கேட்டா தெரியாது. அவளோட இடம்னு ஒன்னு இருக்கு. அத அவ தேடி போகணும்னு நினைக்கிறா. அதுல குறை சொல்ல முடியாதே.

அவ மட்டுமா அங்க போகணும்னு நினைக்கிறா? நீ ஆசைப்படல?”

“நானா? நான் ஜீவிக்காக தான் இந்த ட்ரான்ஸ்வர ஏத்துக்கிட்டேன். நான் போயி எப்படி?”

“ஆமா, உனக்கு பேங்க்ல இருந்து ட்ரான்ஸ்வர் வந்திருக்குன்னு சொன்னதும் நீ ஏன் ஜீவிதாகிட்ட சொன்ன. அவளுக்கு ஏற்கனவே சென்னை புடிக்கும்னு உனக்கு தெரியும். விஷயம் தெரிஞ்சா கண்டிப்பா அவ போலாம்மான்னு அடம்பண்ணுவான்னு தெரியும். இருந்தும் ஏன் சொன்ன? அதுவுமில்லாம நீயே சொல்ற இப்போவும் குழந்தைக்காக தான் இல்லாட்டி எப்படியாவது இந்த ட்ரான்ஸ்வர வேண்டாம்னு நீ மறுத்திருக்கலாம். அத நீ அவகிட்ட சொல்றதுக்கு முன்னாடியே பண்ணிருக்கலாமே..ஏன் பண்ணல? இதுக்கு முன்னாடி வந்த போது அத நீ அவாய்ட் பண்ணியே. இப்போ ஏன் பண்ணலனு யோசிச்சியா?”

“அது அங்க இருந்த ஸ்டாஃப்  கண்டிப்பா மாறிப்போகணும் பாமிலியோட இருக்கணும்னு கேட்டாங்க. அந்த இடத்துக்கு இப்போதைக்கு நான் போனாதான் அவங்க சீக்கிரம் மாத்திவிடுவாங்கனு கேட்டாங்க. அதனால தான் ஒத்துக்கிட்டேன்.” என தன்னிலை விளக்கம் தனக்கே கூற

மனமோ “இதெல்லாம் சும்மா சாக்கு தானே. நீ முடியாதுனு சொன்னா இன்னொருத்தர ட்ரான்ஸ்வர் பண்ணபோறாங்க. என்ன இன்னும்  ஒன்னு இரண்டு மாசம் டைம் எடுக்கும். அவ்ளோதான். உனக்கு அங்க போகணும்னு எண்ணம் இருக்கு. அது நீயா பண்ணாம குழந்தை கேட்டா வேற ஒருத்தர் ஹெல்ப் கேட்டாங்கன்னு காரணம் காட்டி போகப்பாக்குற. அவ்ளோதான்.. இது நீன்னு இல்ல. மனுசங்க எல்லாரும் பண்ற வேலை தான். நாம ஒரு விஷயத்தை ஏத்துக்கிட்டாலே அதுக்கு அடிமை ஆகுற மாதிரி யோசிச்சு கொழப்பிக்கிறீங்க. ஆமா இந்த விஷயத்தை எனக்கு பிடிச்சு தான் செய்றேன்னு வெளிப்படையா அவங்கவங்க மனசுக்கு கூட சொல்லிக்க மாட்டேங்கிறாங்க. வெளியாளுங்ககிட்ட சொல்லாம கெத்து காட்டுறதுதான் ஈகோனு இல்ல. நம்ம மனசுக்கே நாம உண்மைய சொல்லாம காரணங்களை சொல்லிக்கறதுகூட ஒரு வகையான ஈகோ தான். மனுசங்க ஒரு முடிவை எடுத்து உண்மையான பதிலை மறைச்சு அவங்களுக்கே சில காரணம் சொல்லிக்கிட்டு அதுல உறுதியா இருக்கோம்னு காமிச்சுக்க பாக்குறாங்க. ஆனா எப்போ அவங்க மனசுகிட்ட பதிலை சொல்லாம காரணம் தேட ஆரம்பிச்சாங்களோ அப்போவே அவங்க அந்த விஷயத்தை பாத்து பயந்துட்டாங்கனு தான் அர்த்தம். அதுகிட்ட தோத்திட்டாங்கனு தான் அர்த்தம். இத எல்லாரும் எப்போ புரிஞ்சுக்கப்போறாங்களோ தெரில. ஆனா நேத்ரா நீ எப்போ இருந்து அப்டி மாறின. இப்போ எல்லாம் நீ உண்மையா இருக்கறதில்ல. சொல்றது  செய்றது ஒன்னு. ஆனா அதுக்கான காரணம் ஒன்னு. பாக்கறேன் இன்னும் இதேமாதிரி எவ்ளோ காலத்துக்குனு. ஒன்னு நல்லா புரிஞ்சுக்கோ. நீ உனக்கு உண்மையா வெளிப்படையா இருந்தா விதினால வர பிரச்சனையா இருந்தாலும் மனசார எல்லாத்தையும் செய்ய அது ஒத்துழைக்கும். ஆனா அதுகிட்டேயே பொய் சொல்லி ஏமாத்த பாத்தா விதிகூட தன்னந்தனியா நீ மட்டும் தான் போட்டி போட வேண்டியது இருக்கும். உன் மனசு கூட உனக்கு சப்போர்ட் பண்ணாது.” என மனம் தன்னை இடித்துரைக்க,

நேத்ரா “உண்மையா? நான் முன்னமாதிரி இருக்கறதில்லையா? அப்போ நானும் இத ஆசைப்பட்டு தான் ஏத்துக்கிறேனா? எத எதிர்பார்த்து போறேன், இதுக்கு மேல அங்க எனக்கு என்ன இருக்கப்போகுது? என கேள்விகளுடன் உறக்கத்தை தொலைத்துவிட்டு சாலையை வெறிக்க தொடங்கினாள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-6ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-6

6 – மீண்டும் வருவாயா? அன்று அனைவரும் தத்தமது வேலைகளில் மூழ்கிவிட்டனர். நிருவிற்கு இன்னும் சிறுது வேலை இருக்க மாலை குழந்தைகளை அழைத்து வந்த பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என கோப்புகளை எடுத்துக்கொண்டே கிளம்பிவிட்டாள். நிருவை பார்த்ததும் ஜீவி, ஜீவா இருவரும் எப்போதும்

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-16ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-16

16 – மீண்டும் வருவாயா? இம்முறை அவளும் உடன் இருந்து வழியனுப்பி வைத்தாள். என்ன நினைத்தானோ முதன்முறையாக குடும்பத்தில் இருக்கும் அனைவரிடமும் தனித்தனியாக “நித்துவை பத்திரமா பாத்துக்கோங்க” என கூறிக்கொண்டே இருந்தான். அவர்கள் திட்டி அனுப்பாத குறை தான். அவன் மனமில்லாமல்

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-19ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-19

19 – மீண்டும் வருவாயா? காலை வீட்டிற்கு வந்தவன் குளித்து தயாராகி வெளியே வந்து அவன் பைக்கை எடுத்தவன் கோவிலுக்கு வரசொல்லிவிட்டு சென்றான். அங்கே அனைத்தும் தயாராக இருக்க வாசுகியிடம் வந்தவன் “அத்தை, நீங்க தான் குழந்தைக்கு பேர் வெக்கணும்” என