Advertisements

முபீன் MSK – கண்ணாமூச்சி ஆட்டம் – 12

கண்ணாமூச்சி – 12

விழுப்புரம் வந்ததும் நண்பனை எழுப்பியவன் “என்னடா ஊருல தூங்குனியா இல்லயா ரெண்டு மணி நேரத்துக்கே இப்புடி தூங்குற , சரி வா சாப்டு வரலாம் , அப்றம் இந்தா நீ கேட்ட புது சிம் அதுல நம்ப பசங்க , அம்மா எல்லா நம்பரும் இருக்கு ” சிறிது இடைவெளி விட்டு “வைஷு நம்பரும் இருக்கு ” கூறிவிட்டு வெளியில் சென்று விட்டான் . ராகுலோ பேச முடியாத வண்ணம் அவளின் எண்ணிணை டயல் செய்தான். ஐந்து வருடங்களாக  அவன் மறந்தால் தானே காரணம் அவர்கள் இருவரும் போட்டுகொண்ட ஒப்பந்தம் அது …

“ராகுல் இந்தா இதான் நம்ப நம்பர் நானே தேடி தேடி வாங்குன “
“நம்பர்ல என்னடி தேட இருக்கு”
“ம்ம்ம் உன் மூஞ்சி, இங்க பாரு நம்ப ரெண்டு பேருக்கும் ஒரே நம்பர் தான் லாஸ்ட் மட்டும் தான் மாறும் ” சந்தோஷமாக சொல்ல
“சரி அதுக்கு என்ன இப்போ ” அவனை கையில் கிள்ளியவள்,
“என்ன இப்போவா இந்த நம்பர் நாம மாத்தவே கூடாது , சரியா எங்க சொல்லு”
“என்ன சொல்லணும் இப்போ தாண்டி கைல குடுத்த” அவள் முறைகவும் “சரி சரி சொல்றேன்”முழுவதும் கூறினான் “போதுமா”
“எப்புடிடா அதுக்குள்ள மனப்பாடம் பண்ண “
“என் மீனு குட்டி எது கொடுத்தாலும் நா சேவ் பண்ணிக்குவன்” அவன் காரணமாக சிரிக்க
“ஆஆன் வா ஆசை தான் அதலாம் மாசத்துக்கு ஒரு தடவ தான் “
“ஒரு கிஸ்க்கு ஒரு மாசமா இதலாம் ரொம்ப ஓவர்டி  என்ன நொம்ப காயபோடுற பாத்துக்கோ”
“அப்புடி தாண்டா போடுவேன் உனக்கு வேணும்னா எவ கிட்ட வேணா வாங்கிக்க நா வேணான்னு சொல்றனா அப்புடி ஏதாச்சும் பண்ணனா ஒரு மாசம் 2 மாசம் ஆகிரும் பாத்துக்கோ”
“ஐயோ என் செல்லத்துக்கு கோவம் வந்துருச்சா , என் மீனு இருக்கும் போது நா ஏன் கண்டவ கிட்ட போகணும்”
“ம்ம்ம் டேய் என் பேரு எவ்ளோ அழகா வைஷ்ணவினு  இருக்கு அப்பறம் என்ன மீனு கருவாடுனு அதும் மீனு வைஷுனு  மாறி மாறி கூப்டுர”
“என் ஆள் பேர நா எப்புடிவேணா கூப்டுவ உனக்கு என்னடி”
“யப்பா எனக்கு ஒன்னும் இல்லப்பா  எப்புடி வேணா கூப்டுங்க , நீங்க நம்பர் மாத்திராதிங்க அது போதும் “
“ம்ம்ம் ம்ம்ம் “

கார்த்தி ஜன்னலை தட்டியதும் சுதாரித்தவன் “டேய் இந்தா டீ இன்னும் கொஞ்ச நேரம் ஆகட்டும் உன் தங்கச்சி அவ சொந்தக்காரங்கள பாத்துட்டா அவ்ளோதான் ” அவன் கூறிக்கொண்டே செல்ல அவள் எண்ணிற்கு டயல் செய்தான்….இன்னும் அவள் கூறியது போல் எண்னை மாற்றாமல் இருந்தாள்.

“ஹலோ” அவளே தான் குழந்தை குரலில் இருந்து பெண்ணின் குரலுக்கு மாறியிருந்தது..

“ஹலோ யாருங்க , ஹலோ”

“………….”

சிறிது நேர அமைதிக்கு பின் சிறிய விசும்பலுடன்

”  …………ராகுல்………..”

இருவரும் சண்டை போடாமலே நெருங்கி இருந்தனர். அவர்கள் சண்டை போடாமலே இருப்பது அனைவருக்கும் ஆச்சரியம் தான்.
இதனை பார்த்த பானுவோ உள்ளே புழுங்கி கொண்டிருந்தாள். அதற்காகவே வைஷுவின் அருகில் அமர்ந்து கொண்டாள். வைஷுவும் ஏதும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால். பானு அவளே பார்த்துக்கொண்டிருந்தவள். வைஷு அவனை ராகுல் என்று அழைத்து பின் அண்ணா என்று கூறுவதும் நோட்டில்  ராகுல் வைஷு என்று எழுதி வைத்திருந்தாள். அதுபோல் ராகுலும் அவன் நோட்டில் விஷ்வா மீனு என்று எழுதி இருந்தான். இதையே பானு பயன்படுத்தி கொண்டாள். முதலில் வைஷுவிடம் ஆரம்பித்தாள்.

“வைஷ்ணவி நீ விஷ்வாவ லவ் பண்றியா..”
அவள் திடீரென கேட்டது அவளுக்கு தூக்கி போட்டாலும் கண்டுகொள்ளாமல் இருந்தால். அவள் மௌனத்தை பார்த்தவள் மேலும் தொடர்ந்தால்…
“சொல்லு உன்ன பாத்தாலே தெரியுது, ஆனா அவ உன்ன பாக்குராணு தெரியலையே…ஏன்னா அவன் நோட்ல விஷ்வா மீனுன்னு எழுதிருக்கான் ” அவள் சொன்னதும் பதரியவள் நம்பாமல் பார்க்க “வேணும்னா நீயே பாரு ” என்று நீட்ட அதில் “விஷ்வா மீனு” என்றே எழுதி இருந்தது. பார்த்ததும் அவள் அறியாமலே கண் கலங்கியது. இதை பார்த்த பானுக்கோ சந்தோஷம் தாங்கவில்லை. ராகுல் உள்ளே சென்று வந்தவன் வைஷு சோகமாக இருக்க அவளை கூப்பிட்டு என்னவென்று கேக்க அவள் கண்டுகொள்ளவில்லை.

அவன் கையில் இருந்த பேனாவை தூக்கி போட அது அவள் சுடிதார்குள் விழுந்தது. இதை எதிர்பாராமல் இருந்தவள் அவன் செய்ததும் அழுதே விட்டால். மற்ற நேரமாக இருந்தால் இந்நேரம் வெக்கம் மட்டுமே வந்திருக்கும் அவள் இப்போது இருக்கும் நிலையில் தேம்பி தேம்பி  அழுதாள். அந்நேரம் பார்த்து அங்கிள் வர ராகுலை கையே நீட்டிவிட்டார். அவன் அவளை பார்க்க அவளோ அங்கிள் அடித்ததில் அவள் மேலும் அழுதாள். அவனோ  ஏதும் சொல்லாமல் இருக்கிறாளே என்று அவன் கோபத்துடன் வெளியே சென்று விட்டான் . அவளும் அழுது கொண்டே வீட்டிற்கு சென்று விட்டாள். அடுத்த நாள் அவள் டியூஷன் செல்ல அவன் வரவில்லை அன்று மட்டும் அல்ல இரண்டு வாரம் வரவே இல்லை …..

இரண்டு வாரத்திற்கு பின் அங்கிள் அவனை வர சொன்னார். அவனிடம் தான் அவசரப்பட்டு அடித்தற்காக மன்னிக்க வேண்டினார். “ச்சா ச்சா அதலாம் ஒன்னு இல்ல அங்கிள் தப்பு என்மேல தான் நீங்க பீல் பண்ணாதீங்க ” அவன் பெரிய மனதுடன் நடந்து கொள்ள அவருக்கு அவனை மிகவும் பிடித்து போனது. பின் அவன்  கெளம்புவதாக கூற “எங்க போர இன்னைக்கு உனக்கு டெஸ்ட் இருக்குல்ல போய் எழுது போ ” மறுக்காமல் சென்றவன் வைஷு அருகில் அமராமல் அருணின் இடத்தில் அமர்ந்தான். அவள் அவனை ஏக்கத்தோடு பார்க்க அவன் கந்துகொள்ளவே இல்லை . இந்த முறை நிஜமாகவே பேனா இல்லாததால் சுற்றி முற்றி பார்க்க அவளே நீட்டினாள் அவன் வாங்காமல் மற்றொவரிடம் கேக்க போக அந்நேரம் அங்கிள் வந்து நிற்க வேறு வழி இல்லாமல் வாங்கி கொண்டான் ஆனால் அவள் முகத்தை திரும்பியும் பார்க்கவில்லை.

அவளோ அவன் போகும் வரையிலும் அவனை தவிர எங்கேயும் பார்க்கவில்லை. “அவ சொன்ன எனக்கு எங்க போச்சு புத்தி ச்சை” தன்னையே நொந்து கொண்டாள். அவன் எழுதி முடித்து விட்டு பேனாவை அவள் கையில் கொடுக்காமல் கீழே அவள் அருகில்  வைத்தான் . அதை பார்த்தவலோ அதை எடுக்காமல் அவனையே சோகமாக பார்த்தால். காரணம் எப்பொழுதும் அவன் எழுதிவிட்டு குடுக்க ” என்ன இவ்ளோ இங்க் போயிடுச்சு “அது இது என்று சம்பந்தம் இல்லாத காரணுத்துக்கே சண்டை வரும் ஆனால் இன்று கண்டுகொள்ளாமலே சென்றுவிட்டான்…..

 

Advertisements

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: