Advertisements

சமீராவின் ‘இளங்காத்து வீசுதே’ – 22

அத்தியாயம் 22

 

கல்லூரியில் இருந்து வீடு திரும்பியவன் வீட்டின் நிலையை கண்டு ஒரு நிமிடம் அதிர்ந்தாலும் மறுநிமிடம் துரிதமாய் செயல் பட்டான்.

 

அவளை பேசி சரிக்கட்டி உறங்க வைத்துவிட்டு பெற்றோரிற்கு ஆறுதல் சொல்ல நடந்தவையை சொல்லி சொல்லி ஆதங்கப்பட்டார் கீதா.சிவகுமார் வாயே திறக்காமல் மௌனியானார்.

 

அவள் கோபம்,அதிரடி எல்லாம் விஜயிடம் மட்டும் தான்.வெளியே யாரிடமும் இப்படி நடந்துக் கொண்டது இல்லை.ஆனால் இன்று ஆசிரியரிடம் அவள் நடந்துக் கொண்டதை கேட்டு அதிர்ந்தவன் பின் மெல்ல அவளோடான முந்தைய சம்பவங்களை பெற்றோர் இடம் சொல்ல கேட்டவர்களுக்கு அதிர்ச்சிமேல் அதிர்ச்சி!!எப்படி இதெல்லாம் தெரியாமல் இத்தனை வருடம் இருந்தோம் என்று தங்கள்மேலே கோபம் வந்தது.

 

அன்றைய பொழுது கடக்க மற்ற நாட்களும் எப்பொழுது எப்படி இருப்பாள் என்று சொல்ல முடியாது.ஒரு சமயம் எப்பொழுதும் போல் நன்றாக இருப்பவள் மற்றோர் சமயம் பித்து பிடித்தவள் போல் நடந்துக் கொள்ள பயந்து தான் போனர்.இதில் அன்று பிறகு பள்ளியில் டெர்மினேட் செய்துவிட வீடே தான் கதி என்று இருந்தாள்.அவளது முழு பொறுப்பையும் விஜயே எடுத்து கொண்டான்.அவள் எந்த மனநிலையில் இருந்தாலும் சமாளிக்க தெரிந்த ஒரே ஜீவன் அவன் தான்.அவள் பேச்சிகள் பழகி போயிருக்க ஏன் அடித்தாலும் வாங்கி கொள்வான்.அவள் என்ன செய்தாலும் அவள் தன் தங்கை..!!என்ற எண்ணம் ஆழமாய் அவன் சிந்தையில் இருக்க, 

 

“ப்பா..அவ சின்ன பிள்ளை ப்பா.. ஏதோ விவரம் இல்லாமல் செய்கிறாள்..இதெல்லாம் மனசில் போட்டு குழப்பிக்காதீங்க..”

 

பெற்றோரிற்கு அறிவுரை சொல்லும் அளவு இருந்தான்.ஆனாலும் வயசு பெண் ஆகிற்றே நாளுக்கு நாள் இவை அவள் எதிர்காலத்தை பாதிக்குமே என்ற அச்சம் வர இனியும் இதனை இப்படியே விட்டுவது சரியில்லை என்று சிவகுமார் தன் நண்பரும் மனநல மருத்துவரும் ஆன சந்தானத்தை வர வைத்தார். அவளை பற்றி முழுதும் கூறி தன் மகளை மீட்டு தருமாறு அவர் வேண்ட அவளை பரிசோதித்த அவரும் அவளுக்கு இது நீண்ட காலமாய் இருப்பதால் சரியான ட்ரீட்மெண்ட் தேவை என்றுவிட இதெல்லாம் வெளியே தெரிந்தால் என்னாவது என்ற கவலை வந்தது.

 

அதற்கும் சந்தானமே ஒருவழி கூறினார்.அவர் கவனித்தவரை விஜய் இவளை இப்படி தாங்கினால் இன்னும் தான் இவளுக்கு இந்த பிடிவாதமும் ஆங்காரமும் வளரும்.அவளை கண்டித்து அதிரடியாய் நடக்கவெல்லாம் சுட்டு போட்டாலும் மூவரும் செய்ய மாட்டார்கள் என்பது புரிய அவளை தன் பொறுப்பில் விட சொல்லி கேட்டார் சந்தானம். தன் கூட வைத்து ட்ரீட்மெண்ட் கொடுத்து வெளியே தெரியாமல் பார்த்துக் கொள்ளவதாக கூற மிகுந்த யோசனைக்கு பின் தங்கள் வி.ஸ் வில்லாவில் தங்கி பார்த்துக் கொள்ள கூறினர்.

 

அதன்பின் எல்லாம் சந்தானம் ஆணைப்படி தான்.அவர் சொல்வது போல் கேட்டு நடக்க வைத்தார்.அவளது எந்த பேச்சோ செய்கையோ எதுவும் அவரை பாதிக்காது.ஏன் ஒருமுறை

 

“நீங்க என்ன வீட்டுக்கு அனுப்பல..நீங்க என்னுட்ட தப்பா நடந்துக்க ட்ரை பண்ணதா சொல்லிவிடுவேன்..” என்று சொன்னபோதுகூட இறும்பு போல் மனிதர் இருப்பார்.அவள் நன்மைக்காக தான் என்னும்போது அவருக்கு எதுவும் தவறாக தெரியவில்லை.அவள் நன்றாக நடந்துக் கொண்டால் அவரும் அமைதியாய் இருப்பார்.

 

வீட்டினர் அவளை பார்க்க வரும்போது எல்லாம் அவள் அழுது ஆர்பாட்டம் செய்து கூட்டிட்டு போக சொல்ல விஜயிக்கு மனம் தாங்கவே தாங்காது.தன்னோடே வைத்துக் கொள்கிறேன் என்று கேட்டு கேட்டு அலுத்து தான் போனான்.அவள் நலமாக இதான் வழி என்பதால் அவர்கள் அதில் உறுதியாய் இருந்தனர்.

 

நாட்கள் செல்ல அவள் நடவடிக்கைகளும் மாறியது.முழு அமைதியோடு தான் உண்டு தன் வேலை உண்டு என்ற நிலைக்குவர அவளை ஒரு டுட்டோரியலில் சேர்த்து +2 எழுத தயார்ப்படுத்தினர்.அதிலும் கவனமுடன் படித்து வந்தாள்.அவள் மாற்றம் உண்மையில் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியை தந்தது.ஆனால் அவை எல்லாம் அவள் இங்கிருந்து தப்பிக்கவே புலி பதுங்குவது போல் பதுங்கினாள் என்பது யாரும் அறிந்திருக்கவில்லை.

 

ஒருவழியாக தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற அவள் முழுதும் சரியாகி விட்டால் என்று நம்பிக்கையோடு மீண்டும் அவளை வீட்டிற்கே அழைத்து சென்றனர்.

 

சந்தானத்தின் இவ்வுதவிக்கு குடும்பமே நன்றியோடு இருக்க வாழ்க்கையில் தனிமையில் மட்டுமே இருந்தவருக்கு அக்னிமித்ரா மீது மகளை போல் பாசம் வைத்திருந்தார்.என்ன செய்வது அதனை உணரும் குணம் அவளுக்கு இல்லையே..!

 

அதன் பின் தங்கள் கல்லூரியிலே அவள் சேர்க்கப்பட்டாள்.விஜயின் கடைசி வருடம் அது. அடுத்து படிப்பு வெளிநாட்டில் என்ற முடிவில் ஏற்கெனவே இருந்ததால் இருக்கும்வரை தங்கையை மட்டுமே கவனமாய் கொண்டு அவளை கண்ணும் கருத்துமாய் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று உறுதியோடு இருந்தவன் கண்ணில் கள்ளமும் கூடவே காதலும் குடிபுகும் வருடமும் அதுதான் என்று அறிந்திருக்கவில்லை.

 

சிறுவயதிலேயே சுற்றி இருக்கும் அனைவரையும் வசீகரிக்க தெரிந்த அவனுக்கு கல்லூரி பருவம்..இளங்காளை பருவத்தில் சொல்லவும் வேண்டுமோ!!

 

கன்னியரின் கண்களை கவரும் ஆண்மகனாய் திறமையின் உறைவிடமாய் ஆசிரியருகளுக்கு பிடித்த மாணவனாய் நண்பர்களுக்கு உற்ற தோழனாய் என்று எங்கும் எதிலும் விஜய் இருப்பான்.அதிகம் யாரோடும் பேசமாட்டான் எனினும் அனைவரின் பேச்சிலும் அவன் இருக்க எல்லாம் தெரிந்தாலும் எதையும் கண்டுக்கொள்ள மாட்டான்.யார் எவ்வளவு பாராட்டி பேசினாலும் ஒரு மில்லிமீட்டர் அளவு சிரிப்பு மட்டுமே பதில்.. நெருங்கிய நண்பர்களிடம் வாயடிப்பானே அன்றி மற்றவர்களிடம் அளந்துக் கூட பேசமாட்டான்.அது அவனுக்கு திமிரான ஒரு தோற்றத்தை கொடுக்க அதை கூட இரசிக்க ஒரு கூட்டம் இருந்தது.(முறைக்காதீங்க மக்களே..நான் மெய்யாலுமே தான் சொல்றேன்..🤷)

 

இவ்வாறு அனைவரும் அவனை கொண்டாட தான் கல்லூரியில் அடியெடுத்து வைத்த முதல் வருடமே இவன் புராணக்கதையை கேட்டு காது புளித்துபோக ,

 

“எவண்டா அந்த அப்பாட்டக்கரு..பெரிய இவன்.. “என்று காணாமலே அவன்மீது ஒரு கடுப்பை வளர்த்துக் கொண்டாள் சக்திப்ரியா.

 

அவள் அவனை பார்த்தது இல்லை.ஆனால் இந்த பெண்கள் அவனுக்கு விடும் ஜொள்ளை கேட்டு,

 

“ஈஸ்வரா..இந்த பைத்தியங்களிடம் இருந்து காப்பாற்று ப்பா..” என்று புலம்பிய தருணங்கள் பல..சில சமயம் நேரடியாகவே திட்டியும் இருக்க, 

 

“ஹே..நீ அவனை பார்த்தது இல்ல..பார்த்தால் இப்படி பேசமாட்ட..நீயும் ஃப்லட் தான்..அவன் திமிரு காட்டினா கூட அழகுதான் தெரியுமா..?”

 

என்று அவள் தோழி சொல்லவும் முறைத்தவள்,

 

“மண்ணாங்கட்டி..என்னை என்ன உங்க மாதிரி பைத்தியன்னு நினைச்சீங்களா..எந்த கொம்பனாலேயும் என்னை ஒன்னும் பண்ண முடியாது..என்னை எரிச்சல் படுத்தினானா டக்குலு பிகிலாகுடும்..டப்பா டான்ஸ் ஆடிடும் ஆமாம்..ஏன்னா அவன் திமிறு பிடிச்சவன்ன்னா..நான் அந்த திமிறுக்கே பிடிச்சவ..”

 

என்று சக்திப்ரியா என்று ஒரு ஜீவன் இருப்பதே தெரியாத விஜய் வரதனோடு தோழிகளின் தொல்லையில் மல்லுக்கு நிற்க தயாராகினாள் அக்காரிகை.

 

நாட்கள் ஓட ஒரே துறை தான் எனினும் விஜயை இவள் பார்பதற்கான தருணமே ஏற்படவில்லை.அத்தோடு அவள் அதில் ஆர்வம் காட்டவில்லை.

 

இப்படியாக (cupid) குப்பிடிற்கே இருவரும் ஆட்டம் காட்டிக் கொண்டிருக்க இவர்களை நம்பினால் சரிவராது என்று விதியே அவர்களை சந்திக்க வைத்தது.

 

அன்று தன் நண்பன் விக்கியோடு எதோ மும்முரமாக பேசிக்கொண்டே அந்த காரிடாரில் நடந்து வந்தான் விஜய்.

 

“சீஃப் கெஸ்டை எல்லாம் நேரில் சந்திக்க அப்பாயிண்ட்மெண்ட் முதலில் வாங்கணும்டா..அவங்களை இன்வெய்ட் பண்ணிட்டு தென் நம்ம காலேஜ் ஹயர்ஸை இன்வெய்ட் பண்ணனும்..மற்ற ப்ரோக்ராம் எல்லாம் ஓகே தானே..”

 

“எல்லாம் ஓகேடா..பசங்க ரொம்ப ஆர்வமாய் செயல்படுறானுங்க..இந்த கன்ஃப்ரென்ஸ் ரொம்ப நல்லா வரும்னு நினைக்கிறேன்..ஹோப் த பெஸ்ட்அப்புறம் இன்னைக்கு ஃபர்ஸ்ட் சி.எஸ்- ஏ அண்ட் பீ க்ளாஸ் ஸ்டூடெண்ட்ஸ் பார்த்து அந்த பசங்களுக்கு ப்ரோக்ராம் பத்தி ஒரு ஐடியா கொடுத்து அவங்களுக்கும் சில பொறுப்புகள் கொடுக்கணும்..”

 

என்று விக்கி கூறியதை கேட்டு தலையாட்டியவன், “சும்மா அவனுங்க நின்னால் போதும்..இந்த முறை நடப்பதை அப்சர்வ் பண்ணினால் அடுத்தமுறை அவனுங்க நல்லா பண்ணுவாங்க..சரி எத்தனை மணிக்கு அந்த க்ளாஸ் போக போறீங்க..”

 

என்று கேட்ட விஜயை முறைத்த விக்கி, “அதென்ன போக போறீங்க..போறோம்..நீயும் வா..”

 

என்று கூற,” அய்யோ ஆளை விடுடா..நமக்கு நின்னு விளக்கம் கொடுக்கிற அளவெல்லம் பொறுமை இல்ல..இந்த பேக்ரௌண்ட் வொர்க் கோட சரி..”

 

என்றான் தோளை குலுக்கி..

 

“மச்சான் என்னடா..நீ பேசினால் எல்லாம் கப்சிப்னு கேப்பானுங்கடா..இல்லேனா எதாவது டவுட் கேட்குறேன் படுத்துவானுங்க..கேள்ஸ் முன்னாடி மானம் போகும்..”

 

என்ற விக்கியை நோக்கி காரி துப்புவதுபோல் பாவணை செய்த விஜய்,

 

“சீனியர்னு வெளியே சொல்லிடாத..சின்ன பசங்க பார்த்து பயப்படுற..இதுக்காவே ஒழுங்கு மரியாதையா நீ தான் பேசுற.போ..”

 

என்று கூற தலையை ஆட்டுவதை தவிர அவனுக்கு வேறு வழி தெரியவில்லை. “சரி மத்த பசங்க எல்லாரையும் கூட்டிட்டு வரேன்..”

 

என்று அவன் சென்றுவிட ஷர்ட்டின் ஸ்லீவை சரிசெயதப்படி நடந்து வந்த விஜய் திடீரென அந்த வரிசையில் இருந்த கடைசி வகுப்பின் பெரிய ஜன்னல்வழி குதித்த பெண்ணை கண்டு அப்படியே நின்றுவிட்டான்.

 

திருட்டு பூனையாய் சுற்றத்தை ஆராய்ந்த அந்த மான்விழிகள் தன் எதிரே நின்ற விஜயை கவனிக்கவில்லை.அந்த கண்ணகளின் பாவனை அவனை கட்டிப்போட கண்ணில் சுவாரஸ்யம் கூடியது. அவள் மீண்டும் ஜன்னல் புறம் திரும்பி செய்கை செய்ய ஒரு பேக்கும் பறந்துவந்து விழுந்தது.

 

‘எரும..எரும..கையில் ஒழுங்கா போட தெரியாது..வெளிய வா இருக்கு..’

 

என்று உள்ளிருந்த தன் தோழியை மிரட்டிவிட்டு விழுந்துக்கிடந்த தன் பையை எடுத்த மாட்டியபடி நிமிர்ந்த சக்திப்ரியா தன்முன்னே கையை கட்டிக்கொண்டு ஒரு ஸ்ரிக்ட்டான பாவனையில் நின்றவனை கண்டு ‘அய்யோ எவனோ பார்த்துட்டானே சரி சக்தி கண்டுக்காத..’என்று தனக்கு தானே கூறிக் கொண்டு “ஹாய்..”

 

என்று அசடுவழிய அவனோ அவளை ஒருப்பார்வை பார்த்தவன் வகுப்பை எட்டி பார்த்துவிட்டு ஆசிரியரை கூப்பிட போகும் பாவனையில், “மேம்.. “என்று தொடங்க அவ்வளவு தான், 

 

“அய்யோ சாமி..”

 

என்று தன்னையும் மீறி அவன் வாயை பொத்திய சக்தி அவன் கையை இழுத்துக்கொண்டு அங்கிருந்து நகர அவள் பலம் எல்லாம் அவனை அரை இன்ச்கூட அசைக்கவே முடியாது என்றாலும் குப்பிட்டின் சதியால் அவள் இழுத்த இழுப்பிற்கு காற்றில் நகரும் காகிதமாய் நகர அந்த வகுப்பை அடுத்து இருந்த மாடிப்படிக்கட்டின் கீழே வந்து நின்றாள் சக்தி.

 

“ஏன் ஜி உங்களுக்கு இந்த கொலவெறி.. நீங்களும் க்ளாஸ் கட்டு அடிச்சிட்டு தானே சுத்துறீங்க..அதே மாறி கண்டும் காணாமல் போக வேண்டியது தானே..”

 

என்றவளை முறைத்த விஜய், “நான் க்ளாஸ் கட் பண்ணினதை பார்த்தியா நீ..”

 

என்று கேட்க ஒரு நக்கல் சிரிப்பு சிரித்தவள், “ஹிஹி..யோக்கியனுக்கு க்ளாஸ் ஹவ்ர்ஸில் இங்க என்ன ஜி வேலை..”

 

என்று கூற அவள் நக்கல் கோபத்தை தருவதற்கு பதில் அவன் உதட்டில் புன்னகையை அரும்ப செய்தது.அதனை உதட்டோடு ஓரங்கட்டிய விஜய் அவள் சொன்னதிற்கு பதில் சொல்லாமல்,

 

“இந்த ப்ரீயட்டே முடிய போகுது..நீ..” என்று அவள் ஐடியை நோக்கிவிட்டு,

 

“நீ சி.எஸ் தானே..உங்க க்ளாஸ்க்கிற்கு அடுத்த ட்டூ ஹவர்ஸ் ஓடி தான்..க்ளாஸ் நடக்காது..இதுக்கு ஏன் கட் அடிக்கணும்..அதுவும் கம்பெனிக்கு ஆள் கூட இல்லாம சோலோவா..?”

 

என்று பேச்சை வளர்த்தான்.அவனுக்கே தானா வளவளப்பது என்று ஆச்சரியம் தான்.

 

“நீங்க சொல்றதும் சரிதான் ஜி..பட் யு ன்நோ ஒன் திங்க்..”

 

என்றபடி தன்னைபோல் அவள் நடக்க அவனும் உடன் தொடந்தான் இயல்பாய்..!

 

“…நீங்க சொல்வது போல் அடுத்த ப்ரீயட் ஃப்ரீ தான்.ஆனால் பாருங்க இங்க லெக்சரர் பாடம் எடுப்பதைவிட ஒரு கொடுமை நடக்க போது..எங்க டிபார்ட்மெண்ட் நேஷ்னல் லெவல் கான்ஃப்ரென்ஸ் ஏற்பாடு பண்றாங்க..எல்லாரும் அதுக்கு தீயா வேலை செஞ்சிட்டு இருக்காங்க..அது நல்ல விசயம் தான் ஆனால் இப்போ அதை பற்றி பேச தான் இந்த டூ ஹவர் ஓடி..அதை உட்கார்ந்து கேட்கும் அளவு எனக்கு பொறுமையில்லை..அதுவும் அந்த அப்பாட்டக்கர் தான் வந்து பேச போறானாம்..அதைவிட ஒரு கொடுமை இருக்குமா..?”

 

என்று அவனிடமே நியாயம் கேட்க அவள் யாரை சொல்கிறாள் என்று புரிந்தாலும் அதை ஏற்க முடியாமல்,

 

“யாருப்பா அந்த அப்பாட்டக்கர்..”

 

என்று கேட்க அவளோ,

 

“உங்களுக்கு தெரியாத ஜி..மிஸ்டர் விஜய்…”

 

என்று முகத்தை அஷ்டகோணலாய் சுளித்து சொல்ல, ‘அடிப்பாவி.. ‘என்று மனதில் அதிர்ந்தவன் வெளிய சாதாரணமாய் காட்டிக் கொண்டு,

 

“ஏன்ம்மா இப்படி..அவன் அப்படி ஒன்னும் மொக்க போட மாட்டானே..”

 

என்று முடிந்த மட்டும் இயல்பாய் கூறினாள்.

 

“அது எனக்கு தெரியாது..ஆனா இந்த பிள்ளைங்க காணாததை கண்ட மாதிரி விடுவாளுகளே ஜொள்ளு ஷ்ஷ்..எனக்கு ஜன்னியே வந்தாலும் ஆச்சரியப்பட இல்லை..”

 

என்று தோளை குலுக்கி சொல்ல அவன் இதழோரம் மீண்டும் புன்னகை..!

 

“தெரியாமல் தான் கேட்கறேன்..அவனும் சாதாரண ஸ்டூடென்ட் தானே..அவங்க தாத்தா காலேஜ் இதுன்னு அவனை எல்லாம் தூக்கி வைத்து ஆடணுமா.. முடியல ப்பா..இவனுங்களோட..”

 

என்று அவனிடமே கேட்டவளை,

 

“இருந்தாலும் நீ பார்த்தே இராத ஒருத்தனை இவ்வளவு டேமேஜ் செய்ய கூடாது..”

 

என்று சொல்ல அவளோ விடுவாதாய் இல்லை.

 

“நான் பார்த்தது இல்லைன்னு நீங்க பார்த்தீங்களா..?”

 

என்று கையை ஆட்டி கேட்க,

 

“பார்த்திருந்தால் இப்படி பேச மாட்டியே.. “என்று அவன் கூறியும் புரிந்துக் கொள்ளாது சக்தி,

 

“நான் பார்த்திருக்கேன் ஜி..அவனுக்கு அவ்வளவு சீன் எல்லாம் இல்ல..சுமார் மூஞ்சி குமாரு தான்..இன்ஃப்க்ட்..உங்க லெவல் கூட அவன் இல்ல ஜி..”

 

என்று அவள் சொல்லும் போது சிரிப்பை கட்டுப்படுத்தவே மிகுந்த பாடுபட்டு,

 

“அப்போ..நான் அழகா இருக்கேன் சொல்லவர..”

 

என்று நிதானமாய் கேட்க அவள் நடையோ சட்டென்று தடைப்பெற்றது.

 

“ஹே..நான் எப்போ அப்படி சொன்னேன்..?”

 

“இப்போ சொன்னேல..உங்க லெவலுக்கு அவன் இல்லைன்னு..அப்போ நான் வேற லெவல் அப்படி தானே..?

 

என்று மடக்கியவனின் பார்வையில் குறும்பு ஏகத்திற்கு இருக்க பதில் சொல்ல தெரியாமல் தடுமாறியவள்,

 

“அடியேய்..யாரு பேச்சு கொடுத்தாலும் இப்படி தான் உன் பாட்டுக்கு பேசுவியா..வர வர ரொம்ப நான் ஸ்டாப்பா வேல செயுற நீ..”

 

என்று தன்னையே கொட்டிக் கொண்டு அவனை பார்த்து,

 

“நான்..நான் போறேன் பை..”

 

என்று ஓட எத்தனிக்க அவள் முன் கைநீட்டி தடுத்தவன்,

 

“எங்க ஓடுற..வா..”

 

என்று மறுபக்கம் அழைக்க அப்பொழுது தான் சுத்தி மீண்டும் வகுப்பிற்கே வந்து நிற்பது புரிந்தது.

 

“நான் இவ்வளவு நேரம் வேற என்ன சொன்னேன்..நான் க்ளாஸ் வரல..”

 

என்றவளை மறுக்க மறுக்க கையை பிடித்து வகுப்பு வாசலில் விட்டு உள்ள போ என்று அனுப்பி தானும் பின்னாடியே உள்நுழைய அப்பொழுது தான் நம் அறிவுக்கொழுந்திற்கு அந்த அதிமுக்கிய சந்தேகம் வந்தது. ஒருவேளை!!!

 

என்று இழுக்கும்போதே ஏற்கெனவே வந்திருந்த அவன் நண்பர்கள்,

 

“விஜய்..வா..வா..”

 

என்று அழைக்க அவ்வளவு தான் கண்களை இறுக்க மூடி உதடு கடித்து, ‘கடவுளே.. ‘என்ற தலையில் கைவைத்தபடி தன் இருக்கையில் போய் அமர அவன் அதரங்களில் மலர்ந்தது ஒரு அழகிய புன்னகை.

 

“என்னடி..இப்டிக்கா போய்..அப்டிக்கா வந்துட்ட..”

 

என்ற கேட்ட தோழிக்கு வெறும் இளிப்பை மட்டும் பதிலாய் தந்து தலை குனிந்தவள் தான் பின் நிமரவே இல்லை.

 

‘லூசு..லூசு..அறிவு இல்லை..அவன் உனக்கு ஓடின்னு கரெக்டா சொன்ன போதாவது யோசிச்சு இருக்க வேணாம்..ஆர்வக்கோளரு..அரைவேக்காடு’

 

என்று விடாமல் தன்னை அர்ச்சயித்தபடி அமர்ந்திருந்தாள்.

 

அக்னிமித்ராவும் அதே வகுப்பு தான்.அவள் வேறு வரிசையில் அமைதியாய் அமர்ந்திருக்க நேராய் அவளிடம் சென்றவன், “க்ளாஸ்லாம் செட் ஆகிடுச்சா..சப்ஜெக்ட்ஸ் எல்லாம் புரியுதுல..”

 

என்று கேட்டபடி பரிவோடு அவள் கன்னத்தை தட்ட அதற்கும் மௌனமாய் தலையை அசைத்தாள்.இப்பொழுது எல்லாம் பெரும்பாளும் அவள் கடைப்பிடிப்பது மௌனத்தை தான்.

 

பேசியது எல்லாம் விக்கி தான் அருகில் சும்மா நின்ற விஜய் அடிக்கடி சக்தியை நோக்க அவளோ தப்பி தவறி நிமிர்ந்தாள் இல்லை.கடைசியில் இவர்கள் போகும் போது “போய் விட்டானா.. “என்பதை பார்க்க நிமிர அதேசமயம் அவளை பார்த்த விஜய்,

 

‘வெளிய வா.. ‘என்பதுபோல் செய்கை செய்துவிட்டு செல்ல அவன் அழைத்ததை யாரும் கவனிக்கவில்லை.’அவள் போகனுமா’ என்று யோசித்தவள் ‘எதுக்கு வம்பு நல்ல பிள்ளையா சரண்டர் ஆகிடுவோம்..’ என்ற எண்ணத்தோடு வெளியே வர அவ்னோ,

 

“நாளைக்கு இதே நேரம்..அதே ஸ்டெப்ஸ் கீழ..வந்திடு..”

 

என்று கூற, “எனக்கு க்ளாஸ் இருக்கு..சாரி ஜி..” என்றவளை போலி ஆச்சரியத்தோடு பார்த்து,

 

“ஆமா..ஆமா..மேடமுக்கு கட் அடிக்கவே தெரியாதே..”

 

என்று சொல்ல விழித்தவள்,

 

“இங்க பாருங்க ஜி..நான் பேசியது தப்பு தான் ஒத்துக்கிறேன்..அதுக்கு சாரி..இனி உங்க பக்கம் கூட வரமாட்டேன்..ஆளை விடுங்க..”

 

என்று கூறி தப்பிக்க முயன்றாள்.

 

“நாளைக்கு நீ வர   டாட்..”

 

என்று அழுத்தமாய் கூறி திரும்பி நடந்தவனை கண்டு, “ஓ மை கடவுளே..”

 

என்று பல்லை கடித்தாள் சக்திப்ரியா.

Advertisements

2 Replies to “சமீராவின் ‘இளங்காத்து வீசுதே’ – 22”

  1. வாயக் கொடுத்து மாட்டிக்கிட்டியே சக்தி 🤭🤭🤭

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: