சமீராவின் ‘இளங்காத்து வீசுதே’ – 20

அத்தியாயம் – 20

அக்காலை பொழுதில் வாகன நெரிசல் மிகுந்த சாலையில் தன் அக்டிவாவை இலாவகமாய் ஏஞ்சலின் ஓட்ட அவள் பின்னால் அமர்ந்திருந்தாள் சந்தியா.

“ஹே..எதுக்க இன்னோர் வாட்டி கால் பண்ணி பாறேன்…”

கண்களை சுருக்கி கெஞ்சலாய் கூறிய சந்தியாவை கண்ணாடி வழி பார்த்து முறைத்த ஏஞ்சல்,

“காலைலேந்து நூறு வாட்டி கால் பண்ணியாச்சு..அதே ஸ்விட்ச் ஆஃப் தான் வருது..அவங்க எதாவது முக்கிய வேலைல இருப்பாங்க..இல்ல எதாவது பார்பஸ் ஆப் பண்ணி வச்சிருக்கலாம்.. ஆன் பண்ணதும் நமக்கு கால் பண்ணுவாங்க..”

என்று சிறுப்பிள்ளைக்கு கூறுவதுப்போல் கூற ஆனாலும் அவள் முகம் தெளியவில்லை.

“இல்லடி..என் மனசே சரியில்ல..நேத்தில் இருந்து ஒரு பொட்டு தூக்கம் இல்ல.. சக்தி யை காணும்..எங்க எப்படி இருக்கானு தெரியல..இப்போ அவளை தேடிப் போனவங்களுட்டையும் தகவல் இல்ல..இதெல்லாம் எங்க போய் முடியுமோனு பயமா இருக்கு..”

“யாருக்கும் ஒன்னும் ஆகாதுடி..அவங்க வரவரைக்கும் நம்மால் முடிந்ததை செயலாம்.. “

“அதுவும் சரி தான்.. ஆமா உனக்கு எப்படி இவரை தெரியும்.. “

“எனக்கு அவரை தெரியாதுடி.. ப்ரியா.. எங்க பக்கத்து வீட்டு அக்கா.. அவங்க எனக்கு சின்ன வயசுலேந்து பிரண்ட்.. அவங்க தாய்மாமா தான் நான் சொன்னவர்.. அவரை பற்றி ப்ரியா அக்கா தான் சொல்லி இருக்காங்க.. 

அவருக்கு சின்ன வயசுலேந்தே கடவுள், அமானுஷ்யம் ரெண்டுளையும் ரொம்ப ஈடுபாடு உள்ளவராம்.. அதை பற்றி நிறைய ஆராய்ச்சி பண்ணி அதிலேயே ரொம்ப டிவோட் 

ஆகி கல்யாணம் கூட பண்ணிக்கல்ல.. ஒரு சித்தர் மாதிரி வாழ்ந்துட்டு வராருனு ஒருவாட்டி சொல்லிருக்காங்க…அவருட்ட நாம சக்தியை காப்பாற்ற எதாவது உதவி கிடைக்கும்ல..அதான் ப்ரியா அக்காட்ட ஹெல்ப் கேட்போம்..”

“இப்போ அவங்க வீட்டிற்கு தான் போறோமா..? “

“இல்ல அவங்க வேற இடம் குடி போய்ட்டாங்க…அதனால அவங்க வீட்டு அட்ரஸ் தெரியல..ஆனால் அவங்க எங்க வேலை பார்க்கிறாங்கனு தெரியும்..அங்கே போய் பாப்போம்..”

என்று கூற சரி என்று தலையாட்டினாள்.

சில நிமிட பயணத்திற்கு பின் ஒரு நிறுவனத்தில் வந்து நிறுத்தினாள். 

உள்ளே சென்று ரிசெப்ஷனில் ப்ரியாவை பற்றி விசாரிக்க அவள் வரச் சொல்வதாய் கூறி காத்திருக்க சொன்னாள்.

சற்று நேரத்தில் வந்தாள் இளம்பெண் ஒருத்தி.

மெரூன் நிறக் காட்டன் புடவையில் நேர்த்தியாகவும் அழகாவும் இருந்த அப்பெண்ணை பார்த்ததுமே ஒரு மரியாதை கொடுத்தது.

ஏஞ்சலை பார்த்ததும் அவள் முகம் ஆச்சரியத்தில் மலர, 

“ஹே.. ஏஞ்சல்..”

என்று அருகில் வந்து அணைத்து விலகியவள், 

“எப்படி இருக்க..பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு..”

என்று மகிழ்ச்சியாய் விசாரிக்க புன்னகையோடு பதில் நலம் விசாரித்து பின், 

“இவ என் பிரின்ட் சந்தியா..”

என்று அறிமுகப்படுத்த புன்னகையோடு அவளுக்கு கைகொடுத்து, 

“ஹாய்..” என்றவள் ஏதோ வேலையாய் வந்திருப்பதை உணர்ந்து ஏஞ்சலை அவளே சொல்லட்டும் என்று பார்க்க, 

“அக்கா.. உங்களுட்ட கொஞ்சம் பேசணும்.. பிரீ ஆஹ் இருக்கீங்களா..”

என்று தயக்கமாய் கூற, 

“சரி.. அங்கே கஃபே ல போய் பேசலாம்..”

என்றவள் இருவரையும் அழைத்துக் கொண்டு போய் அவர்கள் மறுக்க மறுக்க காஃபி வாங்கி தந்தவள் பிறகு என்ன விஷயம் என்று விசாரிக்க தயக்கத்தோடு மேலோட்டமாய் சொன்னாள் ஏஞ்சல்.

“ஹோ..” என்று அவள் கூறியதை உள்வாங்கியவள், 

“ஆனா ஏஞ்சல்.. மாமா இதெல்லாம் செய்ய மாட்டாரேடா..அவருக்கு இதை தொழிலாக பார்க்க பிடிக்காது..அவருக்கு உண்மையாவே சில சக்திகள் இருக்கு தான்..வெளியே சொன்னால் ஒன்னு அவரை பைத்தியம் ஆக்கிடுவாங்க..இல்லை சாமியார் ஆக்கிடுவாங்க…ரெண்டிலும் அவருக்கு விருப்பம் கிடையாது…”

என்று ப்ரியா யோசனையாய் கூற ஒருவரையொருவர் கவலையாய் பார்த்துக் கொண்டனர்.

“அக்கா..ப்ளீஸ க்கா நீங்க எப்படியாவது பேசி சம்மதிக்க வைங்க க்கா.. பாவம் என் பிரின்ட்..ரொம்ப பயந்த சுபாவம்.

அவளுக்கு எதாவது ஆகிடுமோணு பயமா இருக்கு…”

என்று இருவரும் கெஞ்ச அவளுக்கும் பாவமாக தான் இருந்தது.

“சரிடா.. நான் மாமாட்ட பேசிட்டு சொல்றேன்..”

“இப்போ…..இப்போ கேட்குறீங்களா அக்கா..என்னடா இவ இப்டி தொல்ல பண்றனு நினைக்காதிங்க..ஒவ்வொரு நிமிஷமும் திக் திக்னு இருக்கு.. “

என்ற தவிப்பாய் கூறிய ஏஞ்சலினை ஆதூரயமாய் பார்த்த ப்ரியா, 

“உன் கவலை புரியுது ஏஞ்சல்.. ம்ம்.ஓகே..ஒரு ஃபை மினிட்ஸ் வெய்ட் பண்ணுங்க.. இதோ வறேன்..”

என்று எழுந்து சென்றவள் சொன்னது போலவே சில நிமிடங்களில் வந்தாள் கையில் அவள் ஹேன்பேக்குடன்..

“போலாமா..”

என்று இவர்களை கூப்பிட நன்றியோடு அவளை பார்த்த சந்தியாவும் ஏஞ்சலினும், “தேங்க்ஸ் க்கா..தேங்க்யூ சோ மச்..”

என்று கூற,

“இட்ஸ் ஒகேடா.. வாங்க..”

என்று அவர்களை அழைத்துக் கொண்டு வெளியே வந்தவள்.

“எதுல வந்தீங்க..? “

“ஸ்கூட்டியில் க்கா..”

“ஹோ.. நான் ஆஃபிஸ் கேப்ல தான் வந்திட்டு போவேன்.. சரி உங்க ஸ்கூட்டி இங்க ஆஃபிஸ் பார்க்கிங்கில் இருக்கட்டும்.. நாம மூணு பேரும் ஆட்டோவில் போலாம்..”

என்று அவள் கூற சற்று நேரத்தில் ஒரு ஆட்டோவில் ஏறி ப்ரியாவின் மாமா வீட்டிற்கு பயணமானர்.

அந்த கால வீடுப்போல் முன்னால் ஓட்டு கூரையும் பெரிய தூண்களோடு திண்ணையும் வைத்து அதன்பின் மச்சு வைக்கப்பட்டு எளிமையான அழகுடன் இருந்தது.

கதவு தாழ்போடாமல் இருக்க தானே உள்ளே அழைத்து சென்ற ப்ரியா,

“மாமா..”

என்று அழைக்க அவள் சத்ததில் உள்ளறையில் வெளியே வந்தார் கமலகண்ணன்.இவர்கள் எதிர்ப்பார்த்து இருந்த தோற்றத்திற்கு மாறாக நாற்பதுகளின் பாதியில் இருந்த அவரின் தோற்றமும் மிக இயல்பாய் இருக்க, 

‘இவரு என்ன நமக்கு உதவ முடியும்..’ என்று சந்தேகம் சந்தியா மனதில் எழ அதே சமயம் அவளை பார்த்த கமலகண்ணன் முகத்தில் அவள் நினைத்தை கேட்டு விட்டதுப்போல் அர்த்தமான புன்னகை தவழ்ந்தது.

‘மாமா.. நான் ஃபோனில் சொன்னேன்ல..இவங்க தான்..’

என்று அறிமுகப்படுத்த அவர்களை வரவேற்று அமர சொன்னவர்,

“பொதுவா இந்த மாதிரி விஷயங்களில் நான் ஈடுப்படுவது இல்லைம்மா.. ‘விதியை மாற்ற நினைத்தால் அது பல விபரீததில் முடியும்னு நம்புகிறவன் நான்..ஆனால் உங்கள் விஷயத்தில் ப்ரியா என்னை விடுவதாய் இல்லை..”

என்று லேசாய் தலையசைத்து புன்னகைத்தவர்,

“சொல்லுங்க..அந்த ஆண்டவன் துணையிருந்தால் என்னால் முடிந்த உதவியை செய்றேன்..”

என்று அவர் கூற அவரிடம் ஆரம்பத்தில் இருந்து ஒன்று விடாமல் அனைத்தையும் கூற கவனமாய் கேட்ட கமலகண்ணன் முகத்தில் யோசனைக்கூட திரும்பி ப்ரியாவை ஒரு பார்வை பார்த்தவர்,

“அந்த பொண்ணு பேரை சொல்லவே இல்லையே ம்மா..”

என்று கேட்டவரிடம்,

“சொன்னேனே..சக்தி தான் அங்கிள்..”

என்று ஏஞ்சல் சொல்ல,

“நான் இறந்து போன பெண்ணோட பேரை கேட்டேன்..”

எனவும், “அக்னிமித்ரா..”

என்று சொல்ல அவர் முகம் மாற தலையசைத்து கேட்டுக் கொண்டவர்,

“அப்போ அந்த பொண்ணோட அண்ணன்..”

என்று தொடங்கும் போதே இறுக்கி போன குரலோடும் கலங்கிய விழியோடும் சிவந்த கண்களோடும்,

“விஜய் வரதன்..அதானே அவர் பேரு..”

என்றாள் ப்ரியா என்னும் சக்திப்ரியா..!!

***

தாங்கள் கண்ட காட்சியின் கனத்தை தாங்க முடியாமல் இன்னுமே சிலையாகவே விஜயின் கார் பின் சீட்டில் அமர்ந்திருந்தனர்.

விஜயை தேடிக்கொண்டு மாடி ஏறி வந்தவர்கள் விகாரமாகிய முகத்தோடு தரையில் விழுந்து கிடந்த விஜயை பார்த்தவர்கள் அவன் பார்வை செல்லும் திக்கில் ஒளியை திருப்ப சந்தானத்தை கண்ட நொடி தூக்கிவாரி போட அலறியடித்து இருவரும் அங்கிருந்து ஓடியவர்களை மடக்கி பிடித்து தன் காரில் ஏற்றியிருந்தான் விஜய்.

அப்படியே பிடித்து வைத்த பிள்ளையார் போல் அமர்ந்திருந்த மனோஜ்,ஆரியனின் முகத்தில் விஜய் பாட்டில் தண்ணீரை எடுத்து கவிழ்க்க திடுக்கி முழித்தனர்.

கடினமான முகத்தோடு முறைத்துக் கொண்டிருந்த விஜயை கண்டதும் இன்னும் பீதியாக,

“இங்க எப்படிடா வந்தீங்க நீஙக..? “

என்று அவன் அழுத்தமாய் கேட்கவும் அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு அமைதியாய் இருந்தனர். 

“இப்ப வாய திறக்கல.. இங்க என்ன நடக்குன்னு தெரியாது..”

என்று அவன் அதட்டலாய் மிரட்டவும்,

“என்ன சர்..எங்களையும் கொன்றுவீங்களோ..”

என்று ஆரியன் கோபம் கலந்த ஏளனத்தோடு கேட்கவும் “டேய்..” என்று தடுத்த மனோஜை, “விட்றா..”என்று தட்டிவிட்டவன்,

“என்ன பார்க்கறீங்க.. நீங்களாம் மனுஷன் தானா.. என்ன ஒரு கொடூரமான சாவு..அவர் யாருனே எனக்கு தெரியல.ஆனால் பார்த்த எனக்கே ஈரக்கொல நடுங்கிடுச்சு..அவரை பார்க்க தானே இங்க வந்திருக்கீங்க..அவரை அந்த மாறி ஒரு நிலையில் பார்த்தும் எப்படி இவ்வளவு சாதாரணமா வந்து இங்க எங்க விசாரிச்சுட்டு இருக்கீங்க..எப்டி சர் இப்படி..??உங்க தங்கச்சி அக்னிமித்ராவை எல்லாம் தூக்கி சாப்டுடீங்க..யப்பாஆஆ சாமி…”

வார்த்தைகளில் குத்தி தன் ஆத்திரத்தை மறையாமல் ஆரியன் பேச உணர்ச்சி ஏதும் அற்ற முகத்தோடு அவனை பார்த்த விஜய் அவன் பேசிய அனைத்தையும் விடுத்து,

“உனக்கு அக்னிமித்ரா பத்தி என்ன தெரியும்..”

என்று கேட்டவனை ‘என்ன மாதிரி ஆளு இவன்..?’ என்பது போல் தான் பார்த்தனர் மனோஜூம் ஆரியனும்..

அவர்கள் பாவனையை கண்டு,

“மச்.. காப்பாத்த தான் ஓடி வந்தேன்..ஆனால்.ம்ச்..இறந்தவரை பிடிச்சிட்டு இருந்தால் இருக்கிறவங்களை யார் காப்பாத்துறது?”

“ஆஹான்.. நீங்க அடுத்தவரை காப்பாற்ற நினைச்சீங்களா..?உங்களை காப்பாத்திக்க ஓடினேன்னு சொல்லுங்க..யாருக்கு தெரியும் அடுத்து உங்க அப்பாக்கு எதாவது ஆனாலும் இதே டயலாக் தானே சொல்ல போறீங்க..”

என்ற நிமிடம் இடியென ஒரு அறை அவன் கன்னத்தில் இறங்க,

“என்ன பேசுறோம்..யாருட்ட பேசுறோம்னு தெரிந்து பேசணும்..இல்ல பேச நாக்கு இருக்காது..”

என்று விரல் நீட்டி எச்சரித்தான்.

“சர்.அவன் டென்ஷனில் பேசிட்டான் சர்.. நாங்க சக்தியை தேடி தான் வந்தோம் சக்தி உடம்பில் இருந்து தான் உங்க தங்கச்சி இதெல்லாம் பண்றாங்க…எங்க சக்தி எங்களுக்கு நல்லப்படியா திரும்ப வேணும் சர்..”

என்று மனோஜ் இறங்கி வந்தான் என்றால் ஆரியனோ கோபம் இன்னும் மட்டுப்படாமல்,

“அடிச்சிட்டா மட்டும் நான் சொன்னது உண்மை இல்லைன்னு ஆகிடுமா..? நான் சொன்னதில் என்ன தப்பு..சொந்த தங்கச்சியே குழியில இறக்கினவர் தானே நீங்க.. மனச தொட்டு சொல்லுங்க நீங்க அந்த கொலையை மறைத்து உங்க தங்கச்சியையும் அந்த பையனையும் புதைக்கலேனு..”

என்றவனை ‘அடங்க மாட்றானே.. ‘என்று மனோஜ் தலையில் கைவைக்க விஜயோ,

“ஆமா..ஆமா..ஆமா மறைச்சேன் தான்..ஒன்னு இல்ல..ரெண்டு பேரை மறைச்சேன்…ஆனால் நீ சொன்னது போல அது அக்னிமித்ரா கிடையாது”

என்று உணர்ச்சி மிகுதியில் கூறி டேஷ்போர்டில் குத்த அவன் வேகத்தில் அது நசுங்கி வளைந்து தான் போனது.

2 Replies to “சமீராவின் ‘இளங்காத்து வீசுதே’ – 20”

  1. இவன் ஒரு ஃப்ளாஸ் பேக் சொல்ல போறானா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: