சமீராவின் ‘இளங்காத்து வீசுதே’ – 19

அத்தியாயம் – 19

விஜயின் கைப்பேசி சிணுங்கவும் அனிச்சையையாய் அவன் கைகள் மொபைலை நாட ஸ்விப் செய்து பார்த்தவன் நோடிஃப்வீகெஷனாய் Dr.சந்தானம் இடமிருந்து,

“ஓகே விஜய்.. ஐ வில் பீ தேர் இன் ஃபிஃப்டீன் மினிட்ஸ்..” 

என்று குறுஞ்செய்தியை காட்ட,

‘அங்கிள்ட்ட அப்பாவை அட்மிட் செய்த்தை யாரு சொன்னது..’ 

என்ற யோசனையோடு மெசேஜை திறந்தவன் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது.

”வாட் த ஹெல்..” 

அவசரமாய்  சாட்டை ஸ்க்ரோல் செய்து அதன் ஆரம்பத்தை பார்க்க சில நிமடங்களுக்கு முன்னால் இவனிடம் இருந்து தான் மெசேஜ் சென்றிருந்தது. 

”அங்கிள்..ஒரு எமர்ஜென்சி..கால் பண்ண முடியலை.. 

எங்க வி.எஸ் வில்லாக்கு வர முடியுமா..?” 

  “அங்கேயா..?என்னாச்சு விஜய்.. நான் இப்போ டெல்லில ஒரு கான்ஃப்ரென்ஸ் காக கிளம்பிட்டு இருக்கேன்..இன்னும் ஒன் ஹவர்ல எனக்கு ஃப்ளைட்..வேற யாரையாவது அனுப்பி வைக்கவா..?” 

“நோ அங்கிள்.. கொஞ்சம் பர்சனல் நீங்க வந்தால் தான் 

சரியாக இருக்கும்..ப்ளீஸ்..அப்புறம் உங்களை  க்ரக்ட் டைம்க்கு 

அனுப்பி வைப்பது என் பொறுப்பு…! ”

என்றதோடு முடித்திருக்க அதற்கு தான் அவர் இன்னும் கால்மணி நேரத்தில் வருவதாய் கூறியுள்ளார்.

இதனை கண்டதும் திக்கென்று ஆக ஒரு நொடி புரியாமல் விழித்தவன் அடுத்த நொடி, 

“முதல் சாவு யாரு..” 

என்ற மித்ரா வார்த்தை அவன் செவிப்பறையில் அறைய சட்டென்று விளங்கிக் கொண்டவன், 

“ நோ… நோ… நோ மித்ரா…” 

என்று பயத்தில் ஜபித்தவன் வேகமாய் அவருக்கு அழைப்பு விடுக்க அது நாட் ரீச்சபுள் என்று வரவும் சட்டென்று எழுந்து அங்கிருந்து செல்ல முனைய அவனை தடுத்த கீதா, 

“எங்க விஜய் போற..” 

என்று பதட்டமாய் வினவ,

“ம்மா..இதோ கொஞ்ச நேரத்தில் வந்திடுறேன்..” 

என்றவனை,

“ விஜய்..எனக்கு பயமா இருக்குடா..என்னை விட்டு எங்கையும் போகாத விஜய்..” 

என்று சிறுப்பிள்ளையாய் பதறிய அன்னையை விட்டு செல்ல மனம் முரண்டினாலும் தான் செல்லா விட்டால் நடக்க போகும் விபரீததை நினைத்து, 

“ம்மா.. நான் போய் தான் ஆகணும்..பயப்படாதீங்க..அப்பாக்கு ஒன்னும் ஆகாது..இதோ வந்திடுறேன்..” 

என்றவன் மற்றவர்களிடம் பார்த்துக்கொள்ளும்படி சொல்லிவிட்டு  வெளியே வந்தவன் தன் அன்னை வந்த காரில் ட்ரைவரை அனுப்பிவிட்டு காரை எடுத்துக்கொண்டு புறப்பட்டான் அந்த முகவரியை நோக்கி.. 

*** 

“இந்த ஹாஸ்பிட்டல் தான் சொன்னாங்கடா..” 

என்று ஹாஸ்பிட்டலை பார்வையிட்டபடி பைக்கில் ஆரியன் பின்னால் இருந்து இறங்க ஆரியன் பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு வந்தான்.

 

“இவ்வளவு பெரிய ஹாஸ்பிட்டலில் எங்கனு தேடுவது..?”

என்று யோசித்தபடி உள்ளே சென்றவர்கள் விஜய் தந்தை அட்மிட் செய்யப்பட்ட ஃப்லோரை கேட்டு அறிந்துக்கொண்டு அங்கே செல்ல அந்நேரம் தான் அவன் மருத்துவரை பிடித்துக் கத்திக் கொண்டிருந்தான். 

“யோவ் மனோஜூ..பேய் இவரா இல்ல இவர் தங்கச்சியா..ரெண்டும் கத்தும் போது ஒரே மாதிரி இருக்காய்ங்க..” 

என்று அவன் காதில் ஆரியன் முணுமுணுக்க,

“ம்ம்ம்ம்..இவரு உயிரோட இருக்கிற பேய்..அது செத்த பேய்..போதுமா..சுத்தி முத்தி எங்கயாவது சக்தி இருக்காளா பாருடா..” 

என்று தேட சொன்னவன் தானும் அங்கும் இங்கும் தேடிப்பார்க்க சற்று நேரத்தில் விஜய் எங்கேயோ கிளம்புவதை பார்த்து, 

“அப்பா உயிருக்கு போராடிட்டு இருக்கும்போது…இவரு எங்கடா அவசரமா கிளம்புறாரு..” 

“அதானே..எனக்கும் சரியாப்படல…வா நாமும் போவோம்..” 

என்றப்படி வேகமாய் அவன் கவனியாமல் அவன் பின்னோடு ஓட அவன் காரை எடுத்துக் கொண்டு கிளம்பவும் இவர்களும் பின் தொடர்ந்தனர். 

கிட்டதட்ட அரைமணி  நேரமாய் தொடர்ந்த பயணத்தில், 

“எங்க போறாருனே கெஸ் பண்ண முடியல..என்ன இடம்டா இதெல்லாம்..”

“தெரியலயே. நானும் இங்க எல்லாம் வந்தது இல்ல..சரி..போகிறவரை போவோம்..” 

என்று மனோஜ் சொல்ல இடையில் ஆரியன் அலைபேசி வேறு விடாமல் அடிக்க ஒருக்கையில் பேலன்ஸ் செய்தவாறு பேசியை எடுத்தான். 

அனித் தான் அழைப்பது.எடுத்தவுடன், 

“டேய் நாயே.. வீட்டுக்கு போகாம எங்கடா போனா..அப்பா போன் அடிச்சாலும் எடுக்கலையாம்..எனக்கு அடிச்சு கேட்டாங்க.. நீ என் கூட தான் இருக்க..எல்லாம் குரூப் ஸ்டெடின்னு ஏதேதோ சொல்லி சமாளிச்சிருக்கேன்..எங்கடா இருக்க..” 

என்று கத்த இவனோ, 

”ரொம்ப நல்லது..அப்படியே இன்னும் கொஞ்ச நேரத்துக்கு நான் உன் கூட தான் இருக்கேன்..அப்படியே சமாளிப்பியாம்..” 

என்று அசால்ட்டாய் கூறி அவன் கத்த கத்த பொருட்படுத்தாது அழைப்பை துண்டித்து வைக்க அவன் சைகையில் லேசாய் சிரித்த மனோஜ், 

“இது ஒரு லேட்டாடா….?சின்ன பையனா நியி..?இன்னுமா அப்பாக்கு பயப்படுற..” 

என்றான். 

மனோஜ் வீட்டில் எல்லாம் அவன் விருப்பம் தான்.ஒரு வயது வந்தபின் அவனுக்கான பெர்ஷனல் ஸ்பேஸை கொடுத்து 

அவன் பெற்றோர்கள் வளர்த்ததால் இது அவனுக்கு புதிதாய் இருந்தது. 

“இப்போ இல்ல இன்னும் பத்து வருஷம் ஆனாலும் லேட்டானால் என் அப்பா என்னை கேள்வி கேட்க தான் செய்வார்.ஏன்ன நான் என்னைக்கும் அவருக்கு அதே மகன் தான்..” 

என்றான் மென்மைகூடிய முகத்தோடு..

என் வாழ்க்கை என் சுதந்திரம் என்னும் பெயர்க்கொண்டு ஒரே வீட்டில் தனித்தனி தீவாய் வாழாமல் தந்தையின் அன்பில் கலந்த அதட்டலோடும் கண்காணிப்பில் வளர்வதும் தாயின் அரவணைப்பில் நிற்பதும் இக்காலப் பிள்ளைக்களுக்கு கிடைத்தாலே அது வரம் தான். 

விஜய் இருந்த மனநிலையில் தன்னை பின்னால் இருவர் பின் தொடர்வதைக்கூட உணராமல் நடுக்கும் மனதோடு வேகமாய் வண்டியை செல்லுத்த இன்னும் சற்று தூரத்தில் ஒரு வீட்டின் முன் கொண்டு வந்து நிறுத்தினான். 

பெரிய கோட்டை போல் காட்சியளித்த இதுவும் அவர்கள் வீடு தான்.அவர்கள் பாரம்பரிய வீடு.விஜய் பிறப்பதற்கு முன்பே இவ்வீடு ஊருக்கு அவுட்ரில் இருப்பதால் நகரத்தின் முக்கிய இடத்தில் வீடு கட்டி மாறிவிட்டனர்.ஆனாலும் இந்த வீட்டை இடிக்கவோ மாறியமைக்கவோ மனமில்லாமல் அப்படியே பாராமறித்து வர சற்றும் பழமை மாறாமல் அதேப்போல் இருக்கும் அவ்வீட்டினை ஏதோ மனம் அழுத்தும் பாரத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான் விஜய். 

”மித்ரா..ஏன் இங்கே வர வைத்திருப்பாள்’ என்பது அவனுக்கு புரிந்தது.ஆனாலும் புரிந்த விஷயம் தான் அவன் கை கால்களை நடுங்க செய்ய மனதில் தைரியத்தை கூட்டி கேட்டினை திறந்தான். 

உள்ளே வந்தவன் ஏற்கெனவே சந்தானத்தின் கார் நிற்பதை கண்டு வேகமாய் உள்ளே செல்ல பின்னால் வந்த ஆரியனும் மனோஜூம் அவன் காருக்கு பின்னாலே பைக்கை நிறுத்திவிட்டு இறங்கி, 

“இது தான் இவரு வீடா..??யப்பா..எவ்வளவு பெருசு..இவரு மட்டும் தனியாவா இவ்வளவு பெரிய வீட்டில் இருக்காரு..” 

என்று ஆரியன் வியக்க, 

“இல்ல ஆரியா..அவர் இருக்கும் வீடு வேற..இது இன்னோர் வீடு போல..” 

என்று கூறவும்,

“ஓ..சரி வா உள்ள போவோம்..” 

என்று ஆரியன் முன்னால் நடக்க அவனை தடுத்து நிறுத்தினான் மனோஜ். 

“டேய்…இப்போ போனதும் ‘வாங்க தம்பிங்களா’னு கூப்பிட்டு வச்சு விருந்து போட போற மாறி அசால்ட்டா போற.. நாம திருட்டு தனமா ஃபாலோ பண்ணிட்டு வந்திருக்கோம்..அவர் பார்த்தால் என்ன செய்வாரோ தெரியாது..” 

”அதுக்கு இங்கேயே நிற்க சொல்றீயா..உள்ள இடியே விழுந்தாலும் வெளியே தெரியாது போல..அப்படி இருக்கு இந்த வீடு..இங்க நின்னால் ஒரு பிரயோஜனமும் இல்லை..வா உள்ள போலாம்..அவரை பார்த்து ஏன் பயப்படணும்..என்ன தலைய சீவிடுவாரா..” 

என்று தைரிய திலகமாய் பேசி உள்ளே இழுத்து சென்ற ஆரியனின் பின்னால் அவனும் வேறு வழியின்றி வந்தான். 

வீட்டுக்கும் கேட்டிற்குமே சிறு தொலைவு இருக்க சுற்றும் முற்றும் பார்த்தபடியே வந்தனர்.. 

“அங்கேந்து பார்க்க அழகா இருந்துச்சு..இப்போ என்னானா பூத் பங்களா மாதிரி இருக்கு..அதுவும் ஒரே இருட்டா லைட் கூட இல்லாமல்.. ஒருவேளை மித்ரா இங்க தான் இருக்கோ..” 

என்று ஆரியன் கூற உடல் வியர்க்க திருதிருவென முழித்த மனோஜ், 

“அப்போ உண்மையாவே பேயை தான் பார்க்க போறோமா..” 

என்று பயம் நிறைந்த குரலில்  கேட்க நின்று முறைத்தவன், 

“யோவ்..அப்போ இவ்வளவு நேரம் நான் என்ன கதை சொல்லிட்டு இருந்தேனா.” 

என்க, 

“இல்லடா…நான் முன்ன பின்ன பேயெல்லாம் பார்த்தது இல்ல..இதுவரை ஒன்னும் தெரியல..ஆனால் இந்த இடத்த பார்த்தாலே கை காலெல்லாம் உதறுது..” 

என்று அப்பட்டமான பயத்தில் கூற, 

“நான் மட்டும் என்ன பேயோட பேசி பழகிட்டு இருக்கேனா…இந்த சக்திட்ட சகவாசம் வச்சிக்க போய் அது பேய் சகவாசத்துல கொண்டு வந்து நிறுத்திடுச்சு..இருக்கட்டும்..!! நல்ல படிய திரும்பி என் கையில கிடைக்கட்டும் இருக்கு அந்த கத்திரிக்காக்கு..” 

என்றபடி கதவின் அருகில் செல்ல அவனுக்கும் ஒரு நொடி தயக்கம் வந்தாலும் அதே கத்திரிக்காவை மனதில் கொண்டு உள்ளே மெதுவாய் அடி எடுத்து வைக்க, 

“அங்கிள்..எங்க இருக்கீங்க…” 

என்று விஜய் குரல் தூரத்தில் கேட்டது. 

“எந்த அங்கிள்-ல தேடி வந்திருப்பார்..” 

என்று ஹஸ்கி வாய்சில் கேட்க, 

“தெரியலையே..இவ்வளவு இருட்ட இருக்கேடா..” 

என்றான் அவனும் அதே குரலில்.. 

“ஃபோன் டார்சை ஆன் பண்ணிக்கோ..அங்க தான் வாய்ஸ் கேட்குது வா..” 

என்று ஹாலில் ஓரத்தில் இருந்த படிக்கட்டை இருட்டில் தடவி அடைந்தனர். 

மறுபுறம் மாடியில் நின்ற விஜய் அங்கும் இங்கும் தேடி அலைந்தான் சந்தானத்தை..அவர் இங்கே வந்திருப்பது நன்றாக தெரிந்தது.ஆனால் அவரை எங்கும் காணாமல் பயம் அதிகரிக்க, 

“நோ மித்ரா.. நீ பண்றது தப்பு.. அவரை எதுவும் பண்ணிடாத.. நான் தான் காரணம்னா என்னை என்ன வேண்டுமானாலும் பண்ணிக்கோ..அங்கீள் நான் சொல்லி தான் எல்லாம் செஞ்சார்.. ப்ளீஸ்..” 

என்று வாய்ப்பாட்டில் புலம்ப கையில் வைத்திருந்த ஃபோன் டார்சோடு சுற்றி தேடினான். 

திடீரென்று ஒரு துர்நாற்றம் அவன் நாசியில் ஏற சட்டென்று மூக்கை மூடியவன் பின் மூச்சை இழுத்து பிடித்தபடி அத்திசையில் கால்களை நகர்த்தினான். 

ஒவ்வொரு அடிக்கும் அவன் இதயத்துடிப்பு எகிற நடந்து அந்த தளத்தில் பின்புறம் சுற்றியுள்ள மரத்தின் நிழோடு அமைக்கப்பட்டிருந்த பால்கனி அருகில் வந்து நிற்க சுற்று வெளிச்சத்தை காட்டியவன் கை ஒரு இடத்தில் நிற்க அனிச்சையாய் மொபைலை தவரவிட்டவன் தானும் பதறி கீழே விழுந்தான்.தொண்டையை யாரோ நெறிப்பது போல் சத்தமே வரவில்லை.ஆனால் கண்கள் ரெண்டும் தெறித்து விழுந்துவிடும் போல் விரிந்தது. 

அவன் மொபலை போட்டாலும் அதன் விளக்கு அணையாமல் அந்த கோரக்காட்சியை நமக்கும் காட்டியது. 

கூர் ஆயுதம் எதையோ கொண்டு உடம்பின் ஒரு இடம் விடாது அத்தனையும் கொத்தி எடுக்கப்பட்டு அதிலிருந்து இரத்தம் வழிய மொத்தமாய் சிதைந்து உருத்தெரியாமல் இறந்து கிடந்தார் சந்தானம். 

மூச்சுக்காக நுரையீரல் ஏங்க மார்ப்பு குடு வேகமாய் ஏறி இறங்க உச்சி முதல் உள்ளங்கால் வரையில் வியர்க்க  நிமிடத்தில் செத்தே போய் விட்டான் விஜய். 

“அங்கிள்..அங்கிள்..” 

என்றவன் குரல் உடைய கண்கள் குளமாக அவன் அப்படியே கிடக்க அடுத்த சில நிமிடங்களில் காலடி சத்ததை தொடர்ந்து இருவரின் அலறலில் சுயம் உணர்ந்தான் விஜய். 

சட்டென்று சத்தம் வந்த திக்கில் பார்க்க தலைதேறிக்க இருவர் ஓடுவது தெரிந்தது, 

அவர்களை தொடர என்று நினைத்தவன்

பின் மீண்டும் சந்தானத்தின் உடலை நெருங்கி, 

‘அங்கிள்..’ 

என்று தொட முயல பட்டென்று அவ்வுடல் பால்கனி வழி கீழே வீசப்பட்டது. 

ஓடி சென்று பால்கனி வழி பார்க்க குனிந்திருந்த ஒரு பெண் உருவம் மெல்ல தலையை நிமிர்த்தியது. 

உதடுகள் சிரிப்பில் விரிய கண்களில் குரூரம் கொப்பளிக்க அவனை பார்த்தபடி விரல்களை சொடக்க சந்தானத்தின் காலில் தொடங்கிய நெருப்பு  நொடிகளில் அவர் உடல் முழுவதும் பரவி தீசுவாலையாக அதற்குமேல் அங்கே நிற்க முடியாமல் வெளியே ஓடினான். 

அவனை அதே ஏளன சிரிப்பொலி பின் தொடர வாசலை நோக்கி ஓடி காரில் ஏறியவன் வேகமாய் வண்டியை எடுக்க தூரத்தில் இருவர் ஓடுவது தெரிந்தது. 

வேகமாய் வாகனத்தை செல்லூத்தி அவர்களை மறித்து நிப்பாட்ட வெளீறிய முகத்தோடு நின்றனர் மனோஜூம் ஆரியனும்…

2 Replies to “சமீராவின் ‘இளங்காத்து வீசுதே’ – 19”

  1. கொலை பயங்கரமா இருக்கு…மித்ரா இப்படி பண்ணா சக்தி கதி…இவனுங்க வேற மாட்டிகிட்டாங்க…விஜய்கிட்ட உண்மைய சொன்னாலும் மித்ராவ எப்படி அடக்க முடியும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: