Advertisements

சமீராவின் ‘இளங்காத்து வீசுதே’ – 13


அத்தியாயம்-13

இத்தனை நாட்கள் சென்று இன்று தான் கல்லூரிக்கு மீண்டும் வந்தான் ஆரியன்.ஆனால் அனித்தின் பைக்கில்.கால் இன்னும் முழுவதும் குணமடையாதததால் அதுவரை பைக்கை தொட ஆரியன் தந்தை தடா விதித்திருந்தார்.

வீட்டிலேயே அடைந்துக் கிடந்ததில் சலித்து போயிருந்தவனுக்கு மீண்டும் கல்லூரிக்கு வந்தது இரட்டிப்பு உற்சாகத்தை தர அனித்திடம் வளவளத்தப்படி வந்தான் ஆரியன்.

பேசிக்கொண்டே வந்தவன் கண்ணில் சற்று தொலைவில் கட்டப்பட்டுக்குக் கொண்டிருக்கும் அந்த புதிய கட்டிடம் பட மெதுவாய் ஆகி கொண்டிருந்த வேலை இரண்டு வாரத்தில் முக்கால்வாசி முடிந்திருக்க சுறுசுறுப்பாக வேலை நடந்துக் கொண்டிருப்பதையும் அதன் பின் உள்ள காரணத்தையும் யோசித்தவன் முகம் ஒரு நிமிடம் இறுகி பின் மீண்டது.

வாகன நிறுத்ததை அடைந்ததும் அங்கே குழுமியிருந்த மற்ற நணபர்களை பார்த்ததும் உற்சாகம் மீண்டும் குமிழிட

வகுப்பறைக்கு செல்வதற்குள் போகின்ற வருகின்றவர்களை வம்பிழுத்துக்கொண்டும் விளையாடிக்கொண்டும் இடத்தையே ரகளையாகினர்.

“ஏண்ணே இப்படி அலப்பறைய கூட்டுற..இங்க பாரு நீங்க இப்படி வரீங்கன்னு அப்படிக்கா ஓடுறானுங்க..”

என்று சிரித்துக் கொண்டே சொன்ன ரஹீமின் தோளில் கைப்போட்டு அருகில் இழுத்த ஆரியன்,

“இத்தனை நாள் கழித்து மறுபடியும் வந்திருக்கோம்.. எல்லாருக்கும் ஒரு ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுக்கலேனால் எப்படிடா..”

என்று சிரித்தவன் இவனை பார்த்து பேசிக்கொண்டு வந்தாலும் மறுபுறம் அவனை கடந்து சென்ற ஒருவனின் முன் சட்டென்று கையை ஓங்கி அடிக்காமல் மடக்க அவன் இதை எதிர்பார்க்காமல் அதிர்ந்து தடுமாறி அறக்க பறக்க ஒரு குட் மார்னிங் ஓடு அவன் ஓடிவிட ‘இவர் இருக்காரே..’ என்று எண்ணி சிரித்துக் கொண்டான் ரஹீம்.ரஹீம் ஆரியனின் ஜுனியர் என்றாலும் விளையாடு பயிற்சியினால் இருவருக்கும் நல்ல நட்பு உள்ளது.

“இப்போ கால் பரவாயில்லையா சீனியர்..ப்ராட்டீஸ் எப்போ வருவீங்க..கோச் உங்களை வரச்சொனனாங்க..”

“இன்னும் தாங்கி தான்டா நடக்குறேன்..சீக்கிரமே வரப்பார்க்கிறேன்..”

என்று அவன் தோளில் தட்டிக்கூற வகுப்பும் வந்துவிட்டது.ஆனால் உள்ளே செல்லாமல் ஜெயிடம்,

“மச்சான்..நாம் சாதாரணமா என்ரீ கொடுத்தால் நல்லா இருக்காதுல..”

என்று கண்சிமிட்டவும் காண்டானவன்,

“எல்லை மீறி போறடா டேய்..”

என்று எச்சரிக்க அலட்சியமாய் உதட்டைச் சுளித்து,

“போடா..போடா..அந்த பாட்ட போடு..”

என்றபடி ஸ்டைலாக சட்டையில் இருந்த கூலர்ஸை எடுத்து மாட்ட தலையிலே அடித்துக் கொண்ட ஜெய் ஃபோனில் படபடவென தட்ட,

“வரான் வரான் பூச்சாண்டி..”

என்று ஒலித்த பாடலை கேட்டு வெட்டவா குத்தவா என்று பார்த்த ஆரியனிடம் ‘ஹிஹி..டெக்னிகல் ப்ராப்ளம்டா..ஒன் மினிட்..’ என்று வேகமாய் பாடலை மாற்றினான்.

“யே ஜிந்தா யே ஜிந்தா யே ஜிந்தா

யே ஜிந்தா யே ஜிந்தா யே”

என்று மாரி தரலோகல் பாடல் ஒலிக்கபெற காலரை தூக்கிவிட்டு ஐடி கார்டை சிலுப்பிவிட்டு ஒரு குத்தாட்டம் போட்டபடி வகுப்பிற்குள் வந்தான் ஆரியன்.

இங்கே இவன் அலைபறை செய்துக் கொண்டிருக்க அங்கோ சக்தியை ஒருவழியாக்கி கொண்டிருந்தாள் சந்தியா..

காலையிலே எழுப்பிவிட்டு அரக்கபரக்க கல்லூரிக்கு கிளப்பிக் கூட்டிட்டு வரும் தோழியை தனக்கு மட்டும் வல்லமை இருந்திருந்தால் கண்களாலே எரித்து பஸ்மாக்கியிருப்பாள்.

“சரிடி ரொம்ப பாசமா பார்க்காதே..”

“பின்ன உன்னை கொஞ்ச சொல்றியா..என் தூக்கத்தை கெடுத்து இவ்வளவு சீக்கிரம் ஏன்டி காலேஜுக்கு கூட்டிட்டு போற..”

“சொன்னா நம்புவியா தெரியல..ஹாஸ்டல்ல இருக்கவே பயமா இருக்கு..மூச்சு முட்றா மாதிரி இருந்துச்சு..அதான்..”

“ஏன்டி..”

“நைட் ஒரு கனவு கண்டேன்டி..அப்படியே நிஜத்துல நடக்குறா மாதிரி இருந்துச்சு..இப்ப நினைச்சாலும் யப்பா..”

என்று கண்ணை மூடி திறந்து தலையை குலுக்க அவளை வினோதமாய் பார்த்தாள் சக்தி.

“கனவா..???என்ன கனவு..”

“பேய் கனவு….நான் பயத்துல தலை தெறிக்க ஓடிட்டு இருக்கேன்..அந்த உருவமும் என்ன விடாமல் துரத்தது.. ஹாஸ்டல் ஃபுல்லா ஓடுறேன்..‘உன்னை கொல்லாம விடமாட்டேன்..’னு கொடூரமான குரல்ல கத்திக்கிட்டே என்ன அது துரத்துது..கடைசில அன்னைக்கு நாச் அக்கா விழுந்து கிடந்தாங்களே அங்க போய் விழுந்தேன்.அதுவும் என்னை கொல்ல நெருங்கும் போது எழுந்து உட்கார்ந்துட்டேன்..ஜெஸ்ட் மிஸ் தெரியுமா..”

என்று கண்களை உருட்டி சொன்னவளை கேட்டு சக்திக்குமே அச்சமாக தான் இருந்தது.

“அந்த உருவம் எப்படி இருந்துச்சு..???”

“உன்ன மாதிரியே…”

“என்னது!!!!!!”

“ஆமாடி..கனவுல உனக்கு தான் பேய் புடிச்சிருக்கு…”

“உன் கனவுல உனக்கு தானேடி புடிக்கனும் என்ன ஏன்டி புடிச்சுது..”

“தெரியலையே..ஆனால் அப்படியே நிஜம் மாதிரியே இருந்துதா..எங்க கனவு பளிச்சிடுமோனு பயமா இருக்குடி..”

“ஆங்..நான் கூட தான் விஜய் தேவரக்கொண்டா கூட டூயட் ஆடுறா மாதிரி கனவு கண்டேன்.

அதெல்லாம் பளிச்சிடுமா..போடி லூசு..கண்டதயும் யோசிட்டு படுத்தால் இப்படி தான் கனவு வரும்..”

என்று சக்தி அவள் தலையில் தட்ட முகத்தை சுருக்கிய சந்தியா,

“உன்னுட்ட போய் சொன்னேன் பார்..நான் என் ஏஞ்சல் பேபிட்ட பேசிக்கறேன்..”

என்று அவள் தோளை சிலுப்பிக் கொண்டாள்.பேசிக்கொண்டே வகுப்பறையை வந்து சேர்ந்தவர்கள் யாருமற்ற வகுப்பில் ஒரு ஜோடி மட்டும் தங்கள் உலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்க இதை எதிர்பார்க்காத சக்தி அதிர்ந்து நின்றுவிட சந்தியாவோ ஒருபடி மேலே போய்,

“அடப்பாவிங்களா..”

என்று கத்திவிட்டாள்.அவள் சத்ததில் கலைந்த இருவரும் இவர்களை கண்டு சட்டென்று நகர்ந்துவிட அந்த பையன் உடனே எழுந்து வெளியே சென்றுவிட்டான். அப்பெண்ணோ அவர்களை சங்கடமாய் பார்த்துவிட்டு தானும் எழுந்து சென்றுவிட்டாள்.

அதிர்ச்சி நீங்கி சிரிக்க ஆரம்பித்த சக்தி,

“காலேஜ் சீக்கிரம் வந்தால் பல படங்கள் ஓடும்னு ஏஞ்சல் சொன்னது இதை தானே..நல்லா நடத்துறானுங்கடா டேய்..”

என்று அவள் மீண்டும் சிரிக்க அவளை முறைத்தாள் சந்தியா.

“இதில சிரிக்க என்னடி இருக்கு..லவ் பண்றானுங்களாம் லவ்வு..வெளிய எவ்வளவோ இடம் இருக்கும் போது க்ளாஸ் ரூம் தான் கிடைத்ததா இதுங்க லவ் பண்ண..காலங்காத்தானே இரீட்டேட் பண்ணிக்கிட்டு..”

என்று அவள் எரிச்சலோடு மொழிய அதற்கும் சிரித்த சக்தி,

“நீ ஏன் காண்டாகுற..உனக்கு லவ் பண்ண ஆசையா இருந்தால் சொல்லு..மை ப்ரதர் ஆல்வேஸ் வெயிட்டிங் பார் யூ..”

என்று கண்சிமிட்டியவள் தலையில் நங்..நங் என்று நான்கு கொட்டு வைத்தாள்.

“உங்க நொண்ணனை யாரும் வெய்ட் பண்ண சொல்லல..தேவையில்லாததை பேசாத..”

என்று அவள் கோபமாய் திட்ட அதை வழக்கம் போல பழிப்புக் காட்டி அலட்சியம் செய்த சக்தி,

“போடி..எனக்கும் காலம் வரும்..அப்போ கவனிச்சிக்கிறேன் உன்னைய..”

என்று முணுமுணுப்போடு நோட்டை எடுத்து எழுத வேண்டிய வேலையை தொடர அதன்பின் ஒருவொருவராக வர தொடங்கினர்.

சற்று நேரத்தில் வந்து சேர்ந்த ஏஞ்சலின் தனக்கு முன் வந்திருந்த தோழிகளை அதிசயமாய் பார்த்தபடி,

“என்னடி இவ்வளவு சீக்கிரம் வந்திருக்கீங்க..”

“எல்லாம் சந்துவோட வேலை தான் என்னானு நீயே கேளு..”

என்று சக்தி சொல்ல தன்னை கேள்வியாய் ஏறிட்டவளிடம் தன் கனவை பற்றிக் கூறினாள்.

“ஏன்டி கனவுலையும் இவளை கொல்ற ஐடியால தான் சுத்திட்டு இருக்கீயா..சந்து..பகல் கனவு பளிக்குமாம் என் பாட்டி சொல்லியிருக்கு.. எதுக்கும் இவளுட்ட ஜாக்கிரதையா இரு..தூங்க சொல்ல கால்ல கில்ல எடுத்து போட்டு மர்கையா பண்ணிடப்போற..”

என்று கலாய்த்த ஏஞ்சலினை நாலு சாத்து சாத்திய சக்தி,

“கொன்னா..உன்னை தான்டி முதல்ல கொல்லுவேன்..”

என்று மிரட்ட அவர்கள் ரகளையை ஒருவித ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டிருந்தாள் அக்னிமித்ரா.அவளுக்கு

இப்படி நண்பர்களோடு பேசி விளையாண்ட அனுபவம் இல்லை.

சிரித்து ஓய்ந்தபின் ஏஞ்சலினும் சக்தியை போல தான் ‘தேவையில்லாததை மனதில் போட்டு குழப்பிக்காதே..’

என்று சந்தியாவிடம் அறிவுரை கூறினாள்.

பேசிக்கொண்டிருந்தவள் திடீரென்று நினைவு வந்தவளாய் சக்தியிடம்,

“சக்தி…ஆரியனை இன்னைக்கு காலைல பார்த்தேன்..மறுபடியும் காலேஜ் வர ஆரம்பிச்சிட்டாங்க போல..”

என்று ஏஞ்சலின் கூறினாள்.

“ஹே.. அப்படியா…”

“ஆமாடி..அவங்க ப்ரெண்டோட பைக்ல வந்திட்டு இருந்தாங்க பார்த்தேன்..”

என்று சொல்ல அவள் சாதாரணமாய் சொன்னாலும் சக்திக்குள் லேசாய் ஒரு பரபரப்பு.

‘ஆரியன் காலேஜ் வந்ததும் அவனை சந்தித்து மனோஜின் செயலுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும்..’ என்று ஏற்கெனவே யோசித்திருந்தாள்.தற்போது எங்கே எப்படி பார்ப்பது என்று மனம் அலைப்பாய்ந்தது.

அதே யோசனையில் இருந்தவள் ஒருவழியாய் தோழிகளை சமாளித்துவிட்டு மதிய இடைவேளையில் ஆரியனை தேடி வந்துவிட்டாள்.

‘எங்கே இருப்பான்.. யாரிடம் கேட்பது..’

என்று கவலை கொண்டவளுக்கு சிரமம் கொடுக்காமல் பொது மைதானத்தில் அமைக்கபட்டுள்ள கல் இருக்கைகள் ஒன்றில் தன் நண்பர்களோடு அரட்டை அடித்துக் கொண்டிருந்தான் ஆரியன்.

அணிந்திருந்த ஷாலின் நுனியை திருகியபடி கால்பின்ன அடிமேல் அடிவைத்து வந்த சக்தியை முதலில் பார்த்தது ஜெய் தான்.

“டேய்..அந்த சக்தி டா..இங்க தான் வருதுடா..”

என்று கூற சட்டென்று அவன் சொன்னபுறம் திரும்பிய ஆரியன் தங்களை நோக்கி வரும் சக்தியை பார்த்தான்.

அருகில் வந்ததும் அனித் தான் முதலில்,

“என்னம்மா..என்ன வேணும்..”

என்று கேட்டான்.அவர்களுக்கு ஆரியன் சஸ்பென்ஷெனை கேன்சல் செய்ய கோரி கேட்டது அவள் தான் என்பது வரை தெரியும்.ஆதலால் அவளை நல்லவிதமாக தான் பார்த்தனர்.

ஆரியனை பார்த்தபடி தடுமாறியவள்,

“இல்ல..நான்..நான் கொஞ்சம் பேசணும்..”

என்று அவள் தந்தியடிக்க ஆரியனிற்கு அவள் தடுமாற்றத்தை கண்டு லேசாய் புன்னகை பூக்க இருந்தும் எதுவும் கூறாது அமைதியாய் பார்த்தான்.

“சரி..என்ன பேசனுமோ சொல்லு..”

என்று மீண்டும் அவனே பேச,

‘மரமண்டை..உன்னுட்ட யாரு பேசினா..’

என்று மானசீகமாய் கத்தினாலும் வெளியே அமைதியாய் ஆரியனை நோக்கி கைக்காட்டி,

“அவருட்ட தான் பேசனும்..”

என்று கூறி நீங்க இடத்தை காலி பண்ணுங்க என்று சொல்லாமல் சொல்ல,

“அதுக்கு எங்களை கிளம்ப சொல்றீயா..எதுவா இருந்தாலும் எங்க முன்னாடியே பேசு..எங்களுக்கு தெரியாமல் என் நண்பனுட்ட எந்த ரகசியமும் இல்ல…சொல்ற மச்சான்..”

என்று கெத்தாய் கூறி ஆரியனை பார்க்க,

“மச்சான்..நீங்க சாப்பிட போங்கடா..நான் என்னானு கேட்டுட்டு வரேன்..”

என்று அசால்டாக கலட்டிவிட்ட நண்பனை அதிர்ந்து நோக்கினர் மற்ற இருவரும்.

“மச்சான்..எங்களை…நீ…போக…சொல்றீயா…”

என்று ஒவ்வொரு வார்த்தையையும் நிறுத்தி அதிர்ச்சியாய் கேட்க,

“ஆமா..நான் தான் சொல்றேன் சீக்கிரம் இடத்தை காலி பண்ணுங்க..”

என்ற அசராமல் ஆரியன் கூற சக்தியையும் ஆரியனையும் மாறி மாறி பார்த்தவர்கள்,

“நடந்துங்கடா..நல்லா வருவீங்க..”

என்று கூறிவிட்டு,

“எத்தனை காலம் மாறினாலும் ஃபிகர் வந்துட்டால் ப்ரெண்டை கலட்டிவிடுற கான்செப்டை மாத்த மாடேங்குறானுங்க..”

என்று புலம்பியபடி செல்ல போகும் அவர்களை பார்த்தபடி,

“கோசிக்கிட்டாங்களோ..”

என்றாள் சக்தி.

“அதெல்லாம் மாட்டானுங்க..உனக்கென்ன சொல்லணும் அதை சொல்லு..”

என்றான் சாவகாசமாய் சாய்ந்து அமர்ந்தபடி.

எப்படி ஆரம்பிப்பது என்று ஒருசில நொடி தடுமாறியவள் பின்,

“சாரி சீனியர்..என்னால தான் உங்க..உங்களுக்கு..உங்களை அடிச்சிட்டாங்க..ரியலி சாரி..இப்படி பண்ணுவாங்கனு நானே எதிர்பார்க்கலை..”

என்று தட்டுத்தடுமாறி சொல்ல அவளை கூர்மையாய் பார்த்தவன்,

“அப்போ உனக்கு தெரிஞ்சே தான் அடிக்க விட்ட இல்ல..”

என்று கேட்க, “அய்யோ.. சத்தியமா எனக்கு இப்படி பண்ணுவாங்கனு தெரியாது..தெரிஞ்சிருந்தால் தடுத்திருப்பேன்..”

என்று அவசரமாய் கூற,

“யாரு இதுக்கெல்லாம் காரணம்…”

என்று அவன் கேட்கவும் முழித்தவள்,

“வேணாம் சீனியர்..இதை இத்தோட விட்டுடுங்க..என் மேல உள்ள அக்கறையில் இப்படி செஞ்சிட்டாங்க…பெருசு படுத்தாதீங்க ப்ளீஸ்..”

என்று அவள் ஏறக்குறைய கெஞ்ச,

“இங்க பாரு சக்தி..நான் பெருசாக்க நினைச்சால் இத்தனை நாள் சும்மா இருந்திருக்க மாட்டேன்..உனக்காக தான் இதை இப்படியே விட்டேன்..ஏன் என் ப்ரெண்ட்ஸ் கூட தெரியாது..இதை ஆக்சிடென்ட் தான் நினைச்சிட்டு இருக்காங்க…ஆனால் நான் உன்னை பற்றி நினைத்த அளவுக்கு கூட நீ உன்னை பற்றி யோசித்தால் மாதிரி தெரியலையே…”

என்று அழுத்தமாய் அவன் கூற புரியாமல் அவனை பார்த்தாள்.

“என்ன புரியலையா..?அன்னைக்கு உன்னுட்ட என்ன சொன்னேன்..இந்த பேய் பிசாசு சங்காத்தம் எல்லாம் வச்சுக்காதேனு எச்சரிச்சேன் தானே.. அப்புறம் என்ன தைரியம் இருந்தால் இப்படி ஒரு காரியத்தை பண்ணுவ”

மெதுவாய் தொடங்கி அதட்டலாய் அவன் முடிக்க திடுக்கிட்டு அவனை பார்த்தவள்,

“என…என்ன…சொல்றீங்க..”

என்று வார்த்தை வராமல் முழிக்க,

“உண்மை தெரிந்த என்னை ஏமாற்ற நினைக்காத…அந்த எலும்புக்கூடு பத்தி போலீஸிடம் சொன்னது  நீ தானே…உனக்கு எங்கேந்து அவ்வளவு தைரியம் வந்துச்சு..”

பட்டென்று கேட்டவனுக்கு பதில் சொல்ல முடியாமல் அவள் திணற சுற்றும் முற்றும் பார்த்த ஆரியன்,

“அது இங்க தான் இருக்கு..”

என்று கேட்க  அவள் விழி அனிச்சையாய் மித்ரா இருந்த திசையை பார்க்க காளியாய் அவனை முறைத்தபடி நின்றாள் அக்னிமித்ரா.

அவள் பாவனையில் புரிந்துக் கொண்ட ஆரியன்,

“இருந்தாலும் எனக்கு பயமில்லை சக்தி..நீங்க பண்றது முட்டாள்தனம்..இப்ப நீ சொன்னதால என்ன பெருசா நடந்திடும் நினைக்கிற..”

என்றான் கோபமாய்..

“போலீஸ் உண்மையை கண்டுபிடித்து விஜயோட உண்மையான முகத்தை உலகத்திற்கு காட்டுவாங்க..”

“ஆஹான்..அப்படினு அந்த மித்ரா சொல்லுச்சா..நிஜத்துல  என்ன நடக்குதுனாச்சும் தெரியுமா..அந்த கேஸை இழுத்து மூடி ஒரு வாரம் ஆச்சு.. அந்த இரண்டு  எலும்புகூடுல எதுவுமே அக்னிமித்ராவோடது இல்லைனு ரிப்போர்ட் வந்திடுச்சாம்..அத்தோட அது யாரோடதுனு  தகவல் தேடிட்டு இருக்காங்களாம்.. கொஞ்ச நாளில் இந்த விஷயத்தையே அப்படியே இழுத்து மூடிடுவாங்க.. அவ்வளவு தான்..

விஜய் பத்தி என்ன நினைச்சே நீ.. சாதாரண ஆளுனா..! கமிஷ்னர் வரை சப்போர்ட் இருக்கு..

பத்தாததுக்கு அந்த அக்னிமித்ரா ப்ளாக் இன்னும் இரண்டு வாரத்தில் கட்டி முடித்து கட்டிட திறப்பு விழா சிறப்பாக செய்ய போறாங்களாம்..ஏன் தெரியுமா..இரண்டு வாரத்தில் அக்னிமித்ரா நினைவு நாள்.அவங்க நினைவா அன்னைக்கு திறக்க போறாங்களாம்… யாருக்காவது சந்தேகம் வருமா..அவன் தான் அந்த பொண்ணை கொன்னுடுப்பான்னு..ஏன் உண்மை தெரியலேனா நீயே தலைல தூக்கி வைச்சிட்டு ஆடிருப்ப..இப்படி இருக்கும் போது எந்த உண்மையை வெளிக்கொணர போற சக்தி..

உன்னால ஒரு துரும்ப கூட அசைக்க முடியாது சக்தி..

செத்து போன அதுக்கு தான் மூளை இல்ல உனக்கு இருக்கு தானே..யதார்த்தம் என்னவோ அதை ஏத்துக்கிட்டு போக சொல்லு…”

என்று அவன் சரவெடியாய் வெடிக்க சக்தி வாயடைத்து நின்றாள் என்றால் தான் நினைத்தது நடக்காத ஆங்காரத்தில் முகம் சிவக்க நின்றாள் அக்னிமித்ரா.

“ஆமா..நீ ஃபோன் பண்ணியே..எந்த டெலிப்போன் பூத்ல இருந்து பேசின..”

என்று அவளை சந்தேகமாய் பார்த்தபடி கேட்க அவளோ,

“என் ஃபோனில் தான்..”

என்றாள் மென்று விழுங்கி..

அதிர்ந்து நோக்கிய ஆரியன் பட்டென்று தன் தலையிலே அடித்துக் கொண்டான்.அதுவரை அவனிடம் இருந்த பொறுமை பறந்தது.

“அறிவிருக்காடி உனக்கு..படிக்கிறேல்ல.. அடிப்படை அறிவு வேணாம்..உன் நம்பரில் இருந்து பேசி நான் தானு ஊருக்கே தம்பட்டம் போட்ருக்க.. இந்நேரத்தில் விஜய்க்கே தெரிந்திருக்கும்..”

என்று அவன் கத்த பீதியாய் அவனை பார்த்தாள்.இதனை அவள் யோசிக்கவே இல்லை.

விஜயை பற்றி அக்னிமித்ரா சொல்லி தெரிந்துக் கொண்டதால் என்ன செய்வானோ என்ற பயத்தில்  உடல் நடுங்கிற்று.

“பயமா இருக்கு சீனியர்..இப்ப  என்ன செய்வேன்…”

என்று விட்டால் அழுது விடுபவள் சொல்பவளை அதற்கும் மேல் கடிந்தும் கொள்ளவும் முடியாவில்லை.

“சரி உன் ஃபோனை கொடு..”

என்று கேட்க உடனே அவள் எடுத்துக் கொடுக்கவும் அதில் சிம் கார்ட்டை கலட்டி தூர போட்டவன்,

“இந்தா…ஃபோனை இப்போதிக்கு யூஸே பண்ணாத..உன் ஃபோன் காணாம போய் ஒரு மாசம் ஆகிடுச்சு..இப்படியே மெய்ண்டெய்ன் பண்ணு…கண்டிப்பா உன்னை கூப்பிட்டு விஜய் பேசுவார்..நீ லூசு மாதிரி உளராமல் தைரியமாய் என் ஃபோன் காணாப்போய் ஒரு மாசம் ஆச்சுனு சாதிச்சு பேசு..கண்டிப்பா நேரடியாய் பேச மாட்டார்..எதை பற்றி கேட்டாலும் புரியாத மாதிரியே பதில் கொடு ..குழப்பிவிட்டால் தான் தப்பிக்க முடியும்..”

என்று  அவன் யோசனை கூற  சரி என்று தலையாட்டினாலும் அவள் முகம் தெளியவில்லை.

“இங்க பாரு சக்தி…தைரியமா இரு..என்ன பிரச்சனை வந்தாலும் நான் உனக்கு துணையா இருப்பேன் சரியா..பயப்படாமல் நான் சொன்ன மாதிரி செய்.. முக்கியமா எனக்கு தெரியாமல் எதுவும் செய்யாதே..”

என்று கூற ‘நான் இருப்பேன்..’ என்று கூறியது அவளுக்கு பெரும் ஆறுதலாய் இருந்தது.சிறுபிள்ளைபோல் கலங்கிய கண்களை துடைத்துக் கொண்டு சரி என்று தலையாட்டியவளை கண்டு அவனுள் என்னவோ செய்ய

கண்ணுக்கே தெரியாத சுற்றும் முற்றும் தேடி,

“உங்க நியாயமான கோபம் புரியுது அக்னிமித்ரா..ஆனால் உங்க கோபத்தை தீர்த்துக்க இவளை பகடை காயாய் யூஸ் பண்ணாதீங்க..உங்களுக்கு பழிவாங்க வேணும்னா நீங்களே செஞ்சிக்கோங்க..ஆனால் இதில் சக்தியை விட்ருங்க..ப்ளீஸ்..அவளுக்கு உலகமே தெரியலை..”

என்று அவன் பேச தனக்கு ஆதரவாய் சக்தி பேசுவாள் என்று 

எதிர்பார்ப்போடு அவள் முகத்தை மித்ரா பார்க்க அவளோ மித்ரா முகத்தை தயங்கி தயங்கி பார்த்தபடி நின்றாள்.

அவளை ஆழப்பார்த்த மித்ரா உருவம் கொஞ்சம் கொஞ்சமாய் துகள் உருவமாய் மாற,

“நீயும் என்னை ஏமாத்திட்டேளே சக்தி…”

என்று உறைத்த மறுநொடி அவ்வுருவம் காற்றோடு கலைந்துவிட,

“மித்ரா..”

என்று இவள் அழைத்தக் குரலிற்கு பதில் சொல்ல அவள் இல்லை.

Advertisements

One thought on “சமீராவின் ‘இளங்காத்து வீசுதே’ – 13”

  1. sridevi says:

    Aryan sema kethu

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: