Advertisements

முபீன் MSK – கண்ணாமூச்சி ஆட்டம் – 11

கண்ணாமூச்சி – 11

தன் பெயர் பானு என்றும் தான் இந்த பள்ளியில் படிப்பதையும் கூறினால் இவர்கள் பேசி கொள்வதை பார்த்து கொண்டிருந்த இரண்டு விழிகளோ அவளை எரித்து விடும் பார்வையில் இருந்தால் அன்று முழுவதும் 5 பேனாவை பலி கொடுத்திருந்தால்  அவன் இதனை காணாமல் இல்லை, என்ன செய்வாள் என்றே எதிர்பார்த்திருந்தான்.

அன்று இரவு அவள் அறையில் இரண்டு தலையணை பஞ்சு பஞ்சாக கிழிந்து தொங்கிக்கொண்டிருந்தது. அதன் மேல் எழுதியிருந்த பெயரை பார்த்து வேகமாக குத்தினாள். “பேரு பாரு பானு வாம் பானு மூஞ்சியும் அந்த ட்ரெஸ்ஸும் ” மேலும் கிழிந்தது அந்த தலையணை ,அடுத்து விஷ்வா என்று எழுதி இருந்த தலையானயோ பானுவை விட தேவலாம் போல அது போல் இரண்டு மடங்கு வாங்கியது அடி. “அவ தான் பல்ல காட்டிட்டு பேசுன்னா உனக்கு எங்கடா போச்சு புத்தி , அதும் என் கண்ணு முன்னாடியே,ம்ம் அவள பத்தி தெருஞ்சுகணமோ இந்தா பாத்துக்கோ ” என்று கிழிந்த பஞ்சினை மேலே போட்டு மேலும் கீழும் குதித்தால்.ஒரு வழியாக முடித்து விட்டு தன் மெத்தை மீது போத்தி வைத்திருந்த தலையணையை எடுத்து ” வா ராகுல் நாம தூங்கலாம்” அதுவோ என்னை விட்டுவிடு என்று கீழே விழுந்தது அதனை எடுத்தவள்.”என் செல்லத்த நா எதுனா பண்ணுவனா வா நாம தூங்கலாம்” என்று நிம்மதியாக தூங்க போனாள்.

காலை எழுந்ததும் அவள் அம்மாவிடம் அர்ச்சனை வாங்கி கொண்டே முழித்தால் “இதோட எட்டாவது தலகாணி இன்னும் குழந்தனு  நினைப்பு எல்லாம் அவ அப்பா கொடுக்குற இடம் என்னவோ பண்ணி தொலையாட்டும் , அடியே எரும மாடு கிளம்பு நேரம் ஆச்சு அப்பறம் லேட் ஆச்சுன்னு கத்தினா தோச கரண்டி உன் வாய்ல தான் இருக்கும் பாத்துக்கோ” திட்டிக்கொண்டே சமையல் வேலையை தொடர்ந்தார்.

பள்ளி முடிந்ததும் கிளம்பி டியூஷன்கு சென்றாள் , அங்கே அவள் கண்ட காட்சியோ அவனும் அவளும் நெருங்கி அமர்ந்து கொண்டு சிரித்து சிரித்து பேசி கொண்டிருந்தனர். “இத்தன நாள் ஆச்சு என்னைக்காச்சும் சீக்கிரம் வந்துருக்கான இப்போ மட்டும் என்ன இந்த மேனா மினுக்கி கூட இவ்ளோ சீக்கிரம் வந்துருக்கா” அப்பொழுது அவனை மேலும் அவள் நெருங்கி உட்கார இங்கு கொழுந்துவிட்டு எரிந்தது.எதேச்சையாக வாசலை பார்க்க அவள் கொலைவெறியுடன் பார்ப்பதை பார்த்ததும் அவளை விட்டு தள்ளியே அமர்ந்தான்.அவள் நெருங்கி கொண்டே வர, அவள் பார்த்த பார்வையிலே அரண்டவன் எழுந்து மேலே சென்று விட்டான்.இதை பார்த்த பானு வைஷுவை ஒரு சிரிப்பு சிரித்து விட்டு அவளும் மேலே சென்றால்.

“என்ன அவளும் மேல போரா அய்யய்யோ, அவ சிரிச்சதே சரி இல்லையே என்ன செய்யலாம் ” நினைத்து கொண்டே உள்ளே ஆண்ட்டியிடம் பற்ற வைத்தவள்.அவர் உடனே மேலே செல்ல பேச்சு சத்தம் மட்டும் கேட்டது. “வேல நடக்குதுபா இன்னும் கொஞ்ச நாள் கீழ உக்காருங்க அப்றம் மேல வந்துக்கலாம்” கூறிவிட்டு அவர் சொல்ல சிறிய கடுப்புடன் கீழே வந்தவள் வைஷுவை முறைத்து விட்டு உள்ளே சென்றால்.அவனோ சிரித்து கொண்டே
“ரொம்ப நேரமா கருகர வாட அடிக்குதுல தம்பி” நக்கலாக கெட்டவன் அவள் எதிரில் தன் இடத்தில் அமர்ந்தான். “என்ன பாப்பா ரொம்ப ஓவரா பண்ணுதுல அந்த பொண்ணு நல்ல வேல என்ன காப்பதுன இல்லனா” என்று மேலயும் கீழேயும் பார்த்து சொல்ல அவன் தலையில் “நங்”என்று கொட்டினால் “பண்றதும் பண்ணிட்டு ஒன்னு தெரியாத மாறி சீன் போடுரியா” அவள் கோவமாக கூற அவனோ தலையை தேய்த்து கொண்டு சிரித்தான். முதலில் குழம்பியவள் பின் தெளிவுற்று “ஐயோ மனசுல நினச்சு நிஜமாவே நடந்துகிட்டோமா என்ன நினைக்க போறானோ ” அவனை பார்க்க அவன் லேசாக தலை சாய்த்து கண்ணாடித்தான். அதில் குறுகுறுப்பு ஏற்பட சிவந்த முகத்துடன் உள்ளே ஆண்ட்யிடம் ஓடினாள்.

இதை பார்த்த பானு “இதான் செய்தியா கவனிச்சுக்குற” முதலில் ராகுல் தன்னை விட சிறியவன் என்று எண்ணியவள் பின் அவன் தன்னை விட ஒரு வயது மூத்தவன் என்று தெரிந்த பின்னரே அவனுடன் பேச ஆரம்பித்தாள்.ஆனால் வைஷு நடந்து கொண்டதை பார்த்தவள் “ஓ இப்போவே லவ் ஆ என்னையா அவன்கிட்ட இருந்து பிரிக்குற நா உங்க ரெண்டு பேரையும் எப்புடி பிரிக்குரன் பாரு” தனக்குள் சபதம் போன்று எடுத்து கொண்டாள்.

அன்று இருந்து ராகுல் தான் திண்டாடி போனான் வைஷு ஒரு புறம் இருக்க இவள் மறுபுறம் வழக்கமாக நடக்கும் பேனா சண்டை கூட நடப்பதில்லை காரணம் அவன் அவளிடம் போனால் “என் பேனாவ எடுத்துக்கோ” பானு அவளாகவே வந்து கொடுப்பாள் அதை வாங்க கையை நீட்டி கொண்டே வைஷுவை பார்க்க அவளோ கையில் பேணவுடனும் கண்கள் கலங்கிய நிலையில் இருப்பாள் அந்த பச்சை கண்கள்   அவனுக்கு சந்தோஷத்தை மட்டுமே பார்த்து இப்பொழுது அழ அவனால் பார்க்க முடியவில்லை அதனால் பானுவிடம் “என் பெண் தான் அது பரவால்ல ” என்று வைஷுவிடம் வாங்கி கொள்வான் .

இப்போது அவர்களிடம் சண்டை இல்லை புரிதல் மட்டுமே இருந்தது. அவள் கண்களை வைத்தே அவள் என்ன நினைக்கிறாள் என்பதை கண்டு கொள்வான். சொல்ல போனால் அவளிடம் கேட்டே செய்தான் அவன் எங்கே இருக்க வேண்டும்,எப்படி பேச வேண்டும் , எப்போது வர வேண்டும் , வீட்டிற்கு எப்போது கிளம்ப வேண்டும், அவனுக்கு நேரம் ஆகி விட்டது என்றால் கிளம்ப அவளை பார்த்தால் அவள் கடிகாரத்தை பார்த்து இன்னும் பத்து நிமிடம் என்பாள் அவனோ முடியாது என தலையாட்ட இவள் முகத்தை திருப்பி கொள்வாள். பின் அவளை சமாதானம் படுத்த அறை மணி நேரம் ஆகிவிடும். இவை அனைத்தும் சைகை மற்றும் பார்வையிலே நடைபெறும் பேச்சில் ஏதும் கிடையாது . பேசினால் சண்டை தான் வரும் என்று இருவரும் அவ்வப்போது பேசுவார்கள் இல்லை சண்டை போடுவார்கள்.

அவர்களை அறியாமலே நெருங்கி கொண்டிருந்தனர்.
இதனை பார்க்கும் பானுவோ அவர்களின் பிரிவை ஏற்படுத்த காலம் பார்த்து கொண்டிருந்தாள். அந்த நாளும் வந்தது….

 

Advertisements

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: