நினைவெல்லாம் நீயே கண்ணம்மா -19

மாறன் அவளது முகத்தை அதிர்ச்சி மேலிட  நோக்கினான்…
மதியழகியின் முகம் இறுக்கத்தில் இருந்து இயல்பு நிலைக்குத் திரும்பாது இருக்க  அவள் மேலும் தொடர்ந்தாள்..”ஆமா மாறா குணாவோட சாவு தற்கொலை இல்ல கொலை… “இதை கூறிய பிறகு மதியழகியின் இதழ்கள் அடுத்த வார்த்தையை கூறாமல் இருக்க… 
மாறனும் கையை முறுக்கி நிதானம் அடைய பெரும்பாடு பட்டுக் கொண்டு இருந்தான்…. 
அவர்களுக்கு இடையில் வார்த்தைப் பரிமாற்றம் தடைபட்டு அவ்விடத்தை மௌனம் மட்டுமே ஆக்கிரமித்தது…
கண்களை இறுக மூடி சில கணங்கள் தன்னை நிலைபடுத்திக் கொண்டு விழி திறந்து மதியழகியைப் பார்த்தான்…
அவளோ  தலை குனிந்து,விழி தாழ்த்தி கண்ணீரைச் சொரிய தயாராக இருப்பது கண்டு அவளது முகத்தை உயர்த்தி …” இந்த விஷயம் எனக்கு மொதல்லயேத் தெரியும் மதி… அந்த சீமையனை என்ன பண்ணுதேனுப் பாரு” 
மதியின் விழிகள் ஆச்சர்யத்தில் விரியமாறனை நோக்கிய கண்கள் இப்போது கவலை தாளாது நீரைச் சொரிந்தது….
விம்மி அழுகத் தொடங்கிய அவளை தன் தோளில் சாய்த்துக் கொண்டான்… “மாறா குணா இறந்த அன்னைக்கே எனக்கு இந்த விஷயம் தெரியும்ல… “என்றாள் மதி அழுகையை தொடர்ந்து கொண்டே….
” அப்போ அப்போவே போலீஸ்ல சொல்லி இருக்கலாம்லடி.. ஏன் எதுவும் சொல்லல… ” அவனது குரலில் கோபம் தலைதூக்கக் கேட்டான்….
மதி : குணாவக் கொல்ல சொன்னது சீமைய இல்ல.. எங்க ஐயாதேன்… ” என்று குரல் உடைந்து மனம் நொந்து அடக்கி வைத்திருந்த அழுகையை மொத்தமாக வெளிக்கொணர்ந்தாள்…
இத்துனை அதிர்ச்சி நிறைந்த செய்தியைக் கூறி முடித்து அவள் பாட்டுக்கு அழுது கொண்டு இருக்க மாறனோ இதனை நினைத்து ஒரு பக்கம் வருத்தப்பட்டாலும்,மறு பக்கம் சினமடைந்தான்….
 இந்த உண்மையை எவ்வாறு ஆதாரப்பூர்வமாக நிரூபித்துக் காட்டுவது என்று புரியாமல் திகைத்து நின்றான்.. அவள் அழுது முடிக்கும் வரை  காத்திருந்தவன் மதி தனது அழுகையில் சிவந்த முகத்தை தாவணி கொண்டு துடைத்தாள்…
மாறனிடம் ” என்ன மாறா திகைச்சுப் போய் நிக்குறவ… நம்ப முடியலயோ… என்றதும் மாறன் ஆமாமென்று தலையசைக்க…
” உனக்கே இம்புட்டு அதிர்ச்சினா எனக்கு எப்புடி இருந்துருக்கும் யோசிச்சுப் பாரு… எங்க அம்மா இதை சொல்லும் போது ஏ ஈரக்குலையே நடுங்கிப் போச்சுது… எம்மாம் பெரிய காரியத்தை செஞ்சுருக்காவ எங்கப்பாரு…. ” என ஆற்றாமை நிறைந்த குரலில் பேசினாள்…
மாறன் தயக்கத்துடன் ” இப்போ என்ன பண்றது மதி…?” 
மதியழகி : என்ன பண்றதுனா தப்ப யார் பண்ணாலும் தப்புத்தேன் அது எங்கப்பாராவே இருந்தாலும் தப்புத்தேன் நீ  வெய்ட் பண்ணு நா சரியான டைம் வர்றப்போ சொல்றேன் அவர் பண்ணத சாட்சியோட நிரூபிச்சுடலாம்… ” என்று யோசிக்காமல் பட்டென்று கூறினாள்…
அவளது குரலில் இருந்த உறுதியைக் கண்டு வியந்தான் மாறன்…” சரி மதி நேரம் ஆச்சு நீ கிளம்பு உங்க வீட்ல தேடுவாங்க ” என அவறை அனுப்பி வைத்தான்…                                         

வீட்டிற்குள் வெளியில் இருசக்கர வாகனம் நிற்பதைப் பார்த்து விட்டு தனது மருமகனுடையது என்பதையும் உறுதிபடுத்திக் கொண்டு வெளியில் இருந்த வாளியில் நீரை சொம்பில் மொண்டு ஊற்றி காலைக் கழுவி விட்டு உள்ளே நுழைந்தார்…
அங்கே விஸ்வமும் , செவவழகியும் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருக்கஇவரைப் பார்த்ததும் விஸ்வம் மரியாதைக்காக எழுந்தான்..
ரங்கநாதன் : பரவாயில்லை மாப்பிள்ளை உக்காருங்க… எப்புடி இருக்கீய ஆத்தா அப்பாரு சவுக்கியமா… என்று வினவினார்….
விஸ்வம் : எல்லாரும் சவுக்கியமா இருக்காவ… மாமா… பவ்யமாக பதிலளித்தான்…
ரங்கநாதன் : சந்தோஷம் மாப்பிள்ளை… 
அங்கு வந்த ராஜலட்சுமி  தண்ணீர் கொண்டு வந்து ரங்கநாதனிடம் கொடுத்து விட்டு” ஏங்க மருமகப்புள்ளையும் மவளும் உங்களுக்கு இதை விட ஒரு சந்தோஷமான சேதியை கொண்டு வந்துருக்காவ என்னாண்டு கேளுங்க… 
ரங்கநாதன் : அப்புடியா என்னா விஷயம் என இருவரையும் பார்க்க..
விஸ்வம் : நம்ம செவ்வழகி மாசமா இருக்கா மாமா…என்க ரங்கநாதனுக்கு உள்ளம் குளிர்ந்தது….
” மனசு நிறைஞ்சுருச்சு… மாப்பிள்ளை…. அம்மாடி எனக்கு நல்லபடியா ஒரு பேரனப் பெத்துக் குடுத்துரு ஆத்தா… என்றார் … மகளைப் பார்த்து..அவள் வெட்கத்துடன் சரியென தலையாட்டினாள்…
வாசலைப் பார்த்த ரங்கநாதன் ” அங்கனயே நில்லு உள்ள வந்த அவ்ளோதேன்…” என சீறினார்…அவரது சீற்றலைக் கண்டு பயந்த மற்றவர்கள் வாசலை நோக்க அங்கு மதியழகி நின்றிருந்தாள்…
                                            – தொடரும்…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: