Advertisements

முபீன் MSK – கண்ணாமூச்சி ஆட்டம் – 7

கண்ணாமூச்சி -7

மகிழ்ச்சியாக பள்ளிக்கு சென்றவள் அவளின் தோழிகள் அழைத்தும் காதில் வாங்காமல் தனியாக சிரித்து கொண்டே உள்ளே சென்றால். அவளின் தோழிகளில் ஒருத்தி “என்னடி ஆச்சு நம்மள க்ளாஸ்கு லேட்டா போகணும்னு சொல்லுவா இப்ப நமக்கு முன்னாடி கூப்பிட நிக்கமா தனியா சிரிச்சிட்டே போறா ” “விடு டி உள்ள போய் பேசிக்கலாம்” மணி அடித்ததும் அனைவரும் உள்ளே சென்றனர் வைஷு வின் உயிர் தோழி கோபிகா அவளின் அருகில் அமர்ந்து அவளை பார்த்தால் அவள் இப்பொழுதும் தனியா சிரித்து கொண்டிருந்தாள் கோபி இரண்டு முறை அழைத்தும் திரும்பத்ததால் தலையில் ஓங்கி கொட்டு ஒன்று வைத்தால்.

வைஷு”ஆ ஆ ஆ ஏண்டி லூசு அடிச்ச வலிக்குது , “அவள் ” அப்றம் எவ்ளோ நேரம் கூப்பிறது” அவள் “கூப்பிடியா கோபி “என்றால் பாவமாக “அடியே என்னாச்சு கூப்டனாவா உன்ன கூப்பிட்டு அந்த செவிட்டு இங்கிலிஷ் மிஸ் யே திரும்பி பார்த்தாடி உனக்கு என்ன ஆச்சு இப்புடி தனியா சிரிச்சிட்டு இருக்க ” வைஷு சிரித்து கொண்டே தலைகுனிய “ஐயோ வைஷு வெக்கபடுரியா நீ வயசுக்கு வந்த அன்னைக்கு கூட நா இதலாம் பாக்களைடி ,இப்போ என்ன உனக்கு ” “கோபி இப்புடி தான் வெக்கப்படுவங்களா “என்று கேட்டதும் முன்னே இருந்த மாணவிகள் திரும்பி பார்க்க கோபி ” இருங்கடி கேட்டு சொல்ற நீங்க திரும்புங்க, வைஷு என்னடி ஆச்சு ” அவள் சிணுங்கி கொண்டே திரும்ப “எல்லாம் என் நேரம் இதலாம் பாக்க வேண்டி இருக்கு “என கோபி சலித்து கொள்ள வைஷு அவளிடம் திரும்பி ,

“கோபி உனக்கு உங்க மாமா பரத் பாத்ததும் உனக்கு எப்புடி இருந்துச்சு “அதை ஏன் நீ கேக்குற” சட்டென்று சுதாரித்து விழிகள் விரிந்தவள் “ஏய் யாருடி அது ” என்றால் ஆச்சரியமாக”அது ….வந்து …நேத்து …” திக்கி கொண்டே சொல்ல கோபி சிரித்து கொண்டே “மாட்டிக்கிச்சே மாட்டிக்கிச்சே”என பாட அருகில் வந்த இங்கிலிஷ் மிஸ் அவர்களை பாக்க இப்போது அவளுடைய தோழிகள் “மாட்டிக்கிச்சே மாட்டிக்கிச்சே” என்று கலாய்க்க மிஸ் அவர்களை வெளியில் முட்டி போட வைத்தார்.

“நம்ம ஏதாச்சும் டவுட்டு கேட்ட மட்டும் காது கேக்காது இது மட்டும் நல்லா கேட்கும்” என்று கோபி அவரை வசைப்பாட வைஷு இன்னும் தனியாக சிரித்து கொண்டிருந்தாள் “அடியே உன்னால தான் இப்போ இங்க இருக்கோம் இன்னும் ஈ ஈ ஈ காட்டிட்டு இருந்த பல்ல ஓடச்சுறுவேன் பாத்துக்கோ”என்று மிரட்ட அவளோ உதடுகளை குவித்து உம்ம்மா என்றால் “ஐயோ என்னடி என்னநமோ பண்ற , வைஷு உண்மைய சொல்லு எல்லாம் முடிஞ்சுட்டா” என்று கேட்க” செருப்பு” என அவளை உதைக்க அந்த கிளாஸ் முடிந்து மணி அடிக்க மிஸ் வெளியே வந்து இவர்கள் சண்டை போடுவதை பார்த்தும் “நீங்களாம் திருந்தவே மாட்டீங்கடி ச்சை ” என்று சபித்து விட்டு கிளம்பினார். “போடி செவிடி ஒருநாள் உன்ன பாதுக்குற”

பின் உள்ளே வந்து அவள் தோழியிடம் நடந்த அனைத்தும் கூறியவள் அவளை பார்க்க அவள் ஆ என்று பார்த்து கொண்டிருந்தாள் என்ன என்று கேட்க ” வைஷு நிஜமா சொல்றியா , என்ன எத்தன தடவ ஒட்டிருக்க , பெரிய லவ் அது இதுன்னு இப்போ பாரு நீயே ” என்று சிரித்தவள் “அது என்ன என் அண்ணால இருந்து எத்தனை காலேஜ் பசங்க உனக்கு டீல் விட்டானுக , எவண்டையும் பாட்டம நீயா போயி அதும் அவன் உண்ட பேசமலேயே எப்புடி ” வைஷு ” அதான் எனக்கும் தெரில கோபி ” “சரி விடு வெல்கம் டூ லவ் பண்ணி நாசமாய் போகும் சங்கம் இப்போ நீயும் ஒரு உறுப்பினர்”என்று கூறி அவளுடைய பேக்யை மாட்டி விட்டால் . அதில் சிரித்தவள் “சரி வைஷு , நா சொல்றத கேளு அப்ப தான் அவன உன் பின்னாடி அலைய வைக்க முடியும் ” அவள் ” அப்புடிலாம் வேணாம் அவன நா பாத்துட்டே இருக்கணும் என் கூடவே இருக்கணும் அவளோதான் “

அவளை பார்த்தவள் ” இப்புடிலாம் இருந்தா உன்ன விட்டுட்டு போய்டுவான்டி ” என்று சொன்னதும் அவள் முகம் சுருங்கி அழ போகும் நிலைக்கு போய்விட்டால் ,அதை பார்த்து பதரியவள் ” நா சும்மா சொன்னேடி சும்மா சொன்னே என் செல்லம்ல அழ கூடாது “என்று சமாதானம் செய்து ” அப்போன நா சொல்ற மாறி செய் சரியா ” அவளும்  வேகமாக தலை ஆட்டினாள் “அவன நீ கண்டுக்காத ஆனா அவ பாக்குற மாறியே இருக்கணும் ..நீயா பேசாத அவனா பேசுனாலும் அவன ரெண்டு வார்த்த பேச விட்டுட்டு பேசு சரியா ” வைஷு “ம்ம் அப்பறம் ” கோபி ” நீ 1st இத ஒழுங்கா செய் ” அவள் சரி என்று தலையாட்டி விட்டு கோபி தலையில் இரண்டு கொட்டுகளை வைத்தால் கோபி ” நா உன்ன ஒன்னு தானே கொட்டுனே நீ என்ன ரெண்டு தடவ கொட்டுர ” “ம்ம் அது அவன் என்ன விட்டு போய்டுவான்னு சொன்னல அதுக்கு” கோபி வைஷுவை புதிதாக பார்த்தால்

காரணம் அவள் யாரிடமும் இப்புடி இருந்தத்தில்லை தான் விரும்புவதை கூறியதற்கே எவ்ளோ பேசினால் என்று அவளுக்கு தெரியும் அது தனக்குலாம் வராது என்று இருந்தவள் இன்று விளையாட்டுக்கு போய்விடுவான் என்று சொன்னத்துக்கே  அழும் நிலைக்கு போய்விட்டாள். யோசிச்சு கொண்டிருப்பவளை பார்த்த வைஷு ” என்னடி உன் ஆலோட சாங்கு போய்ட்டியா ” என்றால் நக்கலாக அவளும் பதில் சொல்ல அன்றைய பொழுது அதுவாகவே ஓடியது.


மாலை பள்ளி முடித்ததும் விறைவாக வீட்டிற்கு சென்று அவனை பார்க்க செல்லும் ஆவலில் சென்றால் அப்போது,

Advertisements

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: