நினைவெல்லாம் நீயே கண்ணம்மா -15

அவனது வாய்மொழிக்கு மறுமொழி வராமல் இருந்தது கண்டு ஏற்கனவே சினத்தால் கொதித்துக் கொண்டு இருந்தவன் ” ஏய் எவன்லே அது என்ன இப்படி ஒரண்டை இழுத்துட்டே இருக்கிய… கோட்டிப்பயலே… யாருலே அது… பேசு.. என வாய்க்கு வந்தவற்றை கூறி திட்ட ஆரம்பித்தான்…
” அய்யேய்ய யப்பா… எவ்ளோ கெட்ட வார்த்த… காதுல கேக்க முடியல… எலேய் அப்படியே வாய கோணித் தைக்குற ஊசியை வச்சு தச்சுப்புடுவேன்…  வாயா அது… கர்மம்…என்னப் பேச்சுப் பேசுறவ… ” என மாறனிடம் கடிந்து கொண்டாள் எதிர்முனையில் இருந்தவள்…. 
” என்னது பொம்பளைப் புள்ளையா நம்மளுக்கு கால் பண்ணி இருக்கறது.. “…என நம்பரை true caller போட்டு பெயரைப் பார்க்க மதியழகி என இருந்தது.
அதைப் பார்த்த மாறன் தனது கடுகடுவென இருக்கும்  முகத்தில் சிரிப்பை வரவழைத்துக் கொண்டான்…
வாடி… உனக்கு முத்தம் குடுத்ததோட சரி அப்பறம் உன்ன மறந்துட்டேன்… மன்னிச்சுருடி… சண்டைக்காரி…. கொஞ்சம் உன்ன கடுப்பாக்கிப் பாக்கனும்னு ஆசை அத மட்டும் இந்த மாமா நிறைவேத்திக்கிறேன்… செல்லக்குட்டில்ல… கோச்சுக்கக் கூடாது…என அவள் அந்த செல்பேசியில் தெரிவதைப் போல கொஞ்சினான்…
மதியழகி அவனை பலமுறை அழைத்துப் பார்த்தும் அவன் பதில் பேசாது இருக்கிறான் என மேலும் அவள் கொலைவெறி ஆக…
” இந்த மாங்கா மடையனுக்கு கால் பண்ணேன் பாரு எம்புத்திய செருப்பால அடிக்கோனும்.. அடேய் இருக்குதியா இல்ல துங்கிப்புட்டியோ…
என அவனை வார்த்தைகளால் வறுத்தெடுக்க”ஆஆஆ… அடியேய் இருடி இங்கதான் இருக்குதேன்.. எட்டு மைல் தொலவுக்கு மைக் செட் போட்டா மாதிரி கத்தாதடி…  என அவளை அடக்கினான்….
” சரி இன்னைக்கு குடுத்த முத்தத்தைப் பத்தி எதுவுமே சொல்லலயே நீ… என அவளை சீண்டினான்…
அந்த கணம் மதியழகிக்கு அவன் அவளது இடை தழுவி இதழ் ஒற்றிய அந்த நிமிடத்தை அவன் நினைவுபடுத்தியவுடன் தானாக அவளது இதழ்கள் புன்னகையில் விரிந்தன.. கண்கள் மிளிர்ந்தன….வெட்கமும் சேர்ந்து கொள்ள பேசா மடந்தையானாள்…
மாறன் : சொல்லுடி… சண்டைக்காரி… அவன் குரல் கேட்டு நிகழ் உலகத்திற்கு வந்தவள்… 
மாறன் : நல்லவேளை ஞாபகப்படுத்துன.. நீ பண்ண காரியத்துக்கு உன்னிய இருடி என் ஐயன்ட்ட சொல்லி அடிக்க சொல்றேன்… என்றாள்…
மாறனுக்கு அவளது பொய்க்கோபத்தைக் கண்டு சிரிப்பு வர.. வாய் விட்டு சிரித்து விட்டான்..
மதியழகி : சிரிக்காதடா வெக்கங்கெட்டவனே…
மாறன் : அடியேய் வாயாடி… ரொம்ப வாய் அடிக்குற நீ… உனக்கு இன்னொரு கிஸ் குடுத்தா தான் நீ அடங்குவனு  நினைக்குறேன்…
மதியழகி : மவனே உன்ன கொன்னுடுவேன்…மாறன் : அந்த சண்டைய அப்பறம் வச்சுப்போம் உனக்கு என் நம்பர் எப்புடி கிடைச்சுச்சு…
” இவர் பெரிய ஆளு.. இவரோட நம்பர்லாம் சுளுவா கிடைச்சுடாது … மாரி அண்ணன்ட்டதேன் வாங்குனேன்… “
” ஓஓ அப்புடி அந்த அண்ணன்ட்ட எதுக்கு வாங்கி எனக்கு இப்போ கால் பண்றிங்கனு தெரிஞ்சுக்கலாமா… 
” அது…. மாறா இப்பத்தேன் கேள்விப்பட்டேன் உன்னப் போலீஸ் புடிச்சுட்டு போனாங்கனு.. அடிச்சாய்ங்களா…ரொம்ப  பலமா பட்டுச்சா… நல்லா இருக்குதேல நீ… 
என மதியழகியின் குரலில் அவனுக்கு ஏதேனும் பலமாக அடி பட்டு இருக்குமோ என்ற தவிப்பு சற்று அதிகப்படியாக வெளிப்பட அவளின் தவிப்பு அவனுக்கு இனம்புரியா மகிழ்ச்சியைக் கொடுத்தது…
” ஹலோ ஏய் லைன்ல இருக்குதியா இல்லையாடா… 
” இருக்குதேன் மதி.. ஆமா எனக்கு அடிபட்டா உனக்கு என்ன புள்ள…என்று அவளின் வாயிலாக தன் மேல் அவள் கொண்டு இருக்கும் காதலை வெளிப்படுத்த வேண்டும் என நினைத்தான்…
மதி : அது இல்ல இன்னைக்கு சாயங்காலம் உங்க அப்பாரு எங்க வீட்டுக்கு வந்து உன்ன போலீஸ் புடிச்சுட்டு போனத பத்தி சொல்லி அழுதாரு…அப்போ தான்  நீ போலீஸ் ஸ்டேஷன்ல இருக்க விஷயம் தெரிஞ்சுச்சு..  அவுக உன்ன அடிச்சுருக்கவும் வாய்ப்பு இருக்குல்ல…அதேன் அடிச்சாகளா… வலிக்குதானு கேட்டேன் போதுமா ….
மாறன் : அவங்க என்ன அடிக்க ட்ரை பண்ணாங்க நா அவனுகள பொரட்டி எடுத்துட்டேன்…என்றான் பெருமையாக…
மதியழகி :இதுக்கும் ஒன்னும் கொறைச்சல் இல்ல… சரி நான் போன வைக்குறேன் என்று மாறன் பேசும் முன்னரே போனைக் கட் செய்து விட்டாள்….குணாவைக் கொன்றது தன் தந்தை தான் என்ற உண்மையை அவனிடம் கூறலாமா வேண்டாமா என்ற மனக்குழப்பத்திலேயே உறங்கச் சென்றாள் மதியழகி…
                                                  – தொடரும்…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: