Advertisements

நினைவெல்லாம் நீயே கண்ணம்மா – 21

இக்கதையில் வரும் அனைத்து சம்பவங்களும் , கதாபாத்திரங்களும் ,வசனங்களும் முழுக்க முழுக்க கற்பனையே…

தந்தையுடன் வாதாட பிடிக்காமல் தன் அறைக்கு சென்று தாளிட்டுக் கொண்டாள்….மதியழகியின் மண்டைக்குள் நுழைந்து குழப்புவது ஒரே ஒரு விஷயம் தான்…
குணாவைக் கொல்ல நினைத்தது சீமையன் தான் என்று ஒரு சந்தேகம் எப்போதோ அவளுக்கு துளிர் விட்டிருந்தது… ஆனால் அதை தன் தந்தை தான் செய்தார் என்று தெரிந்த அடுத்த நொடி மதியழகி  மனதளவில் உடைந்து விட்டாள்…இன்னும் தனக்கு தெரியாமல் தந்தை என்னவெல்லாம் செய்திருக்கிறாரோ அல்லது செய்யப் போகிறாரோ என்று பல கோணங்களில் சிந்தித்துக் கொண்டு இருக்க…
அதே நேரத்தில் வீட்டிற்கு சென்ற மாறன் தனது மொபைலில் மதியழகிக்கு அழைப்பு விடுத்தான்…வெகு நேரமாக அடித்துக் கொண்டு இருந்த மொபைலை வெறுப்புடன் எடுத்துப் பார்த்தவள் மாறன் என்றவுடன் மனதில் சிறு சந்தோஷம் ….அதை குரலில் வரவழைத்தவாறே…” ஹலோ… மாறா… என்று உற்சாகமாக அவனிடம் பேசினாள்…
மாறன் : மதி… வீட்டுக்குப் போய்ட்டியா.. 
மதி : வந்துட்டேன்….  இப்போத்தேன் ஊத்துக்கிட்ட பாத்தோம் அதுக்குள்ள கால் பண்ணி இருக்கவ… என்னடே விஷயம்… வெளியில் அவனிடம் கேட்டாலும் உள்ளுக்குள் எப்போதும் தன்னையே நினைத்துக் கொண்டிருக்கிறான் என்பதில் அவளுக்கு பெருமையே…
மாறன் : அது.. நீ வீட்டுக்குப் போற அப்பத்தேன் எனக்கு ஞாபகம் வந்துச்சு… நீ பாட்டுக்கு உங்க ஐயன்ட்ட எல்லாத்தையும் கேட்றாத… சரியா… 
மதியழகி : இத கொஞ்சம் முன்னமே சொல்லிருக்க மாட்டியால… நா இதைப் பத்தி எங்க அப்பாருட்ட பேசியாச்சு… என்று சர்வசாதாரணமாக கூறினாள்…
மாறன் : அடியேய் முந்திரிக்கொட்டை… ஏன்டி… இப்படி பண்ணுறவ…என்று பதட்டமாகப் பேச…
மதி : பதட்டப்படாதல… அவருக்கு என்ன விஷயம் தெரிஞ்சுச்சுனேத் தெரியாது… மனுஷன் என்னனு யோசிச்சு மண்டையை பிச்சுகிட்டு இருக்காரு…
மாறன் : ம்ப்ச்…. நீ ஏன்டி இப்படி பண்ணுத.. பொறுமையா இரு… உங்க அப்பா ரொம்ப விஷம்… என்று கூறிவிட்டு மதியிடம் எந்த பதிலும் வராதது கண்டு தனது வார்த்தையின் வீரியம் உணர்ந்தான்….
மதி சாரிடி.. என கெஞ்ச… மதி : நீ ஏம்ல கெஞ்சுத… அது நெசம்தேன்…எனக்கே அருவருப்பாதேன் இருக்கு… என்ன பண்றது அவரு என் அப்பாரு அதேன் என்னால எதுவும் சொல்ல முடியல….நீ ஒன்னும் வெசனப்படாத… என்று அவனுக்கு ஆறுதல் அளித்தாள்…
மாறன் : மதி.. உங்க அப்பா ஒரு கொலைகாரருனு தெரிஞ்ச அப்பறம் உன்னோட மனசு பட்ற பாட்ட என்னால புரிஞ்சுக்க முடியுது…  ஏன்டி உங்க அப்பா இப்படி இருக்காரு.. என்று அவளிடமே கேட்டான்…
அதற்கு மதியே : எல்லாம் உடம்பு முழுக்க சாதி வெளி ஊறிப்போய் இருக்க அதேன் கண்ணு மண்ணு தெரியாம இதெல்லாம் பண்ணிட்டு இருக்காவ… என ஆற்றாமையுடன் கூற…
மாறன் : எவ்ளோதேன் ” சில” மனுஷங்களுக்கு படிப்பறிவு இருந்தாலும் சமூகத்துல நல்ல நிலைமையில இருந்தாலும் இந்த சாதி வெறி இருக்க வரைக்கும் காட்டு மிராண்டிகளாத்தேன் இருக்காவ…. 
மதியழகி : அதெல்லாம் படிப்பறிவால மாத்த முடியாது மாறா… ஒவ்வொரு தனி மனுஷ நினைச்சாதேன் மாற முடியும்… பாக்கலாம் மாறுதான்னு…
மாறன் : அதுவும் கரெக்ட்டுதேன்…
மதியழகி : எலேய் நா கோயிலுக்கு போகப் போறேம்ல… அதுனால ஒரு அஞ்சு மணி நேரத்துக்கு போன் பண்ணாத… 
மாறன் : சரிடி சண்டைக்காரி…அவளது அறைக்கதவு தட்டும் ஓசை கேட்டதால் மாறனிடம் பிறகு பேசுவதாக கூறி விட்டு கதவைத் திறந்தாள்… 
அங்கு அவளது அம்மா ராஜலட்சுமி இடுப்பில் கை வைத்துக் கொண்டு இவளை முறைத்தவாறு நின்றிருந்தார்…
” என்னம்மா… இப்படி முறைச்சுட்டு நிக்குற…என்று யோசனையுடன் கேட்க…
ராஜலட்சுமி : அடியேய் ஏன்டி இப்படி என்ன தொண்டை தண்ணி வத்த கத்த வைக்குற… கோயிலுக்கு போவனும்னு சொன்னேனா இல்லையா… இன்னும் கிளம்பாம… என்ன தான் பண்ணுதியோ…
மதியழகி : அச்சச்சோ… இதோ சொடுக்குப் போடுறதுக்குள்ள கிளம்பி வரேன் பாரும்மா.. என்று அவரை வெளியே அனுப்பி விட்டு  கடல் நீல நிற சிவப்பு வண்ணத் தாவணியில் அழகு சிலையாகத் தயாராகி வந்து நின்றாள் மதியழகி…. 
அவளை முறைத்தவாறு ராஜலட்சுமியிடம் : ராஜி எல்லாம் சரியா இருக்கானு பாரு… அப்பறம் கோயில்ல வந்துட்டு  அது வாங்கல இத மறந்துட்டுன்னு பொலம்பாதட்டி.. என அதட்டிக் கொண்டு இருந்தார்…
ராஜலட்சுமி : எல்லாம் எடுத்தாச்சுங்க… நா போய் செவ்வழகியைக் கூட்டிட்டு வர்றேன்… என செல்ல…
மதியழகி தன்னை முறைத்துக் கொண்டு நின்ற தந்தையிடம் வந்து …
” ஏம்ப்பா… எனக்கு ஒரு சந்தேகம் நியாயமாப் பாத்தா நாந்தேன் உங்க மேல கோவமா இருக்கோனும்… சம்பந்தமே இல்லாம நீங்க முறைச்சுட்டு நிக்கிறீய… என தணிந்த குரலில் கேட்க…
அவரது கோபத்தின் அளவு அதிகரித்துக் கொண்டே போனது… அதை சட்டை செய்யாமல்…
” இப்படி நீங்க கோபப்பட்டுட்டே இருந்தியனா உங்க உடம்புக்குத்தேன் நோவு வரும்… எனக்கு அப்படி என்ன விஷயம் தெரிஞ்சுச்சுனு நானே ஒரு நாள் சொல்லுதேன்… அது வரைக்கும் கொஞ்சம் பொறுமையாத்தேன் இருங்களேன்பா… ” என அவர் கோபப்படுவதை பார்த்து நிம்மதி அடைந்தாள்…அவர் யோசித்து யோசித்தே பைத்தியம் ஆனாலும் பரவாயில்லை என்று நினைத்தவாறு
” சரிப்பா… எல்லாரும் கோயிலுக்கு போறோம்… சாமி முன்னாடி நீங்க பண்ணது எல்லாம் தப்புனு சொல்லி மன்னிப்பு கேளுங்க… சாமி மனசிறங்கி மன்னிக்குறாறானு பாப்போம்…
என தெனாவெட்டாக கூறி விட்டு அன்னையை நோக்கி சென்றாள்…                                             – தொடரும்….

Advertisements

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: