Advertisements

முபீன் MSK – கண்ணாமூச்சி ஆட்டம் – 14

கண்ணாமூச்சி – 14

“…….ராகுல்…..”

அன்று அவள் அடிபட்டு கிடக்கையில் அழைத்த போது இருந்த  அதே வலி, ஏக்கம் ,காதல்,சந்தோசம்  என அனைத்தும் கலந்து இருந்தது. வைஷு அழுவது மட்டும் கேட்க அதற்கு மேல் முடியாமல் போனை கட் செய்துவிட்டு வேகமாக அருகில் இருந்தவனிடம் விசாரித்து அந்த கடையினுள் நுழைந்தான்.

“டாஸ்மாக் பார்”

உள்ளே சென்று வாங்கியவன் ஏதும் கலக்காமல் அப்படியே குடித்தான். எட்டு வருடங்களாக குடிக்காமல் இருந்தவனால் குடித்ததும் போதை தலைக்கு ஏறியது. கூடவே அவள் கூறியதும் ஏறியது.

“நீ குடிப்பியாடா”
“ம்ம்ம் புல்லா குடிப்பேன்”
“ஏதோ பால் குடிப்பேன் மாறி சொல்ற “
“ஏன் அதுவும்…………”அவன் வாயை மூடியவள்
“நீ என்ன சொல்லவரனு தெரியும் மூடு ” அவன் விசமமாய் சிரிக்க
“என்ன சிரிப்பு நீ என்ன சிரிச்சாலும் ஒன்னும் நடக்காது , செறி எத்தன நாள் குடிப்ப “
“வாரத்துக்கு ஒரு தடவ “
“ஓ “
“என்னடி ஓ நீயும் எல்லார மாறியும் குடிக்காதே குடிச்சா பேச மாட்டனு கண்டிஷன் போட போறியா”
“நா அப்புடி சொன்னான உனக்கு புடிச்சருக்கு நீ குடிக்குற அத நா ஏன் வேணான்னு சொல்லணும்”
“………”
“என்ன முழிக்குற “
“நீ ஏன் செல்லம்மா இப்புடி இருக்க”
“எப்புடி”
“அதான் இப்புடி….நீ இது மாறி இருந்தா நா எப்புடி திருந்துவன் நா தப்பு பண்ண நீ கேட்க  மாட்டியா”
“நா ஏன்டா கேட்கனும் உனக்கு என்ன தோணுதோ அத செஞ்சுக்க, நீ திருந்தணும்னா உனக்கு தான் தோணனும் , செரி நீ எப்போ லாஸ்ட்டா சிகரெட் அடிச்ச”
“மூணு வாரம் ஆச்சு”
“ஏன் மூணு வாரமா பண்ணல”
“தெரில ,தோணல பண்ணல “
“அதே தான் உனக்கா தெரிஞ்சா  தான் விடுவ ,நா சொன்ன எப்புடி கேப்ப”
“ஹேய் கேடி நடிக்காத நீ கேட்டதுல இருந்து தான் சிகரட் அடிக்கிறது இல்ல, அப்புடி என்னடி பண்ண “
“அதலாம் வைஷு சீக்ரெட் செல்லம்”
“சொல்லுடி “
“அதுபா நா கண்டிசன் போட்டா என்ன பண்ணுவ கொஞ்ச நாள் குடிக்க மாட்ட அப்புறம் சண்ட வந்தா வேணும்னே குடிப்ப , அதுவே  எனக்கு பிடிக்காத உன்ன பன்ன சொன்னா எப்பயும் நீ தொட கூட மாட்ட எந்த நேரத்துலயும்.. இனிம பாரு நீ குடிக்கும் போது என் நெனப்பு வந்தா பாதிலே தூக்கி போட்றுவ”

அவள் கூறியது போலவே நடக்க அதிலிருந்து குடியையே விட்டவன், இன்று தொட பாதியிலே அவள் கூறியது நினைப்பு வர “ஆ ஆ ஆ ” என்று  பைத்தியம் போல் கத்திவிட்டு அங்கயே பாட்டிலை உடைத்துவிட்டு வந்தான். குடித்தால் கவலைகள் மறக்கும் என்பார்கள் , குடித்தால் தான் கவலைகள் அதிகம் வரும் என்பது அதை குடிபவர்களுக்கே தெரியும்.

மருந்து வாடையும் டெட்டாயில் வாடையும் சேர்ந்து ராகுலுக்கு வயிற்றை பிரட்டியது..அவனுக்கு ஆஸ்பிட்டல் என்றாலே அலர்ஜி அதும் இந்த வாடைக்காகவே வராமல் இருந்தவன் தன்னவளுக்காக வெளியில் காத்திருந்தான். அவளின் இரத்தம் படிந்த முகமும் அவள் தன்னை அழைத்த பெயரும் மட்டுமே அவன் மனதில் ஓடியது.

கரண்ட் வந்ததும் மேலே இருந்த அருண் ராகுல் வராமல் இருக்க என்னவென பாக்க வந்தவன் இவர்கள் இப்படி இருந்ததும் பார்த்தவன் வெளியில் சென்று ஆட்டோ ஏதேனும் அழைத்து வர போனான் பக்கத்து வீட்டில் இருக்கும் ரேகாவின் அண்ணன் அப்போது தான் சவாரி முடித்துவிட்டு வந்தார். அவரிடம் விஷயத்தை கூறி வர சொன்னான். உள்ளே ராகுல் வைஷுவை கட்டி அழுத்துக்கொண்டிருந்தான்.

“டேய் வாடா ஆஸ்ப்பிட்டல் போலாம் சுந்தர் அண்ணாட்ட சொல்லிருக்கேன்” அவன் கூறியதும் கேக்காமல் அழுதவனை பார்த்தவன் கடுப்பில் முதுகில் வேகமாய்    அடித்தான்.
“டேய் தூக்கிட்டு வாடா ரத்தம் எவ்ளோ போயிருக்கு பாரு” அருண் இரத்தம் என்றதும் இயல்புக்கு வந்தவன் அவளை தூக்கிக்கொண்டு ஆட்டோவில் ஏறினான், அருண் முன்னே உக்கார்ந்துகொள்ள ஆண்ட்டி எதிரில் வந்தவர் விஷயத்தை அறிந்து அவள் பெற்றோரிடம் கூறுவதாக கிளம்பி சென்றார்.

ராகுல் அவளின் முகத்தை  துப்பட்டாவாள் கண்ணில் நீருடன் துடைத்துக்கொண்டே வர வைஷுவோ தன் இடத்தை அடைந்த திருப்தியினில் அவன் மார்போடு இறுக்கி அணைத்து கொண்டாள். அன்று பண்டிகை நாள் என்பதால் அருகில் கிளினிக் ஏதும் இல்லாமால் போக வேறு வழியின்றி ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

வந்தவர்கள் அவளை ஸ்டெச்சேரில் படுக்க வைக்க தூக்க வைஷு ராகுலை விடாமல் மேலும் இறுக்கி கொண்டாள். அதை பார்த்த அனைவரும் சிரிக்க “தம்பி நீயே தூக்கிட்டு போயிருப்பா அந்த பொண்ணு உன்ன விடுறதா இல்ல”  அவனும் தூக்கிக்கொண்டு சென்று பெட்டில் கிடத்தினான் . அவள் பிடியினுள் இருந்து கஷ்டப்பட்டு கையை எடுத்தான். அப்போது அவள் மெதுவாக கண்களை திறக்க “நா வெளில தான் இருக்கேன் ஒன்னுமில்ல ” கூறிவிட்டு செல்ல அவன் கையினை பிடித்து கொண்டாள் வலியினால் கண்கள் திறக்க முடியாமல்  கண்களை மூடிக்கொண்டாள். இதனை பார்த்து கொண்டிருந்த மருத்துவர் சைகையினால் இரண்டு நிமிடம் என்று கூறியவர் மயக்க மருந்தினை போட சொன்னார். மயக்கத்திலும் ராகுல் கைகளை விடாமல் பிடித்து கொண்டிருந்த அவளை பார்த்த டாக்டர் ” என்ன தம்பி அவ்ளோ லவ்வா மயகத்துலயும் கைய விட மாட்ராங்க 15 மினிட்ஸ் வெளில இருங்க பாத்துட்டு சொல்றேன் ” அவர் கூறியதும் வெளியில் நின்று அவளை பார்த்து கொண்டிருந்தான்.

வெளியில் வந்தவன் அப்போதுதான் தன் சட்டையை பார்க்க நீல நிற ஆடை முழுவதும் சிவப்பாக மாறி இருந்தது. அவள் வலியினை நினைத்து வருந்தியவன் வலியிலும் அவள்  தன்னை விடாமல் இருந்ததை நினைத்து சிரித்தான்.  அருண் எங்கேவென தேட அவன் கையில் ரசிதோடு வந்தான்.

“மச்சா பில் கட்டியாச்சு வேர எதுனா இருந்தா கட்டிக்கலாம் ” அவன் கூற பில்லினை பார்க்க அதில் பத்தாயிரம் என்று இருந்தது . “டேய் என்னடா பத்தாயிருவாய”
“பின்ன சும்மானு நினைச்சியா இது high-tech ஆஸ்பிட்டல் அப்புடித்தான் தனி தனி ரூம் வேர அதான் “
“சரி அதுக்கு காசு என்னடா பண்ண அவ்ளோ காசு ஏது உனக்கு “
“அதுவா அப்பா கடைக்கு எடுத்து வச்சிருந்த காசு என்ன வீட்டுல குடுக்க சொன்னாரு அந்த பைசா தான் , நீ கவலபடாத அப்பாட்ட பேசிட்டேன் அவரும் ok னு சொல்லிட்டாரு”
ராகுல் அவனை நன்றியுடன் பார்க்க
“என்ன மச்சான் thanks ஆ அவளுக்காக நீ அழுத்துலயே தெரிஞ்சுருச்சு. ஆனா நம்ப முடியல மச்சான்  பீலிங்க்ஸ் ஆ அதும் நீயா,  பணத்துக்கு நொம்ப பீல் பண்ணாத 2நாலுள்ள காசு வந்தாகனும் “
“காசா எதுக்கு தரணும் உன் தங்கச்சிக்கு நீ செலவு பண்ற நடுல நா எதுக்கு போடா டேய்” அவன் நர்மலாய் பேசியதும் சிரித்து கொண்டே “செறி மச்சான் நா போய் வைஷு வீட்டுலயும் ஆண்ட்டியும் கூப்பிட்டு வர , அவள பாத்துக்கோ பாத்து மச்சா இது ஆஸ்பிட்டல் கண்ட்ரோல்டா ” அவன் சீரியஸ் ஆக பேசி நக்கலாக முடிக்க அவன் முதுகில் போட்டவன் வழி அனுப்பிவிட்டு வரவும் டாக்டர் வரவும் சரியாக இருந்தது .

“மேம் இப்போ ok தானே “
“அதலாம் ஒன்னும் இல்லப்பா நார்மல் தான் , ப்ளட் தான் அதிகமா போயிருச்சு , அதுக்கும் ரெடி பண்ணியாச்சு , இன்னும் half-hour ல கண்ணு முழிச்சுறுவாங்க ஆமா உங்க பேர் தான் ராகுலா….?”
“ஏன் மேம் என்னாச்சு இல்ல மயகத்துலயும் அதான் சொல்லிட்டு இருக்காங்க”
“நா போய் பாக்கலாம”
“sure போய் பாருங்க”

மேலே இரத்த வாடை அடிக்க அருகில் இருந்த வாஷ் ரூமில் நுழைந்து தன்னை சரி படுத்திக்கொண்டு உள்ளே சென்றான்.

Advertisements

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: