Advertisements

நினைவெல்லாம் நீயே கண்ணம்மா -20

மதியழகி ஒரு கணம் திகைத்தாலும் பிறகு சமாளித்துக் கொண்டு என்ன நடந்தாலும் பரவாயில்லை என்று ஒரு வித திமிருடன் வாசலில் நின்றிருந்தாள்…


செவ்வழகியும் , ராஜலட்சுமியும் ஒருவரை ஒருவர் குழப்பமாகப் பார்க்க…
ராஜலட்சுமி : என்னட்டி… இவர் இவ்ளோ குரல உசத்தி அவள பேசுறத இப்போத்தேன் பாக்குறேன்…என செவ்வழகியின் காதுகளில் கிசுகிசுக்க…
செவ்வழகி : ஆமாம்மா… வெளிய நிக்க வச்சு பேசிக்கிட்டு இருக்காரு… என்ன நடந்துச்சுனு தெரில… இவ என்ன பண்ணித் தொலைச்சாலோ…என்று இவர்கள் பல சிந்தனைகளில் இருக்க…
மதியழகியை கண்களாலேயே எரித்துக் கொண்டு இருந்தார் ரங்கநாதன்…
தன்னிடம் எப்போதும் பொய் பேசாத மகள் இன்று பொய் சொல்லி வேறெங்கோ போய் வந்து இருப்பதை நினைக்க நினைக்க கோபம் தீ போல உடலெங்கும் பரவிக் கொண்டு இருந்தது…
ஆனால் அவரது முறைப்பிற்கு பயப்படாமல் எதையும் எதிர்கொள்ளும் தைரியப் பார்வையுடன் எதிரில் நின்றவளைப் பார்த்து சந்தேகமாக இருந்தது அவருக்கு …
கையைக் கட்டிக் கொண்டு நின்றிருந்த மதியழகி தன் தந்தையைப் பார்த்து தெனாவெட்டாக ” என்னப்பா ஆச்சு… என்ட்ட நீங்க கோபமாப் பேசவே மாட்டிங்களே… என்று ஒற்றைப் புருவத்தை உயர்த்த…
அங்கு விஸ்வமும் என்ன நடக்கிறது என்பதைப் போல் பார்த்துக் கொண்டு இருந்தான்…
ரங்கநாதன் அப்போது தான் வீட்டில் மாப்பிள்ளையும் இருக்கிறார் என நினைவு வந்தவராகவலுக்கட்டாயமாக சிரிப்பை வரவழைத்துக் கொண்டு ரங்கநாதன் : என்னம்மா… பயந்துட்டியா.. நா என்னைக்கு உன்மேல கோபப்பட்டு இருக்கேன்..சும்மா ஒரு பயம் காட்டாலாம்ன்னு… பாத்தேன்..  நீ யாரு எம்பொண்ணாச்சு.. பயப்படுவியா.. உள்ளே வா மதி. என்று அவளை உள்ளே அழைத்தார்…
மதியழகி : அப்படியாப்பா… என்று மட்டும் கூறிவிட்டு உள்ளே சென்றாள்..
இவற்றைப் பார்த்துக் கொண்டு இருந்த மூவரும் இவர்களுக்கு வேறு வேலை கிடையாது என சலித்துக் கொண்டனர்…
ராஜலட்சுமி : மதி நம்ம செவ்வழகி மாசமா இருக்காடி… என்றதும் மகிழ்ச்சியுடன் தனது தமக்கையை கட்டிக் கொண்டாள்…
மதி : ஐஐ.. அக்கா கங்ராஜூலேஷன்ஸ்… ஓஓ அதுதான் மாமா வும் வந்து இருக்காரா…வாங்க மாமா… என்று அவரை உபசரித்து விட்டு அக்காவை வம்பிழுக்க.  
ராஜலட்சுமி : சரி சரி அப்பறமா அக்காவும் தங்கச்சியும் பேசிக்கோங்க.. இப்போ போய் கிளம்புங்க கோயிலுக்குப் போகனும்.. 
மதி : அம்மா நா இப்போ தாம்மா கோயிலுக்கு போய்ட்டு வந்தேன்…
ராஜலட்சுமி : இப்போ நம்ம வீட்டு வாரிசுக்காகப் போகப்போறோம்.. போய் கிடா வெட்டுக்கும் சேத்து சொல்லிட்டு வரனும் ஒழுங்கா கிளம்பு போ..என கோயிலுக்குக் கிளம்ப ஆயத்தமானார்கள்… 
அவர்கள் எல்லோரும் சென்று விட்டார்களா என்று ஒரு பார்வை பார்த்து விட்டுதந்தையிடம் திரும்பி ” அப்பா…. நான் கார்த்திகாட்ட பேசிட்டு இருக்குறேன்னு பொய் சொன்னத கண்டுபிடிச்சுட்டிங்க போல…என்று சாதாரணமாக கேட்ட மகளைப் பார்த்து அதிர்ந்து தான் போனார்…
மதியழகி மேலும் தொடர்ந்தாள்…” ஆமா நான் கார்த்திகாட்ட பேசல.. வேற ஒருத்தர மீட் பண்ணேன்… அதுக்கு என்ன  இப்போ”
சற்று நேரம் பேசாமல் நின்றிருந்த ரங்கநாதன்”அப்போ நீ உ ப்ரண்ட என்னட்ட பொய் சொல்ல சொன்னனு ஒத்துக்குற… “என அவரும் தன் பங்கிற்கு அவளை முறைக்க . 
மதி : இவ்ளோ நேரம் அதத்தான சொல்லிட்டு இருக்கேன் ரங்கநாதன் .. என்று அதிரடியாக அவர் பேர் சொல்லி அழைக்க … அவரது முகம் சினத்தில் சிவந்தது…
” சரி ஏன் பொய் சொன்ன… என்று அவளை கேள்வி கேட்க…
மதி : நீங்க எங்கிட்ட நிறைய விஷயத்தை மறைச்சுட்டிங்க.. ஆனா நா மட்டும் உங்ககிட்ட உண்மைய தவிர வேற எதையும் பேசக்கூடாதுனு நினைக்கிறது உங்களுக்கே தப்பா தெரியல என்று எதிர்கேள்வி கேட்டாள்…
ரங்கநாதன் இவளது வார்த்தைகளைக் கேட்ட பின்னர் என்றும் தன்னிடம் பாசம் கலந்து பேசும் மகளின் பேச்சு இன்று வித்தியாசமாக தெரிய இவளுக்கு அனைத்து விஷயங்களும் தெரிந்து விட்டதோ என்ற சந்தேகமும் எழுந்தது…
ரங்கநாதன் : அப்படி என்ன விஷயத்தை உன்னட்ட நா மறைச்சேன்…இப்போது ரங்கநாதனின் குரலில் நடுக்கம் தெரிந்தது…
மதி : நீங்க மறைச்ச விஷயத்தை உங்களுக்கே தெரியாதா… அதானே ஒரு விஷயத்தை மறைச்சா தெரியும் நீங்கதான் எக்கச்சக்கமா மறைச்சு வச்சுருக்கிங்களே.. என்னு யோசிச்சுட்டே இருங்க…
ரங்கநாதன் : மதி… என்று தன்னையும் மீறி அவர் குரலை உயர்த்த…
மதியழகி வாயின் மேல் விரலை வைத்து ” ஷ்ஷ்….எல்லாருக்கும் கேட்ற போகுதுப்பா.. அப்பறம் நா அவங்க முன்னாடி உண்மையை செல்லிட்டேனா.. உங்களுக்கு தான் கஷ்டம் என்க.. அவர் வாயை மூடிக் கொண்டார்…
” சரிப்பா… நான் போய் கிளம்பறேன்… என்று அவரிடம் அலட்சியமாகப் பேசிச் சென்ற மகளை சில நிமிடங்கள் பார்த்து விட்டு…
அப்படி இவளுக்கு என்னைப் பற்றி என்னதான் தெரிந்தது… அதுவும் எரே நாளில் இவள் என்னிடம் இத்தனை அலட்சியமாகப் பேசும் அளவுக்கு ஏதோ தெரிந்து கொண்டு இருக்கிறாள்…
ஒருவேளை நாம் தான் குணசேகரனைக் கொன்றது தெரிந்து விட்டதோ… அது இவளுக்கு தெரிய வாய்ப்பே இல்லையே… என பல நினைவுகளில் உழன்று கொண்டு இருந்தார்…                                                  – தொடரும்…

Advertisements

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: