Advertisements

முபீன் MSK – கண்ணாமூச்சி ஆட்டம் – 15

கண்ணாமூச்சி – 15

கதவை திறந்து உள்ளே சென்றவன் அவளை பார்க்க  நெற்றியில் இருந்து பின்தலை வரை கட்டு சுற்றப்பட்டு , இடது கையில் ட்ரிப்ஸ் ஏறி கொண்டிருந்தது. அவள் அருகில் சென்று நாற்காலி போட்டு அமர்ந்தவன். அவள் தலைமுடியை வருடி கொண்டே வலது கையை பிடித்துக்கொண்டு அவளயே பார்த்தான்.  துரு துரு வென தாவி கொண்டிருந்த மீன் கண்கள் இரண்டும் இன்று ஓய்ந்து தூங்கிக்கொண்டிருந்தது. சிவப்பும் வெள்ளையும் கலந்த நிறம், சிறிய நாசி , உதட்டில் சாயம் பூசாமலே அவ்வளவு சிவப்பு  வெள்ளை கழுத்தில் ஒட்டி கொண்டிருந்த சிறிய செயின் , அதற்கு மேல் வர்ணிக்க சற்று சிரமப்பட்டான். எப்புடி இருந்தாலும் எங்கயோ பழகிய உணர்வு அதுவே அவளிடம் அவனை உரிமையாய் இருக்க செய்தது ஆனால் அவனுக்கு எங்கே எப்போது என தெரியவில்லை. சிறிது நேரம் கழித்து அவள் கையில் இருந்து  கையை எடுக்க இப்போது அவள் பிடித்து கொண்டாள். அவள் செய்கையில் சிரித்தவன் அவளை பார்க்க அவள் மெதுவாக கண் திறந்தாள்.

“ஹே…”
“ம்ம்ம் “
“இன்னும் வலிக்குதா”
“லைட்டா”
“சரி அப்போ ரெஸ்ட் எடு”
“நீ இங்கயே இரு” ஒரு சிறிய புன்முறுவளுடன் ….
“ஆமா ராகுல் யாரு”
“மீனு யாரு”
இருவரிடமும் ஒரு சேர்ந்த புன்னைகை பரிமாற
“தூங்கு அப்பறம் பேசலாம்”
“போகாத இங்கயே இரேன் ப்ளீஸ்”
நீண்ட பெருமூச்சை விட்டவன் அவள் அருகில் அமர்ந்து
“மீனு நீ நினைக்குற மாறி நா இல்ல சரியா”
“சரி , பரவால்ல “
“நீ பாக்குற முதல் பையன் நா ..நீ. எனக்கு எத்தனனு சொல்ல முடியாத நம்பர்”
“பரவால்ல இருக்கட்டும்”
“எனக்கு உன்ன விட நாலு வயசு அதிகம்”
“அப்போ நா டுவேல்த் முடிச்சதும் கல்யாணம் பண்ணிக்கலாம்”
“என்ன பத்தி உனக்கு என்ன தெரியும்”
“உன்ன மட்டும் தெரிஞ்சா போதும்”
“நா நல்லவன்லாம் கெடையாது”
“நா திருத்திக்குரன்”
“எனக்கு உன் அளவுக்கு வசதியும் கெடையாது”
“பரவால்ல, நீ என்ன கஷ்டப்படுத்த மாட்ட எனக்கு தெரியும்”
“நா உன்ன புடிச்சுருக்குன்னு சொன்னான”
“என்ன எல்லாருக்கும் பிடிக்கும்”
“பிடிக்குறது வேர இது வேர உன் வயசுக்கு இதலாம் ரொம்ப அதிகம்”
“எனக்கு பிடிச்ச பொருள நா ஃபஸ்ட் புக்கிங் பண்ணிட்டேன்”
“நா எத்தன பொண்ணுங்க கூட பழக்கம் இருக்குனு தெரியுமா”
“சொல்லு தெரிஞ்சுக்குறேன்”
“நா உன்ன லவ் பண்றனு சொன்னான இல்ல உன் பின்னாடி அலஞ்சனா, எனக்கு நீயும் மத்த பொண்ணுகளும் ஒன்னு தான்”
“ஓ யாரோ ஆட்டோல வரும்போது அழுத்துட்டே வந்தாங்க, கீழ விழும்போது மீனு மீனு பதருனாங்க, இதலாம் நீங்க எல்லா பொண்ணுங்களுக்கும் செஞ்சின்களா ம்ம்ம்”
“……………………..”
“என்ன சத்தத்தை காணும்”
“மீனு இதலாம் உன் வயசுல வர சின்ன அட்ராக்க்ஷன் , அத விட்டுட்டு உன் லைஃப் ஆ பாரு கொஞ்ச நாள்ல என்ன பாக்கலான மறந்துருவ புரிஞ்சுதா, இந்த வருஷம் முடிஞ்சா நா போயிருவன் அப்ரோம் நார்மல் ஆகிடும் சரியா”
அவள் கண்கள் கலங்கி தொண்டை கம்ம
“ஓ அப்போ ஏன் ஒரு வருஷம் இப்போவே போ” வாய் தான் கூறியதே தவிர கையை மேலும் இறுக்கி கொண்டாள்…
“நெஜமாவே போயிருவியா”
“………………”
“நீ தான் என்கூட கடைசி வரைக்கும் இருக்க போர எனக்கு தெரியும்” கண்கள் முழுவதும் கலங்கி கட்டுக்குள் செல்ல
“சரி சரி இருப்பேன் அழாத ,நீ இந்த அளவுக்கு டீப்பா இருக்குறதுக்கு நா ஏதும் பண்ணல நமக்கு முன்னாடி பழக்கமும் இல்ல பின்ன ஏன் இப்புடி நடந்துக்குற”
“எனக்கு தெரில”
“சரி தூங்கு , நா எங்கயும் போகாம இங்கயே இருக்கேன் போதுமா”
“போ மாட்டல்ல” அவள் இரண்டு அர்த்தங்களில் கேட்க மௌனமாக அமர்ந்தான்.

சிறிது நேரம் கழித்து கண் விழிக்க அவள் அம்மா அழுகையுடன் பார்த்து கொண்டிருந்தார். விழித்ததும் அருகில் சென்று
“அம்மாடி என்னடா ஆச்சு , பாத்து போ வேணாமா , ரொம்ப வலிக்குதா , பசிக்குதா ஏதாச்சும் சாப்பிட வேணுமா ” சிறிய முறுவளுடன்
“என் மேல அவ்ளோ பாசமா இல்ல அப்பா உன்ன அடிபாருன்னு கேக்குரியா”
“உன் தலையில அடிப்பட்டதுக்கு வாயில பட்டுருந்தா தேவலாம் கொஞ்ச மாச்சும் அடங்குதா”
“அம்மா”
“ம்ம்ம் “
“பசிக்குது” எந்த அம்மாக்கும் பிள்ளையின் மீது கோவம் இருந்தாலும் பசி என்ற ஒரு சொல் அனைத்தையும் நீக்கிவிடும் அல்லவா…
“என்னமா வேணும் , ஜூஸ் வேணுமா இல்ல பால் குடிக்குரியா”
“ம்ம்ம் சரி ” அவள் சாப்பிட்டு கொண்ட
“ராகுல் எங்கம்மா”
“யாருடி  ராகுல் ” சூழ்நிலை அறிந்தவள்
“அதானே யாரு ராகுல் , சரி ஆண்ட்டி எங்கம்மா அங்கிள் வந்தாரா கூட யார் வந்தா ” அவனை பற்றி கூறுவார் என எதிர்பாக்க
“அவங்க வரும்போது நீ தூங்கிட்டு இருந்தமா , பாத்துட்டு போய்ட்டாங்க கூட யாரும் வரல , அந்த அருண் தம்பி வந்துச்சு”
போக மாட்டேன்னு சொல்லிட்டு போய்ட்டான்

“வைஷு நாளைக்கு தீபாவளி வேர இப்புடி ஆச்சு வீட்டுல எல்லாம் போட்டது போட்டபடி கிடக்கு நீ மாத்திர போட்டு தூங்கு நா காலைல வந்து பாக்குறேன் இருந்தாலும் உன்ன தனியா விட பயமா இருக்கே “
“எனக்கு ஒன்னும் இல்லம்மா , நீ போ எனக்கு என்ன சிங்கிள் ரூம் டிவி வேர இருக்கு ஏசி இருக்கு எனக்கு ok தான்”
“ஏதோ பிகினிக் வந்த மாறி பேசுற, சரி ஒழுங்கா இரு எதுவா இருந்தாலும் கால் பண்ணு சரியா அம்மா காலைலயே வந்துரன் , அப்பாக்கும் சொல்லிடுறான் காலைல பேசலாம் பாத்துமா ” கூறிவிட்டு அவர் சென்று விட்டார்.
“பொறுக்கி போ மாட்டனு சொல்லிட்டு போய்ட்டான் பிராடு 420 வரட்டும் வருவான்ல  பாதுக்குரன் ” சிறிது நேரம் டிவி பார்த்தவள் கண் அசர தூங்கிவிட்டாள்.

பின் தாகம் எடுக்க,  வீட்டில் உள்ள நியாபகத்தில் கையை துழாவா ஒரு கை பிடித்ததும் சுதாரித்தாள் அது அவன் தான் என தெரிந்ததும்
“ஐயோ என் ரூம்ல என்ன பண்றான்” கேக்க வேகமாக எழுந்தவள் தலை வலிக்கவும் சுய நிலைக்கு வந்தாள். அவள் தலையில் கைவைத்த படி அமர அருகில் வந்தவன்
“என்னமா தல இன்னும் வலிக்குதா” கேட்டுக்கொண்டே  அவளை தொட அவள் வேகமாக தட்டி விட்டாள். காரணம் புரிந்தவன்
“ஏன்டி நீ மட்டும் பாலு ஜூஸ் ஆப்பிள்னு சாப்டுவ நா பட்டினியா இருக்கணுமா”
“சாரி சாரி , சாப்டியா ” கேட்டுக்கொண்டே மணி பார்க்க அது ஒன்று என காட்டியது அவள் அம்மா சென்றபோது பதினொன்று.
“ம்ம் சாப்டன் சாப்டன் , மாத்திர போட்டில செறி தூங்கு”
“ஏன் மறுபிடியும் ஓடுறதுக்கா”
“எம்மா தாயே எங்கயும் போல இங்க தான் இருப்பேன் நீ தூங்கு “
“எனக்கு தூக்கம் போயிடுச்சு நாம ஏதாச்சும் பேசலாமே நீயே பேசு”
“அப்புடியே போட்டன்னா , ஒரு மணிக்கு பேசனுமா ஒழுங்கா படு ” படுத்தவள் அவனை கண் அசைவில் கூப்பிட அருகில் வந்து அமர்ந்தவன் அவளை பாக்க
“ஐ லவ் யூ” இதை முற்றிலும் எதிர் பாராதவன் அவள்  சொன்னதும் இமைக்காமல் அவளையே பார்க்க அவள் உலுக்கியதும்
“ம்ம்ம் ம்ம்ம் தூங்கு “
“நீயும் சொல்லுடா”
“மீனா சொன்ன புரிஞ்சுக்க மாட்டியா ,பாத்த ரெண்டு மாசத்துல லவ்னு சொன்ன எல்லாரும் சிரிச்சுரவாங்க அதும் இப்புடி மயகத்துலயும் பேர் சொல்ற மாறி  டீப் லவ்னு சொன்னா விழுந்து விழுந்து சிரிப்பாங்க”
அவன் கூறிய நிமிடம் அமைதியாக இருந்தவள் பின் அழ தொடங்கினாள் அதை பார்த்து கடுப்பானவன்
“உள்ள ஏதாச்சும் பால்ஸ் வச்சிருக்கியாடி ஆனா ஊணா பொத்துகிட்டு ஊத்துது” மேலும் அழ “ப்ளீஸ்டி அழாத இன்னும் தல வலிக்கும் ப்ளீஸ் ” சிறிது அமைதியானவள்
“யாரு சொன்னா ரெண்டு மாசம்னு ஆறு  வருஷமா தெரியும்” 
“எது ஆறு வருசமா”
“ம்ம்ம் “என்றவள் அவன் புருவத்தில் இருந்த தழும்பினை தடவ விழிகள் விரிந்தவன்
“அடியே கருப்பட்டி நீயா ……? “

Advertisements

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: