Advertisements

முபீன் MSK – கண்ணாமூச்சி ஆட்டம் – 3

              கண்ணாமூச்சி -3

ராகுல் வரும் வழியில் அவனுக்காக காத்து கொண்டிருந்தவன் ..அவன் வந்ததும் ” டேய் உன் மனசுல என்னடா நெனச்சுட்டு இருக்க “
” உனக்கு என்னடா ஆச்சு சம்பந்தம் இல்லாம கேள்வி கேக்குற …நமக்கு மேட்ச் சண்டே தானே அப்போ பாத்துக்கலாம் “

“நா அத சொல்லல , நீ என்ன எப்ப பாரு என் ஆளுடே பேசிட்டு இருக்கியாம் ..என்ன செய்தி… அவளுக்குக்காக 3 வருசமா வெய்ட் பண்றன் குறுக்க வர நினைக்காத அப்றம் வேர மாதிரி ஆகிடும் “

அவன் சொன்னதும் சிரித்தவன் ..” டேய் லூசு பயலே ..நீ அவ அத்தை பையன் டா..நீ ஏன் டா வெய்ட் பண்ற …இன்னும் 2 வருஷத்துல உனக்கே அவல கல்யாணம் பன்னி வச்சிருவனுக ” என்று கேலியாய் சிரித்தவனை பார்த்து முறைத்தவன் …

” அத்த பையன் னு எனுக்கும் தெரியும் …நீ அவள்ட பேசுரத நிப்பாட்டு ..மருபடியும் என் காதுல அதே மாறி ஏதும் விழந்துச்சு  ” டேய் அப்ப போய் உன் ஆளுடே சொல்லுடா …எப்ப பாரு அவ தான் என்ட பேசியே உயிர வாங்கிறா  போனு சொன்னா கூட போ மாட்றா ” என்று கூறினான் தனக்கு வர போவதை அறியாமல்…

அவள் தானாகவே வந்து பேசியவள் …எவ்வளவு சொன்னாலும் பேச்சை நிறுத்ததவள் …எவ்வளவு திட்டினாலும் கோபம் கொள்ளதாவள் … எந்த தவறு செய்தாலும் மன்னிப்பவள் ..எனக்காக எதையும் செய்ய துணிந்தவள் …

ஆனால் இப்போது என்னை நினைத்து கூட பார்க்காமல் இருப்பவளை நினைத்து மனம் வலித்தது …அவள் மனதை புரிந்து கொள்ளாமல் முற்றிலும் அவளை காய படுத்திய எனக்கு இது சரியான தண்டனை தான் என்று நினைத்தவன் …

ஊருக்கு செல்லும் ஏற்பாடுகளை செய்தான் …இரண்டு நாட்களில் எல்லா வேலையும் முடித்து கெளம்பியவன் …ஏர்போர்ட் வந்தடைந்து ..
அவனுக்கான விமானத்தில் அமர்ந்து …தன் நினைவுகளை பின்நோக்கினான்….

கோபுரம் போல உள்ள நுழை வாயிலில் முருகன் கையில் வேலை ஏந்தியபடி வருவோரை ஆசிர்வதித்து கொண்டிருந்தார் …

வீட்டின் உள்ளே 3 வது அறையில் பகவத் கீதை படிக்கும் சத்தமும்… பூஜை அறையில் இருக்கும் என்னை விளக்கின் வாசனையும் பாதி எறிந்த மல்லிப்பூ பத்தியும் சேர்ந்து ஒரு தெய்வீக மனத்தை பரப்பி கொண்டிருந்தது …அதை கலைக்கும் வண்ணம் வந்தது  அந்த குரல்  “……………ஆண்ட்டிடிடிடி…………………”

Advertisements

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: