Advertisements

முபீன் MSK – கண்ணாமூச்சி ஆட்டம் – 5

“எனக்கு என்ன ஆச்சு  அவனுக்கு பேர் வைக்குறனு என் பேரயே எப்புடி மறந்தேன்”
என்று அவள் தவித்து கொண்டிருக்க ..இவ்வளவு நேரம் அமைதியாக இருந்தவளை பார்த்த அனைவருக்கும் ஆச்சர்யம்  தான்…

அப்போது அங்கே இருந்த அமைதியை பார்த்து கொண்டே வந்த அங்கிள் ” என்ன இது நம்ம வீடு தானா இவ்ளோ சைலேண்ட்டா இருக்கு ,ஏன் என் பொண்ணு வரலயா ” என்று அவர் கேட்டு கொண்டே வைஷ்ணவியை பார்த்தார். அங்கிள் அவரை தன் மகள் என்று தான் கூறுவார் சிறு வயதில் இருந்து அவர் தூக்கி வளர்த்த பெண்.

அவளும் அமைதியாக இருக்க பார்வதியின் பக்கம் திரும்பியவர் “என் பொண்ண என்னடி சொன்ன திட்டினியா”  “ஆமா அவல திட்டிட்டாலும் அவ அபுடியே சொல்றத கேற்றுவா பாருங்க” என்று பார்வதி அம்மாள் சொல்ல ..அவள் அருகில் அமந்தவர் தலையை வருடி கொண்டே
“என்னமா ஆச்சு ஏன் இப்புடி இருக்க , ஒன்னும் இல்ல அங்கிள் கொஞ்சம் தல வலிக்குது அதான் “என்றாள் அவனை பார்த்து கொண்டே

“புள்ளைக்கு காபி கொண்டு வா பார்வதி…நீ உள்ளவாமா ” என்று அழைத்து சென்றார். இதுவரை சாதாரணமாக பார்த்தவர் அவள் தலைவலி என்றதும் ” என்னமா ஆச்சு ஏதும் பண்ணுதா ஆண்ட்டி அடிச்சது வலிக்குதா” என்று சோகமாக கேட்டார்.

“அதலாம் ஒன்னும் இல்ல ஆண்ட்டி மதியம் சாப்பிடல ஸ்கூல் விட்டு நேரா இங்க வந்துட்டேன்… அதான் தலைவலி “என்று சமாளித்தாள். “சாப்பிடாம என்னடி பண்ன உன் அம்மா என்ன பண்ரா .இப்போ வருவாள்ல வரட்டும்”. “ஏன் ஆண்ட்டி நீங்க எனக்கு சாப்பாடு தர மாட்டீங்களா, உனக்கு இல்லாதததா என்னடி வேணும் உனக்கு ” என்று கேட்க  “எனக்கு ஒரு இஞ்சி டீ , குட் டே பிஸ்கட் வேணும் ” என்று சொல்ல

ஆண்ட்டி ஒரு சிறுவனை அழைத்து அவள் கேட்டதை வாங்கி வர சொன்னார்… அவன் வந்ததும் டீ போட்டு குடுத்து சாப்பிட கொடுத்தவர் “இந்தா சாப்டு வேணும்னா கேளு , இங்க பாரு வைஷு நீ இன்னும் சின்ன புள்ள மாரி இருக்காதா பெரிய புள்ளையா நடந்துகோ கல்யாணம் வயசு வந்துருச்சு ” கல்யாணம் என்றதும் அவள் மனம் அவனை நினைக்க அதுலயே சாப்பிட்டு முடித்தவள்

“ஆண்ட்டி இன்னோரு வீட்டுக்கு போனா தானே அதலாம் நீங்க தான் என்ன நல்லா பாதுப்பிங்கள சோ உங்க வீட்டுக்கே நா மருமகளா வந்துரன் ok va” என்று அவர் கழுத்தை கட்டி கொண்டாள்.

அங்கே அங்கிள் ராகுல் உடன் பேசி கொண்டிருந்தார். அவருக்கு அவனை பார்த்தும் பிடித்து விட்டது…எல்லாரும் அவரை பார்த்தாலே பயந்து ஒதுங்கி போவார்கள் ஆனால் அவன் சாதாரணமாக சிரித்து கொண்டே கை நீட்டினான்.

அவரும் கைகுலுக்கி விட்டு நாளை இருந்து வா என்று கூறினார். அவனும் சரி என்று கூறி விட்டு அங்கே இருந்த பிள்ளைகளுக்கு டாட்டா கூறி விட்டு அவளை தேடினான் .அவள் சமையல் அறையில் பேசி கொண்டிருந்தாள். இவன் சிறிது வருத்தத்துடன் கிளம்பினான் .

டீ குடித்துவிட்டு வந்தவள் அவன் இல்லை என்றதும் சுற்றிலும் வெளியிலும் தேடினால்,அவன் இல்லாது போக அவன் தன்னை விட்டு போய்விட்டான் என்று மனம்  கூற அழ ஆரம்பித்து விட்டால்.கண்ணீர் கையில் படவும் சுதாரித்து பின்புறம் சென்று கிணற்றில் தண்ணிர் எடுத்து முகம் கழுவிட்டு தன் இடத்திற்கு வந்தால் . ஆனால் அவள் மனம் வந்த பாடில்லை..

அந்த வாண்டு “அவரு நாளைக்கு வந்துருவாரம் பீல் பண்ணாதீங்க ” என்று கூற இவனுக்கு எப்புடி தெரிந்தது என்று நினைத்தவள்.. நாளை வரட்டும் பாதுக்கலாம் என்று சமாதானம் செய்து கொண்டு அந்த வாண்டுடன் சண்டை போட ஆரம்பித்தாள்.

சிறிது நேரம் கழித்து அவள் அம்மா அவளை அழைக்க வர ..ஆண்ட்டி அவரை கழுவி கழுவி ஊத்தினார். ” ஏன் டீ புள்ளைய பாக்காம நீயும் உன் புருஷனும் எங்க டூயட் பாட போய்ட்டீங்கலா ஒழுங்கா புள்ளைக்கு என்ன வேணுமோ கேட்டு சமைச்சு போடு ” அவர் காரணம் தெரியாமல் விழிக்க ,காரணம் கேட்டவர்   “என்ன சமைச்சு போடனுமா ,மதியம் சாப்டலயா இவ, லஞ்ச்கு மீன் வேணும்னு காலையே என்ன மார்க்கெட் அனுப்பி அலைய விட்டு வந்து செஞ்சு குடுத்து ..நா கூட சாப்பிடாம வச்சிருந்த மீதியும் சாயங்காலம் வந்து எட்டு தோசைக்கு வச்சு தின்னிட்டு தானே வந்தா ” என்று அவர் நினைக்க.

“புள்ள பசில தல வலிக்குதுனு இஞ்சி டீ கேட்குறா ம்ம்ம்”  “அவ தல வலில கேட்கலை செரிமானத்திற்கு கேட்ருட்க்கா” என்று கடுப்புடன் அவளை பார்க்க அவள் “ஈ ஈ ஈ ” என்று பல் இழித்தால். “விடுங்க ஆண்ட்டி அம்மா தெரியாம பண்ணிட்டாங்க ” என்று கூற அவர் “வீட்டுக்கு வா வச்சுக்குறேன் “
என்றார் சைகையால்..

Advertisements

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: