Advertisements

சமீராவின் ‘இளங்காத்து வீசுதே’ – 7


அத்தியாயம்-7

சந்தியா ரெஸ்ட் ரூமிலிருந்து மீண்டும் லேப்பை நோக்கி வர  அப்போது மனோஜ் அவளை எதேர்ச்சயாய் பார்த்துவிட உடனே எழுந்து அருகில் வந்தவன்,

“சந்தியா…”

என்றழைக்க பார்க்காமலே யாரென்று உணர்ந்து,

“தனியா சிக்கிட்டோமே..”

என்று நாக்கை கடித்தவள் பின்,

“ம்ச்..நமக்கா பேச தெரியாது..பார்த்துக்கலாம்..”

என்று கேஷ்வலாய் திரும்பியவள்,

“என்ன…”

என்றாள் எந்த பாவனையும் இன்றி..

“ஹாஸ்டல் போகாமல் இங்கே என்ன செய்கிறாய்..சக்தி எங்கே..”

என்று கேட்க,

“மேம் லேப்பில் ஒர்க் கொடுத்திருக்காங்க..நானும் சக்தியும் அதை முடித்துவிட்டு தான் ஹாஸ்டல் போக வேண்டும்..போதுமா.. இல்லை இன்னும் எதாவது விளக்கம் வேண்டுமா..”

என்று கைகளை கட்டிக் கொண்டு அவள் கேட்ட தோரணையில் 

‘ஊருக்கே பருப்பா இருந்தாலும்..இவக்கிட்ட ஒன்னு செல்லுபடியாகதே..”

என்றெண்ணி பெரூமுச்சிவிட்டான்.

உண்மையில் அவளிடமே அவன் காதலை தெரிவிக்கும்போதே ஒரு கெத்துடன் திமிராக தான் சொன்னான்.

ஒருவேளை தன்மையாய் பேசியிருந்தால் ஓகே சொல்லிருப்பாளோ என்னவோ அவன் காட்டிய திமிரிற்கு நன்றாக சுத்தவிட்டால் சந்தியா.

“வேற ஒன்னும் இல்லை…”

என்று அவன் போக எத்தனிக்கையில் தான் நினைவு வந்தவளாய்,

“ஒரு நிமிஷம் இருங்க..”

என்று அவனை நிறுத்தி,

“உங்களுட்ட ஒன்னு சொல்லனும்…”

என்று தயங்கியபடி சொல்ல அதற்குள் அவன் மனம் ஜெட் வேகத்தில் கற்பனையில் பறக்க அவன் முகத்தில் இருந்தே அதை கண்டுக்கொண்டவள்,

“ஹலோ..ஹலோ..சக்தி பத்தினது..”

‘ரொம்ப கற்பனை பண்ணாதே..’ என்பது போல் அவள் சொல்ல,

‘அதானே..’ என்றெண்ணி அலுத்தவன் 

“சொல்லு..”

என்று கூற அவள்  பிரெஸ்ஸர்ஸ் டேவில் தொடங்கி இன்று நடந்ததுவரை பிட்டுப்பிட்டு வைக்க மனோஜின் முகம் கடினமானது.

‘ஒரு வாட்டி பட்டும் அந்த நாயிக்கு புத்திவரலை..’

என்று கோபமாய் முணுமுணுத்தான்.தர்ஷன் சொன்னது தான் உண்மையென இவனும் நம்பினான்.நிஜத்தில் என்ன நடந்தது என்பது மனோஜிற்கு தெரியாது.அதனால் ஏற்கனவே ஆரியன் மீது வெறுப்பில் இருந்தவன்  இன்று தன் தங்கைபோலான சக்தியிடமே சீண்டினான் என்றதும் கடும்சினம் பொங்க,

“அவனை காலேஜில் பட்டதெல்லாம் பத்தலைபோல..வீட்டுக்கே போய்..அவன் மொகறைய பேக்குறேனா இல்லையானு பாரு..”

என்று முஷ்டி இறுக கோபமாய் சொல்லி புறப்பட,

“ஐயோ..மனோஜ்…உங்களை பிரச்சனை பண்ண சொல்லி இதெல்லாம் சொல்ல..ப்ளீஸ் இப்போதான் இது முடிந்தது மறுபுறம் ஆரம்பிக்காதீங்க..”

என்று அவனை தடுக்க,

“அப்புறம் அவனை சும்மா விட்றுவேன்னு நினைக்கிறியா..”

என்றான் கோபமாகவே..

“அவ ஏற்கெனவே இந்த விசயத்தில் ரொம்ப அப்செட்டாக இருக்கா..நீங்க வேற இதை பெரிதாகி எல்லாருக்கும் இந்த விஷயம் தெரியுரா மாதிரி பண்ணிடாதீங்க..சக்தி இதை விரும்ப மாட்டாள்..முடிந்தது முடிந்ததாக இருக்கட்டும்..மறுபடியும் இதுபோல் எதாவது செய்தால் அப்போ பார்த்துக்கலாம்..”

அவள் எடுத்துச்சொல்லியும் அவன் அசையாமல் இருக்கவும்,

“எந்த பிரச்சனையும் பண்ண மாட்டீங்க தானே..”

என்று அவள் கேட்க ஒப்புக்கு அவளிடம் தலையை ஆட்டினாலும் அவனை விட்டுவிடும் எண்ணமெல்லாம் மனோஜிற்கு இல்லை.

“சரி..சக்தி எங்கே..லேப்பில் தானே இருக்க..வா நானும் வரேன் ..அவளுக்கு ஒரு பிரச்சனை என்றால் என்னிடம் வந்து சொல்லவதற்கென்ன..சும்மா வாய் வார்த்தைக்கு தான் அண்ணன் என்று சொல்கீறாளா..”

என்று சொன்னபடி லேப்பை நோக்கிச் செல்ல சந்தியாவும் உடன் நடக்க லேப்பை அடைந்தவர்கள் அதிர்ந்து நின்றுவிட்டனர்.

சக்தி அங்கே தரையில் மயங்கி விழுந்துகிடக்க,

“சக்தி..”

என்று பதறியடித்து அருகில் வந்தனர்.அவளிடம் எந்த அசைவும் இல்லை.மயக்கத்தை தெளியவைக்க எடுத்த முயற்சிகள் எல்லாம் பலனின்றி போக மனோஜ் சந்தியாவை சக்தியை பார்த்துக் சொல்லிவிட்டு ஸ்டாஃப்பை அழைக்க விரைந்தான்.

சற்று நேரத்தில் அந்த இடமே சிறிது கலவரமாக என்ன முயன்றும் சக்திக்கு நினைவு திரும்பாததால் மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர்.

“சந்தியா..நீ தானே கூட இருந்த..எப்படி மயங்கி விழுந்தாள்..”

படபடப்பாய் கேட்டாள் அந்த லேப் ஸ்டாஃப்.தன் பொறுப்பில் இருக்கும்போது அல்லவா மயங்கி விழுந்துவிட்டால் எதாவது ஒன்று என்றால் தன் தலைதானே உருளும் என்று அஞ்சினாள் அவள்.

சந்தியா,

“மேம்..நான் ரெஸ்ட் ரூம் போயிருந்தேன்..வந்து பார்க்கும் போது மயங்கி கிடந்தாள்.. என்னாச்சுனு தெரியலை மேம்..”

என்றாள் அழுகை ஊடே…சக்திக்கு என்னவோ ஏதோ என்று அவள் மனம் பதறியது.அவளுக்கு சற்றும் குறையாத பதட்டதோடு நின்றிருந்தான் மனோஜ்.

ஹாஸ்டல் வார்டன் சக்தியின் பெற்றோரிற்கு அலைபேசியில் தொடர்புக்கு கொள்ள முயற்சிக்க அவர்களை ரீச் செய்ய முடியவில்லை.

நான்கு மணி நேரத்திற்கு மேல் ஆனாபின்பும் அவளுக்கு நினைவு திரும்பவில்லை.உடலில் எல்லாம் சீராக இருக்கும் போது எதனால் இந்த மயக்கம் என்று புரியாமல் மருத்துவர்கள் தலையை பிய்த்துக் கொண்டனர்.

விஷயம் சீரியஸானதால் தகவல் கல்லூரி முதல்வருக்கு செல்ல அவர் மூலம் விஜய்யையும் சென்றடைந்தது.

‘காலையில் பார்த்த அந்த பொண்ணா..’

என்று யோசித்தவன் ஏதோ உள்ளுணர்வு ஊந்த தானே மருத்துவமனைக்கு கிளம்பி வந்தான்.

விஜயே வரவும் அந்த மேமிற்கு பயம் பிடிக்க அதனை மறைத்து தெளிவாய் இருப்பதுபோல் காட்டிக்கொண்டார்..

முதலில் என்ன நடந்தது என்று உடன் இருந்த சந்தியாவிடம் கேட்டவன்,

“காலேஜ் டைம் முடிந்த பிறகு..லேப்பில் உங்களுக்கென்ன வேலை..”

என்று கடினமாய் கேட்கவும் அவள் மேம்மை கைகாட்ட,

“இல்ல சர்..நாளை நடத்த வேண்டிய எக்ஸ்பெரிமெட்டிற்காக தான்..”

என்று மென்று விழுங்க,

“ஓர்க் கொடுத்தீங்க சரி..இவங்களை லேப்பில் தனியா விட்டுவிட்டு உங்களுக்கு அப்படி என்ன வேலை..நீங்கள் உங்கள் கண்பார்வையில் தானே ஸ்டூடென்ஸ்ஸை வைத்திருக்க வேண்டும்..இதுதான் ஸ்டூடென்ஸை பார்த்துக் கொள்ளும் லட்சணமா..??”

என்று சத்தம் இன்றி அடிக்குரலில் சீற பயத்தில் அவள் கைகளை பிசைந்தபடி நின்றாள்.

அப்பொழுது தான் மனோஜை பார்த்தவன்,

“அந்த நேரத்தில் உனக்கு அங்கென்ன வேலை…நீ எப்படி வந்த..”

என்று அதட்டிக் கேட்க,

“என் பிரண்ஸ் தான் சர் இவங்க..அப்போ நான் க்ரைவுன்டில் தான் ப்ராட்டீஸில் இருந்ததால் சந்தியா பதட்டமாய் வெளியே கூப்பிடவும் உதவிக்கு வந்தேன்..”

என்றான் பாதி மெய்யும் பாதி பொய்யுமாய்..

அந்நேரம் அறையிலிருந்த மருத்துவர் வெளியேவர அனைவரின் கவனமும் அவர்புறம் திரும்பியது.

“அவங்க உடம்பில் எந்த பிரச்சனையும் இல்லை..பட் எதையோ பார்த்தோ இல்லை நினைத்தோ ரொம்ப பயந்திருக்காங்க..அதனால் தான் மயங்கி இருக்காங்க..ஆனால் ஏன் இன்னும் மயக்கம் தெளியவில்லை என்பது தான் புரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்…”

என்று கூற,

“டாக்டர்..இப்போ அவங்களை பார்க்கலாமா..”

என்று விஜய் கேட்க,

“ஷூயர்..”

என்று சொல்லி அவர் சென்றுவிட விஜய் உள்ளே சென்றான்.

கண்கள் மூடி ஆழ்ந்த நித்திரையில் இருப்பவள் போல் இருந்தாள் சக்தி.

அருகில் சென்றவன் அவளையே பார்த்தபடி,

“இந்த பொண்ணுக்கு என்னவோ..!!பேரன்ஸ்ஸை வேறு தொடர்பு கொள்ள முடியவில்லை…என்ன செய்வது..”

என்ற மனநிலையோடு நிற்க அப்பொழுது சக்தியின் உதடுகள்

‘அக்னிமித்ரா..’ என்று அழுத்தமாய் உச்சரிக்க திடுக்கிட்டு போனான்.

ஆனால் அடுத்த நிமிடம் கனவோ என்பது போல் அவள் முகம் நிர்மாலாகவிட குழம்பினான்.

‘அக்னிமித்ரா என்று சொன்னது போல் இருந்ததே..பிரம்மையா..ஆனால் நல்லா தெளிவாய் கேட்டதே..”

என்று மண்டை காய சட்டென்று நினைவு வந்தது.

‘அந்த லேப்!!!!அங்கே தானே மயங்கி விழுந்தாள்..அப்படியெனில்..

அப்பா சொன்னது போல் எதுவும்…..’

நினைக்கயிலே அவனுள்ள பயபந்துருள்ள ‘ச்சே..என்ன மடத்தனமான யோசனை..அப்படி எல்லாம் எதுவும் இருக்காது..’

என்று தனக்குத்தானே சொன்னவன் வேகமாய் அறை விட்டு  வெளியே வந்தான்.

அதன்பின் அவளை பார்க்க யாரையும் விடவில்லை விஜய்.

‘எங்கே மீண்டும் அவள் அக்னிமித்ரா என்றோ வேறெதாவதோ சொல்லிவிட்டால்..’ என்று அவன் மனம் எச்சரித்தது.

“நீ கூட இருந்தவரை அந்த பொண்ணு நார்மலாக தான் இருந்துச்சா… இல்ல நீங்க பயபடுறா மாதிரி எதாவது நடந்ததா..”

குரலை சாதாரணமாய் வைத்துக் கொண்டு விஜய் சந்தியாவிடம் கேட்டான்.அங்கே எதாவது அமானுஷ்ய நடமாட்டம் இருந்ததா என்று தெரிந்துக் கொள்ள அவன் கேட்க அவளோ,

“இல்லை சர்..அங்கே ஒன்னும் நடக்கலை…ஆனால்.. மதியம்..”

என்று தொடங்கி ஆரியன் ரேகிங் செய்தது அவள் பயந்தது அப்செட்டாக இருந்தது என்று எல்லாத்தையும் ஒப்புவித்து,

“அவங்க டீஸ் பண்ணதில் ரொம்ப பயந்துட்டாள் சர்..அதே நினைவா தான் இருந்தால்..ஒருவேளை அதனால் எதாவது..”

என்று சந்தியா தயங்கி நிறுத்தினாள்.மனோஜிற்கும் அப்படி தான் இருக்குமோ என்று தோன்றியது.

அக்னிமித்ராவின் பிடியில் அவளது நினைவு இருக்க இறுதியில் பழியோ பாவம் ஆரியன் புறம் திரும்பியது.

                        *******

“என் பையன் அப்படி எல்லாம் பண்ணக்கூடியவன் இல்ல சர்..அவனுக்கு எந்த தண்டனையும் வேண்டாம்…”

ஆரியனின் தந்தை விஜயிடம் எடுத்து சொல்ல முனைய,

“அது உங்க நினைப்பு..விசாரித்ததில் அப்பொழுது கேன்டீனில் இருந்த எல்லா ஸ்டூடென்ஸுமே இவன் ரேக் செய்ததை பார்த்திருக்காங்க..அந்த பொண்ணு பயந்து இப்போ ஹாஸ்பிடலில் அட்மீட் செய்யும் அளவிற்கு ஆகிற்று..நேற்றில் இருந்து இப்போவரை நினைவு திரும்பவில்லை.அதற்கு காரணமான உங்க பையனை சும்மா விட சொல்றீங்களா..”

என்று முகத்தில் அறைந்தார்போல் கடுமையாய் பேசியதில் அவர் தந்தை திரும்பி ஆரியனை ஓர் பார்வை பார்க்க கூனி குறுகி நின்றான் ஆரியன்.

“சர்..என் மகனிற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன் சர்.. எதாவது நடவடிக்கை எடுத்தால் என் புள்ள படிப்பு கெட்டு போயிடும் ப்ளீஸ் சர்..”

என்று அவர் தந்தை கெஞ்சியதில் ஆரியன் உள்ளம் துடிதுடித்து போனது.

“அந்த அக்கறை உங்க பையனுக்கும் இருக்க வேண்டும்..இப்போதிற்கு உங்க பையனை த்ரீ வீக்ஸ் சஸ்பென் பண்றேன்..அந்த பெண்ணிற்கு எதாவது ஆகினால் விளைவு ரொம்ப மோசமாய் இருக்கும்..கண்டித்து வைங்க..”

என்று எச்சரித்து அவன் அறையில் இருந்து வெளியே அனுப்பினான்.

இத்தனை வருடங்களில் ஆரியன் ‘என் மகன்’ என்று பெருமையை கொள்ளும்படி தான் நடந்திருந்தானே தவிர அவர் கண்டிக்கும்படி தன் செய்கை எதுவும் இருக்காது.இன்று கல்லூரியில் இருந்து புகார் வரச்சொல்லி அதுவும் பெண்ணின் விஷயம் என்றதும் அவர்மனம் நொந்துப்போனது.

அறையைவிட்டு வெளியேறிய தந்தை ஆரியனிடம் ஒரு வார்த்தை பேசவில்லை.அதுவே அவனை கொல்லாமல் கொன்றது.

“அப்பா..என்னை நம்புங்க ப்பா..அந்த பொண்ணை காயப்படுத்துவது போல் நான் எதுவுமே செய்யவில்லை..”

“அப்புறம்…ஏன் தம்பி இப்படி சொல்றாங்க…”

“எனக்கு தெரியலை ப்பா..நான் உங்க பையன் ப்பா. தப்பு செய்ய மாட்டேன்..நான்..நான் கண்டிப்பா என்மேல் தப்பு இல்லை என்று நிரூப்பிப்பேன்..நீங்க என்னை நம்புறீங்க தானே..”

என்றவன் கண்ணில் பொய்யில்லை..அவன் தோளில் கைவைத்தவர்,

“உன்னை நினைத்து நான் ஒரு நாளும் தலைகுனிந்தது இல்லை..ஆனால் இன்னைக்கு…”

என்று நிறுத்தியவர் “இனி ஒரு தரம் இப்படி ஒரு சூழலில் என்னை நிறுத்திவிடாதே ஆரியன்..”

என்று கூற முன்னால் நடக்க தந்தையை இப்படி பார்க்கவே அவனின் இரத்தம் கொதித்தது.

சக்திமேல் கோபம் பொங்க கொலைவெறியில் இருந்தான்.

Advertisements

One thought on “சமீராவின் ‘இளங்காத்து வீசுதே’ – 7”

  1. அமுதா சக்திவேல் says:

    சூப்பர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: