Advertisements

சமீராவின் ‘இளங்காத்து வீசுதே’ – 18


அத்தியாயம் – 18

இருவரும் சுதாரித்த நொடி அவ்விடத்திற்கு விரைய அங்கே சிவகுமாரின் தலையை சுற்றி இரத்தம் நிரம்ப பார்க்கவே மனதை பதற வைத்தது.சுற்றியுள்ள அனைவரும் கூடி இடமே பரபரப்பாக அவர்கள் பேச்சிலே யாரும் அவர் விழுந்ததும் தான்‌ பார்த்திருக்கின்றனர் என்பது புரிய ‘சக்தியை யாரும் பார்க்கவில்லை’ என்று அவன் நம்பிய அதே நேரம் அவனை தனியே‌ இழுத்து வந்த மனோஜ்,

“அது…சக்தி…சக்தி தானே..”

என்று அதிர்ச்சியாய் சொல்ல,

“சக்தியா..?அவ எங்க இங்க..எ—என்ன உளர..வா சாருக்கு என்னாச்சு பா—பார்ப்போம்.. ”

திருட்டு முழியோடு பதறியவனை அழுத்தமாய் பார்த்த மனோஜ்,

“நீயும் பார்த்த ஆரியன்..சக்தி தான் தள்ளினது..”

என்றவன் தலையை அழுத்தப்பிடித்து,

“சக்தி ஏன் இப்படி பண்ணினாள்..அவ முகத்தை பார்த்தியா..அப்படி ஒரு ரேஜ்..ஏன்..”

என்று அதிர்ச்சியின் விழும்பிள் அவன் அரற்ற,

“அது சக்தி இல்ல மனோஜ்…”

என்றான்‌ மெதுவாய்..

“நான் என் ரெண்டு கண்ணால பார்த்தேன்டா..அது நிச்சயம் சக்தி தான்..எனக்கு நல்லா தெரியும்.  ”

“சொல்றேன்ல மனோஜ் அது சக்தி இல்லை..அவ எப்போ ஊரில் இருந்து வந்தாள்சக்தி ஃப்ரெண்ட் நம்பர் இருக்கா??ஃபோன் பண்ணி பாரேன்…”

“நான் சக்திக்கே கால் பண்றேன்..”

“சக்தி சிம்மை ஒடசாச்சிப்பா..நீயூ நம்பர் வாங்கிடுச்சா தெரியலைஅவ கூடவே ஒரு பொண்ணு இருக்குமே….ஆங்..சந்தியா..அந்த பொண்ணுக்கு ட்ரை பண்ணு..”

“சந்தியா என் கால்லை எடுக்க மாட்டா.நான்‌ ஏஞ்சலுக்கு அடிக்கிறேன்”

“ஓஹோ….அந்த சந்தியா..இந்த சந்தியா தானா..”

எனபது விளங்க மேலும்‌‌ அதை குறித்து அவன் பேசவில்லை.

ஏஞ்சலிற்கு அழைக்க சில ரிங்களிற்கு பின்பு அழைப்பை ஏற்றவளிடம் ஒரு ஹாய்..ஹலோ கூட இன்றி,

“சக்தி எப்போம்மா வந்தா…”

என்று கேட்க அவன் குரலில் இருந்த பதட்டத்தை உணர்ந்த அவளும்,

“அவ இன்னும் வரலையேண்ணா..ஏன் என்னாச்சு..”

என்க அவள் பதிலில் அதிர்ந்த மனோஜ் நிமிர்ந்து ஆரியனை ஒரு பார்வை பார்த்துவிட்டு,

“ஒரு விஷயம் தான்..சரி வீட்டுக்கு போயிட்டியாடா..”

என்றான்.

“இல்லண்ணா…இன்னைக்கு க்ளாஸ் முடிய லேட் ஆகிடுச்சு..இப்போ தான் விட்டாங்க..”

என்றவளை தான் நிற்கும் இடத்தை கூறி வரச்சொல்ல சில நிமிடங்களில் பதட்டமாய் ஓடி வந்தனர் சந்தியாவும் ஏஞ்சலினும்..

மூச்சு வாங்க வந்து நின்ற ஏஞ்சல்,

“அண்ணா..இங்க என்ன பண்றீங்க..அங்க சேர்மன் சர் பில்டிங்கில் இருந்து விழுந்துட்டாராம்..க்ளாஸ்லேந்து வந்ததும் தான் எங்களுக்கு விஷயம் தெரியும்..ஆம்புலன்ஸ் கூட வந்துவிட்டது..ரொம்ப அடியாம்..கிட்டகேயே யாரையும் விடலை..கேட்டதில் இருந்து படபடப்பா இருக்குண்ணா.. ஜீஸஸ் அவரை காப்பாற்றணும்..”

மடை திறந்த வெள்ளமாய் ஏஞ்சல் படபடக்க அருகில் நின்ற சந்தியா சற்று நிதானித்திருந்தவள் ஆரியனை கவனித்துவிட்டு இந்த சம்பத்திற்கும் மனோஜ் அழைத்ததுக்கும் ஏதோ தொடர்புள்ளதோ என்று தோன்ற,

“எதுக்கு சக்தி பத்தி கேட்டீங்க..என்னாச்சு…?”

என்று மனோஜை கேட்டவள் இரு துருவமான ஆரியனும் மனோஜூம் ஏன் சேர்ந்து நிற்கிறார்கள் என்ற கேள்வியை பார்வையில் தாங்கி நிற்க அவள் பார்வையின் கேள்வியை தவிர்த்து,

“சொல்றேன்..சக்தி ஊருக்குப் போனதுக்கு அப்புறம் பேசினாளா..?”

என்றான் மனோஜ்.

“இல்லையே..அவ சிம் டேமேஜ் ஆகிடுச்சு..ஊருக்கு போனதும் அங்கிருந்து கால் பண்றேன்னு சொன்னாள்..ஆனால் பண்ணல..அவங்க வீட்டு நம்பரும் எங்களுக்கு தெரியாது..அதனால பேசவே இல்லை..ஏன் கேட்கறீங்க…அவளுக்கு எதாவது பிரச்சனையா..?”

“என்னைக்கு போனால்?”

இம்முறை ஆரியன் கேட்க தயக்கத்தோடு அவள் சொல்ல புரிந்தது லைப்ரெரியில் பார்த்ததுக்கு மறுநாள் தான் கிளம்பியுள்ளாள் என்று..

‘போகும் போது ஏதோ சொல்ல தவிச்சாளே..பாவி..பாவி..அவளை அலட்சியப்படுத்தி இப்போ எங்க இருக்கான்னு கூட தெரியலை..யாருட்டையும் சொல்லாமல் என்னை மட்டும் தான் உதவிக்கு தேடியிருக்காள்..அந்த நம்பிக்கையை காப்பாற்றாமல் தொலைத்துவிட்டேனே..’

அவன் மனம் குற்றவுணர்வில் தவிக்க வார்த்தை எழவில்லை.

“கூப்பிட்டு வைத்து சும்மா நின்றாள் என்ன அர்த்தம்..திடீரென்று ஏன் சக்தியை பற்றிக் கேட்டீங்க..அவளுக்கு என்ன..?”

“நம்ப முடியாத அதிர்ச்சியில் நிற்கிறேன் சந்தியா.. சக்தியா இப்படி ஒரு விஷயத்தை செய்தால் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியலை.. நடந்ததை இப்போ நினைத்தாலும் எனக்கு பகீருங்குது…”

“அய்யோ.. கொஞ்சம் புரியுறா மாறி சொல்லுங்களேன்..”

“புரியுற மாதிரி தானே..சொல்றேன்..சக்தி ஊருக்கெல்லாம் போகவில்லை..இங்க தான் இருக்கிறாள்..இதோ இப்போ சொன்னீங்களே சேர்மன் சர் விழுந்தார் என்று..அவராக ஒன்றும் விழவில்லை..சக்தி தான் தள்ளி விட்டாள்..”

என்று அவன் கூற தோழிகள் இருவரின் முகமும் அதிர்ச்சியில் உறைந்து பின் கோவத்தில் சிவந்தது.

“என்ன உளரல் இது..லூசா நீங்க..”

“ஏண்ணா…இப்படி அபாண்டமா பேசுறீங்க..?”

“நான் ஏன் பொய் சொல்லணும்.. என் கண்ணால பார்த்தேன்.. நம்பலைன்னா இதோ நிற்கிறானே இவனும் தான் இருந்தான்..கேட்டு பார்…ஆமாவா…இல்லைவா என்று ”

என்று மனோஜ் டென்ஷனில் கத்த ஆரியனோ தலையை மறுப்பாய் அசைத்து,

“இல்ல மனோஜ்..சக்தி இப்படி பண்ணல..அவ உருவில் இதனை செய்தது அக்னிமித்ரா..”

என்க ‘என்னது’ என்று மூவரும் வாய் பிளக்க ஆரியன் சொன்னான்.ஆதியில் தொடங்கி அத்தனையையும் சொல்லி முடிக்க அதனை க்ரகிக்கவே அவர்களுக்கு நேரம் பிடித்தது.

கதைகளிலும் கற்பனைகளிலும் மட்டுமே உள்ள அமானுஷயத்தை நிஜ வாழ்க்கையில் கேட்டதில் திக் பிரெம்மை பிடித்ததுப்போல் மனோஜ் நிற்க ஏஞ்சலினோ,

“இவ்வளவு நடந்தும் எங்களுட்ட அவ மூச்சுக்கூட விடலைஆபத்து நேரத்தில் கூட நம்மை நாடவில்லை என்றால் அப்புறம் அந்த நட்புக்கு என்ன அர்த்தம்..”

என்று அழவே தொடங்கிவிட சந்தியா தான் ஆரியன் சொன்னதை கொண்டு சமீபக்க காலமாய் அவளது சில புரியாத நடவடிக்கைக்கான காரணத்தை விளங்கிக் கொண்டு,

“இப்போ அதை நினைச்சு வருந்த எல்லாம் நேரம் இல்லை ஏஞ்சல்.. நம்ம சக்தி பெரிய ஆபத்தில் மாட்டி இருக்கிறாள்.. தாமதமாக்கும் ஒவ்வொரு நிமிஷமும் அவளுக்கு இன்னும் சோதனை அதிகமாகும் அதற்குள் அவள் எங்கேன்னு கண்டுப்பிடிக்கணும்..”

என்று அழுத்தமாய் சொல்ல பயந்து தடுமாறாமல் சூழ்நிலைக்கு தக்க நடந்துக் கொள்பவளை நன்றியோடு பார்த்த ஆரியன்,

“சரியா சொன்னீங்க..சீக்கிரமே சக்தியை காப்பாற்ற வேண்டும்ஆனால் எங்கேன்னு போய் தேடுறது..அது அவளை எங்கே வைத்திருக்கும் என்று யூக்கிக்கவே முடியலை..சற்று நேரம் முன்புக்கூட ஃப்லிப் ஆஃப் செக்கேண்ட்ல மறைந்துவிட்டாள்… ”

என்று ஆரியன் சொல்ல கைகளை பிசைந்தப்படி யோசித்த சந்தியாவிற்கு சட்டென்று ஒன்று நியாபகம் வந்தது.

“அட..! இதை எப்படி மறந்தேன்..”

என்று தலையில் கைவைத்தவள் மற்றவர்களை பார்த்து,

“கொஞ்ச நேரம் இங்கேயே வெய்ட் பண்ணுங்க..இதோ வந்திடுறேன்..”

என்று அவள் பரப்பரக்க அவளை தடுத்து,

“எங்கடி போற..”

என்ற ஏஞ்சலை “நில்லு..வந்து சொல்றேன்..”

என்று அவள் வேகமாய் சென்றாள்.சில நிமிடங்கள் ஆகியும் அவளை காணாமல் மூவரும் காத்திருந்தனர்.

“விஜய் சர்..அவரா இப்படி..ச்சே அவர் மேல் நான் எவ்வளவு மரியாதை வைத்திருந்தேன் தெரியுமா..ஒரு ஹீரோ மாதிரி பார்த்தேன்..ஆனால் இவ்வளவு மோசமான மனசு கொண்டவரா..?”

“இப்பெல்லாம் பல பேரின் ஹீரோ முகமூடி பின்னாடி இப்படி ஒரு வில்லத்தனம் இருக்க தான் செய்கிறதும்ச்..அந்தாள கொன்னுப் போடுற ஆத்திரம் வருது எனக்கு..”

அதே சமயம் சந்தியாவும் வந்து சேர்ந்தாள் கையில் ஒரு புத்தகத்தோடு.. 

மூச்சிறைக்க,

“ இது..இந்த புக்..உங்க சிஸ்டர்காக கேட்டு இருந்தீங்களாம்..அவசரமா கிளம்புறதால கொடுக்க முடியல.. நீங்க வந்து கேட்டால் இந்த புக்கை தர சொன்னாள்.. நீங்களும் வரலை.. நானும் மறந்துட்டேன்…”

“நான் எந்த புக்கும் கேட்கலேயே..” என்றபடி வேகமாய் அதனை வாங்கி புரட்ட மடித்த தாள் ஒன்று கீழே விழுந்தது.புக்கை புரட்டிய கை அனிச்சையாய் நிற்க குனிந்து அதனை எடுத்த ஆரியன் படபடத்த இதயத்தோடு பிரித்தான்.

“எனக்கு தெரியும் சீனியர்..நீங்க என்னை தேடி வருவீங்கன்னு நீங்க இதை படிக்கிற நேரம் நான் மித்ராவோட பிடியில இருப்பேன்..ஆனால் இந்தமுறை உங்க பேச்சை கேட்டு விலகி இருக்க தான் நினைத்தேன்..ஆனால் அவ விடுவதாய் இல்லை.. இப்போ தான் நீங்க சொன்ன மாதிரி பிரச்சனையோட வீரியம் புரியுது..என்ன நடக்குமோனு ரொம்ப பயமா இருக்கு சீனியர்…அவக்கிட்ட இருந்து ஒன்னு தான் தெரிந்துக்க முடிந்தது.

டிசம்பர் 5.!!   அக்னிமித்ராவோட எட்டாவது நினைவு நாள் பூர்த்தி அடையுது..அத்தோட இந்த உலகத்தில் அவளுக்கான நேரம் முடியுதாம்..அதுக்கப்புறம் அவளே மறுத்தாலும் அவள் ஆன்மா முக்தி அடைந்திடும்அதுக்குள்ள அவளுக்கு வேண்டியதை செய்ய நினைக்கிறாள்..என்னால எந்த உயிருக்கும் ஆபத்து வரக்கூடாது சீனியர்..யூ ஆர் மை ஒன்லி ஹோப்.. ப்ளீஸ்….ஹெல்ப் மீ”

கடைசி வார்த்தையில் மை லேசாய் அழிந்து அவள் கண்ணீரை பறைச்சாற்ற ஆரியன் பார்வை இம்மியும் அசையவில்லை.மனம் முழுவதும் இரணமாய் வலிக்க பேச்சிழந்து நின்றான்.எத்தனை நாள் ஆகிவிட்டது.அதற்குள் அவள் என்னென்ன பாடுபட்டிருப்பாளோ என்று நினைக்கையில் உள்ளம் பதறியது.

அதனை வாங்கி படித்த மற்றவர்களுக்கும் திக்கென்று ஆக,

“டிசம்பர் 5ன்னா வர மண்டே..இன்னும் மூணு நாள் தான் இருக்கு..இந்த மூணு நாளில் எதுவும் விபரீதம் நடக்கும் முன்னாடி சக்தி எங்கன்னு கண்டுப்பிடிக்கணும்..”

என்று மனோஜ் சொல்ல.

“கண்டுப்பிடிச்சாலும் அவள் அக்னிமித்ராவாக தானே இருப்பாள்..எப்படி சக்தியை மீட்பது..?”

என்றாள் சந்தியா பயம் நிறைந்த குரலில்..திக்கு தெரியாத காட்டில் மாட்டியது போல் மனமே இருளாய் அச்சுறுத்தியது.

இத்தனை நேர அமைதியை கலைத்து வாய் திறந்த ஆரியன்,

“முதலில் அவ எங்கேன்னு தெரியணும்..விஜயை கொல்ல நினைகிறவ அவன் எங்க இருக்கானோ அங்க தான் இருப்பாள்.ஸோ ஹாஸ்பிட்டல் அங்க போய் தேடணும்..”

என்று கூற தயக்கத்தோடு ஏஞ்சலின்,

“நான்.. நான் ஒருத்தரை பற்றி கேள்விப்பட்டு இருக்கேன்..அவர் பேய் ஓட்டுறவங்க கிடையாது…ஆனால் இந்த பேய்..அமானுஷயம் இதை பற்றி எல்லாம் நிறைய ஆராய்ச்சி பண்ணிருக்காராம்..அவருட்ட எதாவது ஹெல்ப் கேட்டு பார்போமா..?”

“கண்டிப்பா போய் பார்க்கலாம்..ஒரு சின்ன உதவி கிடைத்தால் கூட போதும்.. நீ அவரை பார்க்க ஏற்ப்பாடு பண்ணும்மா.. நானும் மனோஜூம் இப்போ ஹாஸ்பிட்டல் போறோம்”

என்று ஆரியன் கூற அதன்படி சந்தியாவை தவிர்த்து மற்ற மூவரும் கல்லூரியில் இருந்து கிளம்பினர்.

*

*

*

அந்த வி.ஐ.பி மருத்துவ அறையில் சுளித்த புருவத்தோடும் சோர்ந்த முகத்தோடும் படுத்திருந்தான் விஜய் வரதன்.லேசாய் உணர்வு வந்தாலும் இமைகள் பாரமாய் கனக்க கண் திறக்க முடியவில்லை.இந்நிலையில் அறையின் அமைதியை கிழித்துக் கொண்டு அமானுஷ்யமாய் ஒரு சிரிப்பொலி அவன் வயிற்றில் இனம்புரியா உணர்வை தோற்றுவிக்க அதனை தொடர்ந்து,

“ஒருநாளிலே இப்படி வந்து பெட்டில் படுத்துட்டியே விஜய்..உன்னை என்னவோ நினைத்தேன்..இவ்வளவு தானா நீ…?”

ஏளனமாய் கூறி மீண்டும் சிரித்த அந்த பழக்கப்பட்ட குரல் அவனை மெய் சிலிர்க்க செய்ய ஏஸியையும் மீறி பின்னங்கழுத்து சட்டென்று வியர்த்தது.

அக்னிமித்ரா.. அவன் மனம் முணுமுணுக்க மூடிய இமைக்குள் கண் அலைப்பாய்ந்தது.

“நான் யாருன்னு தெரிந்துடுச்சோ..தெரியலைனாலும் தெரிந்துக்கோ..மித்ரா..அக்னிமித்ரா..செத்து போயிட்டான்னு நிம்மதியா இருந்தீங்கள்ல..உள்ள கடனை எல்லாம் அடைக்காமல் எப்படி போவேன்னு நினைச்சீங்கவேரோட அறுக்க ஆங்காரமாய் வந்திருக்கேன் விஜய்..ஒருத்தனும் தப்பிக்க முடியாது..ஆனால் என் குறில நீ தான் கடைசி..அப்போ என்னை காட்டினீயே பைத்தியமா அதே நிலைல தான் நீ இருப்ப எல்லாத்தையும் இழ்ந்து..அதுவரை உன்னை துடிக்க விட்டு தான் கொள்வேண்டா..”

ரௌத்திரத்தில் மூழ்கி செந்தனழாய் விழுந்த வார்த்தைகளை தொடர்ந்து சின்ன நக்கல் சிரிப்பு..

“முதல் சாவு யாராக இருக்கும்..இழுத்துக்கிட்டு கிடக்கும் உன் அப்பாவோ..!!ஹாஹாஹா இருக்ககககலாம். முடிந்தால் காப்பாற்றிக்கோ என் பாசமலரே..”

“அப்பாஆஆஆ….”

என்ற அலறலோடு எழுந்து அமர்ந்த விஜய் தொப்பளாய் நனைந்திருக்க மரத்தான் ஓடியது போல் மூச்சிறைக்க கையில் சுள்ளென்று ஓர் வலி..ஆனால் எதையும் பொருட்படுத்தாது வேகமாய் கட்டிலில் இருந்து இறக்கி பாய்ந்தோடி கதவை திறந்து வெளியேவந்தவன் அங்கே யாவரையும் காணாது,

“டாக்டர்..”

என்று கத்த அவன் போட்ட சத்ததில் அருகில் இருந்த நர்ஸ் அவசரமாய் வந்தவள்,

“சர் முழிச்சீட்டீங்களா…?இது ஹாஸ்பிட்டல் சத்தம் போடாதீங்க…ப்ளீஸ் ரிலாஸ் ஆகுங்க..”

என்று சொல்லவும் இருந்த கோவத்தில் ஆங்கில வண்ண வண்ண வார்த்தையில் தொடங்கி,

“டோண்ட் யூ ஹாவ் அ சென்ஸ்.என் அப்பா அடிப்பட்டு இருக்காங்க.ரிலாக்ஸ் ஆகுங்கற..அப்பா எங்க இருக்காங்க..?எங்க யாரையும் காணும் இப்படி தான் பொறுப்பு இல்லாமல் இருப்பீங்களா..?பேசிறேன் அமைதியாவே நிற்கிற..வேர் இஸ் மை ஃபாதர் யூ இடியட்..”

என்று வசைமாறி பொழிய பாவப்பட்ட அப்பெண்ணோ கண்கலங்க தேம்பலோடு ஐ.சீ.யூ வார்டிற்கு வழிச்சொல்ல புயலென அங்கே விரைந்தான்.

அங்கே அவசர சிகிச்சை அறையின் வெளியே தான் விஜயின் அன்னை கீதா, கல்லூரி முதல்வர் இன்னும் கல்லூரியின் சில முக்கிய பிரமுகர்கள் நிற்க இவனை முதலில் கண்ட கீதா,

“விஜய்..”

என்று அழுகையோடு வந்து அவன் தோளில் சரண் புகுந்தவர்,

“எழுந்துட்டியாடா..அப்பா..அப்பா பாருடா..என்னென்னவோ சொல்றாங்க..எனக்கு பயமா இருக்கு..”

என்று அழுக, “அழாதம்மா..என்ன சொன்னாங்க..”

என்று விசாரிக்க பதில் சொல்ல முடியாமல் அவர் அழுதுக்கொண்டே நிற்க அருகில் வந்த முதல்வர்,

“சர்..செக்கெண்ட் ஃப்லோரில் இருந்து விழுந்ததால் பலமா அடிப்பட்டு இருக்காம்..ரொம்ப கிரிட்டிக்கல் சிச்சுவேஷன்ல இருக்காங்களாம்..அவர் ஏஞ் காரணமாய் மேஜ்ர் ஆபரேஷன் பண்ணுவதே ரிஸ்காம்…ஃப்ர்ஸ் ஆய்ட் மட்டும் பண்ணி இருக்காங்க..எதுவும் இப்ப சொல்ல முடியாதுனு..”

என்று தயங்கி அவர் நிறுத்த அக்னிமித்ராவின் குரல் அபஸ்வரமாய் அவன் காதுகளில் ஒலிக்க,

“எதுவும் பண்ண முடியாட்டி அவங்க என்ன டாக்டர்ஸ்..கூப்பிடுங்க அவங்களை..”

என்று கர்ஜித்தான் அதே சமயம் வெளியே வந்த டாக்டர்,

“சர்..வீ ஆர் ட்ரையிங் அவர் பெஸ்ட்..பட் சிச்சுவேஷன் ஈஸ் சீரியஸ்..”

என்றவரை,

“ஐ டோண்ட் கேர்..எனக்கு என் அப்பா வேணும்..எந்த நாடு கண்டத்தில் இருந்து ஷ்பெஷலிஸ்ட் இறக்குவீங்களோ தெரியாது..அவர் எனக்கு பழையப்படி வேணும்..”

என்று வெறிப்பிடித்தவன் போல் கத்த அவனது இந்த கோவத்தை அங்கிருக்கும் யாருமே இதுவரை கண்டதில்லை.

“ட்ரீட்மெண்ட் தருகிற எல்லாருமே பிர்த்யோகமா வரவைக்க பட்ட ஷ்பெஷலிஸ்ட் தான்..எங்களால முடிந்த அளவு போராடுவோம்.. நம்பிக்கையோடு இருங்க..”

என்று அந்த டாக்டர் விட்டால் போதும் என்று அங்கிருந்து ஓடிவிட இவனது செய்கையில் அவன் அன்னை இன்னும் பயந்து போனார்.

தலையை தாங்கிப்பிடித்து பொத்தென்று அவன் நாற்காலியில் அமர கை பயங்கரமாய் வலித்தது.வலித்த இடத்தை தேய்த்துவிட மணிக்கட்டின் கீழ் அழுத்தமாய் பிறாண்டியது போல் நான்கு கோடுகளாய் சிராய்ப்பு..அது கண்ணில் பட்டாலும் கருத்தில் பதியவில்லை.

அக்னிமித்ராவை எண்ணி உள்ளம் பரிதவிக்க அவள் ஆவியாய் வந்திருக்கிறாள் என்பதை அவனால் இன்னமும் நம்பமுடியவில்லை. அவள் வார்த்தைகளை நினைத்தாலே முதுகு தண்டு சில்லிட சிவகுமாரிற்கு ஏதும் ஆகிவிடுமோ என்ற பயத்தோடே அமர்ந்திருக்க அதே நேரம் அவன் பாக்கெட்டில் குறுஞ்செய்திக்கான ஒலி எழுப்பியது.

Advertisements

5 thoughts on “சமீராவின் ‘இளங்காத்து வீசுதே’ – 18”

 1. sridevi says:

  Superb epi

 2. sema superrrrrr

 3. அமுதா சக்திவேல் says:

  சக்திய எப்படி காப்பாத்த போறாங்க

 4. Naveena Ramesh says:

  மித்ரா ஏன் இவ்ளோ கொடுறமா பண்றா

  1. Sameera Sano says:

   Agni mithra vai inime terinthu kollalaam..wait for that 😉 thank you

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: