நினைவெல்லாம் நீயே கண்ணம்மா -16

இக்கதையில் வரும் அனைத்து கதாப்பாத்திரங்களும் , சம்பவங்களும் முழுக்க முழுக்க கற்பனையே…
மதியழகியின் ஞாபகத்தால் மனதில் இருக்கும் ரணம் குறைந்து போக உறங்கலாம் என யத்தனித்த மாறனின் காதுகளில் பெற்றோரின் பேச்சு சத்தம் கேட்டது..
பெரியமருது : பார்வதிம்மா மாறனுக்கு ரெம்ப அடி பட்டுருக்கும் போல நீ அவன எழுப்பி ஒத்தடம் குடுத்து சாப்பிட வச்சு தூங்க சொல்லும்மா…
பார்வதி : ஏங்க அவன நா வாடா சாப்புடலாம்ன்னு பத்து தடவைக்கு மேல  கூப்புட்டாச்சு…அவ வர மாரி தெரியல.. ரெண்டு அடி போட்டுத்தேன் எழுப்போனும்…
பெரியமருது : அடியேய் புள்ளைய கை ஓங்கிட்டுத் திரியாத…என அதட்டினார்…
பார்வதி : இதென்ன கூத்தா இருக்கு… இவரு மட்டும் அவன அடிப்பாராம்.. நா மட்டும் அவம்மேல கை ஓங்கக்கூடாதோ.. நல்லாத்தேன் இருக்கு ஒங்க நாயம்..என சலித்துக் கொண்டார்…ஏங்க  இந்த மாறம்பய சொன்னான்ல சீமையன்தேன் குணாவ கொன்னான்டு… நிசமா இருக்குமோ…?பெரியமருது அவரை கேள்வியுடன் நோக்க…
பார்வதி : உண்மையா இருந்தாலும் இருக்குமோனுதே கேட்டேன்.. ஏ  சொல்லுதேன்னா அவியளுக்கு தாம்பொண்ணு செத்த துக்கம் கூட இருக்காது.. ஆனா அவிய பொண்ணு ஒரு வேத்து சாதி பயல விரும்புனதுதே பெரிய அவமானமாத் தெரியும்…அதேன் கேக்குதேன் . 
பெரியமருது : எனக்கும் அதே சந்தேகம்தேன் பார்வதி… மாறன போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து மீட்டு வாரதுக்கு ரங்கநாதன் ஐயாட்ட ஒதவி கேக்கப் போனேன்ல.. அப்போ அவரு ஏ உம்பையன புடிச்சுட்டு போனாவனு கேட்டாரு.. நா நடந்தத சொன்னேன் .. அத கேட்டதும் அவர் தடுமாறுனாக… இதுல அவியளுக்கும் கூட்டு இருக்குமோன்டு தோனுது…
பார்வதி : இதுல சந்தேமா.. நா அடிச்சு சொல்லுதேன் அவியளுக்கும் அந்த குணாப் பய கொலையில கூட்டு இருக்கும்…
இவர்களது சம்பாஷணையை கேட்டுக் கொண்டிருந்த மாறனின் மனதிலும் அதே ஐயம் பரவிக் கொண்டு இருக்க….அவன் மூளை வேகமாக யோசித்தது…
 ரங்கநாதனுக்கும் இதில் கூட்டு இருக்கிறதா அல்லது அவர் தான் இந்த கொலையைச் செய்யச் சொன்னதா.. அப்படி அவர் தான் இக்கெலையை செய்ய ஆள் அனுப்பியது என்பது உறுதியாக தெரிய வந்தாலும் அவர் மேல் வழக்கு போட்டாலும் அது அவரது செல்வாக்கால் முறியடிக்கப்படுமே… 
இந்த சாதி என்னும் இரத்தம் குடிக்கும் சாத்தான் இன்னும் எத்துனை உயிர்களை பறிக்கப் போகிறதோ… இன்னொரு கௌரவக் கொலை நடக்காமல் தடுக்க வேண்டுமே.. இவர்களை எதிர்த்துப் போராட நம்மால் முடியுமா….?????
பார்வதி அறைக்குள் நுழையும் ஓசை கேட்டு உறங்குவது போல் நடித்துக் கொண்டு இருந்தான் மாறன்…
பார்வதி : அய்யா மாறா… தூங்குறா மாதிரி நடிச்சது போதும் வாயா சாப்பிடலாம்…தாய்க்குத் தெரியாத தன் மகவைப் பற்றி… என்பது போல் அவனது நடிப்பு செல்லுபடியாகவில்லை…
மாறன் கண்ணை திறந்து  தாயை நோக்கி முறைப்பை சிந்தி விட்டு…” நாந்தூங்கிட்டுதே இருந்தேன்… 
பார்வதி  : சரிய்யா… சரிய்யா… நீ தூங்கிட்டுதே இருந்த நாந்தேன் எழுப்பி விட்டுட்டேன்… வெறும் வவுத்தோட தூங்காத ராசா… வந்து ஒருவாய் சாப்புடுயா.  என வாஞ்சையுடன் மகனின் தலைமுடியை கோதினார்.. 
தாயின் முகத்தில் எதைக் கண்டானோ தெரியவில்லை அடுத்த நிமிடம் சாப்பிட ஆரம்பித்தான்.. 
அவன் சாப்பிடுவதையேப் பார்த்துக் கொண்டு இருந்த பெரியமருது” மாறா… இன்னைக்கு நடந்தத கெட்ட கனவா நினைச்சு மறந்துப்புடுயா… இனிமேல் எந்த வம்புக்கும் போவாதய்யா… என புத்திமதி கூற…
மாறன் சரி என்று வாய் திறந்து கூட கூறாமல் தலையை மட்டும் ஆட்டினான் …
சாப்பிட்டு முடித்ததும் அவனுக்கு மருந்து போட்டு விட்டார் பார்வதி…
மாறன் உறங்கச் செல்ல… தற்போது பெரியமருது மகனைப் பற்றிய கவலையில்  உறக்கத்தைத் தொலைத்து இருந்தார்….
நாட்கள் செல்ல செல்ல குணா இறந்த சுவடே தெரியாமல்  மறைந்து போனது… அதைப் பற்றி பேசிக் கொண்டும் அனுதாபப்பட்டுக் கொண்டும்  இருந்த சிலர் இப்போது அவரவர் வேலையைப் பார்க்க ஆரம்பித்தனர்….
ஒரு வார காலம் போனது கூற தெரியாமல் இன்னும் குணாவின் இறப்பை நினைத்து வாடிக் கொண்டு இருந்தது மாறன் மட்டுமே…
 கயிற்றுக் கட்டிலில் பலத்த சிந்தனையில் இருந்த மாறனை அழைத்தார் பெரியமருது… ”  எலேய் மாறா இந்த சேகர்பய வீட்ல நெல்லுமூயை கேட்டாக போய் போட்டுட்டு வந்துருல..  என்றார்…
அவன் சாதாரண மனநிலையில் இருந்திருந்தால் ” ஏ அந்த சேகர் தொரை வந்து எடுத்துட்டு போவ மாட்டாரோ.. நாந்தே அவருக்கு சேவகம் செய்யனுமோ..என்று  கேட்டு இருப்பான்…
 ஆனால் அவன் தான் இந்த ஒரு வாரமாக எவரிடத்திலும் சாதாரணமாக பேசவே இல்லையே..  எதையோ நினைத்து அவன் மனம் கலங்கிக் கொண்டு இருந்ததால் …மாறனுடைய  அப்பா அவனது மன மாற்றத்திற்காக அவனை சேகருடைய வீட்டிற்கு அனுப்பி வைக்க முயல்கிறார்…
மாறன் : சரிப்பா போய்ட்டு வர்றேன்… என நெல்லமூட்டையை தூக்கி வண்டியில் ஏற்றிக் கொண்டு சேகர் வீட்டிற்கு சென்றான்…
வழியிலேயே சேகர் கண்ணுக்குத் தென்பட..” ஏலேய் சேகரா.. இந்தால உம்ம வீட்டுக்கு என்ற அப்பாரு நெல்லுமூடை குடுத்து விட்டுருக்காரு.. கொண்டுபோலே..
சேகர் : அடேய் மாறா… எம்புட்டு நாளாச்சு உன்னியப் பாத்து ஒரே ஊருலதே இருக்கோம்  ஆனா பாக்கவே முடியல.. வா அந்த ஊத்துக்கிட்டக போய் உக்காந்து பேசுவோம்.. என அவனை இழுத்துச் சென்றான்…
மாறனும் சேகரும் அங்கு அமர… மாறன் அந்த ஊற்றையே வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தான். .
சேகர் அவனது சோகம் பரவிய முகத்தைப் பார்த்து அவனை எப்படியாவது  வேறு விஷயத்தைப்  பேசி சரி செய்யலாம் என பேச்சைத் தொடங்கினான்…அதைக் தடுக்கும்  வகையில் கொலுசுச் சத்தம் கேட்டது…
அந்த கொலுசின் சொந்தக்காரியான… மாறனின் சண்டைக்காரி பிள்ளையார் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு கையில் அர்ச்சனை செய்த பொருட்களுடன் நடந்து வந்து கொண்டு இருந்தாள்…. 
அவளது அருகில் இருந்த ” ஏய் மதி… மாற அண்ணன்டி… என அவளது தோளைத்தட்ட மதியழகி நிமிர்ந்து மாறனைப் பார்த்தாள்…
மாறன் எதையோ வெறித்துப் பார்த்துக் கொண்டு இருப்பதையும் அருகில் சேகர் அமர்ந்து அவனுக்கு எதையோ புரிய வைத்துக் கொண்டு இருப்பதையும் பார்த்தாள்…
இன்னும் குணா இறந்ததை இவனால ஏத்துக்க முடியல போல… என்று அவனைப் பாவமாகப் பார்த்தாள்…
மதியழகி : ஏட்டி அழகி நீ வீட்டுக்குப் போடி..நா அப்பறம் வர்றேன்.. 
அழகி : ஏய் மதி நீ எங்கனு உங்க வீட்ல கேட்டா நா என்னட்டி சொல்லுறது…
மதியழகி : கார்த்திகாவ வழிலப் பாத்தேன் அவ கூட பேசிட்டு இருக்கேன்னு சொல்லுடி…அவளை ஒரு வழியாக  சமாளித்து அனுப்பி விட்டு மாறனை நோக்கி அடி எடுத்து வைத்தாள் மதியழகி…
                                                                – தொடரும்…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: