சமீராவின் ‘இளங்காத்து வீசுதே’ – 10

அத்தியாயம்-10

“சொன்னால் கேளு சக்தி..இப்போ கூட ஒன்னும் கெட்டுப்போகல..வா..போயிருலாம்…”
பதட்டமாய் கூறிய சந்தியாவை,

“உனக்கு பயமா இருந்தால் நீ போ..”

என்று கூறி விஜயின் அறை வாசலை பார்த்தபடி நின்றாள்.கடந்த அரைமணி நேரமாய் விஜயை பார்ப்பதற்காக தான் அவன் வாசலில் தவமாய் தவமிருக்கிறாள்.ஆனால் உள்ளே நடந்துக்கொண்டிருந்த மீட்டிங் இன்னும் முடிந்தபாடில்லை.

“ஏன்டி இப்படி பிடிவாதமா நிற்கிற..ரூல்படி நீ முதல்ல ஹெச்.ஓ.டிட்ட இல்லேனா வைய்ஸ் பிரின்ஸிட்ட தான் சொல்லணும்..நீ ஸ்ரைட்டா விஜய் சரிடமே வந்து நிற்கிற.இதுக்கு வேற திட்டு வாங்களோன்னு பயமா இருக்குடி..”

என்று தோழியாய் அவள் கவலைப்பட,
“சர் தானே இந்த பிரச்சனையை ஹான்டில் செஞ்சாங்க..ஸோ இவங்களுட்ட தான் சொல்வேன்..திட்டினாலும் பரவாயில்ல..இதை இப்பவே சொல்லனும்..”

என்று சக்தி தீர்க்கமாய் சொல்லும்போது சந்தியா தான் என்ன செய்வாள்.

“நீங்க உள்ள போங்கம்மா..”

அட்டென்டர் இவர்களிடம் சொல்ல ஒரு நிமிஷம் படக்கென்று ஆனாலும் சமாளித்துக்கொண்டு கதவை உள்பக்கம் தள்ள சில்லென்ற ஏஸி காற்று அவர்களை தீண்டியது.

“மே ஐ கம் இன் சர்..” என்று அனுமதி வேண்டி,

“எஸ்..” என்ற குரல் அவன் குரல் கேட்டபின் உள்ளே சென்றனர்.

அறையின் நடுநாயகமாய் போடப்பட்டிருந்த மேஜையின் ஒருபுறம் ரோலிங் சேரில் சாய்ந்து அமர்ந்திருந்த விஜய் முன் இருவரும் நிற்க சக்தியை ஒட்டி அவள் முதுக்கோடு நின்ற மித்ராவின் கண்கள் கணலாய் அவனை எரித்தது.குரோத்துடன் இருக்கண்கள் அவனை வெறிப்பதை அறியாமல்,

“ஹவ் இஸ் யூர் ஹெல்த்..”
என்று சக்தியை பார்த்து கேட்டவன்,

“ஃபைன் சர்..” என்று அவள் கூறவும் ‘எதுக்கு வந்தீங்க..’ என்று நேரடியாய் கேட்க தயங்கியவள்

“சர்…என்னால தான் ஆரியனை சஸ்பென்ட் பண்ணீட்டீங்க..பட் அவங்களுக்கும் நான் மயங்கி விழுந்ததுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை சர்…எனக்கு அன்னைக்கு  காலையில் இருந்தே உடம்பு முடியல..அதான் ஈவ்னிங் ரொம்ப நேரம் லேப்பில் இருந்தது ஒரு மாதிரி மயக்கத்தில் கொண்டு வந்து விட்டுடுச்சு..ஆரியன் என் ப்ரெண்ட் தான் சர்..கேட்டீன்ல அவங்க செய்ததை நான் ஃபன் ஆக தான் எடுத்துக்கிட்டேன்..சந்தியா நான் அதற்கு தான் அப்செட்டாய் இருந்தேன்னு நினைச்சு உங்களுட்ட சொல்லீட்டாங்க..ஆரியன் மேல எந்த தப்பும் இல்லை சர்..”

என்று படபடவென ஒப்பித்துவிட்டு அவன் முகம் பார்க்க அவனோ சந்தியாவை அழுத்தமாய் பார்த்தான்.

அதில் சற்று குளிரெடுக்க,

“சாரி சர்..”

“ஒருத்தரை பாராட்ட யோசிக்க தேவை இல்லை..ஆனால் ப்ளேம் பண்ணும் முன்னாடி ஒன்னுக்கு ஆயிரம் வாட்டி யோசிக்கனும்…ஈஸியா நாம சொல்லிடுற ஒரு விஷயம் ஒருத்தனை எங்க கொண்டு வந்து நிறுத்துமுன்னு தெரியுமா..”

என்று ஆரம்பித்து அவன் அர்ச்சையிக்க சந்தியா கடனே என்று நின்றாள் என்றால் சக்தியோ தோளோடு நிற்கும் மித்ராவின் கோபத்தை கண்டு பதட்டத்தோடு நின்றாள்.எங்கே நேற்று ஆரியனையே அந்த போடு போட்டாள் விஜயை என்ன செய்வாளோ என்று அச்சம் அவளுள் மொய்த்தது.

அவள் நினைத்ததுபோலவே மித்ராவிற்கு அவனது கம்பீரத் தோரணை இன்னும் கோபத்தை தூண்ட எதாவது செய்ய வேண்டுமே என்று பரபரத்த கைகளோடு பார்வையை சுழற்ற அவள் கண்ணில் சட்டென்று ஒரு மின்னல்.

விஜயின் நாற்காலி அருகில் இருந்த கண்ணாடி அலமாரியின் மேலே மூன்று ஷீல்ட் ஒய்யாரமாய் வீற்றிருந்தது.ஏகப்பட்ட ஷீல்ட் அந்த அலமாரி உள்ளே இருந்தாலும் மேலே இருந்த ஷீல்ட் சற்று பெரிதாக முனைகள் கூர்மையாக இருக்க அதனையே உறுத்து விழித்தாள் மித்ரா.

ஓரத்தில் இருந்த அந்த ஷீல்ட் லேசாக ஆட்டம் காண மெல்ல மெல்ல சரிந்த அதனை மூவருமே கவனிக்கவில்லை.

இறுதியில் அவன்,

“கோ டூ யுவர் க்ளாஸ்..”
என்று அவன் அனுப்பியதும் இவர்கள் கதவை அடைந்தபோது ஒட்டில் இருந்த ஷீல்ட் மொத்தமாய் கீழே சரிய கடைசி நொடியில் அவன் சுதாரித்து விலகினாலும் அவன் நெற்றியை பதம்பார்த்துவிட்டது அந்த கூரிய முனை.

“அய்யோ சர்..”
என்று பதறி அருகில் சந்தியா ஓட சக்தியோ அலட்சிய சிரிப்போடு,
‘தப்பிச்சிட்டானே..’ஏளனமாய் காதருகில் ஒலித்த மித்ரா குரலில் திகைத்தாள்.

மித்ராவின் கோபத்தில் இருந்த நியாயம் அவளுக்கு புரிந்தாலும் இப்படி அதிரடியாய் அவள் செய்வதை காணும் போது அச்சமே மேலோங்கியது.

மெல்லிய கோடாய் நெற்றியில் தோள் கிழிந்து இரத்தம் சொட்ட ‘ஸ்..ஆ..’என்ற முனங்களோடு அதனை கர்சீஃபால் ஒற்றிய விஜய்,

“அம் ஓகே..நீங்க போலாம்..காசியை வர சொல்லு..”
என்று அப்பொழுதும் நிதானமாகவே சொல்ல அவன் வார்த்தையை மீற முடியாமல் சக்தியோடு வெளியே வந்த சந்தியா அட்டென்டர் காசியிடன் விபரம் சொல்லி அனுப்ப அவரும் வேகமாய் உள்ளே விரைந்தார்.

“ஒரு செக்கென்ட் பயந்தே போயிட்டேன்டி..கவனமா வைக்க மாட்டாங்க..பாவம் விஜய் சர் நெற்றியை நல்லா கிழிச்சிடுச்சு..”

என்று சந்தியா வருந்த சக்தியிடம் பதிலே இல்லை.அவளுக்கு இருந்த படபடப்பில் அதை உணர்வும் இல்லை.வகுப்பிற்கு வந்ததும் ஏஞ்சலினிடம் நடந்ததை கூற அது காட்டுத்தீ போல் வகுப்பு முழுவதும் பரவியது.

மும்முரமாய் பேசிக்கொண்டிருந்த ஏஞ்சல்,

“விஜய் சர்மேல விழுக்குறதை பார்த்ததும் சக்தி மேடம் துடித்து போயிருப்பாளே..”

என்று சொல்லும்போது தான் சந்தியாவும் யோசித்தாள்.அங்கேயும் சரி தற்போதும் சரி வாயே திறக்கவில்லை அவள்.ஏதோ சிலைப்போல் இருப்பவளை வினோதமாய் பார்த்தவள்,

“அடியேய் நீ என்னடி பேய் புடிச்சா மாதிரி ‘பே..’ னே இருக்க…”
என்று தோளில் தட்ட,

“ஆங்..ஒன்னுமில்லடி..டயர்டா இருக்கு..”

என்றவள் பெஞ்சில் தலைசாய்ந்து
படுத்துவிட அவளை வித்தியாசமாக பார்த்தாலும் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

அன்று மாலை அவர்கள் வழக்கம்போல் கேம்பஸில் மரத்தடியில் உள்ள கல் இருக்கையில் அமர்ந்து கதையடித்துக் கொண்டிருக்க எங்கிருந்தோ வந்து சேர்ந்தான் மனோஜ்.அவனை கண்டதும் சந்தியா அமைதியாகி விட்டாள்.

“காலேஜ் முடிந்து எவ்வளவு நேரம் ஆச்சு.. இன்னும் கிளம்பலையா ஏஞ்சல்..”

என்றபடி எதிர் இருக்கையில் அமர்ந்தவனின் கேள்வி ரோஸியிடம் இருந்தாலும் பார்வையோ சந்தியாவிடம் நிலைத்தது.

“இதைக் கேட்க மட்டும் தானே அண்ணா எங்களை தேடி வந்தீங்க..”
என்று ஏஞ்சல் புருவம் உயர்த்த அசட்டு சிரிப்போடு,

“அஃப்கோர்ஸ்..தங்கச்சி..”
என்று தோளை குலுக்கினான்.

“சரி தான்..நீங்க நடத்துங்க..”
என்று அவள் தலையாட்டி சொல்ல பல்லை கடித்த சந்தியா அவனுக்கு தெரியாமல் அவள் காலை மிதித்தவள் ‘போ சொல்லு..’ என்று ஜாடை காட்டினாள்.

‘அவளை சைட் அடிக்கவே அரைமணி நேரம் இந்த அண்ண இடியே விழுந்தாலும் நகராது.இவ அவர் இருக்குற வரை ‘நைநை’ நச்சரிப்பா..இவங்களோட..’
என்று மானசீகமாய் தலையில் தட்டிக்கொண்டாள்.

“அந்த சாம்பியன் ஷில்ட் விஜய் சர் மேல விழுந்திடுச்சாம்..அப்போ நீங்க அங்க தான் இருந்தீங்கனு கேள்விப்பட்டேன்.. என்னாச்சு சக்தி..”

என்று விசாரிக்க நடந்ததை சுருக்க கூறினாள்.

“ஹோ..பாவம்ல விஜய் சர்..சரி நீங்க எதுக்கு சர்-ஐ பார்க்க போனீங்க… எதாவது பிராப்ளமா..?”

என்று எதார்த்தமாக தான் வினவினான் ஆனால் அவள் கூறிய பதிலில் அவன் முகம் மாறியது.

“ஆரியனை சஸ்பென்ட் பண்ணிடாங்களாமே..அதான் அவங்களுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லைனு சொல்ல போனோம்..”

என்றதும் கோபம் கொண்டவன்,

“உனக்கு ஏன் இந்த வேலை..பெரிய தியாகினு நினைப்பா..”
என்று அவன் சிடுசிடுக்க,

“இதுல தியாகம் பண்ண என்ன இருக்கு..நான் உண்மையை தான் சொன்னேன்..”
என்றாள் ஏன் இப்போ டென்ஷன் ஆகிறான் என்று புரியாமல்..

“என்ன உண்மை..அவன் உன்னை டீஸ் பண்றேன்னு எல்லார் முன்னாடியும் இன்செல்ட் பண்ணான் தானே..”

“டீஸ் பண்ணாங்க தான்..அதுக்கு இவ்வளவு சீரியஸாக பனிஷ்மென்ட் வரை கொண்டுவரதெல்லாம் தப்பு ண்ணா…”

என்று அவள் பொறுமையாக சொன்னாலும் அவனுக்கு கோபமே பிரதானமாய் இருக்க,

“சஸ்பென்ட் ஆர்டர் கேன்சல் ஆனாலும் அவன் ஒருவாரம் காலேஜ் வரமாட்டான்..”
என்றான் அலட்சியமாய்..

“ஏன்..?”

“அவன் பண்ணின வேலைக்கு என்ன கொடுக்கணுமோ கொடுத்தாச்சு..காலு உடைஞ்சி இப்ப வீட்டில் தான் இருப்பான்..இனி உன் திசை பக்கம்கூட வரமாட்டேன் பார்..”

என்று கெத்தாய் கூற அதிர்ந்த சக்தி முகம் கடுக்க ‘அய்யோ..’ என்று தலையிலே அடித்துக்கொண்டாள்.

“ஏன்ண்ணா இப்படி இருக்கீங்க..நான் கேட்டேனா எனக்காக சண்டை போடுங்கன்னு…எதுக்கு இப்படி தேவையில்லாமல் ரியாக்ட் செய்யுறீங்க..”

“நீ என் தங்கச்சி மாதிரி சக்தி..உன்னை யாராவது வம்பு பண்ணினால் நான் கேட்க கூடாதா..”

“நான் சொன்னேனா என்னிடம் வம்பு பண்ணினாங்கன்னு..நீங்களே முடிவு பண்ணி முதல்ல விஜய் சர் வரையும் இழுத்துட்டு வந்தீங்க..சரி அத்தோட விடவேண்டிய தானே..மேல எப்படி கை வைக்கலாம்…அவங்களை அடிக்க உங்களுக்கு யாரு ரைட்ஸ் கொடுத்தால்..”

என்று கோபமாய் இரைந்தவள்,

“உங்க வென்ஜென்ஸை தீர்த்துக் கொள்ள என்ன யூஸ் பண்ணிக் கிட்டீங்கன்னா.. ஐ நெவர் எக்ஸ்பெக்ட் திஸ் ஃபரம் யூ..”

என்று அதிருப்தியாய் கூறி அங்கிருந்து விடுவிடுவென நடக்க,

“நில்லு சக்தி…”
என்று பின்னாலே ஓடினாள் ஏஞ்சலின்.

பின்னோடு வந்தவளை,
“விடு ஏஞ்சல்.. கொஞ்சம் மூட் அவுட் அவ்வளவு தான்..உனக்கு நேரமாச்சு நீ கிளம்பு..நான் ஹாஸ்டல் போறேன்..”

என்று கூற செல்ல அவளை  அணைத்து,
“எது வந்தாலும் சமாளித்துடுலாம்..நாங்க இருக்கோம்.. எதுக்கும் கலங்காத..”
என்றவள் விடைப்பெற்று சென்றாள்.

எப்பவும் அன்பாய் பேசும் சக்தியின் கோபத்தில் திகைத்த மனோஜ் அவள் பேச்சில் மிகவும் வருத்தப்பட்டான்.

உண்மையாகவே அவள் மீதுள்ள அன்பில் தான் அவனை கண்டிக்கும் பொருட்டு ஆள் ஏற்பாடு செய்து லேசாக தட்டினேன் சொல்லியிருந்தான்.முகம் கூம்பி போக அமர்ந்திருந்தவன் அப்பொழுது தான் சந்தியா எழுந்து செல்லாததை கவனித்தான்.

“என்ன நீயும் திட்டணுமா..திட்டிக்க..ஆனால் ஒன்னு என் வென்ஜென்ஸை தீர்த்துக்க ஒன்னும் நான் அப்படி செய்யல….”

“ஆனாலும் நீங்க பண்ணினது தப்பு தான்..ஆள் வச்சு அடிப்பதெல்லாம் நல்லாவா இருக்கு..நீங்களும் படிச்சு முடிக்க போறீங்க..ஆரியனிற்கு எதாவது ஆகியிருந்தால்…போலீஸ் கேஸ் எதுவும் ஆனால் உங்களும் தான் பிரச்சனை.எதுவும் செய்யும் முன்னாடி யோசிங்க..”

என்று தன்மையாகவே பேசியவள் பின்,

“அவ அன்னைக்கு டிஸ்சார்ஜ் ஆனதில் இருந்தே இப்படி தான் கொஞ்சம் ரெஸ்லெஸ்ஸாவே இருக்காள்..அதான் ஏதோ கோபத்தில் கத்திட்டாள்..அவளே அப்புறம்  வந்து உங்களிடம் பேசுவா..இதுக்காக வருத்தப்படாதீங்க..”

என்று ஆறுதல் கூறி எழுந்து செல்ல  முதன்முறை சந்தியா அவனிடம் அவனுக்காக பேசியது மனதிற்கு இதமளிக்க அவள் வார்த்தையில் உள்ள உண்மையை உணர்ந்தான்.

போனவள் மீண்டும் வந்து,

“நான் சாதாரணமா தான் பேசினேன்..நீங்க உடனே எதுவும் கற்பனை பண்ணிக்காதீங்க…”

என்று சொல்ல, “அதானே..நான் ஒரு அரைநிமிஷம் சந்தோஷப் பட்டால் பொறுக்காதே..”
என்று சலித்துக் கொண்டவன்,
“நான் கனவில் மட்டுமே டூயட் பாடிப்பேன்..நீ கிளம்பு..”
என்று கூற,

“டூயட்..ஆ..”

என்று அவள் முறைக்கவும்,

“யம்மா..நேரில் பாட தான் கொடுத்து வைக்கல..கனவுலயாவது பாடிட்டு போறேனே..”
என்று சொன்னவனை ஏதோ திட்ட வாயெடுத்தவள் பின் கையை உதறி எதுவும் கூறாது திரும்பி சென்றாள்.

அறையில் கீழே தரையில் சுவற்றில் சாய்ந்து அமர்ந்திருந்த சக்தியின் முகம் கசங்கியிருக்க அவளருகே அமர்ந்திருந்தாள் அக்னிமித்ரா.

“விடுப்பா..உன்மேல உள்ள அக்கறையில் தானே அந்த பையன் அப்படி செஞ்சிருக்கான்…அவனை ஏன் திட்டுற..”

“அதுக்கு ஆரியனை அடிக்கிறதுலா சரியா..நேத்து பார்த்தேல்ல நீயும்..என் மேல எவ்வளவு காண்டு தெரியுமா அவங்களுக்கு…அந்த நடுஜாமத்தில் நான் தனியா சிக்குனப்போ என்ன வேணாலும் செஞ்சிருக்கலாம்.. ஆனால் அப்படி எதுவுமே செய்யல..எனக்கு உதவி தான் செஞ்சாங்க..அதுலையே தெரியுது அவங்க நல்லவங்க தான்னு.. தேவையில்லாமல் சஸ்பென்ட் வாங்கி அவங்களுக்கு இது அவமானம் தானே..அதான் எப்படியாவது இந்த பிரச்சனையிக்கு இத்தோட ஒரு முடிவுக்கட்ட நினைத்தேன்..ஆனால் இந்த அண்ணா மறுபடியும் முதல்லேந்து ஆரம்பிச்சுடுச்சு..இப்போ நான் சொல்லி தான் மனோஜ் அண்ணா அடிச்சதா தானே தோணும்..என்னை பற்றி எவ்வளவு சீப்பா நினைப்பாங்க..”

என்று படபடவென தன் மனதில் உள்ளதைக் கொட்ட அவள் கடைசியாய் சொன்னதை மட்டும் கேட்டபடி அங்கே வந்த சந்தியா,

“யாருட்ட டி பேசிட்டு இருக்க..”
என்று சுற்றும் முற்றும் பார்க்க,

“ஆங்..என் மனசாட்சிட்ட..”
என்று சமாளித்தாள்.

அவளை வினோதமாய் பார்த்தாலும் பேக்கை அருகில் இருந்த சிறிய மேஜைமீது வைத்தவள்,
“ரெண்டு நாளா..நீ ஒரு மாதிரி தான் இருக்க சக்தி..”
என்றபடி அக்னிமித்ரா அமர்ந்திருந்த இடத்தில் அமர முற்பட,

“சந்து..அங்கே வேணாம்..இந்த பக்கம் உட்கார்..”
என்று தடுத்தாள்.

“ஏன்டி..?”

“அங்க தூசியா இருக்கு..”

“அப்படி ஒன்னும் தூசி இருக்கா மாதிரி தெரியலையே..”

“ஏன்டி படுத்துற..இப்படி உட்காரேன்..”

என்று கையை பிடித்து மறுபக்கம் அமர செய்ய,

“எத்தனை கேள்வி..”
என்ற அக்னிமித்ரா கையை மட்டும் உயர்த்தி சந்தியா பின்னந் தலையில் தட்ட,

“ஆ..!!அதுக்கேன்டி தலையில் அடிக்கிற பிசாசே..”

என்று தலையை தடவியபடி சந்தியா முறைக்க, “நான் எங்க..”
என்று ஆரம்பித்தவள் பின் புரிந்து அக்னிமித்ரா பக்கம் திரும்பி முறைக்க அவள் கண்சிமிட்டினாள்.

“தலையிலே ஏதோ இருந்துச்சு..அதான் தட்டி விட்டேன்..”

என்று இவள் கூற அதனை நம்பியவள் அதன்பின் இன்று நடந்த பிரச்சனைகளை மேலும் பேசி டென்ஷன் ஆக்காமல் விடுத்து வேறு பேசி அவளை திசை திருப்பினாள்.

One Reply to “சமீராவின் ‘இளங்காத்து வீசுதே’ – 10”

  1. மித்ரா என்ன தான் பண்ணப் போறா🤔

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: