சமீராவின் ‘இளங்காத்து வீசுதே’ – 23

அத்தியாயம் 23

 

“இங்க பாருங்க நீங்க செய்றது கொஞசம் கூட சரியே இல்ல..உங்களை பத்தி இதுவரை எவ்வளவோ பேரு பாராட்டி பேசியப்போ எல்லாம் கண்டுக்காம தானே போனீங்க..ஏதோ ஒரு அறியா பொண்ணு தெரியாம பேசிட்டானு கண்டுக்காமல் போக வேண்டியது தானே..இப்படி கூப்பிட்டு வச்சு வம்பு பண்றது எல்லாம் நல்லா இல்ல..நேத்தி நான் விளையாட்டாய் பேசவும் எப்பவும் அப்படியே இருப்பேன்னு நினைச்சீங்கன்னா சாரி..நான் அந்த கேட்டக்ரி கிடையாது..”

 

ஃபுட் கோர்டில் அமர்ந்திருந்த விஜயின் முன்னால் பொத்தென்று அமர்ந்து கறாராக பேசிய அவளை,

 

“இப்போ என்ன உன்னை பண்ணீட்டாங்கன்னு குதிக்கிற..முதல ரிலாக்ஸ் ஆகு…”

 

என்று அவன் லேசாய் அதட்டவும் கப்பென்று வாயை மூடிய சக்தி உம்மென்று உட்கார்ந்திருக்க,

 

“ஹே..சில் யா..நான் உன்னுட்ட வேற விசயமா பேச தான் கூப்பிட்டேன்..எந்த வம்பு வளர்க்கவும் ஐடியா இல்ல..”

 

என்று அவன் கூறவும் தான் சற்று முகம் தெளிய அவனை என்ன என்பது போல் பார்த்தாள்.

 

“குட்..” என்றுவிட்டு ” என் சிஸ்டர் அக்னிமித்ராவை உனக்கு தெரியுமா..?”

 

என்று வினவ இது ஒரு கேள்வியா என்பது போல் பார்த்துவிட்டு,

 

“சீனியரான உங்களையே தெரியும் போது..என் க்ளாஸ் பொண்ணை தெரியாதா..?”

என்று கேட்டாள்.

 

“தெரியுமான்னா அந்த தெரியுமா இல்ல..நீங்க பேசுவீங்களா..ஃப்ரெண்ட்ஸ் ஆ..?”

 

“ம்ஹும் நோ..உங்க சிஸ் உங்களுக்கு மேல் வாயே திறக்க மாட்டாள்..அப்படி ஒரு ஜீவன் க்ளாஸில் இருக்கேன்னு இரண்டு மூணு வாட்டி பேச முயற்சி செய்து நான் பல்ப் வாங்கினது தான் பலன்..”

 

“ஹோ..”

 

என்றவன் முகம் வருத்ததை பிரதிபலிக்க அதை உணர்ந்து சக்தி,

 

“பரவாயில்லபா..சில பேருக்கு காலேஜ் சரௌண்டிங் பழக டைம் எடுக்கும்..”

 

என்று கூற மறுத்து தலையசைத்தவனுக்கு தானே தெரியும் பேசி விடுவதைவிட இவள் அமைதியாய் இருப்பது தான் பிரச்சனை என்று.விஜய் எவ்வளவு பேச முயற்சி செய்தாலும் பலனின்றி போனதால் அவள் மனதில் என்ன தான் ஓடுகிறது என்பதை அறிந்துக் கொள்ள முடியாமல் தவித்தான்.நட்புக்களாவது இருக்கும் என்று நினைத்தவனுக்கு சக்தியின் பதில் வருத்ததை தர சில நிமிடங்கள் அமைதிக்கு பின்,

 

“சக்தி..மித்ரா இப்படி கிடையாது..பட் அவளுக்கு ஏற்பட்ட சில பிரச்சனைகளால் அவ இப்படி மாறி போயிட்டாள்..அவளை எல்லாரையும் மாதிரி நார்மலா பார்க்கணும்னு என்னென்னவோ பண்ணிட்டேன் நோ யூஸ்..இப்போ அகைன் ஒரு முயற்சி தான்..அதுக்கு நீ ஹெல்ப் பண்றீயா..”

 

என்றவன் ‘எங்கே அவள் மித்ராவிற்கு என்ன பிரச்சனை என்று கேட்பாளோ.. ‘என்று டென்ஷனாய் நோக்க அவளோ அதைவிடுத்து,

 

“ஓ..பட் இதில் நான் என்ன செய்ய முடியும்..?”

 

என்று கேட்க அதுவே அவள் உதவி செய்வாள் என்பதை சொல்ல நிம்மதி மூச்செறிந்து,

 

“நத்திங் மோர்..ஜெஸ்ட் அவளோட ஃப்ரெண்ட் ஆகு போதும்..?”

 

என்று கூறினான்.

 

“அது அவ்வளவு ஈஸின்னு நினைக்கிறீங்களா..?”

 

“இல்ல தான்..பட் நீ ஆகிடுவ..எனக்கு தோணுது..அண்ட் என்னை தெரியும்னு மறந்து காட்டிக்காத..நார்மலா அவளோட பழகு…அவ என்ன நினைக்கிற எதாவது தெரிந்தால் என்னிடம் சொல்லு..”

 

“ஆக..என்னை ஸ்பையாக இருக்க சொல்றீங்க..”

 

“இல்ல..அவளுக்கு நல்ல ஃப்ரெண்டா இருக்க சொல்றேன்..”

 

என்றவனை பார்த்து புன்னகைத்த சக்தி கட்டை விரலை தூக்கி காட்டி,

 

“ஓகே..மித்ராவிற்கு இனிமே இந்த சக்திப்ரியா தான் ஃப்ரெண்ட்..!”

 

என்று கூற முழு பல்வரிசை தெரிய சிரித்தவன் “வெய்ட்..ஐ ஹேவ் சம்திங் ஃபார் யூ..”

 

என்று பாக்கெட்டில் கைவிட்டு டெய்ரிமில் க்ராக்கெல் எடுத்து (அடப்பாவி.. இன்னும் இந்த பழக்கம் விடல) 

நீட்டினான்.

 

“என்ன ஜி..லஞ்சமா..காரியம் ஆக ஐஸ் வைக்குறீங்களா..?” என்று அவள் கூறியவுடன் முகம் சுருங்க முறைத்தவன்,

 

“ரொம்ப வருஷம் கழித்து ஒரு பொண்ணுக்காக சாக்லேட் வாங்கினேன்.ம்ச்..உனக்கு கொடுத்து வைக்கல..”

 

என்று மீண்டும் உள்ளே வைக்க போக அவனை தடுத்து அதனை கிட்ட தட்ட பிடிங்கி கொண்டு, “தேங்க்ஸ் ” என்று கண்சிமிட்டி சிரித்தவளை காணும்போது உள்ளுக்குள் ஏதோ ஆக..என்ன உணர்வது என்பதை புரிந்துக் கொள்ள முனையாமல் அதனை அனுபவித்து கையாட்டிவிட்டு செல்பவளை அமைதியாய் பார்த்தான்.

 

அன்று பிறகு அக்னிமித்ராவுடம் பேசி அவளை தன்னோடு பேச வைப்பதற்குள் போதும் போதும் என்றாக மெல்லிய நட்பு இருவருக்கும் இடையே இழைந்தது. இதன் இடையே அவர்கள் ஏற்பாடு செய்த கான்ஃப்ரென்ஸ் நினைத்தைவிட நல்ல பிரதிபலிப்பை தர சீஃப் கெஸ்டில் தொடங்கி பிற கல்லூரி மாணவர்கள் வரை எல்லாருமே நல்ல நல்ல கருத்துகளை பரிமாற்றிக் கொண்டு சிறப்பாக நடந்து முடிந்தது.அந்த வெற்றி குதூகலத்தில் துறை மாணவ மாணவிகள் அனைவரும் அன்றைய களைப்பையும் மீறி மகிழ்ச்சியாய் வீடு திரும்பினர்.

 

இரவு ஆகி விட்டதால் தான் ட்ராப் செய்வதாய் கூறிய அக்னிமித்ராவிடம் ஏதோ காரணம் கூறி அனுப்பி வைத்துவிட்டு விஜய்காக காத்திருந்தாள்.

 

“ஹே..வீட்டுக்கு போகலையா..?”

 

இவள் இருப்பதை கண்டுவிட்டு ஆச்சரியமாய் கேட்ட விஜயிடம் சின்ன புன்னகையை தந்துவிட்டு, “உங்களுக்காக தான் வெய்டிங்..நீங்க உண்மையாவே வேற லெவல் தான் ஜி..இப்போ ஒத்துக்கிறேன்..உள்ள நீங்க இன்னைக்கு பேசினதை கேட்டு ஸ்டன் ஆகிட்டேன்..எவ்வள்வு மைனியூட்டா யோசிக்கிறீங்க..நல்ல பிஸ்னெஸ் மூளை உங்களுக்கு!!”

 

என்று மனதார பாராட்டியளை சில நொடிகள் அமைதியாய் பார்த்தவன்,

 

“பாராட்டு இப்படியா சொல்வாங்க..?”

 

என்று கேட்க அவன் குரலின் வேறு பாட்டை உணராமல் “ஏன்..என்ன தப்பா சொல்லிட்டேன்..”

 

என்று விழித்தவளின் கையை பற்றி இழுத்து இறுக்க அணைத்தவன் பினங்கழுத்திலே புதைந்து போக துடித்த மனதை அடக்கி காதருகே, “இப்படி தான் சொல்லணும்..” என்று கூறி விலகினான்.

 

அவன் திடீர் செய்கையில் அதிர்ந்து நின்றவள் சட்டென்று தன்னை சுதாரித்து அவனது உடல் வெம்மையில் இருந்து விடுப்பட்ட தன் உடலை சமன்படுத்தியபடி,

 

“ஏன் ஜி..இப்படி தான் உங்களுட்ட எல்லா பொண்ணுங்களும் சொல்வாங்களோ..?”

 

என்று கேட்க சிரித்தவன் “மத்த யாருட்டையும் தேவை இல்ல..பட் நீ இப்படி தான் சொல்லணும்..”

 

என்றான் ஒரு பிடிவாத குழந்தையை போல்..அவள் பதில் கூறாமல் அமைதியாய் நிற்கவும்,

 

“என்ன சக்தி..நான் முறையா ப்ரோபோஸ் செய்யணும்னு எதிர்பார்க்கிறீயா..?”

 

என்றவனை மறுத்து, “இல்ல..அப்படி எதாவது நடந்தால் அந்த ஸ்விச்வேஷனை எப்படி ஹாண்டில் பண்றதுனு யோசிக்கிறேன்..நீங்க என்னை பத்தி என்ன நினைக்கிறீங்கன்னு தெரியல..பட் நான் கண்டிப்பா எப்பவும் உங்க பின்னாடியே சுத்துகிற மத்த பொண்ணுங்களில் ஒருத்தி இல்ல..அப்புறம் நமக்குள்ள இதெல்லாம் செட் ஆகுமா தெரியல..”

 

என்று அவனை பார்க்காமல் மெல்லிய குரலில் வார்த்தையை தேடி தேடி பேசியவளின் முன் வந்து நின்றவன், 

 

“ஐ க்நோ சக்தி..நீ இதுவரை இதை பற்றி யோசித்தது இல்லை தான்..பட் உன்னை பார்த்த அன்னையில் இருந்தே என் மனசு இப்படி தான் இருக்கு..அந்த கள்ளமில்லா  பேச்சில் விழுந்தவன் தான் இன்னும் எழும்பல..இந்த ஜென்மத்தில் எழுவேன்னு நம்பிக்கையும் இல்ல..எனக்கு நீ தான்..நீ மட்டும் தான் சக்தி..”

 

என்று மிருதுவாக அவளை வார்த்தையாலே வருடி செல்பவனாய் கூறியவன் அவள் பதிலளிக்க திணறுவாள் என்று அறிந்து அதனை தவிர்ந்து,

 

“வா..ட்ராப் பண்றேன்..” என்க அவள் மறுப்பதுபோல் எதுவும் சொல்லும்முன்,

 

“காரணம் சொல்லாத..இதுக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்ல..வா..”

 

என்று வழக்கம்போல் மறுப்பேச்சிற்கு இடமில்லாமல் அழைத்து சென்றான்.அதன்பின் இப்படி ஒன்று நடவாத்ததை போலவே அவள் இருக்க மீண்டும் அதனை அவனும் கேட்கவில்லை.அதாவது கேட்க தயக்கமாய் இருந்தது.ஆம் தயக்கம் தான்.தன் மனதை வெளிப்படுத்தியாகி விட்டது.எங்கே மீண்டும் மீண்டும் கேட்டால் அரவே பேச்சை நிறுத்திவிடுவாளோ என்று அந்த பேச்சை தள்ளிப்போட்டான்.

 

இங்கே இவர்கள் உறவு எஸ்.ஜே சூர்யா கூறுவதுப்போல் இருக்கு ஆனால் இல்லை என்ற ரீதியில் ஓடிக்கொண்டிருக்க மறுபுறம் அக்னிமித்ரா பெயருக்கு ஏற்றார்ப்போல் நெருப்பு தான் என்பதை அறியாமல் விளையாடிப் பார்க்க ஆசைப்பட்டான் ஒருவன்..அவன் அஸ்வதன். 

 

“மச்சான்..நீ வேணாப்பாரு இன்னைக்கு அவ கண்டிப்பா எனக்கு ஓகே சொல்லிடுவா…”

 

என்று மிதப்பாய் கூறிய அஸ்வதனை,

 

“டேய்..உனக்கு தான் ஏற்கெனவே ஆள் இருக்குல..அப்புறம் இதுவேற ஏண்டா..?”

 

என்றான் அவன் நண்பன் எரிச்சலாய்..

 

“அது காலேஜ் வெளியே மேரேஜூக்காக..காலேஜ் உள்ள ஒரு டைம்பாஸிற்கு ஆள் வேணாமா..?”

 

“அதுக்கு அந்த பொண்ணு தான் கிடைச்சாலா..அது விஜய் தங்கச்சி தெரியும்ல.. தெரிஞ்சிது குடலை உருவிடுவான்..”

 

“ம்ச்..அதெல்லாம் தெரியாதுடா.. “என்று அசட்டையாய் கூறியவன்,

 

“இங்க பாரு மச்சி..அதுவே ஒரு வாயில்லா பூச்சு..அழகா வேற இருக்காள்..அழக ஆன மட்டும் யூஸ் பண்ணிக்கிட்டு கடைசியா சாரி பேபி..ப்ரெக் அப்னு கழட்டி விட்டால் அழுது கரைவாளே தவிர சத்தியமா வீட்டுக்கு சொல்ல மாட்டாள்.அப்புறம் வீட்டில் பார்க்கிற ஒரு அமெரிக்க மாப்பிள்ளையோட செட்டில் ஆகிடுவாள்..அவ்வளவு தான்..”

 

என்று சிம்பிளாய் கூறினான்.அவன் நினைத்தபடி தான் அவளும் இவனிடம் காதலில் விழுந்தாள்.இவன் அவளையே சுற்றி வருவது ஒரு கர்வத்தை கொடுக்க அத்தோடு விஜயிக்கு இது கண்டிப்பாய் பிடிக்காது என்று தெரியும்.அதுக்காகவே காதலித்து அவனை எதிர்த்து அவர்கள் தூக்கி பிடிக்கும் கௌரவத்தை குழைக்கவே இவனை காதலிப்பதில் தப்பில்லை என்று தோன்றியது.

 

இவ்வாறு யார் யாரை ஏமாற்றுகிறார்கள் என்று தெரியாமலே இவர்கள் காதல் கதை தொடங்க இதனை சக்தியிடம் மட்டுமே பகிர்ந்துக் கொண்டாள்.

 

கேட்டதும் முதலில் திகைத்த சக்தி பின் அவன் யார் என்று விசாரிக்க அறிமுகப்படுத்தி வைத்தாள்.அவனோடான முதல் சந்திப்பிலே

 

‘இவள் டேஸ்ட் ஏன் இப்படி போச்சு..? ‘என்று தோன்றினாலும் தானே அதை ஒதுக்கி யாரையும் முதல் பார்வையில் எடைப்போடுவது தவறு என்று சொல்லிக்கொண்டாள்.அவனை பற்றி நிறைய நிறைய பேசியவள் இது உன்னை தவிர யார்க்கும் தெரியாது என்று மீண்டும் மீண்டும் சொன்னாள்.

 

அதனாலோ என்னவோ இதை பற்றி அவள் விஜயிடம் மூச்சு விடவில்லை.அவள் பர்செனலை என்னை நம்பி கூறும் போது அதனை விஜயிடம் சொன்னால் அது நட்புக்கு அழகல்ல என்று கருதினாள்.

 

எல்லாம் நன்றாக தான் போய்க் கொண்டிருந்தது சக்தி, அஸ்வதனை பொது இடம் ஒன்றில் அவன் மற்றொரு காதலியோடு நெருக்கமாய் பார்க்கும்வரை..!

One Reply to “சமீராவின் ‘இளங்காத்து வீசுதே’ – 23”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: