சமீராவின் ‘இளங்காத்து வீசுதே’ – 26

அத்தியாயம் 26

 

கமலகண்ணனின் வீட்டில்.!!

 

சக்திப்ரியா தனக்கு தெரிந்தவரை நடந்ததை சொன்னவள்,

 

“என்னவோ நடக்க போதுனு அப்போவே தெரியும்..ஆனால் மறுநாளே அக்னிமித்ரா இறந்தது அப்புறம் அஸ்வதனும் அந்த பொண்ணும் திடீர்னு காணாமல் போனது எல்லாம் அடுத்தடுத்த செய்தியாய் கேள்வி பட்டு இதில் ஏதோ தொடர்பு இருப்பதை உணர முடிந்தது.ஆனால் விஜய் என்னிடம் பேசவே இல்ல..என்னை அரவே அவாய்ட் பண்ணினார்..இதில் நான் என்ன அவரை பண்ணினேன்னு தெரியல..அது எனக்கு ரொம்ப ஹர்டிங் ஆ இருந்துச்சு..கொஞ்ச நாள் கழித்து அவர் வெளி நாடு போயிட்டதாக கேள்வி பட்டேன்..அதுதான் அவரை பற்றி கடைசியா எனக்கு கிடைத்த தகவல்..”

 

என்னும் போதே குரல் கமற பேச்சை நிறுத்தினாள்.அவள் சொல்லாமல் விட்டது விஜயின் நினைவில் அவள் அரவுயிராய் வாழ்ந்ததை..அவனிடம் தன் காதலை சொல்லவில்லை தான் ஆனால் மனசு முழுக்க அவனுக்காக தன் காதலை சுமந்திருந்தாள் அப்பாவை.

 

அவனிடம் அதனை ஒத்துக்கொள்ள ஏதோ தயக்கம்.அதனாலே அதனை சொல்லாமல் தள்ளிப்போட இடையில் நடந்த சம்பவங்களில் அதற்கு வாய்ப்பே இல்லாமல் போனது.

 

அவன் கண்டிப்பாக தன்னை தேடி வருவான் என்ற நம்பிக்கையிலே அவள் இருக்க வருடங்கள் ஓடினது தான் பயன்.வீட்டில் திருமணம் குறித்து பல சண்டைகள் நடந்தாலும் எதற்கும் அசையாமல் விஜயின் சக்தியாகவே இருந்தாள்.ஆனால் அவன் மீது காதல் எவ்வளவு உள்ளதோ அதே அளவு கோபமும் இருந்தது தன்னை அவன் தேடாததில்..

 

வீட்டில் யாருக்கும் இவள் காதல் விவரம் தெரியாவிட்டாலும் அனைத்தும் அறிந்தவர் கமலகண்ணன் மட்டுமே..இவளுக்கு உறுதுணையாய் இருந்தவர் இப்பொழுது சக்திப்ரியாவிற்கு திருமணம் செய்வது உகந்தது அல்ல என்று ஒரே சொல்லாய் சொல்லிவிட தற்காலிகமாய் அந்த பிரச்சனை நின்றிருந்தது.திறந்த வாய் மூடாமல் அதிர்ச்சியோடு கேட்டுக் கொண்டிருந்தனர் சந்தியாவும் ஏஞ்சலினும்..

 

“தன் உயிரே போனாலும் அடுத்தவன் உயிர் போக அவர் நினைக்க மாட்டார்.மித்ரா சொன்னது எல்லாம் அவள் ஜோடித்த கதை தான்..அந்த மனுஷனின் அன்புக்கு அவள் கொஞ்சம் கூட அவள் தகுதியே இல்லாதவ..அவரை எப்படி சொல்லி இருக்கிறாள்..விஜய் எவ்வளவு பாசம் வைத்திருந்தார் என்பதை கண்கூடாய் பார்த்தவள் நான்..ஆனால் செத்தும் அவரை சித்திரவதை செய்கிறாள்..இவளை ஒன்னும் செய்ய முடியாத மாமா..

 

அக்னிமித்ரா அடுத்து என்ன செய்வான்னு தெரியல..எப்படி மாமா அவளை தேடி கண்டுப்பிடிக்கிறது..அவ விஜயை எதுவும் பண்ணிடுவாளோன்னு பயமா..பயமா இருக்கு மாமா..”

 

சக்திப்ரியாவின் குரலே நடுங்க கமலகண்ணனின் கையை பற்றிக்கொண்டு மிரட்சியோடு கேட்க ஏதோ தீவிர சிந்தனையில் இருந்தவரை சந்தியாவும் ஏஞ்சலினும் ‘எதாவது சொல்ல மாட்டாரா என்று பார்க்க ..’

 

“அவளை நாம தேடிப்போக அவசியம் இருக்காது சக்தி..உன்னை தேடி அவளே வருவாள்” என்றார் அமைதியாக..

 

“எ—என்னையா..?”

 

“ஆமா..நான் நெனச்சிட்டு இருந்தது உண்மையாகிவிட்டது.உனக்கு இப்போ ஆபத்து இருக்கு கல்யாணமெல்லாம் இப்பொழுது வேண்டாம்னு நான் உனக்காக மட்டும் சொல்லல..அது உண்மையும் தான்..உன் உயிருக்கு ஏதோ ஒரு தீய சக்தியினால் ஆபத்து வரும்ன்னு கணித்து இருந்தேன்..முன்னாடி சொல்லி எச்சரித்து வைத்தால் உங்களுக்கு பயம் தான் அதிகமாகும்னு முழுசா சொல்லாமல் மேலோட்டமாய் சொன்னேன்..இந்த விஷயத்தை வைத்து பார்க்கும்போது இந்த பெண் உன்னையும் நாடித்தான் அலையுது..அப்போ உன்னை பழித்தீர்க்க வரும்..”

 

என்று சொல்ல கண்களை உருட்டி பயத்தில் முழித்த சக்தி,

 

“நான் அவளை என்ன செய்தேன் மாமா..”

 

என்று அழுதுவிடுபவள் போல் சொல்ல “விஜய் கூட அவளை ஒன்னும் செய்யவில்லையே..!!எல்லாம் அவ மனச்சு தான்..அதில் அவளாய் வளார்த்துக்கொண்ட வன்மம்..இப்போ விருட்சமாகி விஸ்வரூபமாய் இருக்கு..நியாயம் அநியாயம் எல்லாம் பார்க்கும் நிலையில் அந்த பெண் இல்ல..”

 

என்றவர்,

 

“நீ இன்னைக்கு இங்கேயே இரு சக்தி…அதற்கு பிறகு நடப்பதை நான் பார்த்துக் கொள்கிறேன்என் வட்டத்துக்குள் வந்துவிட்டாள் போதும்…விடிக்கின்ற பொழுதில் அவள் இந்த பூமியில் இருக்க மாட்டாள்..”&

 

என்று அவர் கூற அது மலையளவு தெம்பைக் கொடுத்தது.ஏனெனில் கமலகண்ணன் எளிதில் வாக்கு கொடுக்க மாட்டார்.ஆனால் சொன்ன வாக்கு உண்மையாகாமல் இருந்தது இல்லை.அந்த நம்பிக்கையோடு சரி என்று தலையாட்டினாள்.

 

“கேட்கலாமா வேண்டாமா ”என்று ஒருவரையோருவர் பார்த்து முழித்தவர்கள்,

 

“அப்போ எங்க சக்தி..?”

 

என்று முடிக்காமல் இழுக்க லேசாய் இதழ் மலர்ந்து,

 

“அந்த பெண் நலமுடம் திரும்பி வருவாள்..நீங்க கவலை படாமல் போங்க..”

 

என்று சொல்ல,“ சக்தியை பார்க்கும் வரை எங்களுக்கு ஒன்னுமே ஓடாது சர்..நாங்களும் இங்கே இருக்கட்டுமா..”

 

என்று கேட்டதற்கு மறுத்து தலையசைத்தவர்,

 

“இல்லம்மா..நீங்க இருப்பது சரிவராது..நானே மீண்டும் கூப்பிட சொல்வேன்..”

 

என்று கூறவும் அவர் வார்த்தையை ஏற்று கிளம்பி வெளியே வந்தவர்கள் மீண்டும் சக்திப்ரியா அலுவலகம் சென்று ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினர்.

 

இதன் இடையே மறுபடியும் மனோஜின் எண்ணிற்கு அழைத்துப் பார்த்தாள் ஆனால் எடுக்கப்படவில்லை.எங்கே அது தான் வி.எஸ் வில்லாவில் சிதறிக் கிடக்கிறதே..!!

 

“என்னடி ஃபோனே எடுக்க மாட்டேங்குறங்க..அந்த ஆரியன் அண்ணன் நம்பர் நம்மகிட்ட இல்லை..விஜய் சாரை அவங்க தப்பா தானே நினைச்சிட்டு இருப்பாங்க அவங்களுட்ட உண்மையை சொல்லனும்..ஆனால் அவங்க எங்க இருகாங்கனு தெரியலயே..”

 

என்று ஏஞ்சலின் புலம்ப, “ஆமா..மணி இப்போவே மதியம் 12 ஆச்சு..என்ன செய்வது..?”

 

என்று சந்தியாவும் யோசித்து,

 

“காலேஜ் போய் மதியம் க்ளாஸை அட்டென் பண்ணுவோம்..ஒருவேளை நம்மை தேடி அவங்க அங்க வந்திருக்கலாம்..”

 

என்று கூற “அதுவும் சரி தான்..” என்று அமோதித்தாள் ஏஞ்சலின்..

 

அதேசமயம் அங்கே கல்லூரியில் ஏஞ்சலினையும் சந்தியாவையும் தேடி சென்றவர்களுக்கு அவர்கள் இன்று கல்லூரி வரவில்லை என்ற செய்தியே கிடைக்க,

 

“என்னடா இது..இந்த புள்ளைங்க எங்க போயிருக்கும்..?”

 

என்று ஆரியன் சொல்ல, “நம்பர் வேற அந்த ஃபோனோடே போயிருச்சு..இல்லேனா கால் பண்ணியாவது விசாரிச்சு இருப்போம்..”- சலிப்பாய் மனோஜ்,

 

அவனை மேலும் கீழும் பார்த்த ஆரியன்,

 

“ஏஞ்சல் நம்பர் தான் மனனமா தெரியல..அட்லீஸ்ட் உன் ஆள் நம்பராவது மைண்டில் வைத்திருக்க வேண்டாம்?”

 

என்று கேட்க பெருமூச்சு விட்டு “ஆமா நாங்க எப்பவும் ஃபோனிலே கொஞ்சி குழாவிட்டு இருக்கோம்..ஃபிங்கர் டிப்பில் நம்பர் வைச்சிருக்க நீ வேற ஏண்டா வயித்தெறிச்சலை கிளப்புற..”

 

என்று அலுப்புடம் கூற சிரித்தவன்“ நீ இப்படி இருந்தால் மிங்கிள் ஆகவே முடியாது..காலத்துக்கும் சிங்கிள் தான்டி மாப்பிள்ளேய்..”

 

என்று நக்கலாய் கண்சிமிட்டியவனை “அடேய்.. ”என்று இவன் அடிக்க கையோங்க அப்பொழுது சற்று தொலைவில் வந்துக் கொண்டிருந்த சந்தியாவையும் ஏஞ்சலினையும் பார்த்துவிட்டனர்.

 

“ஹே அங்க பார்.. ”என்று அவனை இழுத்துக் கொண்டு அவர்களை நோக்கி செல்ல,

 

“ஹப்பாடி நீங்க இங்க தான் இருக்கீங்களா..ஃபோன் பண்ணினால் எடுக்க தெரியாதா..?”

 

என்றாள் சந்தியா..

 

“அது மிஸ் ஆகிடுச்சு..உங்களுக்காக தான் வெய்டிங்..ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்..”

 

என்று ஆரியன் சொல்லவர,“ அதைவிட நாங்களும் ஒரு முக்கியமான விஷ்யத்தை சொல்ல தான் ஓடி வந்தோம்..”

 

என்று ஏஞ்சலின் சொல்லி,

 

“விஜய் சர் நல்லவர் ப்பா.. ”என்று அவளும்

“ விஜய் சர் எந்த தப்பும் பண்ணல..” என்று அவனும் ஒரே நேரத்தில் கூற நால்வர் முகத்திலும் ஆச்சரியம்..

 

“ஹே..உங்களுக்கு எப்படி தெரியும்..?”

 

என்று அவர்கள் கோரஸ் போட்டதில் அங்காங்கே இருந்த மாணவர்கள் எல்லாம் திரும்பி பார்க்க,

 

“ஷ்..மெதுவா..சரி சொல்லுங்க..நேத்தி போனீங்களே என்னாச்சு.. ”என்று ஆரம்பித்து தங்களுக்கு தெரிந்ததை பறிமாரிக்கொண்டனர்.

 

நடந்ததை முழுவதுமாய் அறிந்துக்கொண்ட சந்தியாவும் ஏஞ்சலினும் அதிர்ந்து இருந்தார்கள் என்றால் சக்தியை காப்பாற்றிவிடலாம் என்று கமலக்கண்ணன் சொன்னதும் சக்திப்ரியாவை பற்றி தெரிந்துக்கொண்டதும் இவர்களுக்கு அத்தனை மகிழ்ச்சி..

 

அதை குரலில் தேக்கி, “அப்போ சக்திப்ரியா மேடமுக்கு மேரேஜ் ஆகவில்லையா..?”

 

என்று ஆரியன் கேட்க, “இல்லண்ணா.. அவங்க சொல்லல தான்..பட் அவங்க விஜய் சரை தான் இன்னும் நினைச்சுட்டு இருக்காங்கன்னு அவங்க அவருக்காக பேசினதுலே தெரிந்தது..”

 

என்று யோசனையாய் சொன்ன ஏஞ்சலின், “அந்த அக்னிமித்ராவால தான் இவங்களுக்கு இத்தனை பிரச்சனை.. ”என்றாள் எரிச்சலாய்..

 

“இதை உடனே விஜய் சரிடம் சொல்லணும்.. ”

என்று ஆரியன் பரபரக்க மனோஜோ, 

 

“மறுபடியும் அவர் முன்னாடி நாம வந்தால் உண்டு இல்லேன்னு ஆகிடுவார்..வரக்கூடாதுன்னு சொன்னார்ல..”

 

என்று சொல்ல அதற்கு அசால்ட்டாய் தோளை குலுக்கிய ஆரியன்,

 

“நேர்ல தானே வரக்கூடாதுன்னு சொன்னார்..நாம ஃபோன் பண்ணுவோம்..விஜய் சர் நம்பர் கிடைப்பது கஸ்டமா என்ன..?”

என்றான்.ஆனால் அவ்வளவு எளிதில் கிடைக்கவில்லை.

 

*

 

*

 

*

 

மருத்துவமனையில் களைத்து சோர்ந்து ஒருநாளிலே ஆளே மாறியது போல் இருந்தான் விஜய்வரதன்.கண்ணில் ஒரு பொட்டு தூக்கமும் இல்லாது தண்ணீர்கூட அருந்தாது ஐ.சி,யு வாசலையே பார்த்தபடி அமர்ந்திருந்தவனை காணும்போது கீதா இன்னமும் உடைந்து போனார்.கணவன் ஒருபுறம் மகன் ஒருபுறமும் என்று தத்தளித்தவர் மனம் விடாது கடவுளையே பிரத்தனை செய்தது.

 

மற்றவர்களை நேற்ற அனுப்பிவிட்டு தற்போது அவனும் கீதாவும் இவர்கள் மெய்காப்பாளர் இருவர் மட்டும் இருக்க பொதிய டெஸ்ட் எல்லாம் எடுத்துக் கொண்டு அறுவை சிகிச்சையை தொடங்க மாலையாகி இருந்தது.

 

“அப்பாவை எதுவும் செஞ்சிட கூடாதே”

 

என்பது மட்டும் அவன் மனதில் ஓடிக்கொண்டிருக்க ஐ.சி.யூவையே வெறித்துக் கொண்டிருந்த விஜயின் உள்ளுணர்வு ஊந்த எதர்ச்சையாய் திரும்பியவன் அங்கே ஒரு தூணின் பின் பாதி உடல்மட்டும் தெரியும்படி ஒரு பெண் நிற்பது தெரிந்தது.

 

ஒரு பார்வையிலே அது சக்திஸ்ரீ (அக்னிமித்ரா) என்று புரிந்துவிட சட்டென்று எழுந்தவன் “ம்மா..ஒரு நிமிசம்.. ”என்று சொல்லிக்கொண்டே அவர் பதிலை எதிர்பாராது தூணை நோக்கி விரைய அங்கே யாரும் இல்லை.

 

இடுப்பில் கையூண்ரியபடி சுற்றும் முற்றும் பார்த்தவன் அந்த தளத்தில் கீழே செல்லும் படிக்கட்டில் கடைசி படியில் நின்று இவனை அனார்ந்து பார்த்து அமானுஷ்யமாய் சிரித்தாள்.

 

கிட்டதட்ட அறுபதிற்கும் மேல் படிகள் இருக்கும்..அத்தனையையும் வேகமாய் எதிர்படுவோரை தள்ளிக் கொண்டு தாவி இறங்க அவன் கடைசி படியை அடையும் போது அவள் வாசலை தாண்டி சென்றிருந்தாள்.

 

“மித்ரா..நில்லு ”என்று கூப்பிட்டுக் கொண்டே அவன் பின்னால் செல்ல வெளியே வந்தது அவள் எங்கே மாயமானாள் என்று தெரியவில்லை.

 

முகத்தை அழுத்த துடைத்துக்கொண்டு மூச்சு வாங்க அங்கும் இங்கும் ஓடி தேடியவன் கால்கள் பலமிழ்ந்தது.உடலில் உள்ள மொத்த சக்தியும் வடிந்ததுபோல் தளர கண்கள் இருட்டவும்,

 

“விஜய்..விஜய்..மயங்கிடாத..பீ ஸ்ராங்க்விஜய்.. ”என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டவனுக்கு தலை சுற்றுவது போல் இருக்கவும் உள்ளம் கலங்க,

 

“மித்ரா..வேணாம் ப்ளீஸ்..இதோட நிறுத்திக்க..உனக்கு நான் தான் பிரச்சனை என்றால் இப்போவே வேணாலும் என்னை கொன்னுக்க மித்ரா..நீ கேட்டால் உயிரை கொடுக்கவும் தயங்க மாட்டேன் பாப்பா..சாவ சொன்னாலும் சந்தோஷமா உன்கூட வரேன்..ஆனால் வேற யாரையும் எதுவும் பண்ணாத..சக்திஸ்ரீ சின்ன பொண்ணு மித்ரா..அவளை விட்டுவிடு..”

 

என்று தொண்டை அடைக்க கெஞ்சியவன் கால்கள் தோய்ந்து அங்கே மண்டியிட மெல்ல அவன் செவி அருகே,

 

“சக்திய..காப்பற்றனுமா..”

 

என்று கேலியாய் ஒரு குரல் கேட்க சட்டென்று அந்த பக்கம் திருப்பியவனுக்கு இன்னும் கொஞ்ச தொலைவில் தெரிந்தாள் சக்திஸ்ரீ..

 

“வா..வா..வந்து காபாற்று..முடிந்தால் காப்பாற்று ச.க்.தியா..”

 

என்று அங்கிருந்தே இவனை நோக்கி கைநீட்ட மீண்டும் எழுந்து ஓட்டினான் ஒரு பைத்தியகாரனை போல்..

 

அருகில் வந்தபோது வழக்கம்போல் அவள் இல்லை.ஆனால் மீண்டும் செவியருகே குரல் மட்டும்,

 

“சந்தானம் போய் சக்தி வந்தாச்சு..டும் டும் டும்ஹாஹ்ஹா..டும்..டும்..டும்..”

 

என்று கேலி செய்து சிரித்தது.சந்தானத்தின் நிலையை எண்ணியவன் உடல் தூக்கிவாரி போட்டது.அவன் சக்திஸ்ரீயை தான் எண்ணி இருந்தான்.சக்திப்ரியாவாய் இருக்குமோ  என்று அவனுக்கு சிறு சந்தேகம் கூட எழவில்லை.

 

சந்தானம் அங்கிளை போலவே இந்த சிறுபெண்ணையும் எதாவது செய்வாளோ என்று நினைக்கும் போது உடல் நெருப்பாய் தக்கிக்க,

 

“அந்த பொண்ணு உனக்கு என்ன பாவம் செய்தால் விட்டுவிடு மித்ரா..”

 

என்று கத்தினான் ஆத்திரமாய்..

 

“வந்து காப்பாத்து இல்ல காவுக் கொடு உன் சக்திய..”

 

என்று அழுத்தமாய் கேட்ட குரலை எங்கும் தேடி பார்த்தான் ஆனால் மீண்டும் அவன் கண்களுக்கு எங்கும் தென்படவே வில்லை.

 

“என்ன செய்வேன்..எங்கேன்னு போய் தேடுவேன்..கடவுளே எனக்கு நீயாவது வழிக்காட்டு…”

 

என்று கூப்பாடுப்போடும் மனதோடு அதே இடத்தையே சுற்றி சுற்றி இண்டு இடுக்கு விடாமல் தேட வானம் இருளை பூசி இரவாக தயாரானது.

 

விஜயின் விடாது புலம்பல் கடவுளின் காதுகளை எட்டியதோ என்னவோ அவன் அலைபேசி அலறியது.சந்தானம் பற்றியும் அலைபேசி மூலம் தான் தெரிய வந்ததால் இப்பொழுது மறுமுனையில் என்ன காத்திருக்கிறதோ என்ற பயத்தோடு அழைப்பை ஏற்றான்.

 

“சர்..நான் ஆரியன் பேசுறேன்.. ”

One Reply to “சமீராவின் ‘இளங்காத்து வீசுதே’ – 26”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: