சமீராவின் ‘இளங்காத்து வீசுதே’ – 27

அத்தியாயம் 27

 

என்ன செய்தும் சக்திப்ரியாவின் படபடக்கும் மனதை கட்டுப்படுத்த முடியவில்லை.அங்கும் இங்கும் வீட்டையே காலையில் இருந்து அத்தனை முறை சுற்றி வந்தாகிவிட்டது ஆனால் சிந்தனை வேறெதிலும் செல்லாமல் என்ன நடக்க போகிறதோ..? என்பதிலே உழன்ற அரண்டவன் கண்களுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதாய் சின்ன சத்தம் கேட்டாள் கூட திகிலடைந்தாள்.

 

இதில் கமலகண்ணன் வேறு மதியம் அவர் அண்டாக்காகசம் அறைக்குள் நுழைந்தவர் தான் அதன்பின் ஆள் அரவமே இல்லை.

 

ஆம்! அவரது பூஜை அறைக்கு சின்ன வயசில் சக்தி வைத்த பெயர் தான் அண்டாக்காகசம் அறை.அதனுள் யாரையும் அனுமதிக்கவும் மாட்டார்.அதில் நுழைந்தால் அவ்வளவு எளிதில் வெளியே வரவும் மாட்டார் அதனால் அவ்வறையை சக்தி அப்படி தான் சொல்வாள்.

 

அவ்வறை வாசலையே சில நிமிடம் நின்று பார்த்தவள் ஓர் பெருமூச்சுடம் அங்கிருந்து நகர்ந்து அந்த கூடத்திலே ஒருப்பக்கம் இருந்த மரத்தால் ஆன ஜன்னல் கதவினை திறந்து வெளியே பார்த்தாள்.

 

மழை வரும் போலும்..!சற்று பலமான காற்றுடன் நன்றாக இருட்டி விட்ட வானில் மின்னல் வந்து வந்து போனது..

 

ஜன்னல் வழி வீசிய காற்றில் உடல் சிலிர்க்க முந்தானையை இழுத்து தோளில் போற்றியபடி அமைதியாய் வெளியே வெறித்தாலே அன்றி அந்த ரம்மியமான சூழலை இரசிக்க தோன்றவில்லை.

 

படபடப்பை மறக்கவே சிந்தனையை திசை திருப்ப நினைத்தவள் எண்ணம் விஜயிடம் வந்து நின்றது.

 

“அவர் அங்க எண்ண பண்றாரோ தெரியலேயே..அவர் அப்பா வேறு ஹாஸ்பிட்டலில் இருப்பதா ஏஞ்சலின் சொன்னாளே..கடவுளே அவருக்கும் ஒன்னும் ஆக கூடாது..”

 

என்று வேண்டலின் பின் விஜயை சுற்றியே வட்டமடித்தது அவள் மனம்..

 

அவன் மீது கோபமும் ஏக்கமும் சேர்ந்தே அவளை தாக்கியது.எப்பொழுது விஜய் பற்றி நினைத்தாலும் அப்படி தான்.எத்தனை வருட காத்திருப்பு இது..!நினைக்கும் போதே மெய்சிலிர்தது.அவன் எங்கிருக்கிறான் என்று தெரியாது..அவர் உறுபடியாய் ஒருவருக்கொறுவர் காதலை சொல்லிக்கவில்லை..இல்லை இவள் சொல்லவில்லை..இவர்கள் பிரிவிற்கும் ஒழுங்கான ஒரு காரணம் இல்லை……

 

இதனாலே திருமணத்தை மறுத்ததில் அவள் தம்பி யாரையேனும் விரும்பரியா என்று கேட்டபோதும் அவளால் விஜய் பற்றி சொல்ல முடியவில்லை.அதுவே அவன் மீது கோபத்தை கொடுக்கும்..கோபம் ஏக்கமாய் மாறி கடைசியில் கண்ணீரில் சென்று முடியும் அன்றைய பொழுது..! ஹப்பா..!! எத்தனை நாட்கள் இந்த அவஸ்த்தை..!!

 

எப்படி எந்தவித நம்பிக்கையும் இல்லாத காதலுக்கு எதனை பற்றுக்கோளாய் கொண்டு வீட்டாரிடம் இத்தனை நாள் போராடினாள் என்று அவளுக்கே ஆச்சரியம் தான்..! ஆனால்!

 

இத்தனை நாள் வருவான்..வருவான் என்று உறுதியாய் நினைத்துக் கொண்டு இருந்தால் தான்.. இன்று அதில் லேசாய் தடுமாற்றம்..!

 

‘இங்கே இருந்தும் என்னை தேடவில்லையே..அவர் மனசில் இன்னும் நான் இருக்கேனா..?இல்லையோ..நான் அவர் கடந்த காலத்தின் ஒரு அங்கம் மட்டும் தானோ..?அப்படி இருந்தால்..’

 

நினைக்க கூட மனம் உயிர்வதை அனுபவிக்க, 

 

“நான் எல்லாம் கவலை கிலோ என்ன விலைன்னு கேட்டுட்டு ஜாலியா சுத்தி திரிஞ்சேன்..அந்த சக்திப்ரியாவை போயட்டாள்..இப்போ இருக்கிறது சதாகாலமும் இந்த விஜயை எண்ணிக்கிட்டு அவருக்கே உருகுற விஜயின் சக்தி..!! இப்படி என்னை ஆகி வைச்சதுக்கே உங்களை தேடி வந்து உங்க தங்கச்சிக்கு பதில் நானே கொல்லப்போறேன்..”

 

என்று சிணுங்களோடு முணுமுணுத்தவள் பின்னே தான் சொன்னதை உணர்ந்து வாயின்மீதே, “தப்பு..தப்பு.. “என்று போட்டுக்கொண்டு, “தெரியாம சொல்லிட்டேன்..அவரை எந்த ஆபத்தும் நெருங்க கூடாது முருகா.. “என்று அவசரமாய் வேண்ட அதே நேரம் கிட்சனில் ஏதோ உருட்டும் சத்தம் கேட்டது.

 

“மாமா..வெளியே வந்திட்டாரா..?”

 

என்று எண்ணிக் கொண்டே,” மாமா.. “என்று அழைக்க பதிலில்லை.

 

யோசனையோடு கிட்சனை நோக்கி செல்ல கமலகண்ணன் அங்கே இல்லை.

 

கண்களை சுழற்றியவள் சிங்கின் அருகே பாத்திரம் எல்லாம் விழுந்து கிடப்பதை பார்த்து ‘இது தானா.. ‘என்று அதனை எடுத்து வைக்க குனிந்தவள் பின்னால் நிழலாடுவது தெரியவும்,

 

“ஒரு வழியா வந்துட்டீங்களா” என்று திரும்பியவள் கண்கள் விரிய உடல் விறைக்க கையில் இருந்த பாத்திரம் பட்டென்று கீழே விழந்தது.

 

கனலாய் சிவந்த கண்களோடு தன்னை தீபார்வை பார்த்து நின்ற பெண் சக்திஸ்ரீ உருவில் உள்ள அக்னிமித்ரா தான் என்று அவளுக்கு புரிய நொடிகளில் ஆகவில்லை..

 

“மி-மி-மித்ரா..”

 

என்று திண்றியவளை வைத்தவிழி எடுக்காமல் பார்த்து நிற்க உடலெங்கும் வேர்த்து விறுவிறுக்க வெக மூச்சுகளோடு பார்த்த சக்தி அவள் ஒரடி எடுத்து வைக்கவும்,

 

“மாமா..” என்ற அலறலோடு வெளியே ஓடினாள்.

 

“மாமா…மாமா காப்பாத்துங்க.. “

 

என்று பூஜை அறைக்கதவை தட்டியபடி கதறிய சக்திப்ரியாவின் பார்வை அவள் பின் தொடர்ந்து வருகிறாளா என்றே பதட்டமாய் அடுப்பாங்கறை வாசலிலே இருந்ததே அன்றி முதுகு பின்னால் கோரமாய் சிரித்தபடி நின்ற அக்னிமித்ராவை அவள் உணர்வே இல்லை.

 

கண்ணில் மரணபயம் அப்பட்டமாய் தெரிய படபடக்கும் இதயத்திற்கு ஈடாய் கைகளும் படபடவென கதவை தட்ட அதனை பார்க்க பார்க்க அக்னிமித்ரா கண்ணில் வெற்றி களிப்பு கூடியது.

 

காதருகே,” யாரை தேடுற சக்தி..என்னையா..?”

 

என்று கேட்டநொடி ‘வீச்..’ என்று கத்தி தடுமாறிக் கீழே விழுந்தாள்.எழ முடியாமல் கைகள் வழுக்க குரூரமாய் மாறிவிட்ட முகத்தோடு தன்னை நோக்கி மெல்ல அடி எடுத்து வைக்கும் அக்னிமித்ராவிடம் தப்பிக்க கை கால்களை நகர்த்தி பின்னடைய கையை பிசைந்த மித்ராவின் கையில் திடீரென்று கத்தி முளைத்தது.

 

“வேணாம் மித்ரா..ப்ளீஸ் விட்டுடு..நான்..நான் உன்னை என்ன பண்ணேன்..எதுக்கு இப்படி பண்ற..ப்ளீஸ் மித்ரா..”

 

என்று அழுகையோடு கெஞ்ச எக்கரித்து சிரித்தவள்,

 

“என்ன பண்ணியா..எனக்கு ஃப்ரெண்டாக நடிச்சு ஏமாற்ற நினைக்கல..?எனக்கு புடிக்காத அந்த விஜய்காக என்னை ஏமாற்ற நினைக்கல..”

 

என்று கத்தியை சுத்தியபடி நிதானயாய் கேட்க மறுத்து தலையசைத்தவள், “நீ தப்ப நினைக்கிற மித்ரா..” என்றாள் மூச்சு வாங்க..

 

“நான் நினைக்கிறது எப்பவுமே சரிதான்..நான் எந்த சந்தோஷமும் அனுபவிக்கல.எனக்கு இந்த உலகத்துல எந்த சந்தோஷமும் கிடைக்கல…எனக்கு கிடைக்காத சந்தோஷம் உங்க யாருக்கும் கிடைக்க கூடாது..நான் இல்லாத உலகத்துல நீங்க யாரும் இருக்க கூடாது..”

 

ஒவ்வொரு வார்த்தைக்கும் அவள் குரல் உயர “இருக்க கூடாது.. “என்னும் போது இடியென முழங்கியவள் கத்தியை ஓங்கி அவள் மீது குத்த முனைய நூலிடையில் உருண்டு மறுப்பக்கம் நகர்ந்துவிட்டாள் சக்திப்ரியா..

 

அக்னிமித்ரா போன்ற உள்ளங்களை என்றும் திருப்தி படுத்த இயலாது.ஏனெனில் அவர்கள் தங்களுக்கு கிடைத்த வரங்களை மறந்து அடுத்தவர்களின் சிறு சந்தோஷத்தில் கூட பொறாமை கொள்பவர்கள்.அந்த உள்ளங்கள் பிறருக்காக மகிழாது.அந்த சந்தோஷத்தை தட்டி பறிக்கவோ இல்லை தள்ளிவிட்டு பார்க்கவோ தான் ஆசைப்படும்.மகிழ்ச்சியோ வெற்றியிலோ தன்னை சுற்றி உள்ள அனைவரும் தனக்கு கீழ் தான் அதில் இருக்க வேண்டும் என்ற சேடிஸ்ட் எண்ணம் கொண்ட இத்தகைய உள்ளங்களை திருத்தவும் முடியாது.

 

தான் நின்ற இடத்தில் இருந்து தலையை மட்டும் வளைத்து திரும்பி பார்த்த அக்னிமித்ரா கோணலான சிரிப்போடு, “தப்பிச்சிடுளான்னு நினைக்கிறியா..ஹாஹாஹா..உன் சாவை நான் உறுதி பண்ணிட்டேன்..தப்பிக்க வாய்பில்லை சக்தி..” என்று ஆங்கரமாய் குரலிட்டு கத்தியை வீச பட்டென்று எழுந்தவிட்ட சக்தியின் முந்தானையில் கீறி கிழித்தது.

 

வீட்டின் நுழைவு வாயிலை நோக்கி ஓடியவள் சாத்தியிருந்த கதவை திறக்க முயல வேர்வையில் நனைந்திருந்த கைகளோ வழுக்கியது.பின்னால் அதே சிரிப்பு சத்தம் அவள் சப்த நாடியையும் ஒடுக்க பலம் கொண்டு தாழபாளை திறந்த நொடி வெளியிருந்து கதவு படாரென திறக்கபட கதவில் மோதி கீழே விழுந்தாள்.

 

இடித்த இடத்தில் சுர்ரென்று வலி ஏற, “அம்மாஆஆ..” என்று கண்களை மூடி வலியில் அலற,

 

“சக்தி..சக்தி..என்னாச்சு” என்று கேட்ட ஆண் குரல் அவளை மெய் சிலிர்க்க வைத்தது.வேகமாய் தோளை ஒரு வலிய கரம் சுற்ற மற்றொரு கை அவள் கன்னத்தை தட்டியது.

 

“விஜய்..விஜய்..வந்திட்டார்..”

 

மனம் கூப்பாடுப் போட கண்கள் அருவியாய் கண்ணீர் மழைப்பொழிய இமை பிரித்தவள் கண்டு விட்டாள்.

 

‘பார்க்கவே மாட்டோமா’ என்று ஏங்கி தவித்த அவன் முகத்தை பார்த்துவிட்டாள். 

 

அச்சம் விரவிய கண்களும் தோய்ந்து துவண்டு போன வதனத்தில் பதட்டம் அப்பியிருக்க தொண்டை குழி ஏறியிறங்க தோளில் இருந்த அவன் கரம் நடுங்கியது.அது அவளுக்கே அவளுக்கான பயம்..தன்னவளுக்கு ஏதும் நேர்ந்து விட்டதோ என்ற பயம்..!!

 

அவனை காணும்போது ஏதேதோ சொல்ல திட்ட எண்ணியிருந்த அனைத்து மறைந்து கண்ணீர் மட்டுமே பொங்க அழுகையில் வெடித்தாள்.தானாய் அவன் கண்களிலும் கண்ணீர் ஊற்று.அழும் அவளை தேற்றகூட நா எழவில்லை.

 

விஜயின் முகத்தில் தெரிந்த அந்த பாவனை அக்னிமித்ராவை நிறைத்தது.

 

‘இது தான்… !இது தான் அவனிடம் அவள் எதிர்பார்த்தது..!அவனை கொன்னு போட்டால்கூட இந்த மகிழ்ச்சி கிட்டியிருக்காது.ஆனால் தற்போது ஏக திருப்தி..!’

 

அதில் முகம் விகல்பமாய் விரிய வெளியே இடியும் மின்னலுமாய் சடசடவென விழும் மழைக்கு ஈடாய் பயங்கரமாய் சிரித்தாள் அக்னிமித்ரா.நக்கல், எகத்தாளம்,கர்வம் எல்லாம் நிரம்பி வழிய அப்படி ஒரு சிரிப்பு..!!

 

‘போதும்..இது போதும் எனக்கு…’

 

குரலை ஏற்றி இறக்கி சொன்னவள் “கடைசியாய்..முற்று புள்ளியாய் உங்க உயிர்..அத்தோட என் தாண்டம் முடிந்திடும்,,தனி தனியா அனுப்ப நினைத்தேன்..சேர்ந்தே போக நினைத்தாலும் சந்தோஷம் தான்..”

 

என்று கத்தியபடி விஜய், சக்திமேல் பாய இருந்தவள் கால்கள் தரையில் வேறுன்ற அரை இஞ்ச்கூட நகரவில்லை.

 

அவள் வேறேதுவும் சிந்திக்குமுன் நெற்றியில் கண்களுக்கு மேல் இரண்டு விரல்கள் அழுத்தமாய் படிய அதுக்கொடுத்த அழுத்தம அவளுக்கு மின்சாரம் தாக்கியது போல் வலித்தது.

 

“சக்தி..முழிச்சுக்கோ..நான் பேசுறது கேட்குதுல..முழிச்சுக்கோ..”

 

என்று ஆழுத்தமாய் கர்ஜனையாய் உடலை தூக்கிப்போடுவது போல் ஓர் கட்டளை குரலில் கூறினார் கமலகண்ணன்.காலையில் சாந்தமாய் சாதாரணமாய் இருந்த அவர் முகம் முற்றிலும் மாறி வேறு ஒருவர்ப்போல் இருந்தார். கண்களில் அத்தனை தீர்க்கமும் தீட்சணியமும் காண்போரை கட்டிப்போடும் வல்லமை கொண்டிருந்தது.

 

“மாமா..” என்று முணுமுணுத்தபடி எழுந்து நின்ற சக்திப்ரியாவையோ அவளை தொடர்ந்து பதட்டத்தோடு எழுந்து நின்ற விஜயையோ அவர் ஏறெடுத்தும் பார்க்கவில்லை.சக்திஸ்ரீயின் மீது மட்டும் தான் நிலைக்குத்தி நின்றது. அருகில் போக நினைத்த விஜயை கைப்பிடித்து தடுத்த சக்திப்ரியா வேண்டாம் என்பது போல் தலையசைத்தாள்.

 

அதே நேரம் படபடவென காலடி சத்தங்கள் பின்னாடி கேட்கவும் திரும்பி பார்க்க சந்தியா,ஏஞ்சலின், ஆரியன், மனோஜ் தான்.

 

விஜயிக்கு தகவல் சொல்ல அழைத்த ஆரியன் விஜய் குரலில் தெரிந்த பயத்தை கண்டு ஏதோ நடக்கபோவதை உணர்த்து  அவனது ஆணையை மீறி தானும் அங்கே செல்ல முடிவெடுத்திருக்க மற்றவர்களும் அவனோடு இணைந்துக் கொண்டனர்.

 

உள்ளே நுழைந்தவர்கள் கமலகண்ணனின் பிடியில் துடிக்கும் சக்தியை கண்டு,

 

“சக்தி!!!!!!!!!!!!”

 

என்ற அலறலோடு அருகில் வர ஒரு எட்டு எடுத்து வைக்க நிமிர்ந்து கமலகண்ணன் விசிய ஒற்றை பார்வையில் அப்படியே தேங்கினர்.

 

“அந்த ஆன்மாவை உதறு..உன் உடம்பில் தாங்காதே..நீ நினைக்கிற மாதிரி அக்னிமித்ரா நல்லவள் கிடையாது..அவள் உன்னை ஏமாற்றுகிறாள்..அவளுக்கு பாவம் பார்க்காதே..உன்னை சேர்த்து கொன்றுவிடுவாள்..உதறு சக்தி..முழுமனசா உதறு..”

 

என்று வாயால்  கட்டளையிட மனதில் தொடர்ந்து மந்திரங்களை ஜபித்தார்.

 

ஆம்..!அவர் சொல்வது உண்மை தான்.சக்தியின் துணையில்லாமல் அக்னிமித்ராவால் அவளை ஆட்கொள்ள இயலாது.அவள் சிறைப்பட்டு இருந்த இடத்தில்(சி ப்ளாக்) இருந்து மீட்டது சக்திஸ்ரீ தான் என்பதால் அவளை தவிர பிறரின் உடலிலும் புகமுடியாது. அதனால் சக்தியை தனக்கு சாதகமாக்க தனக்கு ஏற்றார்ப்போல் உண்மையை மாற்றி சொன்னாள்.சக்தி மனதில் தனக்கான அனுதாபத்தை ஏற்படுத்தி ஆழமாய் பதிய செய்தாள்.

 

அவள் நினைத்ததுப்போல் மென்மையான மனம் கொண்ட சக்திஸ்ரீ அவள் கதையை கேட்டு மிகவும் பாதித்தாள்.அவளுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணமும் பதிந்துவிட்டது.

 

அதன் பிறகு ஆரியன் பேச்சை கேட்டு ஒதுங்கி போக நினைத்தாலும் அவள் ஆழ்மனதில் பதிந்துவிட்ட எண்ணம் அக்னிமித்ரா தன்னை ஆட்கொள்ள முனையும் போது மறுக்க மறுத்தது.அதனை பயன்படுத்தியே தான் நினைத்தபடி அவள் உடலை ஆட்டிவைத்தாள் அக்னிமித்ரா..

 

இதனை சரியாக கணித்த கமலகண்ணன் சக்திஸ்ரீயை தட்டி எழுப்ப தொடர்ந்து போராட இறுதியில் அவருக்கே வெற்றி கிட்டியது.ஆம்..!! மெல்ல மெல்ல கண்கள் சொருக மயக்கநிலையை சக்திஸ்ரீ எய்த உடல் தளரவும் அக்னிமித்ரா அதில் நிலைக்க முடியாமல் தூக்கி வீசப்பட்டாள்.

One Reply to “சமீராவின் ‘இளங்காத்து வீசுதே’ – 27”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: