Advertisements

நினைவெல்லாம் நீயே கண்ணம்மா – 22

செவ்வழகி பாந்தமாக புடவை கட்டி அதற்கு ஏற்றார் போல் ஒப்பனை செய்து கொண்டு தாயின் அருகில் நின்று அவருடன் பேசிக் கொண்டு இருந்தாள்…
ராஜலட்சுமி : அம்மாடி மாப்பிள்ளை கூட பைக்ல வராத ஆத்தா… ரெண்டு பேரும் கார்ல வாங்க… இந் மாதிரி சமயத்துலதேன் ரொம்ப பத்தரமா இருக்கோனும்… என்று கோயிலுக்குச் செல்லும் முன் சில பல அறிவுரைகளை அள்ளித் தெளித்துக் கொண்டு இருந்தார்….
அவர்களிடம் வந்த மதியழகி ராஜலட்சுமியின் சொற்பொழிவு முடிந்ததும் அவரிடம் ” அம்மோவ் நானும் கிளம்பிட்டேன்…
ராஜலட்சுமி : ஏட்டி.. நகை எல்லாம் எடுத்துப் போட வேண்டியது தான… என்று அதட்டினார்…
மதி : அய்யோ போம்மா… நகையப் போட்டு நா என்ன கல்மாணமா பண்ணிக்கப் போறேன்… இதுவே அதிகம்னு யோசிச்சுட்டு இருக்கேன்… என்று மறுப்புத் தெரிவித்தாள்…
ராஜலட்சுமி : அடியேய் நா செல்லுறத கேட்க கூடாதுனே இருப்பியோ… போடி போய் கார்ல ஏறு….என்று அதட்டி அவளை அனுப்பி வைத்தார்…
செவ்வழகி : அம்மா இவ எவ்ளோ நாள் தான்  இப்படி சண்டைக்கோழியா முறுக்கிட்டு  நிப்பா.. காலாகாலத்துல கல்யாணத்தை பண்ணி வைக்க மாட்டியலோ…என தங்கையின் திருமனம் பற்றி தாய்க்கு ஞாபகப்படுத்தினாள்…
ராஜலட்சுமி : அதத்தேன் அந்த மனுஷன்ட்ட நிதமும்  சொல்லிட்டு இருக்கேன்…என் பேச்ச எங்க கேக்குறாரு.. இன்னைக்கு கோயில்ல பூப்போட்டு பாத்துற வேண்டியதுதேன்..
 இவர்களின் பேச்சைக் கலைக்கும் விதமாக விஸ்வம் அங்கு வந்து சேர்ந்தான்….
விஸ்வம் : அத்தை ஆனா ஒன்னு எங்கொழுந்தியாவுக்கு வரப்போற பிரியன் ரொம்ப பாவம்… என்று உச்சுக் கொட்டினான்…
செவ்வழகி : ஏங்க அப்படி சொல்லுதீய…
விஸ்வம் : உந்தங்கச்சிதேன் ராட்சஷியாச்சே… என்று அவன் கூறி முடிக்க தொண்டை செருமும் சத்தம் கேட்டது…
பின்னால் திரும்பிப் பார்த்தால் அங்கு மதியழகி முறைத்துக் கொண்டு நின்றாள்…
விஸ்வம் : ஆத்தாடி… என்று அத்த, செவ்வழகி ரெண்டு பேரும் என்ன நின்னு பேசிட்டு இருக்கீய மாமா கத்தப் போறாரு.. கிளம்புங்க… என்று அவற் அவ்விடத்தை விட்டு வேகமாக நகர்ந்தான்…
மதியழகி : செவ்வழகி உன் பிரியனுக்கு வாய்க்கொழுப்பு ஜாஸ்தி தான்… கொறைச்சுக்க சொல்லு… அதேன் நல்லது.. என எச்சரிக்கை செய்தாள்…
ராஜலட்சுமி : சரி சரி மசமசன்னு நிக்காம வாங்க போகலாம்.. என்று மகள்களை அழைத்துக் கொண்டு கிளம்பினார்…
காருக்குள் சிந்தனையுடன் அமர்ந்து இருந்த ரங்கநாதன் இவர்கள் வருவது கண்டு இயல்பாக இருப்பது போல் காட்டிக் கொண்டார்…
ரங்கநாதன் : பொழுதோட கோயிலுக்கு போய்ட்டு வரலாம்னு நினைச்சா முடிய மாட்டேங்குது..என்று அவர்களை கடிந்து கொண்டு அனைவரையும் காரில் ஏற சொன்னார்…
ராஜலட்சுமி : வெரசா கிளம்புங்கனு சொன்னா கேக்குறியலாடி.. இப்பப் பாருங்க உங்க அப்பாரு கோப்பபடுதாவ… என மகள்களின் மேல் தனது ஆத்திரத்தைக் காட்டினார்….
செவ்வழகியின் முகம் சுருங்கியது போல் ஆக.. ஆனால் மதியழகியோ தனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல் மொபைலில் பாடலை  ஓடவிட்டு காதில் ஹெட்செட்டை மாட்டிக் கொண்டாள்…
கோயில் செல்ல இன்னும் முக்கால் மணி நேரம் இருக்க மதி வாட்சப்பில் மாறனுடன் உரையாடிக் கொண்டிருந்தாள் …
தனது வீட்டில் திண்ணையில் அமர்ந்து கொண்டு மதிக்கு குறுந்தகவல் அனுப்பிக் கொண்டு இருந்த மாறன்…
“மாறா”…. என்ற  தந்தையின் அழைப்பு கேட்டதும் அவரைக் கேள்வியாக பார்த்தான்…
” இங்க வாயா உங்கிட்ட கொஞ்சம் பேசனும்… என்று அவனை தனியாக அழைத்தார்….
மாறன் : சொல்லுங்க ஐயா .. 
பெரியமருது : நம்ம குணாவுக்கு நடந்தது கொலைன்னு சொன்னியல்ல அதுக்கு சாட்சி ஏதாச்சும் இருக்காயா.. என்று வினவ…
தந்தையின் இந்த கேள்வி அவனை உலுக்கியது… தானும் அந்த சாட்சியை தேட முயற்சிக்கவே இல்லையே… எப்படி மறந்தேன்..என்று சிந்திக்க….
பெரியமருது : எய்யா.. உன்ன தாயா கேக்குறேன்..  என்றதும் 
மாறன் : இல்லை ஐயா… நா சாட்சியை தேடவே ஆரம்பிக்கல… மன்னிச்சுருங்க ஐயா… நீங்க கேட்ட பொறவுதேன் எம்புத்திக்கு உரைக்குது… என்று அவரிடம் குற்ற உணர்ச்சியில் பேச…
அதைப் பார்த்து வருந்திய பெரியமருது : அதுனால என்னய்யா இப்போ…. இன்னும் காலம் இருக்கு… நெலமை கை மீறி போகுறதுக்குள்ள நீ சாட்சி கிடைக்குதானு தேடுய்யா…அத வச்சு என்னத்தையாச்சும் பண்ணி அவங்க சாவுக்கு நியாயம் கிடைக்குதானு பாக்கலாம்…மனசு கிடந்து தவிக்குதுயா… ரெண்டும் வாழ வேண்டிய புள்ளைக… அநியாயமா செத்துப் போச்சுக… என அவரது குரல் தழுதழுக்க ஆரம்பித்தது…
அதை கண்ட மாறனுக்கும் வருத்தம் ஏற்பட ” ஐயா… நீங்க எதுக்கும் கவலைப்படாதீய… சாட்சியை நா தேடிக் கண்டுபுடிக்கேன்… அது கிடைச்சப் பொறவு இருக்கு எல்லாத்துக்கும்.. என்று அவரது கைகளைப் பிடித்துக் கொள்ள….
அவர்களின் பேச்சில் குறுக்கிட்ட பார்வதி ” மாறா விட்றாதய்யா.. இந்த மாதிரி சாவு இதுதான் கடைசியா இருக்கோனும் நம்ம ஊர்ல…இனி இது போல எந்த அசம்பாவிதமும் நடந்துற கூடாதுயா.. அதுக்கு நீதேம் பொறுப்பு… என்று வாக்குறுதி பெற்றுக் கொண்டார்…
மாறனும் தன் பொற்றோருக்கு தன்னால் இயன்ற அளவு சாட்சியைத் திரட்டுவதாகவும் அதை வைத்து ரங்கநாதன் மற்றும் சீமையனுக்கு தண்டனை வாங்கி கொடுக்கலாம் என்றும் வாக்களித்தான்…
அந்த நேரத்தில் உள்ளே நுழைந்த சேகர் ” அப்பா… மாறா…. உங்க நெல்லு வைக்குற குடவுனுக்குள்ள தீப்பத்திக்கிடுச்சுய்யா… ஆளுக்காறல்லாம் அத அணைச்சுட்டு இருக்காவ… வெரசா வாங்கய்யா.. என்று அவன் அச்செய்தியை கூறி முடிக்கும் முன் 
மாறன் : என்னலே சொல்ற … இது எப்படி நடந்துச்சு….
மாறனின் பெற்றோருக்கும் மாறறுக்கும் இதயமே நின்று விட்டது…
அனைவரும் வெகு விரைவாக அவ்விடத்திற்கு சென்றனர்….
நெல் மூட்டைகளை அடுக்கி வைத்திருக்கும் அந்த குடோனுக்குள் தீப்பற்றி திகுதிகுவென எரிய அதை சுற்றி நின்று தண்ணீர் ஊற்றி அணைத்துக் கொண்டு இருந்தனர்…
மாறனும் பெரியமருதுவும் உடன் கலந்து கொண்டு தண்ணீர் ஊற்றி அணைக்க ஆயத்தமாயினர்…                                    

     திடீரென்று மாறன் தன் குறுந்தகவலுக்கு பதிலளிக்காமல் இருக்க ஒருவித ஏமாற்றத்துடன் இருந்தாள் மதியழகி…
முக்கால் மணி நேரம் மூன்று யுகங்களாக கழிய ஒரு வழியாக கோயிலுக்குள் நுழைந்தனர்…
அங்கு கையில் அருவாளுடன் பார்ப்பவர்கள் பவ்யமாக  கை எடுத்து வணங்கும் தோற்றத்தில் அவர்களது குலதெய்வம் வீற்றிருக்க .. அக்கடவுளை பக்தியுடன் வணங்கினர்…
பூசாரி விபூதி அளித்ததும் நெற்றியில் பூசிக் கொண்டனர்.. அப்போது மதியழகி இறுக்கமாக கண்களை மூடிக் கொண்டு ” மாறன் எப்பவும் நல்லா இருக்கோனும்… அவனுக்கு எந்த கெடுதலும் நடக்கக்கூடாது…எங்க அப்பாருக்கு சீக்கிரம் நல்ல புத்தி வரோனும் இல்லைனா அவர் பண்ண தப்புக்கு எல்லாம் கணக்கு வச்சு தண்டனைய குடுத்துப்புடு … ” என்று வேண்டிக் கொண்டாள்… 
அப்பறம் இன்னோரு முக்கியமான வேண்டுதல்… மாறனை நான் கல்யாணம்  பண்ணி சந்தோஷமா இருக்கோனும்… ” இந்த வேண்டுதலை நீ கண்டிப்பா நிறைவேத்தோனும்.. என பலமுறை கடவுளுக்கு ஆணை பிறப்பித்து விட்டு கண்களைத் திறந்தாள்….
                                              – தொடரும்…

Advertisements

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: