பொய் சொல்லாத மனிதன் – ஆப்பிரிக்க நாட்டுப்புறக் கதை

ரு காலத்தில் மமத் என்ற பெயரில் ஒரு புத்திசாலி வாழ்ந்தார். அவர் ஒருபோதும் பொய் சொன்னதில்லை. தேசத்திலுள்ள எல்லா மக்களும், ஏன் அங்கிருந்து இருபது நாட்கள் தொலைவில் வாழ்ந்தவர்களும் கூட அவரைப் பற்றி அறிந்திருந்தார்கள்.

அந்நாட்டு மன்னர் மமத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு, அவரை அரண்மனைக்கு அழைத்து வரும்படி தனது குடிமக்களுக்கு கட்டளையிட்டார். 

மமத் வந்தவுடன் அவரைப் பார்த்து “மமத், நீங்கள் ஒருபோதும் பொய் சொல்லவில்லை என்பது உண்மையா?” என்று கேட்டார்

“இது உண்மை.” என்று பணிவுடன் பதிலளித்தார் மமத் 

“உங்கள் வாழ்க்கையில் நீங்கள் ஒருபோதும் பொய் சொல்ல மாட்டீர்களா?”

“ஆம். அதில் நான் உறுதியாக இருக்கிறேன்.”

“சரி, உண்மையை மட்டுமே சொல்லுங்கள், ஆனால் கவனமாக இருங்கள்! பொய் தந்திரமானது, அது உங்கள் நாக்கில் எளிதில் வரும்.” என்று கூறி அவரை வழியனுப்பி வைத்தான் மன்னன். 

இருந்தபோதும் மமத்தின் உறுதியைக் கலைத்து  அவரைப் பொய் சொல்ல வைக்க வேண்டும் என்ற பொல்லா எண்ணம் அம்மன்னனின் மனதில் தோன்றிவிட்டது.

பல நாட்கள் கடந்துவிட்டன, மன்னர் மீண்டும் மமத்தை அழைத்தார். ராஜா வேட்டைக்கு செல்வதற்கு அடையாளமாக அவரைச்  சுற்றிலும் ஒரு பெரிய கூட்டம் இருந்தது. மன்னர் தனது குதிரையை இறுக்கிப்பிடித்திருந்தார், அவரது இடது கால் தரையில் ஊன்றியிருந்தது. அவர் மமதிடம் கட்டளையிட்டார்:

“மமத் என் கோடை அரண்மனைக்குச் சென்று ராணியிடம் நான் மதிய உணவிற்கு வருவேன் அதனால் பெரிய விருந்து ஒன்றை ராஜா ஏற்பாடு செய்யச் சொன்னார் என்று சொல்லுங்கள். நான் வரும்வரை அங்கு தங்கியிருந்து நீங்களும் என்னுடன் மதிய உணவு சாப்பிட வேண்டும்.” என்றார்

மமத் கட்டளையைஏற்றுக்கொண்டு கோடை அரண்மனையிலிருந்த ராணியிடம் தகவல் தெரிவிக்கச் சென்றார். 

பின்னர் மன்னர் சிரித்துக் கொண்டே சொன்னார்:

“நாங்கள் வேட்டையாடப் போவதில்லை, இப்போது மமத் ராணியிடம் பொய் சொல்வார். நாளை அவரிடம் நாம் அவரை ஏமாற்றியதை சொல்லி  சிரிப்போம்.”

ஆனால் புத்திசாலி மமத் அரண்மனைக்குச் சென்று கூறினார்:

“மஹாராணி ஒருவேளை  நீங்கள் நாளை மதிய உணவிற்கு ஒரு பெரிய விருந்து தயார் செய்ய வேண்டி வரலாம், ஒருவேளை  ராஜாவின் மனம் மாறினால் இன்று மதியத்திற்குள் வருவார், அப்படி வந்தால் இன்றே விருந்து ஏற்பாடு செய்ய வேண்டியிருக்கும்”

“அவர் என்று வருவார் என்று சொல்லுங்கள் இன்றா இல்லை நாளையா?” – ராணி கேட்டார்.

” எனக்குத் தெரியாது, அவர் தனது வலது கைகளால் குதிரையில் கிளம்புவதர்க்குத் தயாராகப் பிடித்திருந்தார், ஆனால் இடது பாதம் தரையில் இருந்தது. நான் சிறிது தூரம் சென்று திரும்பிப் பார்த்தபோது அவர் தனது இடது பாதத்தை நன்றாக ஊன்றித்  தரையில் வைத்தார்.” என்றார் மமத்.

எல்லோரும் ராஜாவுக்காக காத்திருந்தார்கள்.

ராஜா தனது திட்டப்படியே  மறுநாள் வந்து ராணியிடம் கூறினார்:

“ஒருபோதும் பொய் சொல்லாத புத்திசாலி மமத் நேற்று உன்னிடம் ஒரு பொய் சொன்னார்.” என்றார் சிரித்தபடி 

“நான் அப்படி நினைக்கவில்லை” என்று பதில் சொன்ன ராணி  மமத்தின் வார்த்தைகளைப் பற்றி அவரிடம் சொன்னாள்.

ஞானி ஒருபோதும் பொய் சொல்லமாட்டான் என்பதை ராஜா உணர்ந்தான், அவன் தன் கண்களால் பார்த்ததை மட்டும் சொல்கிறான். மற்றவர்களின் பேச்சைக் கண்மூடித்தனமாக நம்புவதில்லை. 

Tags:

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

விவசாயியும் தரித்திரக்கடவுளும்விவசாயியும் தரித்திரக்கடவுளும்

தன்னுடைய வறுமையை விரட்ட இந்த விவசாயி செய்த ஐடியாவைப் பாருங்கள் குழந்தைகளே. இதைத்தான் தெய்வப் புலவர் திருவள்ளுவர் தெய்வமே முடியாது என்று சொன்னாலும் நம்ம முயற்சி செய்தால் அதற்கு பலன் இல்லாம போகாதுன்னு சொல்லிருக்கார். இனிமே எனக்கு கணக்கே வராது சைன்ஸ்

அழகு குட்டிச் செல்லம் – சிறுவர் கதைஅழகு குட்டிச் செல்லம் – சிறுவர் கதை

  கதைகளை உடனடியாகப் படிக்க http://www.tamilmadhura.com தளத்தைப் பின் தொடருங்க. Download Premium WordPress Themes FreeDownload WordPress Themes FreeDownload WordPress Themes FreeDownload WordPress Themesfree download udemy coursedownload lava firmwareFree Download WordPress Themesonline free