நினைவெல்லாம் நீயே கண்ணம்மா – 25

மாறன் அடக்கப்பட்ட கோபத்துடன் செல்வாவை தீயென முறைத்துப் பார்க்க…
அதற்கெல்லாம் அசர மாட்டேன் என்பது போல் அவனும் தனது திமிரைக் காட்டும் வகையில் மாறனை ஏறிட

” எங்க ஊர்ல நடந்த கொலைகளுக்கு எதிரா கம்ப்ளைண்ட் கொடுக்க வந்துருக்கேன் சார்  ” என்றான் மாறன்…

அவனை ஒரு எள்ளலான பார்வையில்
” கொலையா…. உங்க ஊர்ல கொலை நடந்துருக்கா… சரி எப்போ எங்கே நடந்துச்சுனு விவரமா சொல்லு பாப்போம்”
என்றான் செல்வா…

அவனின் இந்த அலட்சியப் பேச்சு உள்ளுக்குள் மிகுந்த எரிச்சலை வரவழைத்தாலும் பொறுமையாக
” சார் ஒரு மாசத்துக்கு முன்னாடி பர்வதம் அப்பறம் குணா இவங்க ரெண்டு பேருக்கும் நடந்தது கொலைதேன்… அதே மாதிரி இன்னைக்கு நந்தனும் தீபாவும் தூக்குல தொங்கிட்டு இருந்தா மாதிரி இருந்துட்டு ஆனா..எனக்கு நல்லா தெரியும் அது கொலைதேன்னு”
என்றான் உறுதியான குரலில்…

செல்வா : அப்படியா… இப்போதேன் எனக்கு தகவல் வந்துச்சு இந்த நாலு பேரும் தற்கொலை பண்ணிக்கிட்டாவனு… ” என்றான் அசுவாரசியமாக…

மாறன் ” அதெப்படி சார் குணா பர்வதம் பத்தி கூட தற்கொலைனு சொல்லிடலாம்.. ஆனா நந்தனும் தீபாவும் மரத்துல தொங்கிட்டு இருந்தது தெரிஞ்சதுமே ஒன ப்ரண்டஸ் வந்து என்னட்ட சொல்லிட்டாங்க…நா இங்க வர்றதுக்குள்ள அது உங்களுக்கு தற்கொலைதேன்னு யார் அவ்ளோ கரெக்டா சொன்னது… ” என்று கேட்க…

அந்த கேள்வியில் திருதிருவென முழித்த செல்வம் பிறகு ஒருவாறு தன்னை நிலைப்படுத்தி
” ஆமா இது பெரிய சிதம்பர ரகசியம் பாரு… எங்களுக்கு இதப்பத்தி தகவல் வந்துருச்சு… நா ஸ்பாட்டுக்கு வர்றதுக்காக தான் கிளம்பிட்டு இருக்கேன்… அதுக்குள்ள நீ வந்துட்ட ” என்று சமாளித்தான்…

மாறன் : அப்படியா சார்.. டேபிள்ல இருக்க பாதி சாப்பிட்ட பிரியாணி அப்பறம் உங்க கை கழுவாம சாப்பாடு ஒட்டிட்டு இருக்கு அதுல இது எல்லாம் பாத்தும் நீங்க சொல்லுறதெல்லாம்  நா நம்புவேன்னு நினைக்கிறீயலோ… ” என நக்கலாக அதே சமயம் அடிக்குரலில் கேட்டான்…

செல்வம் : எலேய் சாப்பிட்டு வரலாம்ன்டு நினைச்சேன்ல சரி  இப்போ என்னாங்குற என்று கேட்க

மாறன் : சார் கொஞ்சமாவது சீரியஸா பேசுங்க செத்துப் போன நாலு பேருக்கும் நடந்தது தற்கொலை இல்ல… கொலை.. அதுவும் அவங்கள பெத்தவங்களே கொண்டு (கொன்று )இருக்காங்க …
என்று ஆதங்கத்துடன் கூற

செல்வமோ ” என்னடே கதை சொல்றவ..போய் சினிமா எடு நூறு நாள் ஓடும்.. “
என அவனை மேலும் மேலும் கிண்டல் செய்ய
பொறுக்க மாட்டாமல் அவனை சரமாரியாக தாக்க .. அதில் வெகுண்ட அந்த காவல் நிலையத்தில் இருப்பவர்கள் அவனை மிதித்து அடக்கினர்….

வாயில் இருந்து ரத்தம் வழிய செல்வத்தை முறைத்துக் கொண்டே தன்னால் முடிந்தவரை அவர்களை அடிக்க விடாமல் தடுத்துக் கொண்டு இருந்தான்…

🏵🏵🏵

செல்வழகியையும் விஸ்வத்தையும் மருத்துவமனையில் சேர்த்து விட்டு அவர்களது அறைகளுக்கு வெளியில் ராஜலட்சுமி , ரங்கநாதன் மற்றும் மதியழகி
மூவரும் கவலை தோய்ந்த முகத்துடன் காத்திருந்தனர்…

ரங்கநாதன்  தன்னை தாக்க வந்தது யார் என்று தீவிரமாக யோசிக்க அப்போது அவரை தனியே அழைத்த மதியழகி
” என்னப்பா தீவிர யோசனையில இருக்கீய ?” என்று அவரை ஆராய

ரங்கநாதனோ எரிச்சலாகி
” ஏய் அங்க உள்ள அடிபட்டுக் கிடக்காக அவங்களப் பத்தி நினைச்சு வருத்தப்படாம என்ன கேலி செய்துட்டு இருக்க ” என்று அவளை அதட்ட…

மதியழகி : ஓஓ.ஓ. ஆமால்ல… ஆனா அப்பா எனக்கு உங்கள மாதிரி நடிக்கத் தெரியாதே… என்ன பண்றது … என போலியான வருத்தத்துடன் கேட்க…

ரங்கநாதன் ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு
” வீட்டாளுகனு கொஞ்சம் கூட நினைப்பு இல்ல உனக்கு… “

மதியழகி : யாரு விஸ்வமா.. அவன் மேல எனக்கு மரியாதை வரும்னு எப்படி நீங்க நம்பலாம்… இருந்தாலும் உங்களுக்கு இவ்ளோ பேராசை கூடாதுப்பா…

” அப்பறம் அப்பா கார்ல வரும்போதே உங்க கிட்ட ஒரு விஷயத்தை சொல்லனும்னு நினைச்சேன் இப்போதேன் அத சொல்ல நேரம் கிடைச்சுருக்கு…
என்க …இன்னும் என்ன விஷயம்தான் இருக்கு என்பது போல் அவர் முகம் போன போக்கைப் பார்த்த மதியழகி…

” அதுக்குள்ளயே இப்படி சொனங்கிப் போனா எப்படி நா சொல்லுறத கேட்டா இன்னும் உங்க முகபாவனை எப்புடி போகப்போகுதுனு பாக்கனும்னு ஆசையா இருக்கு “

அது என்ன விஷயம்னாப்பா… கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி உங்களை கலாய்ச்சுட்டு போனாங்கள்ல… அவனுங்கள அனுப்புனதே நாந்தான்……. “

                                            – தொடரும்…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: