Advertisements

முபீன் MSK – கண்ணாமூச்சி ஆட்டம் – 8

   கண்ணாமூச்சி – 8

வீட்டிற்கு வந்த வைஷு அம்மாவிடம் கூட பேசாமல் அவளின் அறைக்குள் சென்று கட்டிலில் விழுந்து அழ ஆரம்பித்தால். எவ்ளோ நேரம் அழுதாள் என்று கூட தெரியவில்லை அவள் அம்மா வந்து கதவை தட்டியதும் நினைவு வந்து “இதோ வந்துரன் மா 15 மினிட்ஸ் ” என்று கூறிவிட்டு குளியல் அறையில் நுழைந்தால். அவள் பார்த்த காட்சிகள் கண் முன்னே வந்தது …

அவனை காண வேண்டிய ஆவலில் வேகமாக சென்றவள் அவன் அங்கே இருப்பது போல் உணர  அது அவனே தான் என நினைத்து அங்கேயே நின்றாள். “அவன் இங்க என்ன பண்ணுறான் “, அவள் யோசித்து கொண்டே பார்த்தால் ஆனால் அவள் கண்ட காட்சியோ அவன் இரண்டு கல்லூரி பெண்களுடன் ஒட்டி நின்று  செல்ஃபி எடுத்து கொண்டு சிரித்து பேசி விளையாடினான் , அவளுக்கோ அவன் மீது கோவம் வராமல் “என்ன இப்புடி ஒட்டிட்டு நின்னு பேசுராலுக ” என்று அவர்களை திட்டி கொண்டிருந்தாள்,மனமோ “அவன் தானே கூட நிக்குரான் அவன திட்டாமா அதுங்கள ஏன் திட்ர” அவள் “அவன் எப்புடி இருந்தாலும் பொண்ணுங்க தானே ஒதுங்கி போகணும் , சரி அப்போ நீ ஒதுங்கி போ ” என்று மனம் நினைத்ததும் “நா ஏன் போனும் “…

மனதினுள் போராட்டம் நடத்தி கொண்டிருந்தவளை அவன் பார்க்கவும் இவள் தன்னை அறியாமல் கையை காட்டினால் , அவனோ அவளை கண்டு கொள்ளாத மாதிரி முகத்தை திருப்பி கொண்டு அந்த பெண்களிடம் பேச ஆரம்பித்தான்.அதை பார்த்தவளுக்கோ அவன் தன்னை யாரோ போல் பார்த்து திரும்பி கொண்டதும் , கண்களில் நீருடனே  ” அப்போ எனக்கு தான் இப்புடிலாம் தோணுச்சா அவனுக்கு என் மேல ஏதும் தோணலையா” , என்று வேகமாக கிளம்பியவள் எப்படி வீட்டுக்கு வந்தால் என்றும் தெரியாமல் குளியலறையில் அழுது கொண்டிருந்தாள். குளித்து முடித்தவள் கண்ணாடியை பார்க்க அவள் தோழிகள் அவளை அழகி என்றும்  “உன்ன மாரி நா இருந்தன் இந்நேரம் பத்து பேருக்கு மேல சுத்தல்ல விட்டுருப்பேன் நீ என்னன எவனியும் பாக்காம யாரையும் பாக்க விடாம வேஸ்ட் பண்ணிட்டு இருக்க “

கண்ணாடியை விரக்தியாக பார்த்து சிரித்தவள் “பெரிய அழகியாம் நம்மள கண்டுக்க கூட இல்ல , அட்லீஸ்ட் ஒரு லைட்டா ஒரு ஹாய்  , யாருன்னு தெரியாத மாரி திரும்பிட்டான். இந்த கை தானே தூக்குச்சு யார கேட்டு கை தூக்குன ” என்று தனக்கு தானே சண்டை போட்டவள், ” “காலேஜ் பொண்ணுங்க கூட இருக்கான் இப்போவே ம்ம்ம்”  இறுதியாக “அவன்லாம் ஒரே  ஆளே கிடையாது வைஷு உன் அழகுக்கு எத்தன பேரு பின்னாடி வரானுக , காலேஜ் போன இன்னும் வரும் அதலாம் விட்டுட்டு இவன பாத்து விட போறியா ” என்று சமாதானம் ஆகியவள், டியூஷன்கு கிளம்பினாள்.

அங்கே சென்றவள் வழக்கம் போல தன் சேட்டையை தொடர்ந்தால். ஆனாலும் கண்கள் அவனை வாசலில் தேடாமல் இல்லை. ” மானங்கெட்ட வைஷு ஒழுங்கா வேலைய பாரு “என்று தன்னையே திட்டி கொண்டாள். ஆனாலும் கண்கள் வாசலை அவ்வப்போது பார்த்துக்கொண்டால். அப்போது ஆண்ட்டி கூப்பிட சிறிது நேரம பேசிவிட்டு் வந்தவள்  அவன் வந்துவிட்டான் என்று தோன்ற சந்தோசமாக வாசலை பார்த்தால் , அவன் இல்லாம போக “இல்ல அவன் வந்துட்டா எனக்கு தெரியும் ” என்று உணர்ந்தவள் யாரோ தன்னை பார்ப்பது போல உறுத்த மெல்ல மேலே பார்த்தவள் அவனே தான்!!!

மேலே அவளையே பார்த்து கொண்டு சிரித்து கொண்டிருந்தான் “ஐயோ இவன் நம்மள பாக்கும் போதுலாம் அசிங்கப்பட வேண்டியதா இருக்கே ஒருவேள நாம இவன தேடினது தெரிஞ்சு போச்சோ ,எப்புடி பாக்குறான் பாரு இப்போ மட்டும் பாக்குறான் அப்போ அவளுகல ஒட்டிட்டு நின்னான் ” என்று கோவம் வரவும் “என்னையா கண்ணடுக்காம போற உன்ன என்ன பன்றேன் பாரு ” என்று கருவி கொண்டு  சட்டென்று திரும்பிக்கொண்டால். அதிலிருந்து அவர்களின் கண்ணாமூச்சி ஆட்டம் தொடங்கபோவது  தெரியாமல் …

Advertisements

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: