Advertisements

முபீன் MSK – கண்ணாமூச்சி ஆட்டம் – 13

கண்ணாமூச்சி – 13

இரண்டு வாரங்களாக டியூஷன் செல்லாமல் வீட்டில் இருந்தவன் அவளை தவிர எதையும் யோசிக்கவில்லை. அவள் மேல் கோபமும் பாவமும் ஏற்பட்டதே தவிர வெறுப்பு ஏற்படவில்லை. அதிலும் பானு சொன்னது வேறு அவனை மேலும் குழப்பியது.

“விஷ்வா நீ வைஷுவை லவ் பண்ற தானே இல்லன்னு மட்டும் சொல்லாத”
அவன் “நான் பண்றன் தான் பட் இப்போ சொல்றதா இல்ல,கொஞ்ச நாள் ஆகட்டும், நீ ஏன் கேக்குற”
“அதுவா நான் அவ நோட்ல ராகுல் வைஷுனு எழுதி ஹார்டின் போட்டு வச்சிருக்கா அதான் கேட்டேன்”அவனும் பெரிதாக எடுக்காமல் சிரித்து கொண்டே சென்று விட்டான்.காரணம் அவனுக்கு தெரியும் அவள் அவனிடம் பழகும் விதம் பார்க்கின்ற பார்வை அனைத்தும் அவள் தன் மேல் வைத்துள்ள அன்பை. அவனுக்கு தெரிந்தும் அவளிடம் அதை சொல்லவில்லை. சிறு பிள்ளை ஏதேனும் சொல்லி அவள் படிப்பை வீணாக்க கூடாது என்று விட்டுவிட்டான்.

ஆனால் அன்று நடந்த விஷயங்களை பார்த்தும் அவனுக்கே சந்தேகம் வந்தது. அன்று உள்ளே சென்று வந்தவன் வைஷு அழுது கொண்டிருக்க காரணம் தெரியாமல் பானுவிடம் கேட்டான்.
“நா சொன்னேன்ல அவ உன்ன பாக்கலனு அத பத்தி சொன்னான அதான் அழ ஆரம்பிச்சுடா ” அவன் புரியாமல் பேனாவை தூக்கி போட அது அவள் உள் விழ அங்கிள் பார்த்து அடிக்க அப்பொழுதும் பேசாமல் அழுதவளை பார்க்க பானு கூறியது உண்மை என நம்பி வெளியில் சென்றுவிட்டான். இருவருக்குளும் சண்டை ஏற்படுத்திய சந்தோஷத்தில் பானு அவள் வீட்டு கல்யாணத்திற்கு  ஊருக்கு சென்றால்.

அவன் சென்றதும் அவனையே நினைத்து அழுது கொண்டே வீட்டிற்கு சென்றவள் , அடுத்த நாள் வந்து அவனை தேட காணவில்லை அடுத்த அடுத்த நாட்களிலும் அவன் வராமல் போக அருணிடம் கேட்டதற்கு அவன் இனிமேல் வரப்போவது இல்லை என்று தெரிந்தும் பேச வார்த்தைகளின்றி நின்று விட்டாள். அடுத்த இரண்டு நாட்கள் பள்ளிக்கும் செல்லவில்லை. பின் ஒரு வாரத்திற்கு பிறகு ஆண்ட்டியிடம் பேசியவள் “அன்னிக்கு வேர பிராபுலம் ஆண்ட்டி pain வந்துருச்சு அதான் அழுத்துட்டேன் அந்த அண்ண மேல தப்பு இல்ல ” ஆண்ட்டி அங்கிளிடம் கூற போன் செய்து வரவைத்தார்.

வந்தவன் அவளை திரும்பாமல் கூட உள்ளே சென்றான். அவன் பின்னாடியே சென்று “சாரி சாரி தெரியாம பண்ணிட்டேன் 1000 time சாரி” அவள் எவ்ளோ கெஞ்சியும் கேக்காமல் உள்ளே சென்றான். தனக்கு இது தேவை தான் என நினைத்தவள் அமைதியாக அவனையே பார்த்து கொண்டிருந்தாள். அவன் அவளை கண்டுகொள்ளாமல் பேனாவை கீழே வைத்து விட்டு செல்ல அவன் முன் ஓடி சென்று நின்றாள். அவன் என்னவென்று கீழே பார்த்து கொண்டே கேட்க

“என்ன பாருங்க”
” வழி விடு நா கெளம்பனும்”
“என்ன பாத்து பேசுங்க”
“அதலாம் பாத்தது போதும் பேசுனதும் போதும்,  பண்ணாத தப்புக்கே அனுபவிசாச்சு”
“ஓ அதான் பிரச்சினையா , அப்போ நானே எனக்கு பனிஷ்மெண்ட் குடுத்தா ok va “
கூறிக்கொண்டே அவன் குடுத்த பேனாவிலே தன் கழுத்திற்கு கீழே கீறி கொண்டாள். அதனை பார்த்து பதரியவன்
“ஹே லூசு என்னடி பண்ற, ரத்தம் வேர வருது ” அவளை திட்டிக்கொண்டே பேனாவை தூக்கி போட்டுவிட்டு தன் கர்ச்சிப்பனால் தொடைத்து கொண்டே அவளை பார்க்க அவளோ சிரித்து கொண்டே ” சாரி , இனிம எண்ட பேசாம பாக்காம இருக்காத” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டாள். இவனோ சொல்வது அறியாமல் அவள் செல்வதையே பார்த்து கொண்டிருந்தான்.
( இந்த சீன் இத விட அதிகமா நடந்துச்சு நா சென்சார் பண்ணி சொல்லிருக்கேன் )

அதிலிருந்து அவன் வைஷுவை பார்க்காமல் பேசாமல் இருக்க முடியவில்லை. அவன் பார்க்கவில்லை என்றாலே அவளை விட ராகுலுக்கு பயம் வந்துவிடும் ஏதெனும்  செய்துகொள்வாளென்று. அவனும் சாதாரணமாக பார்த்து பேசி வந்தான். ஆனால் பானு கூறியது நியாபகம் வந்தால் திரும்பி கொள்வான்.

அன்று தீபாவளிக்கு முந்தைய நாள் ராகுலுக்கு டெஸ்ட் இருக்க அவன் வரவேண்டியது ஆயிற்று. வைஷு ராகுலை பார்ப்பதற்கே வந்தால். அவன் யாரை வேண்டுமானாலும் விரும்பட்டும் தனக்கு அவனை பார்த்தால் போதும் என்றே இருந்தாள். அன்று அனைவரும் விஷேச நாள் என்பதால் அனைவரும் வேலையாகவே இருந்தனர்.

ராகுல் டெஸ்ட் எழுதி முடித்தவன் கிளம்ப ஆண்ட்டி அவனிடம் ” தம்பி நா கொஞ்சம் கடைக்கு போய்ட்டு வரேன் வீட்டுல ஆள் இல்ல நீங்க கொஞ்சம் இருங்க வந்துரன் ” என்று கிளம்பிவிட்டார் வைஷு சமயலறையில் இருந்தாள். அருண் சிறிது நேரம் இருந்தவன் “டேய் போர் அடிக்குது நா மாடிக்கு போறேன் பக்கத்து வீட்டு ரேகா புஷ்வானம் கொழுத்த போகும் நா போய் பாக்குறேன் ..நீங்க வீட்ட நல்லா பாத்துகொங்க தம்பி ” சொல்லிவிட்டு மேலே சென்றுவிட்டான். அந்நேரம் பார்த்து கரண்ட் போக இவனும் மேலே சென்றான். உள்ளே அறையில் முழுவதும் இருட்டாக இருக்க பயந்தவள் “ஆண்ட்டி , ஆண்ட்டி ” என அவள் கூப்பிட சத்தம் கேட்டு ராகுல் கீழே வந்தான். வைஷு இருப்பது அவனுக்கு தெரியாவில்லை.

சுற்றிலும் இருட்டு வீட்டை சுத்திலும் காத்து அடிக்க அதில் ஜன்னகள் மூட திறந்து கொள்ள வரும் சத்தம் அவ்வப்போது வெடி வெடிக்கும் சத்தம் விட்டு விட்டு கேக்க ரொம்ப பயந்தவள் மெல்ல மெல்ல வந்தாள். ராகுல் சத்தம் கேட்டு ” யாரது உள்ள இருக்குறது ” அவன் குரலை கேட்டவள் நிம்மதியுடன் ” நான்தான் அண்ணா ” என்று சொல்லி  முடிப்பதற்குள் ஏதோ கால் தடுக்கி கீழே  விழுந்து  சோபாவில் உள்ள கம்பி தலையில் மோதி விழுந்தாள். அவள் அலறலை கேட்டு பயந்தவன் போன் டார்ச் மூலம் உள்ளே நுழைந்து “மீனு மீனு வென கத்த ” அவள் கீழே தலையில் இரத்தடுத்துடன் படுத்துருந்தாள் அவளை அந்த நிலையில்  பார்த்தவன் வேகமாக சென்று மடியில் கிடத்தி “மீனு மீனு மீனம்மா என்ன பாரு ” கண்ணனத்தை தட்ட அவள் மெதுவாக சிரித்து கொண்டே  அவன் முகத்தில் கைவைத்து

“………ராகுல்………..” 

Advertisements

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: