Advertisements

நினைவெல்லாம் நீயே கண்ணம்மா – 24

மதியழகியின் தாய் அவளது  திருமண விஷயத்தை கோயிலில் உறுதிப்படுத்தியதை நினைத்துப் பொங்கி எழுந்து கோபாவேசத்தில் கத்திக் கொண்டு இருந்தாள்…
 
அவளை தற்காலிகமாக அமைதிப்படுத்திய ராஜலட்சுமி வீட்டிற்கு சென்று எவ்வாறேனும் அவளை திருமணத்திற்கு சம்மதிக்க வைத்து விடலாம் என்று மனக்கணக்கு  போட ஆனால் மதியழகியோ வீட்டிற்கு சென்றதும் இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று கோயிலில் சற்று கோபம் குறைந்து விதியே என நின்றிருந்தாள்…
 
ரங்கநாதன் இன்னும் மகள் தன்னிடம் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் அவளையே பார்த்துக் கொண்டு இருக்க மதியழகி 
‘ யப்பா … உங்களை எப்படி எனக்கு கல்யாணம் பண்ணி வைக்காம வழிக்கு கொண்டு வர்றதுனு எனக்குத் தெரியும்…’
 
என்று தந்தையை எப்படி தன் எண்ணத்திற்கு ஆமாம் போட வைப்பது என கர்மசிரத்தையாக யோசித்துக் கொண்டு இருந்தாள்.
 
ரங்கநாதன் : பூசாரி எம்மூத்த மவ மாசமா இருக்கா. அதுனால கெடா வெட்டலாம்னு நினைக்குதோம் அதுக்கு ஒரு நல்ல நாளா பாத்து சொல்லுங்க என்று கிடா வெட்டுவதற்காக ஏற்ற நாளை மறக்காமல் குறித்து வாங்கிக் கொள்ள நினைத்தார்…
 
பூசாரி : ரொம்ப சந்தோஷம் அய்யா… வர்ற விசாலக்கிழம நல்ல நாளு அப்போ வந்து உங்க காணிக்கையை கடவுளுக்கு செலுத்திருங்க… குழந்தை எந்த கஷ்டமும் இல்லாமல் நல்லபடியா பொறக்கும் என்று ஆசி வழங்கியவரின் தட்டில் பல ஆயிரங்களை வழங்கி விட்டு கிளம்பலாம் என அனைவரும் கிளம்பும் நேரம்…
 
எங்கிருந்தோ வந்த ஐவர் கொண்ட குழு இவர்களை சூழ்ந்து கொண்டது…
 
யாரும் இதை எதிர்பார்த்திராமல் இருந்தனால் அதிர்ச்சியில் அவர்களை
ஏறிட்டனர்.
 
அந்த ஐவரும் முகத்தை மறைத்து இருந்தனர்…
 
ரங்கநாதன் எப்போதும் தன்னுடன் ஒரு குழுவையே பாதுகாப்பிற்காக வைத்து இருப்பார்.
 
ஆனால் அன்று மட்டும் தமது ஊர் தமது கோயில் எந்த ஆபத்தும் வர வாய்ப்பில்லை.. என்று அலட்சியமாக தனது வீட்டு ஆட்களைத் தவிர வேறு யாரையும் உடன் அழைத்து வரவில்லை..
 
ஆனால் இப்போது ஆபத்து நெருங்கி விட்டதை உணர்ந்தவர் தமது மடத்தனைத்தை எண்ணி வெட்கிக் கொண்டார்..
 
ஆனாலும் வெளியில் திடமாக இருப்பது போல் காட்டிக் கொண்டு
 
” யார்ரா நீங்கள்லாம் நா யாருனு தெரியுமா ? “என்று உறும
அவர்கள் சிரிக்க ஆரம்பித்தனர்.
 
அதைப் பார்த்து மிரண்ட செவ்வழகி பயத்தில்  தனது கணவன் விஸ்வத்தின் கையை கெட்டியாக பிடித்துக் கொண்டாள்.
 
அவனும் அங்கு நின்றிருந்தவர்களைப் பார்த்து சற்று மிரண்டு தான் போனான்…
 
மதியழகி தாய்க்கு பின்னால் நின்று
 தன்னை மறைத்துக் கொண்டாள்…
 
அவர்கள் விடாமல் சிரித்துக் கொண்டே இருக்க அதில் அவமானப்படுவதாய் உணர்ந்த ரங்கநாதன் 
” எலேய் உங்களத்தேன் கேக்குதேன் சொல்லுங்கடே ஆரு நீங்க இந்த ரங்கநாதனப் பத்தி தெரியாம வந்துட்டியலே ” என்று கர்ஜித்தார்….
 
அந்த ஐவரும் ஆஜானுபாகுவான உடல்கட்டுடன் ஆறடி உயரத்துடன் நின்றிருக்க அவர்களில் ஒருவன்
” யோவ் ரங்கநாதன் உன்னியப் பத்தி நல்லா தெரிஞ்சுட்டுதேன் வந்துருக்கோம் நீ என்னப் பெரிய இவனா ” என கேலி நிறைந்த குரலில் கேட்க ரங்கநாதன் மேலும் கோபமடைந்தார்…
 
அவருக்கு அருகில் இருந்த விஸ்வம் மனைவியிடம் இருந்து தன் கையை உதறி விட்டு ரங்கநாதனின் அருகில் வந்து நின்று
 
” ஏய் மருவாதையாப் பேசுல எம் மாமா பெரிய இவருதேன் அவர மருவாதை இல்லாம பேசுனா உசுரோட ஊரு போய் சேர மாட்ட ” என்று தனது மாமனாருக்காக வக்காலத்து வாங்கினான் விஸ்வம்.
 
இப்போது சிரிப்பு சத்தத்தின் அளவு அதிகம் ஆனது…
 
” பார்ரா.. மாமாவ சொன்னவுடனே மருமவன் பொங்குறத… எலேய் உன்ன பொங்க சட்டிக்குள்ள போட்டு சமாதி கட்டிடுவேன் பாத்துக்க இத்துணூன்டு இருந்துட்டு வாயப் பாரு இவனுக்கு ” 
 
என்றதும் அவர்கள் தமது உருவத்தை கேலி செய்த விதம் அவனுக்குள் எரிமலையாய் புகைய அவர்களை நோக்கி கோபத்துடன் ஓடி வந்தான்…
 
வந்த வேகத்தில் அந்த ஐவரில் ஒருவன் விட்ட அடியில் பறந்து சென்று தூர விழுந்தான்…
 
இதைப் பார்த்த செவ்வழகி ” என்னங்க ” என்று அலறி விட்டு மயங்கி விழுந்தாள்…
 
அவர்கள் ராஜலட்சுமியைப் பார்த்து 
 
” அம்மா நாங்கள்லாம்  ஆம்பளைங்க அதுனால பொம்பளைங்க மேல கை வைக்க மாட்டோம் நீங்க உங்க பொண்ண கூட்டிட்டு போய் மயக்கம் தெளிய வைங்க கொஞ்சம் தண்ணி குடுங்க அவங்களுக்கு ” என்று கூறி விட்டு ரங்கநாதனிடம் திரும்பினான்..
 
” அப்பறம் அய்யா ஏதோ சொல்லிட்டு இருந்திங்களே நா யாருனு தெரியுமா …. அப்படினு காது கிழியுதா மாதிரி கத்திட்டு இருந்தியா இப்போ வாயடைச்சுப் போய் இருக்கிய… ஓஓ உங்க மருமகன நாங்க அடிச்சது பாத்து பயந்துட்டியலோ “என்று நக்கலாக கேட்க…
 
ரங்கநாதன் கட்டுப்படுத்த முடியாத கோபத்தால் அவனை நெருங்கி சட்டை காலரை பிடித்து
 
“ஏய் யாருலே உன்ன அனுப்புனது… என கேட்க… 
 
அவன் தீயென முறைத்து ரங்கநாதனின் கைகளை தனது காலரில் இருந்து எடுத்து அவர் அசந்த நேரம் அவரது கழுத்தில் கத்தியை வைத்தனர்…
 
மதியழகி மிரண்டு  தந்தையின் நிலையை கண்டு 
” அப்பா… என கத்த
 
” சூ… கத்தாதம்மா காது வலிக்குதுல போ போய்  உன்  அக்காவுக்கும் அம்மைக்கும் உதவியா இரு என அவளை விரட்டினான்…
 
அவள் மிரண்டு விழித்துக் கொண்டு தாய் மற்றும் அக்காவிடம் சென்றாள்..
 
செவ்வழகி மயங்கிய நிலையிலேயே இருந்தாள்…
 
ராஜலட்சுமி : அய்யோ கோயிலுக்கு வந்த நேரம் நல்ல நேரம்தான அப்பறம் ஏ இப்புடி நடக்குது… அடியேய் செவ்வழகி எந்திரித்தா மதி கொஞ்சம் தண்ணி எடுத்தாடி ” என அவளை அனுப்பி வைக்க மதியழகி கோயிலின் உள்ளே அபிஷேகத்திற்கு வைத்திருந்த குடத்தில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து தாயிடம் கொடுத்தாள்.
 
ராஜலட்சுமி தண்ணீரை செவ்வழகியின் முகத்தில் தெளித்தும் அவள் எழுந்தபாடில்லை…
 
இங்கு ரங்கநாதனின் கழுத்தில் வைத்த கத்தியை எடுக்காமல் அவரிடம்
 
” ஏ ரங்கநாதா நீ பெரிய மனுஷன் தான… அப்பறம் நீ செய்ற வேலை எல்லாம் பெரியமனுஷத்தனமாவே இல்லையே ஏ அப்புடி… ஒருவேளை வளர்ப்பு சரியில்லையோ…. “
 
என்று யோசிக்க அந்த நேரத்திலும் ரங்கநாதன் பல்லை கடித்துக் கொண்டு கோபத்தை கட்டுப்படுத்தினார்…
 
” எப்பா பல்லு அரைபடுற சத்தம் இங்க கேக்குது…. உனக்கெல்லாம் கோவமே வரக்கூடாதுயா… ஏன்னா நீ அதுக்கு தகுதியே இல்லாத ஆளு… ” என்று அவரை மட்டம் தட்டிக் கொண்டே இருந்தான்…
 
பிறகு அங்கிருந்து இன்னொருவன்
 
” என்ன ரங்கநாதா என் நண்பன் சொன்ன மாறி உன் காவாலித்தனத்தை எல்லாம் மூட்டை கட்டி வச்சுட்டு பெரிய மனுஷத்தனமா நடந்துக்கப் பாரு ” என்று அறிவுறுத்தி விட்டு 
 
” வர்றோம்டா ரங்கநாதா ” என நக்கலாக கூறிவிட்டு விடைபெற்றனர்…
 
அவர்கள் சென்றதும் அவமானத்தால் குறுகிய ரங்கநாதன் அவர்கள் யாரென்று அறிய வேண்டும் பிறகு ஒவ்வொருவனையும் கருவறுக்க வேண்டும் என்று பொருமினார்…
 
பிறகு தன் மருமகன் நினைவு வந்தவராக
” மாப்பிள்ளை  ….. மாப்பிள்ளை என்று அவனை எழுப்ப முனைந்தார்..
 
அவன் வலியால் துடிக்க அவனையும் செவ்வழகியையும் ஏற்றிக்  கொண்டு மருத்துவமனை நோக்கி விரைந்தது அவர்களது கார்….
 
                                    🌺🌺🌺        
மாறன் காவல் நிலையத்திற்கு செல்ல மாரியும் , சேகரும் அவனைப் பின் தொடர்ந்தனர்…
 
அங்கு ஏற்கனவே மாறனுக்கு ஆகாத காவல் அதிகாரி நாற்காலியில் அமர்ந்திருக்க இவனைப் பார்த்ததும் தன் அதிகாரத்தை அவனுக்கு காட்டும் வகையில் கால் மேல் கால் போட்டு தேரணையாக அமர்ந்திருந்தார்…
 
அதில் கண்கள் சிவக்க அவனைக் கோபமான பார்த்த மாறன் கையை மடக்கி கோபத்தை முடிந்த அளவு கட்டுக்குள் கொண்டு வந்தான்…
 
செல்வம் என்று அழைக்கப்படும் அந்த அதிகாரி இவனைப் பார்த்து
 
” என்ன விஷயம் மாறா திடீர்னு போலீஸ் ஸ்டேஷனுக்கு படையெடுத்துருக்க… “
என ஏளனமாக வினவ
 
மாறன் “சார் எங்க ஊர்ல நடந்துருக்க கொலைகளைப்  பத்தி complaint குடுக்க வந்துருக்கேன் “
  
                                            – தொடரும்..
 
 
 
 
 
Advertisements

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: