Advertisements

நினைவெல்லாம் நீயே கண்ணம்மா -18

கார்த்திகா கையில் குழந்தையை வைத்துக்கொண்டு வருவதைப் பார்த்து விட்டார் ரங்கநாதன்…
 ஆனால் சற்று முன்னர் தான் மதியழகி அவளிடம் பேசிக் கொண்டு இருப்பதாக அழகி கூறிச் சென்றாலே… எனில் அவள் தன்னிடம் பொய் சொல்லி இருக்கிறாள்…. 
அப்படி என்றால் மதி தனக்குத் தெரியாமல் நிறைய வேலைகள் செய்கிறாளோ… ? என்ற ஐயமானது மனதில் எழ ரங்கநாதன் தன்னை நோக்கி வந்து கொண்டு இருந்த கார்த்திகாவைப் பார்த்து சின்ன தலையசைப்புடன் நகர்ந்து விட்டார்…தன் வீடு நோக்கி யோசனையுடன் பயணமானார்…                             

மாறனின் கேள்விக்கு பதில் கூறாது அவனது கண்களைப் பார்த்தவாறு சிலையென சமைந்து இருந்தாள் மதியழகி…
மாறன் : சொல்லு மதி.. உன்னிட்ட தான் கேக்குதே… பதில் சொல்லு…என்று அவளை மீண்டும் வினவ… 
மதிமுகமதில் சோகம் அப்பியிருக்க மாறனின் விழிகளையேப் பார்த்தவாறு அமர்ந்திருந்தாள்…
மாறன் : சொல்லுடி… என்ன எதுவும் பேசாம அமைதியா இருக்க… ஓஓஓ நீயும் அந்த சாதிக்காரவ தான… அதேன் உனக்கு அவங்க பண்ணது சரியாப் பட்டுருக்கும்… அதேன் எதுவும் சொல்லாம இருக்க… 
மதியழகி :எலேய் என்ன விட்டா ஓவராப் பேசிட்டு இருக்கவ.. என்னியப் பாத்தா அந்த அளவுக்கு யோசிக்கற மடச்சியாத் தெரியுதா இல்ல கொலைவெறிப்பிடிச்சு திரியுற பிசாசாட்டம் தெரியுதா… இன்னொரு வார்த்தைப் பேசுன அம்புட்டுத்தேன்… என்று அவனது சட்டையைப் பிடித்து உலுக்கினாள்…
” ஏன்டா உனக்கு மட்டும்தேன் அத நினைச்சா வருத்தமா இருக்குதோ.. எங்களுக்குலாம் கிடாவெட்டி விருந்து வைக்குற அளவுக்கு சந்தோஷமா இருக்குதோ… உன்னவிட எனக்கு மனசுல ஆயிரம் மடங்கு வேதனை இருக்குடா… அத உள்ளார வச்சு மறச்சு வெளிய நடிச்சுக்கிட்டுத் திரியுறேன்… அதெல்லாம் உனக்கு எங்கடா புரியப் போவுது…என்று மூச்சுவாங்க மனதில் தேக்கி வைத்த அனைத்தையும் அவனிடம் கெட்டி விட்டு முகம்மூடி அழுதாள்…
 அதைப் பார்த்துப் பதறிய மாறன் அவளது முகத்தை மூடி இருந்த கைகளை விலக்கியவாறே” மதி… என்னிய மன்னிச்சுரும்மா… நா ஏதோ கிறுக்குப்புடிச்சுப் போயி ஏதோ வாய்க்கு வந்தத உளறிட்டேன்… இங்க பாரும்மா … அழாதம்மா…
மதி பெருங்குரலெடுத்து அழுதவாறே ” போடா… எங்கிட்ட இன்னும் ஒரு வார்த்தை பேசுன உன்னைக் கொன்னுடுவேன்..என்று அழுகையின் இடையில் அவனை நோக்கி வார்த்தைகளை சிரமப்பட்டு உதிர்த்தாள்…
அதை வேதனையுடன் கேட்ட மாறன் அவளை தன்னோடு சேர்த்தணைத்துக் கொண்டு ” மதி இங்கப்பாருடி… நா பேசுனது தப்புத்தேன்.. மன்னிக்க மாட்டியா… என்று பாவமாகப் பார்த்தான்… 
அவனை முறைத்துக் கொண்டே” மன்னிக்கவே மாட்டேன்டா.. ஏன்டா உனக்கு எம்புட்டு தகிரியம் இருந்தா என்னியப் பாத்து இப்புடி ஒரு வார்த்தை சொல்லி இருப்ப… என்று மீண்டும் மீண்டும் எரிந்து விழ… 
அதை அதை எப்படி சமாளிப்பது என்று திணறியவன் வேறு வழியின்றி அவளது இதழை தன்னிதழ் கொண்டு மூடினான்…கண்களில் இருந்து வழிந்த கண்ணீரோடு அவனது முகத்தைப் பார்த்த மதி… அவனின் இதழில் இருந்து தன்றிதழை விடுவித்துக் கொள்ளப் போராடினாள்…
ஆனால் மாறன் அதை கண்டு கொள்ளாது அவளது கோபத்தைக் குறைக்கும் நோக்கில் ஆரம்பித்த இதழ் தீண்டல் அவளின் மேல் இருந்த அளவில்லா  காதலை  அவன் உணர்ந்த தருணமிது ஆதலால் தான் கொண்ட எல்லையில்லா காதலை அவளுக்கு புரிய வைக்க தொடங்கினான்…
அதை மதி உண்ர்ந்ததாலோ என்னவோ அவளிடம் இருந்த பழைய எதிர்ப்பு இப்போது இல்லை…
அவனது சட்டையை இறுகப் பற்றிக் கொண்டாள்… இதழ் தீண்டல் வெகு நேரம் நீடிக்க.. 
தன்னிடம் இருந்து அவளது இதழை மீட்டுக் கொடுத்தான் மாறன்…
” இனிமே இப்படி ஏதாச்சும் கோட்டித்தனமா பேசிட்டு இருந்தனு வையி அப்பறம் நா உன்ன போட்டு அடிக்கற அடில நீ சட்னி ஆகிடுவ… சொல்லிப்புட்டேன் பாத்து நடந்துக்கோ.. இப்போது பொய்க்கோபத்துடன் அவனை ஒற்றை விரல் கொண்டு மிரட்டினாள் மதி…
மாறன் புன்னகைத்துக் கொண்டே ” மதி ….மதியழகி : என்னா. 
  மாறன் : ஐ லவ்யூ டி….என்றான் குறும்பாக…
மதியழகி : போடா… புண்ணாக்கு…என்று திரும்பிக் கொண்டாள்…
மாறன் : அடியேய் என்னடி புண்ணாக்குனுலாம் திட்டிட்டு இருக்கவ… கொஞ்சமாச்சும் மரியாதை குடுத்துப் பேசுடி…
மதியழகி : என்னாது மரியாதையா… உனக்கா… போடா எருமை… மரியாதை கேக்குதாம்ல இவருக்கு…என்று கண்களை உருட்டி பேய் முழி முழித்து அவனை பயமுறுத்தினாள்…
மாறன் : ஆத்தாடி… கண்ணை உருட்டி பயமுறுத்தாதடி… முட்டக்கண்ணி…என்று அவளைப் போலவே கண்ணை உருட்டிக் காண்பித்தான்.   
அதில் மெலிதாகப் புன்னகைத்த மதி… ” மாறா உனக்கு எப்புடிலத் தெரிஞ்சுச்சு குணா சாகல அவனை கொலை பண்ணிட்டாங்கன்னு..  என்றாள்…மாறன் தான் யூகித்ததைக் கூறினான்…
” ஆனா இது எனக்கு சரியாத் தெரியல எல்லாம் ஒரு யூகம் தேன்..நீ என்ன நினைக்குற.. என அவளைக் கேள்வியுடன் நோக்க…
 “அது உண்மை தான் …என்ற மதியழகியின் முகம் பாறை போல் இறுகியது…
                                              – தொடரும்…

Advertisements

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: