Advertisements

முபீன் MSK – கண்ணாமூச்சி ஆட்டம் – 4

“…ஆண்ட்டிடிடிடி….”என்று சத்தம் கேட்டதும் சமையல் அறையில் டீயை ஆதிக்கொண்டிருந்த பார்வதி அம்மாளின் டம்ளர் கீழே விழுந்தது …கடுப்புடன் அடுப்பறையில் இருந்து வெளியே வந்தவர் …துரு துரு வென கண்களை உருட்டியவாறே…அருகில் இருந்த 4 வயது சிறுவனுடன் சண்டை போட்டு கொண்டிருந்தாள் வைஷ்ணவி…

” டேய் யார கேட்டு டா என் பேனாவை எடுத்த ..எதுக்கு என் புக்க தொட்ட… நீ எப்புடி என் பேக்ல கை வைக்கலாம் ” என்று குற்றவாளியை விசாரிப்பது போல் தன் பச்சை நிற கண்களை குறுக்கி கொண்டு கேட்டருந்தவளை …தலையில் ஒரு கொட்டு வைத்தார் பார்வதி…

” ஏன்டி பேனாவ எடுத்துக்கு இவ்ளோ சத்தமா ..உன் அங்கிள் காதுல விழுல… இல்லனா அவ்ளோ தான் ” என பார்வதி பொறும  அவள் தலையை தேய்த்து கொண்டே .. “என்ன பேனாவ தான…அது என்னோடத்து ..என் பெர்மிஷன் இல்லம்மா தொட்ட கொன்றுவேன் “..என்று அங்கு இருந்த வாண்டுகளை பார்த்தவாறு கூறினால்…

அது ஒரு டியூஷன் சென்டர் என்றும் கூட சொல்லலாம் …ஆனால் கண்டிப்பான ஆசிரியரோ மார்க் எடுக்கவில்லை என்றால் பனிஷ்மெண்ட் தரும் வாத்தியரோ அங்கு இல்லை …வந்து அனைவரும் ஒன்றாக சேர்ந்து படித்து விட்டு இல்லை விளையடிவிட்டே செல்வார்கள். அங்கு 10 ஆம் வகுப்பு மாணவர்களே சீனியர்கள், அந்த வீட்டில் மொத்தம் படிக்க வருபவர்களே 24 பேர் தான் …

“ஏன் டி 10த்கு மேல இடம் குடுத்தாச்சு ..இருக்குற இடத்தை அட்ஜஸ்ட் பண்ணி உக்கார வச்சு நீ  பாத்துபனு நினைச்சா lkg புள்ளைங்க மாறி ..பேனாவை எடுத்தான் ..பேக்க தொட்டான்னு அதுங்களுக்கு சமமா சண்ட போடுற” இதன் இடையே ஒரு வாண்டு ” ஆமா ஆன்டி இவங்க lkg தான் .. அப்பப்ப என்னோட சிலேட் குச்சிய எடுத்து திங்குறங்கா” என்று முடித்து விட்டு தன் வேலையை பார்த்த வாண்டுவை முறைத்து கொண்டிருந்தவளை ஒரு கொட்டு வைத்து விட்டு தன் வேலையை தொடர்ந்தார்..

” போட்டா கொடுக்குற இரு கலர் பண்ணனும் , 4 லைன் எழுதணும் னு என்ட தானே வருவ அப்போ கவனிச்சுக்குற” என்று அவனை திட்டி கொண்டிருந்தவளை பார்த்து சிரித்த 8ஆம் வகுப்பு பிள்ளைகளை முறைத்த படி தன் வேலையை தொடர்ந்தவள்….

வெளியில் காலிங் பெல் சத்தம் கேட்டதும் வெளியில் பார்த்தவள் வாசலில் நிற்பவனை பார்த்து கண் இமைக்காமல் இருந்தால்…அவனோ இவ்ளோ நேரம் அங்கு  அவள் செய்தவற்றை பார்த்து சிரித்து கொண்டிருந்தான்..அதனை புரிந்தவள் சிறிய வெட்கமுற்றவள்  , அந்த வாண்டை முறைக்க அவன் மேலும் சிரித்தான்…


” ஐயோ என்ன தான் பாத்து சிரிக்கிரான் ஒரு வேல எல்லாத்தையும் பாத்துருப்பானோ, கடவுளே எல்லாம் இவனால வந்தது “…என்று அவள் புலம்பிக்கொண்டிருக்க அவனோ அவளை பார்த்து கொண்டே உள்ளே வந்தான்

காலிங் பெல்லின் சத்தம் கேட்டு வெளியே வந்த பார்வதி அருண் வந்துருப்பதையும் அருகில் இருந்தவனை பார்த்து யார் என்று கேட்டார் . அருண் ” ஆண்ட்டி இவன் என் பிரண்ட் , நம்ம கூட தான் படிக்கலாம்னு கூட்டு வந்தேன் …உங்களுக்கு ok va ஆண்ட்டி ” என்று கேட்க, ” வந்தவன எவ்ளோ நேரம் நிக்க வச்சிருக்காங்க கொஞ்சம் உக்கார சொல்லாம்ல” என்று அவள் ஆண்ட்டி யை கரிந்து கொண்டிருந்தாள்.

ஆண்ட்டி யோ யார் வந்தாலும் அடங்காத பிள்ளைகள் அவனை பார்த்தும்,யாரும் பேசாமல் அவனையே பார்த்து கொண்டும் ,பெண் பிள்ளைகள் எல்லாம் அவனை தின்று விடும் பார்வையில் பார்த்தனர். இதனை ஆண்ட்டி மட்டும் பார்க்கவில்லை,

வைஷ்ணவி யும் பார்த்து ” என்ன இப்புடி பாக்குராலுங்க…கண்ணுல கொல்லி வைக்க ” என்று புலம்பியவள் துணுகுற்றால் “அவளுக அவன பார்த்த நமக்கு ஏன் கோவம் வருது, அவ நின்னா நா ஏன் வருத்த படனும் .. ஐயோ எனக்கு ஏன் இப்புடிலாம் தோணுது “

ஆண்ட்டி ” ஏய் என்ன எல்லாரும் இங்கயே பார்த்துட்டு படிக்குற வேலைய பாருங்க ” என்றதும் அந்த இடம் சகஜ நிலைக்கு மாறியது… ” அங்கிள் வரட்டும் பேசிக்கலாம் அருண். உன் பேர் என்ன பா ” என்றதும் மறுபடியம் அமைதி, அவளோ “என்ன பேரா இருக்கும் அழகா சிவப்பா மொழு மொழுன்னு நேத்து பார்த்த ஆன் சென்னை எஸ்பிரெஸ் ஹீரோ மாறி இருக்கான் ” என்று நினைத்து கொண்டு பேரை கேட்டாள்

அவன் அங்கிருப்பவர்களை பார்த்து கொண்டே சிறிது சிரித்து விட்டு “என் பேரு வைஷ்ணவன் ஆண்ட்டி எல்லாரும் விஷ்வா னு கூப்பிடுவாங்க ” என்றதும் அங்கே குண்டூசி விழுந்தாலும் கேட்கும் அமைதி. காரணம் அங்கே இருக்கும் ராங்கி யின் பெயரும் அதானே. ஆண்ட்டி உடன் சேர்ந்து எல்லாரும் அவளை பார்க்க அவளோ…

“என்ன பேர் இது வைஷ்ணவன் விஷ்வானு நல்லாவே இல்ல அவன் பேரு  ‘ ராகுல் ‘ ம்ம் இதான் நல்லாருக்கு ,  “ராகுல் ராகுல் ராகுல்”

அவள் குனிந்து கொண்டு பெயர் வைத்து விட்டு நிமிர எல்லாரும் அவளையே பார்க்க “நாம ஏதும் பண்ணலேயே , அப்புறம் ஏன் எல்லாரும் நம்மள பாக்குதுங்க…அப்போது அந்த வாண்டு

” வைஷ்ணவி அக்கா அந்த அண்ணன் பேரு வைஷ்ணவன் ஆம் ” என்று கூற நினைவுக்கு வந்தவள் ” ஐயோ அவன் பேர கேட்டு நம்ம பேர எப்புடி மறந்தோம்”…

Advertisements

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: