Tamil Madhura நித்யாவின் யாரோ இவள் நித்யாவின் ‘யாரோ இவள்’ – 2

நித்யாவின் ‘யாரோ இவள்’ – 2

அத்தியாயம் 2

Haaren, Germany

அதிகாலை குளிர் காற்றில் பால்கனியில் வந்து நின்றான் அவன். ஆறடி உயரத்தில் கலைந்திருந்த சிகையை காற்று இன்னும் சற்று அதிகமாக கலைக்க அந்த காலை நேர அமைதியுடன் தூரத்தில் தெரிந்த சிட்டி சென்டரை பார்த்து கொண்டிருந்தான் அவன். பின்னர் போர் அடிக்கவே போனில் நேரம் பார்த்தான்.

” ப்ச், இந்தியால இப்போ 9 ஓ கிளாக் இருக்கும். இப்போ கால் பண்ணா இந்த லூசுங்க ஃபோன் எடுக்காதுங்க. பட் போர் அடிக்குதே! என்ன பண்ணலாம்” என்று புலம்பியவனின் சத்தம் கேட்டு விழித்தான் அவன் நண்பன் .

” வருண் நேத்து தானடா வெகேசன் போய்ட்டு வந்தோம். உனக்குலாம் டயர்டே ஆகாதா தெய்வமே?”

” பிரியாக்கு கால் பண்ணி வெகேசன் எப்படி இருந்துச்சுனு சொல்லி காண்டாக்கலாம்னு நெனைச்சேண்டா! பட் இப்போ அவ காலேஜ் போயிருப்பா. அதான் என்ன பண்ணலாம்னு யோசிக்கிறேன்” என்று பதிலளித்தான் வருண்.

” டேய்! நீயும் உன்னோட கஸின்சும் எப்படியோ போங்கடா. அதுக்கு ஏன்டா பொலம்பியே என்னோட தூக்கத்த கெடுத்த?” என்று சொல்லி கொண்டே போர்வையை கொண்டு தலையை மூடிக்கொண்டு தூங்க ஆரம்பித்தான் அரவிந்த்.

பால்கனியில் இருந்த சோபாவில் அமர்ந்து முகப்புத்ததகத்தினுள் நுழைந்தான்.

” ஓ வாவ்! நேத்து குடுத்த ரெக்வஸ்ட அந்த பொண்ணு  அக்செப்ட் பண்ணிட்டா. அவளுக்கு மெசஞ்சர்ல  ஒரு  வேவ்  பண்ணி தான் பாப்போமே” என்று வேவ் செய்தான் வருண்.

பதில் வராததால் அவளுடைய  ஆன்லைன் ஸ்டேட்டஸ் என்ன என்று பார்க்கையில் அது பச்சை புள்ளி காண்பித்தது.

” அது சரி! எந்த பொண்ணு தான் உடனே ரிப்ளை பண்ணுச்சு… அப்படிலாம் நடந்தா டிரம்பும், கிம்மும் ஃப்ரெண்டா ஆயிட மாட்டாங்க!!! இந்த பொண்ணுங்களும், அவங்க  ஆட்டியூடும் ஒட்டி பொறந்ததாச்சே” என்று புலம்பிய படியே அவளுடைய  புரஃபைலை பார்க்க ஆரம்பித்தான்.

அவன் வருண்.  பிறந்து வளர்ந்தது எல்லாமே திருநெல்வேலியில். பி.இ முடித்துவிட்டு  ஒரு  மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்தவனின் கனவு வெளிநாட்டில் எம்.இ முடிப்பது என்று தெரிந்து கொண்ட அவன் தந்தை அனுமதியுடன் ஜெர்மனியில் படித்து கொண்டிருப்பவன்…

முதலில் குடும்பத்தை பிரிந்து செல்வது வருத்தமாக இருந்தாலும் அவனுடைய கஸின்ஸ் கொடுத்த தைரியத்தில் அவனும் ஜெர்மனியின் வாழ்க்கை ஓட்டத்தில் கலக்க ஆரம்பித்தான் அவன்.

பொங்கல், தீபாவளி எல்லாமே சேர்ந்து கொண்டாடியது ,  சென்னையில் இருந்த போது வார இறுதியில் சுற்றியது,  ஊர் திருவிழாவில் லூட்டி அடித்தது எல்லாமே நினைவில் வரவும் அவனுக்கு எப்போது இந்தியா செல்வோம் என்று இருந்தது.

திடீரென்று தோன்றவும் ஸ்கைப்பில் கால் செய்தான் வருண்.

முதலில் அனு, அவனுடைய சித்தி மகள்  ” அண்ணா! என்னாச்சு, காலங்காத்தால வீடியோ கால்?” என்று ஆச்சரியமாக கேட்டாள்.

ஸ்கிரீனில் தெரிந்த அவள் முகத்தை பார்த்து புன்னகைத்து கொண்டே “எங்க போச்சு அந்த பிரியா வாலு? கூப்டு அவளை” என்றான் வருண்.

அவன் சொன்னது தான் தாமதம் பிரியாவும் அவள் அக்கா ரேவதியும் அங்கு பிரசன்னமாயினர். கான்ஃப்ரென்ஸில் மற்ற அனைவரையும் இணைக்கவும் “இவன் ஏதோ பஞ்சாயத்து பண்ண போறான்” மனசுக்குள்ளேயே சொல்லிக் கொண்டாள் பிரியா.

” ஓகே, பதினெட்டு பட்டியும் வந்தாச்சா?” வருண் கேக்கவும் அனு ” அண்ணா மேட்டருக்கு வாங்க ” என்று அவனை காலை வாரினாள்.

நேத்ரா ” என்னாச்சு வருண்,  உனக்கு ஏதும் உடம்பு சரியில்லையாடா” என்று அக்கறையுடன் வினவவும் அதை மறுத்தான் வருண்.

” பவா, மீருகுட்டி, ஜானு எல்லாரும் வந்தாச்சா? லோகேஷ் எங்க போனான்?” என்று வருண் கேக்கவும் ” எல்லாரும் பிரசண்ட் அண்ணா. விஷயத்தை சொல்லுங்க” இது லோகேஷ்.

” நான் வெகேசனுக்கு அம்ஸ்டர்டாம் போய்ட்டு வந்தேன்” என்று அவன் கூலாக கூறவும் அனைவரும் அவனை வெட்டவா, குத்தவா என்று பார்த்தனர்.

” நீங்க, அந்த குரங்கு அரவிந்த் எல்லாரும் ஊர் சுத்துனது ஃபுல்லா ஃபேஸ்புநாங்க பாத்துட்டோம். இந்த அரிய தகவலை சொல்லவா எங்க எல்லாரையும் கூப்டிங்க அண்ணா?” என்று பல்லை கடித்தாள் அனு.

” நோ டியர்! ஆக்சுவலி நான் எல்லாரையும் கான்ஃபெரன்ஸ்ல கூப்டதுக்கான காரணம் நான் டிசம்பர்ல இந்தியா வர முடியாதுனு சொல்ல தான்” என்று வருண் சொல்லி முடிப்பதற்குள் அங்கே ரேணுகா அழ தயாரானாள்.

” நீ விளையாடிறியா வருண்?? அப்போ ரேணு எங்கேஜ்மெண்டுக்கு நீ வர மாட்டியா?” என்று அதிர்ச்சியுடன் வினவினாள் நேத்ரா.

”  நான் ஜூன்ல ரேணு மேரேஜ்கு வரணும்னா டிசம்பர்ல என்னோட எல்லா வொர்க்கையும் கம்ப்ளீட் பண்ணியாகணும். அதுக்காக தான் உங்க கிட்ட முதல்ல சொன்னது. எப்படியாச்சும் அம்மா, சித்தி, பெரியம்மா, ஆச்சி, அத்தை எல்லாரையும் சமாளிங்க ப்ளீஸ்” என்று ஸ்கிரீன்  முன்னாடி தோப்புக்கரணம் போடவும் ரேணுகா சிரிக்க ஆரம்பித்தாள்.

” ரேணு சிரிச்சதால உன்ன விட்டுடறோம். கல்யாணத்துக்காச்சும் ஸார் வருவிங்களா இல்ல அதுக்கும் ஏதாச்சும் சாக்கு போக்கு சொல்லுவீங்களா?” என்று பிரியா கேட்டாள்.

” மதர் பிராமிஸ். நான் மேரேஜூக்கு ஒன் மன்த் முன்னாடியே இந்தியா வந்துடுவேன்”

” உன்னை நாங்க எவ்ளோ மிஸ் பண்ணுறோம் தெரியுமா? நம்ப  கேங் நீ இல்லாம ரொம்ப போர் அடிக்குது வருண். எல்லாரும் சொல்லுவாங்க, வருணுக்கு கல்யாணம் ஆகி பொண்டாட்டினு ஒருத்தி வந்துட்டா உங்க சேட்டையெல்லாம் அவ கிட்ட செல்லுபடி ஆகாதுனு.  அப்படி ஒருத்தி வர்ரதுக்கு முன்னாடி கொஞ்ச நாளாச்சும் நம்ம ஃப்ரெண்ட்ஷிப்ப என்ஜாய் பண்ணும்கிறது என்னோட ஆசை வருண்” என்று வருத்தத்துடன் சொன்னாள் ரேவதி.

அவள் வருத்தப்படுவதற்கும் காரணம் உள்ளது. உறவுமுறையை கடந்த நட்பு அவர்களுடையது.  அதை யாருக்காகவும் விட்டுத் தந்தது இல்லை அவர்கள். படிப்பு காரணமாக வருண் வெளிநாடு செல்லும் வரை ஒன்றாய் திரிந்தவர்களுக்கு திடீரென்று அவன் பிரியவும் வருத்தம் தான். இருந்தாலும் அவ்வபோது பேசும் வீடியோ கால்கள் அவர்களின் நட்பை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன.

” டோண்ட் வொரி!  நம்ம கேங் ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ்கு கட்டுப்படுற பொண்ண தான் நான் கல்யாணம் பண்ணிப்பேன் போதுமா??? நம்மள பிரிக்க யாரும் வர மாட்டாங்க. அடியே சொல்லிட்டே இருக்கேன், நீ இன்னும் உன்னோட வாட்டர் டேமை குளோஸ் பண்ணலையா” என்று காமெடியாக பேசி ரேவதியை சமாதானப்படுத்தினான்.

இப்படியே அவர்கள் சண்டை கலாட்டாக்கள் பண்ணி முடித்து 2 மணி நேரம் பேசி சிரித்துவிட்டு அவரவர் வேலையை பார்க்க சென்றனர்.

இவர்கள் தான் வருணின் சொந்தங்கள். சிறுவயதிலிருந்தே பசை போட்டு ஒட்டியதை போல திரிவார்கள் இவர்கள் அனைவரும். அதிலும் நேத்ரா அனைவரிலும் மூத்தவள் என்பதால் அவள் மட்டும் கொஞ்சம் பொறுப்புடன் நடந்து கொள்வாள். மற்ற அனைவரும் வாலில்லா வானரங்கள்.  வருணுடைய இந்த அழகிய குடும்பம் மிக பெரியதும் கூட..

வருணின் தாத்தா சுந்தரமூர்த்தி பாட்டி மீனாட்சியம்மாளுக்கு பிறந்தவர்கள் ஐந்து வாரிசுகள். அதில் மூத்தவர் சுவாமிநாதன். அவருக்கு பின் பிறந்தவர் தான் சுகன்யா. வானதியும் சங்கரநாராயணனும் இரட்டை குழந்தைகள். இறுதியாக பிறந்த பிரேமா அனைவருக்கும் செல்லம். சிறுவயதிலிருந்தே இந்த  சகோதர சகோதரிகளுக்கு இடையே பிரிக்க முடியாத பிணைப்பு.

இதில் சுவாமிநாதன், மாலதிக்கு பிறந்தவர்கள் தான் வருணும், ரேணுகாவும். சுவாமிநாதனின் மூத்த தங்கை சுகன்யா, சிவராமன் தம்பதிக்கு பிறந்தவள் நேத்ரா. வீட்டின் மூத்த பேரக்குழந்தை என்பதால் அவள் எல்லாருக்கும் செல்லம். அவளது திருமணம் தான் வருண் தன் குடும்பத்தினருடன் இருந்த கடைசி இனிமையான  தருணம். அதற்கு பிறகு அவன் ஜெர்மனி  வந்து விட்டான்.

சுவாமிநாதனின் இரண்டாவது தங்கை வானதியின் மகள்கள் ரேவதியும், பிரியாவும். ரேவதி ஒரு பிரபல நிறுவனத்தில் சீனியர் அக்கவுண்டெண்ட். பிரியா ஃபேஷன் டெக்னாலஜி இறுதியாண்டு மாணவி.

கடைசி தங்கை பிரேமாவுக்கு பிறந்தவர்கள் மீரா மற்றும் ஜானவி. சுவாமிநாதனின் தம்பி சங்கரநாராயணனின் வாரிசுகள் அனுராதா மற்றும் லோகேஷ். அனு என்றால் வருணுக்கு கொள்ளை பிரியம். அவளுக்கும் லோகேஷை விட வருணை தான் மிகவும் பிடிக்கும்.

இந்த பெரிய குடும்பத்தை கணவரின் காலத்துக்குப் பிறகும்  பிரிந்து போகாமல் காப்பாற்றி வருபவர் தான் வருணின் ஆச்சி (பாட்டி) மீனாட்சி அம்மாள்.

இப்போது வருணின் நிலையை பார்ப்போம்…..

” 2 ஹவர்ஸ் முன்னாடி நான் வேவ் பண்ணேன். இன்னும் இந்த பொண்ணு ரிப்ளை பண்ணல. சரியான ஆடிட்டியூட் அலமேலு. பட் ஆளை பாத்தா அப்படி தெரியலயே. சிரிக்குறத பாரு ஈஈனு” என்று அவளுடைய புரஃபைல் பிக்சரை  பார்த்து அவளை வறுத்து எடுத்துக் கொண்டிருந்தான் அவன்.

” ஒண்ணு சொல்லியே ஆகணும். யூ லுக் வெரி க்யூட் லைக்  அ சைல்ட்” என்று சொல்லிக்கொண்டே அவள் பெயரை உச்சரித்தான் ” கீதா கிருஷ்ணமூர்த்தி”…..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post