Advertisements

நினைவெல்லாம் நீயே கண்ணம்மா – 23

முடிந்த அளவு பற்றி எரிந்த தீயை அணைத்து முடித்தனர்..
மாறனுக்கும் அவனது தந்தைக்கும் மனம் கொள்ளா வேதனை மட்டுமே மிஞ்சியது..
தாங்கள் என்னதான் நிறைய நிலபுலன்களுக்கு சொந்தக்காரர்கள் ஆனாலும் தங்களது நிலத்தில் கஷ்டப்பட்டு உழைத்த மற்றைய விவசாயிகளின் உழைப்பு வீணாய்ப் போனதால் சோர்ந்து போய் இருந்தனர்…
அவர்களின் பின்னாலேயே அங்கு வந்த பார்வதி  அழுது கூக்குரலிட்டார்..
” அய்யோ எல்லாம் போச்சே…இந்த காரியத்தை எவம் பண்ணுனானோ… தெரிலயே” என புலம்ப ஆரம்பித்தார்..
அவரை சமாதானம் செய்ய அருகில் சென்ற மாறனுக்கு மற்றுமொரு செய்தி இடியென தலையில் இறங்கியது…
அது யாதெனில் பர்வதம் மற்றும் குணாவைப் போல் அந்த ஊரில் வேற்று சாதகயில் பிறந்து ஒருவரை ஒருவர் காதலித்துக் கொண்டு இருந்த தீபாவும் , நந்தனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர் என்ற விஷயம் தான்.
மாறனுக்கு என் செய்வதென புரியாமல் குழப்பத்திலும் ,கையாலாகாத்தனத்திலும்  கோபமும் ஆற்றாமையும் ஒரு சேர அவனை ஆட்கொண்டது…
அவர்கள் இருவரும் தற்கொலை செய்து கொண்ட இடத்தை நோக்கி ஓடினான்…
பெரியமருதுவும் , பார்வதியும் குடோனின் நிலையை எண்ணி எண்ணி கண்ணீர் வடித்தனர்…
மாறன் அந்த இடத்தை அடைந்ததும் அங்கு  நந்தனும் , தீபாவும் மரத்தில் கயிறு கட்டி இருந்த கயிற்றில் கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் தொங்கிக் கொண்டு இருந்தனர்.
ஊர் கூடி இருக்க சில பேர் அவர்களது உயிர் பிரிந்த உடலை கீழிறக்கினர்.
அவர்களது பெற்றோர்கள் அருகில் அமர்ந்து கொண்டு முகத்தில் அடித்துக் கொண்டு அழத் தொடங்கினர்.
” இதுக்குத்தேன் அந்த புள்ளய காதலிக்காதடானு சொன்னேனே கேட்டியாடா. இப்போ இப்படி  பொணமா பாக்கத்தேன் அரும்பாரு பட்டு வளத்தோமா. “என நந்தனின் பெற்றோர் அழுது அரற்ற…
தீபாவின் பெற்றோரோ ” அப்படி என்னடி நாங்க சொல்ல சொல்ல கேக்காம உனக்கு காதல் கேக்குது… எத்தனை தரம் வேணாம்னு தலைப்பாடா அடிச்சுக்கிட்டோம் கேட்டியா… கேட்டியாடி.” என அவர்கள் பங்கிற்கு தங்களது மகளின் இழப்பை தாங்க முடியாமல் அழுதனர்.
மாறன் அன்றைய ஒரு தினத்திலேயே எத்தனை மனதை உலுக்கும் சம்பவங்கள் நடந்தேறி விட்டன…
இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என உறுதி கொண்டு
“சேகரா , மாரி வாங்கடே இந்த விஷயத்தை இப்படியே விடக்கூடாது.”
என அவர்கள் அடுத்து சென்ற இடம் காவல் நிலையம்.
                                 🌺🌺🌺
மதியழகி தனது குலதெய்வத்திடம் சில பல கோரிக்கைகளை வைத்து விட்டு தாயின் பின்னால் சென்று நின்று கொண்டாள்…
அப்போது ராஜலட்சுமி : பூசாரி அய்யா இந்தா மதிக்கு கல்யாணம் பண்ணி வைக்கனும்னு முடிவு எடுத்துருக்கோம் அதுக்கு பூப்போட்டு பாக்கோனும் அதுக்கு எல்லாம் தயார் பண்ணுங்க “என்று ஆணையிட அவருக்குப் பின்னால் நின்றிருந்த மதியழகி அம்மாவின் தோள்களைப் பிடித்துக் கொண்டு
” எம்மா நா இப்போ கல்யாணம் பண்ணி வையின்னு கேட்டேனா ஏம்மா அழிச்சாட்டியம் பண்ணுத ” என்று சலித்துக் கொண்டாள்.
ராஜலட்சுமி : வாய மூடிட்டு நில்லுடி இல்ல  வீட்டுக்குப் போய் சூடு வச்சுப்புடுவேன்.என்று மிரட்ட
‘நீங்க செஞ்சாலும் செய்விங்க ‘
என்று மனதில் நினைத்துக் கொண்டு அதற்குப் பிறகு அவள் வாயைத் திறக்கவே இல்லை…
ரங்கநாதன் மகளை முறைப்பதை மாற்றவே இல்லை…
‘அவளை திருமணம் செய்து அனுப்பினாலாவது அவரது விஷயங்களில் தலையிட மாட்டாள் ‘ என்று அவர் எண்ண ஓட்டங்கள் அப்படி இருக்க
செவ்வழகியும் , விஸ்வமும் தங்களது வாரிசிற்காக வேண்டிக் கொண்டனர்.
பூசாரி கையில்  திருநீறு மற்றும் குங்குமம் தனித்தனியே வைத்து மடிக்கப்பட்ட பேப்பர்கறை கொண்டு வந்தார்…
அவற்றை சாமியின் முன்னால் வைக்க
அதை எடுக்குமாறு மதியழகியிடம் கூற அவள் சலித்துக் கொண்டே அதிலிருந்து ஒன்றை எடுத்தாள்…
அவள் எடுத்த பேப்பரில் குங்குமம் இருக்க அதைப் பார்த்து அனைவரும் மகிழ்ந்தனர்…
ராஜலட்சுமி கணவனைப் பார்த்து
” என்னங்க இவளுக்கு மாப்பிள்ளை பாக்க சொல்லி வச்சுப்போடுங்க. இவளை ஒருத்தங் கையில புடிச்சு குடுத்தாத்தேன் இந்த திமிருத்தனம் கொறையும் ” என சொல்ல மதியழகி அவரை முறைத்துக் கொண்டே
தகப்பனிடம் திரும்பி
” அப்பா… இந்த அம்மா இப்படி சொல்லுறாவ.. நீங்க ஒன்னும் பேசாம இருக்கிய.. நாந்தேன் முன்னமே சொன்னேன்ல காலேஜ் முடிச்சுட்டுத்தேன் கல்யாணம்னு அப்போ சரி சரினு தலையை ஆட்டிப்புட்டு  இங்க வந்து சீட்டுப் போட்டு பாத்துட்டு இருக்கீய ” என்று கத்த
ராஜலட்சுமி “தொண்டய தொறக்காதட்டி.எதுவா இருந்தாலும்  வீட்டுக்குப் போய் பேசிக்கலாம் “என தற்காலிகமாக அவளை அமைதிப்படுத்தினார்.
அப்போது அனைவரும் ஸ்தம்பித்து நிற்கும் வகையில் யாரும் எதிர்பாராத நிகழ்வு ஒன்று  அங்கு நடந்தேறியது…
                                                 – தொடரும்
Advertisements

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: