முபீன் MSK – கண்ணாமூச்சி ஆட்டம் – 10

கண்ணாமூச்சி – 10

 

ஆண்ட்டி வீட்டில் கட்டுமான பணிகள் இருந்ததால் அனைத்து பிள்ளைகளையும் ஒன்றாக அமர வைத்தனர். இதுவே சாக்காக அனைவரும் தனக்கு தேவையான இடத்தில் அமர்ந்து கதை பேச ஆரம்பித்தனர்.ஒரு பெரிய வராண்டாவில் நடுவில் உள்ளே செல்லும் பாதை பிரிக்க இடது புறமும் வலது புறமும் அமர்ந்தனர். இடது புறத்தில் செவுற்றின் முதலில் வைஷுவூம் வலது புறத்தில் ராகுலும் இருக்குமாறு உட்கார்ந்தான். அவளுக்கு எதிரே அவன் அமர்ந்து கொண்டு அவளையே கண் கொட்டாமல் பார்ப்பதும் அவள் கண்டும் காணாதது போல் திரும்புவதும் நடந்து கொண்டிருந்தது.

“ஐயோ இவ ஏன் என் எதிர்ல உக்கார வச்சிருக்காங்க,பாக்குறது பாரு கொல்லி கண்ண கொல்லி கண்ண,இப்புடிலாம் பாத்த மயங்கிருவோமா போடா போடா ” என்று அவ்வப்போது தனக்குள் முனைக்கி் கொள்வாள். ஆனால் உண்மையில் இவள் தான் அவனை புக்கில் பார்ப்பது போல அவனை பார்த்து கொண்டிருந்தாள்.அதன் பின்னே அவன் பார்ப்பான்.அந்த இடம் கிடைக்க அவன் நண்பன் அருண் அல்லவா தியாகம் செய்து மூக்கில் கட்டோடு ஓரமாய் அமர்ந்திருந்தான்.

“என்ன மச்சா வலிக்குதா “
“டேய் உனக்கு என்னடா பண்ண ,அந்த இடம் வேணும்னு சொன்னா நானே குடுத்துருப்பேன்ல ம்ம் எதுக்கு இந்த கொல வெறி ” தன் மூக்கினை காட்டியபடியே..
” அதுக்கு மட்டும் இல்ல மச்சான் ,நீ என்ன சொன்ன வைஷு சூப்பர் பிகர் டாவா அதுக்கு தான் இந்த ஃகிப்ட்” அந்த கட்டை அழுத்த அவன் அலற
“தெரியாம சொல்லிட்டேன்,நீ ஏன் கோவ படுற அதும் வேணுமா அது ஸ்கூல் பொண்ணுடா உனக்கு தான் காலேஜ் உன் வீடுன்னு எத்தன லிங்க் இருக்கு இது பாவம் மாப்ள”
“என்ன மச்சா உனக்கு வாய் நல்லாருக்கு போல”என்று தன் கையை மடக்க
“நீ சொன்ன சரி மாப்ள உனக்கு என்ன வேணுமோ எடுத்துக்கலாம் தப்பு இல்ல என்ன ஹெல்ப் வேணாலும் கேளு மச்சி”அருண் சரணடைய
“அந்த பயம் இருக்கட்டும் ,ஆனா நா அதுக்காக அவல பாக்களடா எவ்ளோ குழந்த தனமா இருக்கா , கண்ணு ஒரு இடத்துல நிக்குதானு பாரேன் மீன் மாறி துள்ளி துள்ளி குதிச்சுட்டு இருக்கு, அப்ப அப்ப யாருக்கும் தெரியாம சிலேட் குச்சிய வேர தின்றது, பேனாவ எடுத்தான் என்ன தொட்டுட்டானு LKG பையன்ட சண்ட போடுறது இப்புடி இருக்க குழந்தைய ஃபிகர்னு சொன்னா கோபம் வராதா “அவன் சொல்லி முடிக்க அருண் ஆ என்று பார்த்தான்
“டேய் நீ வந்து ஒரு வாரம் தானேடா ஆச்சு அதுக்குள்ள இவ்ளோ டீடியல்ஸ் எப்போடா பாத்த”
“அதலாம் போர போக்குல பாத்ததுதான்”
“நீ போற போக்குல பாக்கல அவல மட்டும் தான் பாதுருக்க” ஈ ஈ வென ராகுல் சிரிக்க
“என்னமோ பண்ணு போ “அருண் அவன் வேலையை தொடர்ந்தான்.

அவளோ அவனை பழி வாங்குவதாக எண்ணி யார் என்ன செய்தாலும் அவனையே மாட்டி விட்டால். யாராவது அழுதாள் இவன் தான் அடித்தான்,ஏதேனும் காணவில்லை என்றால் இவன் தான் , சத்தம் அதிகமாக வந்தால் இவன் தான் ,அதும் பெண் பிள்ளைகளோடு அவன் பேசுவதை பார்த்தால் முடிந்தது கதை. பக்கத்தில் இருக்கும் வாண்டுகள் அனைத்தையும் கிள்ளி விட்டுவிட்டு அழ வைத்து வீட்டையே இரண்டாக ஆக்கி விடுவாள் அதற்கும் காரணம் அவன் தான் என்று சாதிப்பால்.அவனோ அவள் செய்வதை எல்லாம் அவளை பார்த்து கொண்டே ஆமாம் என்று சொல்லுவான்.குழந்தைகளோ “அந்த அண்ணா ஏதும் பண்ணல” என்று சப்போர்ட் செய்ய வைஷு “ஏய் அவனுக்கு சப்போர்ட் பண்ணிங்க அப்றம் நா என்ன பன்ணுவனு தெரியும்ல” அவர்களை மிரட்டி வைப்பாள்.
அவளது கொடுமைகளை அனுபவித்தவர்கள் அவள் சொல்வதை தானே கேட்க வேண்டும்.அதுவும் இல்லாமல் அவர்களுக்கு என்ன உதவி என்றாலும் அனைத்தையும் செய்து கொடுப்பாள்.சொல்ல போனால் அங்கு இருக்கும் பாதி பிள்ளைகளுக்கு அவள் தான் ஃபீஸ் கட்டினால்.

ஆண்ட்டிகும் இது தெரியாமல் இல்லை அவனிடம் தனியாக “தம்பி அவ சின்ன பொண்ணு ஏதோ விளையாட்டுக்கு பண்ரா நீ ஏதும் சீரியசா எடுத்துக்காத”
“அதலாம் ஒன்னு இல்ல ஆண்ட்டி எனக்கு தெரியும்,நீங்க ஏதும் அவல சொல்லாதீங்க”
அதிலிருந்து ஆண்ட்டிகும் அவனை பிடித்து போனது. அங்கிளும் அப்புடியே.

அவனை மாட்டி விடுவதும் ஆண்ட்டி திட்டுவதும், அவளை பார்க்க தனியாக சிரித்து கொள்வாள்.அந்த சிரிப்பிற்காகவே அவன் அனைத்தையும் ஏற்று கொண்டான்.
அவனும் அவளோடு வேண்டுமென்றே சண்டையிடுவான். எதற்கு எடுத்தாலும் சண்டை சாதாரணமாக ஆரம்பித்து சண்டையில் தான் முடியும் எந்த பேச்சும், இவர்களின் சண்டையை பார்ப்பதற்கே அங்கு அனைவரும் அமைதியாக பார்ப்பார்கள்.

ஆண்ட்டி ஏதேனும் கேட்க அவன் சொல்ல இவள் குறுக்கே வந்து பேச சண்டை ஆரம்பித்துவிடும்.ஆண்ட்டி “ஆரம்பிச்சுட்டீங்களா” என்று அவர் கிளம்பி விடுவார் .ஆனால் சண்டை விடாது.அவர்களுக்கான முக்கால்வாசி சண்டை பேனாவிற்கே நடக்கும் அவன் வேண்டுமென்றே அவளிடம் மட்டும் தான் பேனாவை எடுப்பான்,கேட்டால் மறந்துட்டேன் என்பான்.அவளும் சண்டை போடுவாள் தவிர மற்றவர்களை தர விடமாட்டாள். அங்கிள் இருக்கும் போது மட்டுமே அன்று ஏதும் நடக்காது. அந்த நாள் அனைவருக்கும் சோகமான நாளாகவே ஓடும்.

பின் ஒரு நாள் அவர்கள் பக்கத்து வீட்டில் ஒரு குடும்பம் குடியேறியது அது யாருமில்லை ஆண்டியின் உறவுக்காரர்கள் தான். அவர்களுக்கு ஒரே ஒரு பெண் அவள் பன்னிரண்டாம் வகுப்பு படிப்பதால் இங்கே படிக்க வந்து சேர்ந்தால்.பார்க்கவே மாடர்ன் பெண் போலவே வந்தால்.வந்தவள் முதலில் ராகுலை பார்த்தவள் நேராக அவன் அருகில் போய் அமர்ந்து கொண்டாள்.அதை பார்த்ததுமே அங்கு ஒரு பிரளயம் வெடித்தது. வைஷு கையில் இருந்த பேனாவோ என்னை விட்டுவிடு என்று கெஞ்சியும் கேட்காமல் அதன் தலையை துண்டாக்கினால்  அவனோ அவளை ஒர கண்ணிலே பார்த்து சிரித்து கொண்டே வந்தவளிடம்  பெயர் கேட்க அவள்
“என் நேம் பானு”……

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: